Monday, January 6, 2014

பாரம்பரியம், பாதுக்காக்கப்படுகிறது இங்கே.










பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர்கள் பக்கம் Special Guest Post with Traditional Recipe.

சமையலில் பாரம்பரிய சமையல் என்றாலே ஒரு ஸ்பெஷல் தான்.அந்த வகையில் நான் அறுசுவைடாட்காமில் கொடுத்துள்ள குறிப்புகளில் பாதி என் வீட்டு இஸ்லாமிய இல்ல பாரம்பரியமாக செய்து வரும் குறிப்புகள்.

அறுசுவைடாட் காமில் தான் நான் முதன் முதல் சமையல் குறிப்புகள் பகிர ஆரம்பித்தேன்.
600 குறிப்புகள் கொடுத்து இருக்கிறேன். அதில் 50 குறிப்புகள் கிட்ட ஸ்டெப் பை ஸ்டெப் கொடுத்துள்ளேன்.


இப்போது பல பெண்கள் அறுசுவையாலும் அதன் மூலம் உள்ள என் குறிப்புகளாலும் பயனடைந்து உள்ளார்கள்.அப்படி பயனைடைந்தவர்கள் போன் செய்து சொல்லும் போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

அறுசுவையில் மற்ற தோழிகளின் குறிப்பும் மிக அருமையாக இருக்கும். அதை நாங்க அறுசுவையில் மன்றத்தில் அரட்டை அடிக்கும் போது இப்ப இருக்கிற நம்ம பூஸார் அதிரா ஆஷா போஸ்லே சமைத்து அசத்தலாம் என்ற ஒரு பகுதியை ஆரம்பித்து அனைவரின் குறிப்பையும் செய்ய வைத்தார். அப்ப நாங்க அனைவரும் அதிராவின் நகைச்சுவை பதிவுகளை ரசித்து படித்து இருக்கிறோம்.அதில் நாங்க எல்லோரும் கலந்து கொண்டு அசத்தி இருக்கிறோம்.
*********************

இந்த தடவை ஹஜ் பெருநாளுக்கு ஊருக்கு போயிருந்தோம். பெருநாள் முடிந்து ஹனீஃபுக்கு பள்ளி விடுமுறை இல்லாததால் அவனை மட்டும் முதலில் தூபாயிக்கு அனுப்பிவிடலாம் என்று எண்ணி  ஹஜ் பெருநாள் முடிந்து 18ந்தேதி வெள்ளி கிழமை 10 மணிக்கு சென்னையில் படு பிசியான நுங்கம்பாக்கம் ஏரியாவில் டிக்கட் கன்பார்ம் செய்ய அக்பர்  டிராவல்ஸ் போய் விட்டு வரும் போதுஆட்டோவிற்காக காத்து கொண்டிருந்த போது தான்  கீழே அதே பில்டிங்  கீழ் திண்டுக்கல் தலப்பாக்கட்டு உணவகம் இருந்தது.  சரி வந்தது வந்து விட்டோம் உள்ளே சென்று ஜூஸ் குடித்து விட்டு போகலாம் என்று நானும் என் மகன் ஹனீபும் சென்றோம் ஆனால் உளளே ஆஹா என்ன பாரம்பரியமான சமையலறை புகைப்படங்கள்ஓவ்வொரு உணவகங்களிலும் ஓவ்வொரு மாதிரி வரைபடங்கள் மாட்டி இருப்பார்கள் ஆனால் இந்த உணவகத்தில் சுற்றி பார்த்தால் சுவரெல்லாம் பண்டைய காலத்து அடுக்களைகளின் படங்கள் சுற்றியும் சுவர் முழுவதும் வரையப்பட்டு இருந்தன.ம் அனைத்தும் பார்க்க மிக அருமையாக இருந்தன. 










ஜும்மா நேரம் என்பதால் திண்டுக்கல் தலபாக்கட்டு பிரியாணியை பார்சல் வாங்கி கொண்டு நானும் ஹனீபும் புரூட் பாலூதா மட்டும் சாப்பிட்டு வீட்டு அங்கிருந்து கிளம்பி விட்டோம்.ஆகையால் போட்டோக்களை நன்கு எடுக்க இயலவில்லை அதில் நான் கிளிக்கியது இவை மட்டும் தான்,பொறுமையாக எல்லாவற்றையும் எடுக்க கால நேரம் 
அனுமதிக்கவில்லை.
*********************************



போன மாதம் தஞ்சாவூரை சேர்ந்த கீதா என்ற பெண் கனடாவில் இருந்து போன் செய்தார்கள் அறுசுவையை நான் ஓப்பன் செய்தால் உங்கள் குறிப்பு மட்டும் தான் பார்த்து செய்வேன். நான்கு வருடமாக உங்கள் குறிப்புகளை மட்டுமே  அங்கிருந்து பார்த்து  செய்து வருகிறேன். 
ஆகையால் ஒரு  முறையாவது உங்களிடம் பேசவேண்டும் என்று இப்ப உங்களிடம் பேசுகிறேன்.இதுவரை நான் பெற்ற பாராட்டுக்கு அளவே இல்லைஎன் தோழிகள் எல்லாரும் ரெசிபிகளை கேட்டு வாங்கி செல்கிறார்கள்.
பல புது குறிப்புகள் வந்தாலும் பாரம்பரிய குறிப்புன்னு பார்த்து செய்யும் போது அந்த ருசியே தனி தான்உங்களுடைய மைதா பரோட்டா மற்றும்  நீங்க பரோட்டாவிற்கு செய்யும் சைட் டிஷ் சிக்கன் குறிப்புகளும் , கறி முருங்கக்காய் சால்னாவும் சான்சே இல்ல ஓவ்வொரு அளவும் மிக துல்லியமாக இருக்கிறிது என்றார்கள்.

எங்களுக்காக நேயர் விருப்பம் போல் மற்ற ஊர்களின் பாரம்பரிய சமையலையும் பதிவிடுங்கள் என்றார்கள்.


************************************************



அன்புள்ள சகோதரி ஜலீலாவிற்க்கு என் இனிய ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அறுசுவை யில் உங்களுடைய சமயல் குறிப்புகளை பார்த்து அதனால் பயன் பெற்றும் இருக்கிறேன்.  இன்று தான் உன்களுடைய  சமையல் அட்டகாசத்தில் உங்களை பற்றி  தெரிந்துக் கொண்டேன்.

சகோதரி  உங்களை பற்றி தெரிந்து கொண்ட நான் என்னை பற்றியும் சொல்கிறேன். என் பெயர் மஹ்மூதா. நான் குமரி மாட்டத்தை சேர்ந்தவள். உங்களின் ஆக்கங்களை பார்க்கும் போது ஓர் சமுதாய அக்கரையும் பொதுநலம் மார்க்கப் பற்றும் உள்ளவர் என்பதை புரிந்து கொண்டேன் உங்களை போன்ற அனுபவ சாலிகளின் அறிமுகம் எனக்கு வேண்டும் என்பதற்க்காகவே இந்த மெயிலை அனுப்புகிறேன். .
 இப்படிக்கு
சகோதரி மஹ்மூதா
மேலே  உள்ள தகவல் எனக்கு போன வருடம் நவம்பர் மாதம் ஒரு சகோதரியிடம் இருந்து வந்த மெயில்.   பிறகு வியாபார விஷியமாக அடிக்கடி போனில் பேசிகொண்டோம். அப்படி பேசும் போது  சகோதரி மக்மூதாவும் என்னிடம் கேட்டு கொண்டது ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய சமையல் வகைகளை பகிருங்கள் என்று சொன்னார்.
 **************************************

அதே போல் காரைக்காலை சேர்ந் சகோதரி ஷாமா யாஸ்மீன் சென்னை ப்ளாசா வில் உள்ள புர்காவகைகள் மற்றும் பல இதர பொருட்கள் வேண்டி என்னிடம் போன் செய்யும்போது சமையல் அட்டகாசத்தை பார்த்து சமைத்து வீட்டில் அடிக்கடி அனைவரின்  பாராட்டையும் பெற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.
 *****************************************

இன்னும் அறுசுவை வாசகி ஜமீலாஅஃப்சர் என் குறிப்பு மட்டுமே இது வரை 300 செய்து முடித்து இருக்கிறார்களாம்,நான் எந்த ஊருன்னு ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தாங்களாம், கடைசியில் முகநூலில் கண்டு பிடித்தார்கள். பாராட்டுக்கள் ஜமீலாஅஃப்சர்.



ஆங்கில பிளாக்குகளில் எல்லா தோழிகளுமே ஒருத்தருக்கு ஒருத்தர் கெஸ்ட் போஸ்ட் என சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்,அந்தவகையில் என் கெஸ்ட் போஸ்ட் ரேவா அவர்கள் என்னை விரும்பி கெஸ்ட் போஸ்ட் பகிரும் படி சொன்னதால் பாரம்பரிய சமையலான கறி தக்குடி மட்டன் கொழுக்கட்டையை)  பகிர்ந்துள்ளேன் மற்றும் நீத்துஸ் கிச்சனில் மிட்டாகானாவும் பகிர்ந்துள்ளேன்.



My Guest post @ kaarasaaram reva  and Nithu' Kitchen  

என்னுடைய கெஸ்ட் போஸ்ட் காரசாரம் ரேவா மற்றும் நீத்துஸ்கிச்சனிலும் இடம் பெற்றுள்ளது. அதில் நான் எங்கள் வீட்டு பாரம்பரிய சமையலான கறி தக்குடியும், மிட்டா கானாவும் பகிர்ந்துள்ளேன். அந்த வகையில் இனி இங்கு மற்ற தோழ தோழியர்களும் பாரம்பரிய சமையலை மாதம் ஒரு முறை அல்லது முடிந்தால் இருமுறை இங்கு பகிரலாம் என்று இருக்கிறேன்.





அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள். குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம் மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

Burka Hijab @ Chennaiplaza

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

14 கருத்துகள்:

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் ஜலி.தொடர்ந்து அசத்துங்கள்.நாங்களும் ஓவொரு பகுதியின் பாரம்பரிய உணவு வகைகளை அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.என்னுடைய பங்களிப்பும் உண்டு.

Asiya Omar said...

வாழ்த்துக்கள் ஜலீலா.பாரம்பரிய குறிப்புக்களை அறிவதில் மிக்க ஆர்வம்.என்னுடைய பங்களிப்பும் உண்டு.தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்.

Jaleela Kamal said...

ஸாதிகா உங்கள் கீழக்கரை பாரம்பரிய சமையலை கண்டிப்பாக இங்கு பகிருங்கள்.
முதலாவதாக வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

வாங்க தோழி ஆசியா உங்கள் பக்குவமான நெல்லை கைமணத்தை இங்கு காண ஆவல்

Jaleela Kamal said...

ஏற்கனவே இங்கு தோழிகளின் குறிப்பு என்று நான் செய்து பதிவிட்டு இருக்கீறேன்.

அதே அந்த தோழிகளே கொடுத்தால் நல்ல இருக்கும் என்று தான் இந்த பதிவு

Shama Nagarajan said...

congrats akka....will join u

Jaleela Kamal said...

வாங்க ஷாமா , கண்டிப்பாக

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அருமை

சாரதா சமையல் said...

வாழ்த்துக்கள் ஜலீலா!நல்லா அசத்துங்க!!!

Angel said...

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜலீலா ..
2009 இலிருந்து வலையில் நாம் சந்திக்கின்றோம் ..ஒவ்வொரு தருணத்திலும் என்ன தேவையோ உடனே இங்கே தேடினால் குறிப்பு கிடைச்சிடும் எனக்கு ..சமீப காலமாக வேலை பளுவால் அடிகடி வர முடியல்ல ..ஆனாலும் உங்க குறிப்புகளை தவறாமல் பார்த்து செய்திடறேன் உங்களுடைய பல எவ்ரிடே குறிப்புகள் அவசியம் பின்பற்றவேண்டியவை ..குறிப்பா குழந்தை வளர்ப்பு..diet recipes... etc etc ..மற்றும் பல சொல்லிட்டே போகலாம் ..

திண்டுக்கல் தலப்பாக்கட்டு ஹோட்டல் பழங்கால படங்கள் ..உண்மையில் எவ்வளவு பாதுகாப்பா வச்சிருக்காங்க !!! இதைதான் பாரம்பரியத்தை பாதுகாப்பது என்பது ...இந்த கெஸ்ட் போஸ்ட் நிறைய பேரின் பண்டைய பாரம்பரிய சமையல் குறிப்புகளை அனைவரும் அறிய /ருசிக்க உதவும் .நல்லதொரு அருமையான முயற்சிக்கு மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .


Angelin

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ஜலீலா. பழங்கால் படங்கள் அருமை.
இந்த பதிவின் தலைப்பே அசத்தல். வாழ்த்துக்கள் தமிழ்மண வாக்கு அளித்து விட்டேன்.
உங்கள் பராம்பரிய குறிப்புகளை படிக்க ஆவலாக இருக்கிறேஎன்.

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா.
எப்படி இருக்கீங்க?
இந்த பகுதியை ஆரம்பித்தது மட்டுமின்றி அதற்க்கான அறிமுக தகவல் தொகுப்பு மிகவும் அருமை.அதற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் அக்கா.
நிச்சயம் இந்த பகுதி சிறப்பாகவே அமையும்.... வாழ்த்துக்கள் அக்கா...

அப்சரா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

முற்றும் அறிந்த அதிரா said...

மிக அருமையான பதிவு. நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க, சமைத்து அசத்தலாம் பற்றிச் சொல்லி அந்நாளை நினைவு படுத்தி விட்டிட்டீங்க...
தொடர வாழ்த்துக்கள்.

நீங்க ம்க்மூதா பற்றி சொன்னதும் என் நண்பியோ என சொந்த ஊரை செக் பண்ணினேன் இல்ல. என்னோடு படித்தவர் என் நெருங்கிய தோழியாக இருந்தவவும்கூட அவவின் பெயரும் மக்மூஃபா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா