Tuesday, July 1, 2014

மாழ்பழ கடல்பாசி - Mango Agar Agar




நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யப்படும் இந்த கடல்பாசி உடல் சூட்டை தணிக்கும்வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.

இந்த வருடம் நோன்பு நேரம் கடும் வெயில் நேரத்தில் வந்துள்ளது.
 அல்லாஹ் நம் அனைவருக்கும் நோன்பு பிடிக்க சக்தியை கொடுத்து அதை நிறைவேற்றியும் கொடுப்பானாக. 

Plain Mango Agar Agar 


இப்போது துபாயில் வெயில் மண்டைய பிளக்கிறது.. இன்னும் போக இரண்டுமாதத்துக்கு அனல் காற்று தான்.அதற்கு தண்ணீர் ஆகாரங்கள் அதிகமாக குடிப்பது நல்லது. ஆறிய வெண்ணீர், ஜூஸ், மோர், பழங்கள் என்று சாப்பிட்டால் சூட்டினால்  ஏற்படும் பல உபாதைகளில் இருந்து நம்மை பாதுக்காத்து கொள்ளலாம்.

இது வரை இங்கு நிறைய கடல்பாசி(அகர் அகர்) பதிவுகள் போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கலாம்.


இப்போது மாம்பழ சீசன் என்பதால் சூப்பரான மாம்பழ ஜெல்லி போல் இந்த அகர் அகரை செய்யலாம்.



தேவையான பொருட்கள்

ற்பாசி - இரன்டு கைபிடி அளவு
ர்க்கரை - அரை கப்
தண்ணீர் -  இரண்டு  ம்ளர்
மாம்பழம் - ஒன்று ( அல்போன்சா)
பிஸ்தா ப்ளேக்ஸ் தேவைக்கு



செய்முறை


 ண்ணீரில் ற்பாசியை பொடியாகஅரிந்து போட்டு சிறிது நேரம் ஊறவைத்து காய்ச்சவும்.

ரைந்து ரும் மயத்தில் அதில் ர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு டிகட்டவும் ல்லரைந்து விட்டால் டிகட்டதேவையில்லை.



சிறிது ஆறியதும் மாம்பழ கூழை கலந்து குளிரூட்டியில் குளிர விட்டு வேண்டிய வடிவில்  துண்டுகள் போட்டு சாப்பிடவும்.


Nuts Mango Agar Agar



கவனிக்க: தேவைப்ப்பட்டால் மாம்பழ எசன்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து கொள்ளலாம்.


இது வரை இங்கு நிறைய கடல்பாசி(அகர் அகர்) பதிவுகள் போட்டுள்ளேன். அதை இங்கு சென்று பார்க்கலாம்.

இனிப்பு மாங்காய் கடல்பாசி

How to make Agar Agar 

Indian Flag Agar Agar  - Step by Step



அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்.

Ist Day Ramadan Menu
1. இஃப்தார் மெனு

Night Sahar

Plain Rice
Aloo Gosh Kurma
Rasam
appalam



Evening Ittar

Mutton Kheem kanji



Ripe Mango Agar Agar
Orange
Grapes
Dates
Pears
Watermelen


ரமலான் மாதம் கேட்கவேண்டிய துஆ சுட்டியை கிளிக் செய்து ஓதி கொள்ளுங்கள்.



11 கருத்துகள்:

Angel said...

மாம்பழ கடல் பாசி சுவை அருமையா இருக்கும்னு நினைக்கிறன் ..ப்ரெஷ் பழம் சேர்ப்பதால் .
எங்களுக்கு இந்த வருஷம் அல்போன்சா பழத்தை யூகேவில் தடை செய்திருக்காங்க ..போன வருஷம் இதே பழத்தை வச்சி திருவிழா கொண்டாட்டமா இருந்தது இங்கே லண்டனில் .வேறு வகை போட்டு செய்துபார்க்கனும்

மாதேவி said...

அருமை. ரமலான் நல் வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

பார்க்கவே அழகா இருக்கு. சுவையும் பிரமாதமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Kurinji said...

paarkum pothe supera erukkuthu....bookmarked...

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வளவு அழகாக செய்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

Jaleela Kamal said...

ஆமாம் ஏஞ்சலின் பிரெஷ் மாம்பழம் ரொம்ப சுவை அதிகமாக இருக்கும்
வேறு வகை மாம்பழத்திலும் செய்து பாருங்கள்,.

இது வரை நோன்பு நேரம். மாம்பழம் சீசன் வந்ததில்லை.மேங்கோ எசன்ஸ் சேர்ர்த்து தான் செய்வேன்.

இந்த வருடம் தான் மாம்பழ சீசன்.

ஆனால் மாம்பழம் கிடைக்க வில்லை என்றால் மாஜா ஜூஸ் சேர்த்தும் செய்யலாம்.

Jaleela Kamal said...

ரமலான் வாழ்த்துக்கு மிக்க நன்றி மாதேவி

Jaleela Kamal said...

வாங்க ஆதி ஆம் கடல் பாசி சுவையே ரொம்ப நல்ல இருக்கும் அதில் இது போல் ப்லேவர்கள் சேர்த்து செய்யும் போது இன்னும் நன்றாகவே இருக்கும்
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க குறிஞ்சி ரொம்ப மாதங்கள் கழித்து வந்து இருக்கிறீர்கள்.

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தனபாலன் சார் உங்கள் தொடர் வருகைக்கும் ,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

கோமதி அரசு said...

மிக அருமை கடல்பாசி இனிப்பு.
ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா