Friday, March 21, 2014

மணப்பெண் புர்கா / பர்தா - Bride Burka/Abaya



Latest Burka Model

Grand Burka

Hand and body work

Plain  Burka

Necklace Model Burka/Abaya




பட்டு சேலை மாடல் புர்கா  - Pattu Saree Type Burka / Abaya
 Hand & Shela 

Gold Zari + Embroidery + Stones





 Bottom







மணப்பெண் புர்கா விரும்பிய கற்களில் தைத்து கொடுப்போம்


Necklace Model Burka/Abaya








சில பேர்  கருப்பு புர்கா போடுவதில்லை கலரில் கேட்பதால் கலரிலும் தைத்து கொடுக்கிறோம்.



கல் + நெட்  டிசைன்








கல் வைக்காத பிளைன் புர்கா



http://www.chennaiplazaki.com/

Address:
*Chennai Plaza*
No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)
(Near Marina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787

Jaleelakamal Dubai : (00 971 5 5453400)

feedbackjaleela@gmail.com

chennaiplazaik@gmail.com


  Like us on  Facebook Page

Join us on - Chennaiplaza   Facebook


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, March 19, 2014

ராகி ரவை தோசை - Ragi dosai







ராகி தோசை

தேவையான பொருட்கள்
ராகி மாவு ( கேழ்வரகு மாவு) - அரை கப்
அரிசி மாவு - 1 மேசைகரண்டி
ரவை - 2 மேசைகரண்டி
கோதுமை மாவு - ஒரு மேசைகரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒன்று
பச்சமிளகாய் - பொடியாக நறுக்கியது -1
உப்பு தேவைக்கு
கருவேப்பிலை சிறிது
எண்ணை - தோசை சுட தேவையான அளவு

செய்முறை

எண்ணையை தவிர மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தோசைமாவு பதத்துக்கு கரைக்கவும்.

தோசை தவ்வாவை காயவைத்து மெல்லிய தோசையாக ஊற்றி சுற்றிலும் எண்ணை ஊற்றி நன்கு மொருகலாக சுட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்

தோசையில் தடவி அப்படியே காலை டிபனுக்கு எடுத்து செல்லலாம். ஹெல்தியான டயட் ரெசிபி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, March 7, 2014

கிட்ஸ் கலர்ஃபுல் தயிர் வடை - Kids Colourful Dahi Vada

வடையை எண்ணையில் பொரித்து சாப்பிடுவதை விட இப்படி தயிர் வடையாய் சாப்பிட்டால் ஒரு கம்பிலீட் மீலாக பில்லிங்காக இருக்கும்.




 தயிர் வடை குறிப்பு பெரியவர்களுக்காக போட்டு இருந்தேன். குழந்தைகளுக்கு அவர்களுக்கு ஏற்றார் போல் கலர் ஃபுல்லாகவும் அதே நேரம் வடை போடும் பச்ச மிளகாய் இஞ்சி எதுவும் வாயில் தட்டாமல் சுலபமாக சாப்பிட இந்த முறையில் செய்து கொடுக்கலாம்.


Kids Colourful Dahi Vada




வடைக்கு



உளுந்து பருப்பு =‍ அரை டம்ளர்
உப்பு = கால் தேக்கரண்டி
இஞ்சி ஒரு சிறிய‌ துண்டு
ப‌ச்ச‌ மிளகாய் = ஒன்று
ஆலிவ் ஆயில் ‍ = அரை தேக்க‌ர‌ண்டி


த‌யிர் தாளிக்க‌



ஒரு க‌ப் = த‌யிர்
பால் ‍ = சிறிது
எண்ணை ‍ அரை தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
பெருங்காய‌ம் = ஒரு பின்ச்
மோர் = வ‌டை தோய்க்க‌


அல‌ங்க‌ரிக்க‌



க‌ல‌ர் புல் = காரா பூந்தி (தேவைக்கு)
வேர்க‌ட‌லை = சிறிது
வ‌ருத்த‌ முந்திரி = (தேவை ப‌ட்டால்)
கேர‌ட் ‍ ‍= அரை துண்டு











செய்முறை

1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,இஞ்சி , பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்

3. அரைத்த மாவை எண்ணையை காயவைத்து சிறிய ஒரு ரூபாய் காயின் அள‌விற்கு குட்டி குட்டி மினி வடைகளாக தட்டி போடவும்.

4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.



5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.


6.தனியாக சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் ந‌னைத்த‌ வ‌டைக‌ளை தாளித்த‌ த‌யிர் க‌ல‌வையில் சேர்க்கவும்.


7.சிறிய கிண்ணத்தில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து அதில் வேர்கடலை, கேரட், கலர் ஃபுல் காரா பூந்தியை தூவி பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.



குறிப்பு



இந்த கலருக்கே உங்கள் குழந்தைகள் நல்ல சாப்பிடுவார்கள்.நீங்களும் அடிக்கடி செய்ய வேண்டி வரும். பெரிய‌வ‌ர்களுக்காக‌ இருந்தால் ந‌ல‌ல் கார‌ம் தேவைக்கு சேர்த்து தாளிக்கும் போது சின்ன‌ வெங்காயம் சேர்த்து தாளித்து கொத்தும‌ல்லி தூவி சாப்பிட‌வும்.கோடைக்கு ஏற்ற‌ குளு குளு கிட்ஸ் க‌ல‌ர் ஃபுல் த‌யிர் வ‌டை ரெடி.இது நோன்பு கால‌த்திலும் செய்து சாப்பிட‌லாம்.





Saturday, March 1, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு - கீதா ஸ்ரீராம் - சர்க்கரை பொங்கல் - 3



பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு - 3

Special Guest Post with Traditional Recipe -3

800 வது பதிவு

6 வது பிளாக் பிறந்த நாள்.


கீதாவின் சர்க்கரை பொங்கலும், நான் செய்த வாழைப்பூ மசால் வடையும்.

துபாய் வந்த புதிதில் வெளியில் எங்கும் போக மாட்டேன்பால்கனியிலும் எட்டி பார்க்க முடியாது ரோடு.பின்னாடி என் ரூம் ஜன்னல் திறந்து துணி  உலர்த்தும் போது அங்கு யாராவது தென்படுகிறார்களா என்று பார்ப்பேன்அப்படி ஒரு முறை துணியை உலர்த்தி கொண்டு இருக்கும் போது தான் கீதாவை பார்த்தேன். அப்படியே ஒரு ஸ்மைல் இரண்டு பேரும். போக போக நல்ல பழக்கம். கீதாவை 14 வருடங்களாக எனக்கு தெரியும்.
பிறகுகொஞ்ச வருடத்தில் நாங்களும் வீடு மாறி விட்டோம். அவர்களும் வீடு மாறி விட்டார்கள்.அதற்கு பிறகு போனில் தான் நேரம் கிடைக்கும் போது பேசிகொள்வோம்.
நான் ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது அங்குள்ள சாப்பாடு சுத்தமாக பிடிக்க வில்லைஅப்ப கீதா தான் அரிசி கஞ்சி சுட சுட போட்டு எடுத்து வந்தார்கள்.
அந்த நேரத்துக்கு அந்த உணவு எனக்கு அமிர்தமாக இருந்தது.
என் சமையல் போரடித்து விட்டால்கீதாவிடம் தான் இன்றைக்கு உங்க வீட்டு மெனுவ சொல்லுங்கள் அதன் படி செய்யபோகிறேன் என்பேன்.சமையலில் 
எனக்கு என் குரு என் அம்மா தான் .
எனக்கு ஓவ்வொரு சமையலிலும் உப்பின் அளவையும் எனக்கு சரியாக சொல்லி கொடுத்தது என் அம்மா தான் என் தோழி கீதா அடிக்கடி சொல்வார்கள். 
*************************************************************

என் பெயர் கீதா ஜலீலாவின் தோழிபிறந்து வளர்ந்தது சென்னையில் தான். படித்து திருச்சியில்ஜலீலாவும் நானும் ஜன்னல் பால்கனி மூலமாக சந்தித்து கொண்ட தோழிகள்.
எங்கள் சந்தோஷம் துக்கம்,அறிவுரைகள்,கிண்டல் கேலி எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்வோம்சில நேரம் எங்களுக்குள் உணவு பரிமாற்றமும் நடக்கும்.
அதில் நான் செய்யும் சர்க்கரை பொங்கல் மற்றும் சில கூட்டு வகைகள்பருப்பு உசிலி ,ரசம் இது ஜலீலாவிற்கு ரொம்ப பிடிக்கும். 

Geetha Sriram

அவர்கள சமையலில் பகறா கானாதால்சா மற்றும் மசால வடை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் மசால் வடை குறிப்பு அவர்களிடம் கேட்டு எழுதி வைத்துள்ளேன்வடை மிக அருமையாக கிரிஸ்பியாக இருந்தது,இன்னும் என் கணவர் நான் மசால் வடை செய்யும் போதெல்லாம் சொல்லி காண்பிப்பார்மசால் வ்டை என்றால் அது ஜலீலா செய்வது போல் செய்யனும் என்பார்..

சமையல் 20 வருடம் அனுபவம் உண்டுஎன் சமையலில் எனக்கு என் குரு என் அம்மா தான்.. உப்பின் அளவை கூட எனக்கு சரியாக சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.என கணவருக்கு என் பருப்பு உசிலியும் பூசனிக்காய் புளிப்பு கூட்டு ரொம்ப பிடிக்ககும்.

என் பிள்ளைகளுக்கு நான் செய்யும் சமையல் எல்லாமே பிடிக்கும்இதுவரை ஒரு நாளும் இது நல்லா இல்லை அது நல்ல இல்லை என்று சொன்னதே கிடையாது அந்த வகைகள் நான் மிகவும் கொடுத்து வைத்த அமமா.

என் இரண்டாவது டெலிவரிக்கு யாருமே சொந்த பந்தம் இல்லாத போது ஹாஸ்பிட்டல் போகனும் என் பெரிய பையனை யார்கிட்ட ஒப்படைபப்து என்று நினைத்து கொண்டு  இருந்த போது ஜலீலா என் கணவரிடம் ஆனந்தை என்னிடம் விட்டுட்டு நீங்க 
முதலில் ஹாஸ்பிட்டல் கிளம்புங்க என்று சொன்னாங்கஇன்னும் அந்த உதவியை எங்களால் மறக்க முடியாது. 
***********************************************
நான் பார்த்து கொண்ட ஆதித்தியா இஞ்சினியரிங், NIT யில் இப்போது முதல் வருடம் படிக்கிறார்படிப்பில் படு சுட்டி.

//எங்க வீட்டில் இனிப்பு சோறு ,பால் சோறு ,மிட்டாகானா என்று பல வகை செய்வோம் இந்த பொங்கலும் ரொம்ப பிடிக்கும். அடிக்கடி ஒரு டம்ளர் அளவுக்கு செய்தால் கொஞ்சம் நிறைய செய்ய அதை பிரத்தியேகமாக சரியான அளவில் செய்பவர்கள் இந்த குறிப்பை கொடுத்தால் நல்ல இருக்கும் என்று என் தோழி கீதாவிடம் பகிருமாறு கேட்டு கொண்டேன். நான் போனில் சொல்கிறேன். நீங்களே செய்து போஸ்ட் பண்ணிடுங்கள் என்றார்கள். வெல்லம் மட்டும் தான் சேர்க்க சொன்னார்கள் நான் பனை வெல்லமும் சேர்த்து இருக்கிறேன்குங்குமப்பூவை முதலே பாலும் சாதமும் வேகவைக்கும் போது போட்டால் இன்னும் நல்ல இருக்கும்.//


பண்டிகை காலத்தில் பிராமண ஆத்தில் செய்யும் பாரம்பரியமான  சர்க்கரை பொங்கலின் அளவு...

Sarkkarai pongal

பரிமாறும் அளவு 25 நபர்கள் மாலை நேர சிற்றுண்டி போல் சாப்பிடலாம்.


தேவையான பொருட்கள்


  1. சர்க்கரை பொங்கல்
  2. பாசுமதி அரிசி – 600 கிராம்
  3. வெல்லம் –  500 கிராம்
  4. பனைவெல்லம் – 100 கிராம்
  5. முந்திரி  - 200 கிராம்
  6. கிஸ்மிஸ் – 50 கிராம்
  7. பால் ஒரு லிட்டர்
  8. தண்ணீர் – 3 டம்ளர்
  9. நெய் – 4 குழி கரண்டி
  10. ஏலக்காய் – 6
  11. குங்குமப்பூ  - அரை தேக்கரண்டி
  12. பால் – ஒரு டம்ளர்
  13. பாசி பருப்பு -100 கிராம்



செய்முறை

  1. அரிசியையும் பருப்பையும் களைந்து ஊறவைக்கவும்.
  2. வெல்லத்தை நன்கு தட்டி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகுகாய்ச்சி ஆறவைக்கவும்.
  3. ஒரு டம்ளர் பாலில் குங்குமபூ ஏலக்காய் சேர்த்து கொதிக்கவும்.
  4. ஊறிய அரிசி + பருப்பை குக்கரில் வைத்து பால் + தண்ணீர் டம்ளர் ஊற்றி கொதிக்க விட்டு முன்று விசில் விட்டு வேகவைக்கவும்.
  5. குக்கர் ஆவி அடங்கியதும் நன்கு சாதம் + பருப்பை மசித்து வடிக்கட்டிய வெல்லபாகுகாய்ச்சி ஆறிய பால் சேர்த்து அடுப்பில் ஏற்றி நன்கு கிளறவும்.
  6. எல்லாம் சேர்ந்த்தும்நெய்யில் முந்திரி+கிஸ்மிஸ்பழத்தை கருகாமல் வறுத்து பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.

**********************************************************************

அவரவர் சுவைக்கு ஏற்ப மசால் வடை அல்லது உளுந்து வடையுடன் பரிமாறவும்.

இதில் வெல்லம் ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னறை பங்கு சேர்க்கனும். நான் என் சுவைக்கு ஏற்ற சரி பாதியாக சேர்த்துள்ளேன்.
வெல்லபாகுகுங்குமப்பூஏலக்காய் பால் சுட சுட ஊற்றினால் திரிந்து போகும். முதலே செய்து ஆறவைத்து கொள்ளவும்.
நெய் 200 கிராம் அரிசிக்கு இரண்டு குழி கரண்டி ஊற்றினால் இன்னும் சுவை தூக்கலாக இருக்கும்.
சர்க்க்ரை பொங்கலை பால் சேர்த்து அல்லது பால் சேர்க்காமல் செய்வார்கள்,
இது பால் சேர்த்து செய்யும் முறை.

இதை நான் இந்த அளவில் செய்து ஆபிஸ் எடுத்து சென்று அனைவருக்கும் கொடுத்தேன். இரண்டு குறிப்புமே அதிக பாராட்டை பெற்றது. 

**********************************************************************************

கீதாவின் பயனுள்ள டிப்ஸ்கள்:

இல்லத்தரசிகளுக்கு டிப்ஸ்

சமைக்கும் போது விரும்பி செய்தால் சாதாரண சமையலும் அமிர்தம் போல் இருக்கும்.
மாவு வகைகள் பருப்பு வகைகள் போன்றவற்றில்  காஞ்ச மிளகாய் இரண்டு அந்த
 கண்டயினரில் போட்டு வைத்தால் பூச்சி வராமல் இருக்கும். 

 சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோய் உள்ளவர்கள்காலை மாலை பருகும் நேரடியாக சர்க்கரை சேர்ப்பதால் தான் சர்கக்ரையின் அளவு கூடுகிறதுடீ காபிகுளிர் பானத்தில் சர்க்கரை சேர்க்காமல் அருந்த  கட்டு படுத்தி கொண்டாலே ஓரளவுக்கு சர்கக்ரையின் அளவை கட்டுபடுத்தி கொள்ளலாம்.


அழகுகுறிப்பு:

கரு கருன்னு நன்கு முடி வளர ,வாரத்தில் இரண்டு நாட்கள் இரவு தேங்காய் எண்ணையை தலையில் நன்கு தேய்த்து காலையில் தலைக்கு குளித்து விடவேண்டும்.இபப்டி செய்வதால் முடிவளரும் ( ஆனால் முடி எல்லாருக்கும் கொட்ட தான் செய்யும் அது காய்ந்து போகாமல் இப்படி வாரம் இரு முறை செய்தால் முடி வளரும். இது என் அனுபவத்தில் கண்டது
கருவேப்பிலையை அதிக அளவில் சேர்த்து கொண்டால் நன்னா முடிவளறும்.
வத்த குழம்பு , மிளகு குழம்பு செய்யும் போது ஒரு கப் கருவேப்பிலையையும் சேர்த்து வதக்கி செய்து சாப்பிடவேண்டும்.

கீதாவின் மிளகு குழம்பு.- கரு கருன்னு முடி வளர
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை ‍ 1 பாக்கெட்
மிளகு ‍ 1 தேக்கரண்டி
சீரகம் ‍ 1 தேக்கரண்டி
உளுந்து ‍ ஒரு மேசைகரண்டி
புளி ஒரு எலுமிச்சை அளவு.
உப்பு - ஒரு தேக்கரண்டி
நெய்  ஒரு மேசைகரண்டி
தண்ணீர் முன்று டம்ளர்

செய்முறை

நெய்யை சூடாக்கி தண்ணீர் தவிர மற்ற பொருட்களை மிக்சியில் அரைத்து தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்

குழந்தைகள் உணவுக்கான டிப்ஸ் 

குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு சாப்பாடு தான் கொடுக்கனும் என்றில்லை,அவர்களுக்கு பிடித்த டிபன் வகைகள் அல்லது சூப் பிரட் அல்லது சாட் அயிட்டம் அல்லது சாலட் ( ப்ப்ரூட் அன்ட் வெஜ்ஜி) இது போல் கூட மதிய உணவுக்கு செய்து கொடுக்கலாம். நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு நல்ல ஹெல்தியாக இருக்கனும் அதே நேரம் அவர்கள் வயறு ரொம்பனும் அதான்  நமக்கு முக்கியம்தினம் சாம்பார் சாதம்ரசம் சாதம் தயிர்சாதம் என்று செய்து கொடுத்தால் பிள்ளைகளுக்கு முகத்தில் அடித்தார் போல இருக்கும் சாப்பிட பிடிக்காது. 

Geetha:படித்ததில் தெரிந்த பாட்டி வைத்தியம்: முகப்பருவுக்காக:  பருவுக்கு சந்தனம் ம்ஞ்சள் தேன் கலந்து தேய்த்தால் தொடர்ந்து முன்று மாதம் தேய்த்து வந்தால் மரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
  

இது என் டிப்ஸ் : முகப்பரு வந்தால் அதை கிள்ள கூடாது சொரியவும் கூடாது.சூடான வெண்ணீர் கொண்டு அந்த இடத்தில் ஒத்தடம் கொடுகக்னும்.
வேப்பிலையை கொதிக்க வைத்து ஆவி பிடிக்கவேண்டும்.


நானும் கீதாவும் பல வருடங்களாக இப்படி தான் மதிய உணவுக்கு குழந்தைகளுக்காக டிபன்வகைகள்  பூரி சென்னாபாஸ்தாதோசை சாம்பார்சப்பாத்தி குருமா,பாஸ்தா இப்படி இன்னும் பல செய்வோம்)

வாழைப்பூ மசாலா வடை
தேவையான பொருட்கள்
  1. கடலை பருப்புஅரை கிலோ
  2. முழு காஞ்சமிளகாய் – 6
  3. சோம்புஒரு மேசைகரண்டி
  4. இஞ்சி – 25 கிராம் விரல் அளவு 3 துண்டு
  5. பூண்டு - 10 பல்
  6. உப்புதேவைக்கு
  7. வெங்காயம் – 200 கிராம்
  8. பச்ச மிளகாய் – 4
  9. கருவேப்பிலைஒரு கொத்து ( பொடியாக நருக்கியது)
  10. புதினாகொத்து மல்லி சிறிது ( பொடியாக நருக்கியது)
  11. வாழைப்பூ  - ஒரு கைப்பிடி ( பொடியாக நருக்கியது)


செய்முறை
  1. கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து முன்று பாகமாக பிரித்து கொள்ளவும்.
  2. முதலில் சோம்பு மற்றும் காஞ்ச மிளகாயை பொடித்து கொண்டு அத்துடன் ஒரு பங்கு ஊறிய கடலைபருப்பு , இஞ்சி பூண்டு , உப்பு சேர்த்து நன்கு அரைத்து வழித்து வைக்கவும்.
  3. அடுத்தபங்கை கொரகொரப்பாக அரைத்து சேர்க்கவும், அடுத்த பங்கை ஒன்றும்பாதியுமாக திரித்து (மிக்ஸி ப்ளஸில்) இரண்டும் முன்று தடவை திருப்பி எடுக்கவும்.
  4. இப்போது எல்லாகலவையையும் ஒன்றாக சேர்த்து வாழைபூ, பச்ச மிளகாய்
  5. புதினா, கருவேப்பிலை , கொத்துமல்லி ஆகியவற்றை சேர்த்து பிசைந்துவைக்கவும்.
  6. எண்ணையை காயவைத்து சிறிய வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.


இந்த இரண்டு குறிப்பையும் ஸ்டெப் பை ஸ்டெப் எடுத்து வைத்து இருந்தேன்போல்டரில் மாற்றும் போது எல்லாம் டெலிட் ஆகிவிட்டது.
இது பைனல் போட்டோ மட்டும் பேஸ்புக்கில் அன்று போஸ்ட் பண்ணதால் அது மட்டும் இங்கு எடுத்து போட்டுள்ளேன்.


இது என் 800வது பதிவு. 

சென்னை ப்ளாசா கடை வேலையில் மிகவும் பிசியாக இருப்பதால் என்னால் மற்றவர்கள் பதிவிற்கு வரமுடியவில்லை. இருப்பினும் சில பேர் இங்கு தொடர்ந்து வந்து கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி,
தொடர்ந்து ஒரு பதிவையும் விடாமல் கருத்து தெரிவித்து ஓட்டளிக்கும் தனபாலன் சாருக்கு மிக்க நன்றி.
 ஸாதிகா அக்கா, சே.குமார், ஆசியா,மேனகா அவர்களுக்கும் மற்றும் சில பேர் எப்பாவாவது வந்து கருத்து தெரிவிப்பவர்களுக்கும் மிக்க நன்றி.


https://www.facebook.com/Samaiyalattakaasam


இனி இங்கு பார்க்கும் குறிப்புகளுக்கும் முகநூல் பேஜிலும் விருப்பம் உள்ளவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.


இது என் பேஸ் புக் பேஜ் இங்கு பல பேர் என் சமையலை செய்து பார்த்து இருப்பீர்கள், அப்படி செய்து பார்த்து பாராட்டை பெற்ற என் குறிப்பை என் முக நூல் பக்கத்தில் வந்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

என் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினர் பதிவு -பாரம்பரிய சமையலுக்கு குறிப்பு அனுப்பி உள்ளவர்களுக்கும் மிக்க நன்றி, முடிந்த போது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடுகிறேன்.


.இது சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் இதிலும் அனைவரும் லைக் கொடுத்து எங்க கடையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுமாறு மாறு கேட்டு கொள்கிறேன்.

சென்னை ப்ளாசா வெப்சைட்

சென்னை ப்ளாசா வெப்சைட்

பிளாக்கர் உலகில், என் வலை, ஜலீலாவின் பயனுள்ள டிப்ஸ்கள் என்று ஆரம்பித்த இந்த பிளாக் ஆலினால்ஜலீலாவாக மாறி இப்போது சமையல் அட்டங்களாக 6 வருடத்தில் அடி எடுத்து வைக்கிறேன். என் ஆங்கில வலைதளம் 300 குறிப்புகளுடன் நான்காவது வருடத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
http://cookbookjaleela.blogspot.ae/2014/01/300th-post-inippu-semiya-vermicelli.html
இன்னும் டிப்ஸ் பிளாக்கிலும், குழந்தைவளர்பு பிளாக்கிலும் பல பார்வையாளர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.


ஆதரவு அளிக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/