அரேபியர்களின் பாரம்பரிய சாதவகைகளான மட்டன் கப்சா, சிக்கன் கப்சா, மட்டன் மந்தி , சிக்கன் மந்தி ,சிக்கன் மத்பி, மட்டன் மத்பி, மக்லூபா போன்றவை போல் இது சிக்கன் மஜ்பூஸ்.
இது அரேபியர்களின் பிரியாணி.
பாரம்பரிய சமையல்
அரேபியர்களின் உணவு வகைகளின் காரம் அவ்வளவாக இருக்காது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், என் மகன்கள் இருவருக்கும் பிரியாணியில் தக்காளி, வெங்காயம் எதுவும் வாயில் தட்டக்கூடாது. இந்த வகை பிரியாணியில் அதிக தக்காளியோ வெங்கயாமோ கிடையாது.
இது சிக்கனை வேகவைத்து அந்த தண்ணீரில் சாதத்தை தம்மில் விடுவது.
Chicken Majboos
சிக்கனில் ஊறவைக்க
சிக்கன் துண்டுகள் 400 கிராம்
பாஷா கிச்சன் கிங் மசாலா 1 தேக்கரண்டி
பப்ரிக்கா பவுடர் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1ஒன்னறை தேக்கரண்டி
தாளிக்க
பட்டர் + எண்ணை - 4 மேசைகரண்டி
பொடியாக அரிந்த வெங்காயம் - 2
நார் சிக்கன் ஸ்டாக் கியுப் - 1
கருப்பு மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு மற்றும் பட்டை பொடி - தலா கால் கால் தேக்கரண்டி
பொடியாக அரிந்த தக்காளி - ஒன்று
தக்காளி பேஸ்ட் ( சபா பிராண்ட்) 25 கிராம்
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - 600 மில்லி (முன்று டம்ளர்)
அரிசி டோனார் பிராண்ட் லாங் கிரைன் ரைஸ் -400 கிராம்
(Donar Long Rice)
அடுப்பு கரி ( சுருள் கரி) துண்டு - ஒன்று (கிரில் செய்யும் போது பாயில் பேப்பருக்குள் வைக்க)
ஆலிவ் ஆயில் சிக்கன் கிரில் செய்ய 2 மேசைகரண்டி
கடைசியாக வறுத்து சாதத்தின் மேல் தூவ
பட்டர் ஒரு தேக்க்ரண்டி
பொடியாக நருக்கிய பாதம் 1 தேக்க்ரண்டி
முந்திரி 8 எண்ணிக்கை
அரிசியை களைந்து ஊறவைக்கவும். ((அரபிக் சாத வகைகளுக்குன்னு பிரத்தேயக மாக பயன் படுத்துவது ஒரு சில பிராண்ட் அரிசிவகைகள், இதில் நான் பயன் படுத்தியுள்ளது டோனார் லாங்கிரைன் ரைஸ்))
சிக்கனில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்க்கி அதில் எண்ணையை ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்/.
அடுத்து தக்காளியை அரிந்து சேர்த்து , தக்காளி பேஸ்டையும் சேர்த்து கிளறவும்.
பிற்கு சிக்கன் ஸ்டாக் துண்டு, துருவிய இஞ்சி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து ஊறவைத்த சிக்கனை போட்டு நன்கு கிளறவும்.
ஒன்றிற்கு இரண்டு பங்கு அளவு தன்ணீர் அளந்து ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து சிக்கன் பாதி அளவிற்கு வெந்ததும். அதிலிருந்து சிக்கன் துண்டுகளை எடுத்து விடவும்.
ஒன்றிற்கு இரண்டு பங்கு அளவு தன்ணீர் அளந்து ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து சிக்கன் பாதி அளவிற்கு வெந்ததும். அதிலிருந்து சிக்கன் துண்டுகளை எடுத்து விடவும்.
கொதித்த தன்ணீரில் அரிசியை களைந்து சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தீயின் தனலை மிக்க்குறைவாக வைத்து தம்மில் விடவும்.
அடுத்து சிக்கனனில் சிறிது மிளகு தூள் , ஆலிவ் ஆயில் 2 மேசைகரண்டி, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி ஒவனில் கிர்ல் செய்ய வேண்டும்.கிரில் செய்ய ட்ரேயில் சிக்கனை அடுக்கி வைத்து விட்டு,
அடுப்புகரியை நன்கு கங்காக்கி (சூடு படுத்தி) ஒரு பாயில் பேப்பரில் வைத்து சிக்கனின் நடுவில் வைத்து மூடி வைக்கவும்.
முற்சூடு படித்திய ஓவனில்
10 நிமிடம் கீழ்ட்ரேயிலும், 10 நிமிடம் மேல் ட்ரேயிலும் வைத்து கிரில் பண்ணவும்,
வெந்த சாதத்தின் மேல் கிரில் செய்த சிக்கனை வைத்து பாதம் பிஸ்தாவை பட்டரில் வறுத்து மேலே தூவவும்.
சுவையான மஜ்பூஸ் ரெடி.
சுவையான அரபிக் பிரியாணி அதிக எண்ணை இல்லாமல் ஆரோக்கியமான மஜ்பூஸ் ரெடி
இதற்கு தொட்டு கொள்ள பக்க உணவாக விரும்பிய சாலட் வகைகள், இனிப்பு வகைகள் செய்து கொள்ளலாம்.
பிரியாணிக்கு வைக்கும் ரெய்த்தாவுக்கு பதில் டொமேட்டோ சல்சா.
தக்காளி , வெங்காயம் , பச்ச மிளகாய் , உப்பு, பேசில் இலை அல்லது ஒரிகானோ சிறிது சேர்த்து கொர கொரப்பாக அரைத்து பக்க உணவாக வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
Arabic Biriyni Step by Step Majboos - Traditional Arabic Biriyani
Tweet | ||||||