பேபி கார்ன் பஜ்ஜி
குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது, சத்தும் அதிகம் இதை செய்யும் போது முழுவது கடலைமாவில் முக்கி பொரிக்காமல் லேசாக கார்ன் வெளியில் தெரிவது போல் செய்தால் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பேபிகார்ன் = ஆறு
கடலை மாவு = முன்று மேசை கரண்டி
கார்ன் மாவு = ஒரு தேக்கரண்டி
பொட்டு கடலை பொடி = ஒரு தேக்கரண்டி
உப்பு = ருசிக்கு தேவையான அளவு (கால் தேக்கரண்டி)
பெப்பர் பொடி = கால் தேக்கரண்டி
ரெடி கலர் பொடி = கால் தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் = கால் தேக்கரண்டி
எண்ணை + பட்டர் = பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1.பேபி கார்னை நன்கு கழுவி நீளவாக்கில் இரண்டாக கட் பண்ணி கொள்ளவும்.
2.கடலைமாவு, கார்ன் மாவு, பொட்டுகடலை பொடியை மற்றும் உப்பு, பெப்பர் பொடி, பேக்கிங் பவுடர் அனைத்தையும் பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
3. பட்டர் + எண்ணையை காயவைத்து தீயின் அளவை மீடியமாக வைத்து கரைத்த கலவையில் கார்னை தோய்த்து பொரித்து எடுக்கவும்.
4.. சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கார்ன் பஜ்ஜி ரெடி டொமேட்டோ கெட்சப்புடன் சாப்பிட கொடுக்கவும், எல்லா கார்னும் நிமிஷத்தில் பறந்து விடும்
I sending this recipe to Reva's Corn for dinner event.
ரமலானில் செயல் படுத்த வேண்டிய திட்டங்கள். கொஞ்சம் இதையும் போய் பாருங்களேன்.
ரமலானில் ஓதவேண்டிய முக்கியமான துஆக்கள்
Tweet | ||||||