சிக்கன் 65 - 1 - Chicken 65
ஹோட்டல்களில்
பெரும்பாலும் அசைவத்தில் முதலில் ஸ்டார்டர் க்கு ஆர்டர் செய்வது சிக்கன் 65 அல்லது சிக்கன்
லாலிபாப். அதை எளிதாக நாமே வீட்டில் செய்யலாம்.
சிக்கன் 65 என பெயர்
வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது
இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே சிக்கன் 65 பிரபலமாகி உள்ளது.
தேவையான பொருட்கள்
சிக்கன் லாலி பாப் 9
துண்டுகள் or Full Chicken
பூண்டு பேஸ்ட் – 1
மேசைகரண்டி
காஷ்மீரி மிளகாய்
தூள் – 1 மேசைகரண்டி
லெமன் ஜூஸ் – 1
மேசைகரண்டி
கார்ன் ப்ளார் மாவு –
1 மேசை கரண்டி
உப்பு – ¾ தேக்கரண்டி
கலர் பொடி – ஒரு
சிட்டிக்கை (விருப்ப்பட்டால்)
எண்ணை – பொரிக்க
தேவையான அளவு
செய்முறை
சிக்கன் லாலி
பாப்பை வினிகர் சேர்த்து ஊறவைத்து நன்கு
கழு
வி எடுக்கவும்.
சிக்கன் லாலிபாப்பை
குறுக்காக நான்கு கீறல்கள் போடவும்.
மேற்கண்ட
அனைத்துமசாலாக்களையும் சிக்கனில் போட்டு பிறட்டி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய சிக்கனை , ஒரு
ஆழமான வாயகன்ற வானலியில் எண்ணையை சூடு படுத்தி நன்கு மொருவலாக பொரித்து
எடுக்கவும்.
இது எங்க வீட்டு அனைவருக்கும்
ரொம்ப பிடித்தமான 65, என் பையன் ஹனீஃப்க்கு லாலி பாப் சிக்கன் ரொம்ப பிடிக்கும். வாரம் ஒரு முறை செய்தே
ஆகனும். என் தம்பி இங்கு இருந்தபோதும் அடிக்கடி இந்த சிக்கன் 65 தான் செய்து கொடுப்பேன்,
இப்ப தம்பி தானே சமைத்து சாப்பிடுவதால் இந்த குறிப்பு அவருக்காக இங்கு
போட்டுள்ளேன். இது அவருக்கு செய்ய சுலமாக இருக்கும்.
இந்த லாலிபாப்பை
பிரட், சப்பாத்தி,குபூஸ், மற்றும் பிளையின் சாதம் , கட்டி பருப்புடன் சாப்பிட மிக
அருமையாக இருக்கும்.
சிக்கன் 65 – 2 - Chicken 65
தேவையான பொருட்கள்
கோழி – 1 கிலோ
மென்மையாக அரைத்த
பூண்டு – 100 கிராம்
மிளகாய் தூள் – 50
கிராம்
உப்பு தேவைக்கு
கேசரி கலர் பொடி – 2
தேக்கரண்டி
எண்ணை – கால் கிலோ
(பொரித்து எடுக்க)
செய்முறை
How to Make Easy Chicken 65
கோழி துண்டுகளை நன்கு
கழுவி சுத்தம் செய்து அதனுடன் அரைத்த பூண்டு, மிளகாய் தூள்,உப்பு, கேசரி பொடியை
சிறிது தண்ணீரில் கலக்கி சேர்க்கவும். நன்கு மசாலா எல்லா துண்டுகளிலும் சேரும் படி
தடவி, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு வாயகன்ற
வானலியில் எண்ணை சூடு படுத்தி தீயின் தனலை மிதமாக வைத்து வானலியில் கொள்ளும்
அளவிற்கு கோழி துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
கவனிக்க:
முன்பு (30 வருடம்
முன்) ஒரு விசேஷம் என்றால் வீட்டில் சமையல் காரர்களை அழைத்து தான் செய்வோம். 5 படி
மட்டன் பிரியாணி, 5 கிலோ கோழி வறுவல், 2 கிலோ எண்ணை கத்திரிக்காய்,3 கிலோ மைசூர்
பாக் என்று, அப்படி எங்க வீட்டு ஓவ்வொரு விசேஷத்திலும், சமையல்காரருக்கு எல்லா
சாமான்களை எடுத்து கொடுப்பது என் வேலை. இஞ்சி பூண்டு அவர் கேட்கும் அளவில்
மிக்சியில் அரைத்து கொடுப்பதும் என் வேலை தான்.இன்னும் பல சமையல் வகைகள்,நான்
இங்கு சமைக்கும் பாரம்பரிய சமையல் வகைகள் எல்லாமே என் பாட்டியின் அம்மாவின்
அளவுகள். நான் என் சுவைக்கு ஏற்ப மாற்றி செய்து கொள்வேன்.
அப்படி சமைக்கும்
போது இது என் அம்மா அவருக்கு கொடுத்த மசாலா சில நேரம் இப்படி செய்தால் ஈசியாக செய்து விடலாம்.
சிலருக்கு சிக்கன் பொரிக்கும் போது அடியில் போய் அனைத்தும் ஒட்டி கொள்ளும், அதற்கு
இஞ்சி பூண்டு ஒன்றாக சேர்ப்பதால் அப்படி ஆகிறது, வெறும் பூண்டு மட்டும் சேர்த்து
பிரட்டினால் வானலியில் ஒட்டாமல் தனியாக பொரிந்து வரும்.
சிக்கன் 65 க்கு
என்று ஸ்பெஷல் மசாலாக்கள் எல்லாம் கிடையாது.இப்ப தான் நிறைய் ரெடி மேட்
மசாலாவகைகள் வந்துள்ளன. நல்ல சிவப்பாக
பொன்முறுவலாக டிரையாக இருக்கும் அது தான் சிக்கன் 65.,
சிக்கன் 65 என பெயர்
வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது
இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே சிக்கன் 65 பிரபலமாகி உள்ளது.
இது முன்பு
தயாரிக்கும் பொருட்களோடு நான் இப்ப கூட சேர்ப்பது, லெமன் சாறு + கார்ன் ப்ளார்
மாவு (சோளமாவு) கேசரி கலர் பொடி கொஞ்சமாக சேர்ப்பது ,சில நேரம் சேர்ப்பதும் இல்லை.
நல்ல நிதானமாக பொன்முறுவலாக பொரித்து எடுத்தாலே நல்ல நிறம் வரும்.
சிக்கன் 65 - 3
இதில் மேலே உள்ள பொருட்களுடன் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து பொரித்து கொள்ளவேண்டியது.
தேவைப்பட்டால் 65
மசாலாவும் சேர்த்து கொள்ளலாம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam