மஞ்சள் பூசணி பாலக் தில் கீரை சூப் ( பேலியோ டயட்)
சமைத்து கொண்டிருக்கும் ஏற்பட்ட தீடீர் யோசனை தான் சமையல் தான் இந்த சூப், ஆனால் சுவை ஆஹா அருமை , பேச்சுலர்களும் சுலபமாக செய்யக்கூடிய சூப்.
காலை அல்லது இரவு பேலியோ டயட்டுக்கு உரிய மெனுக்கு
இந்த சூப்பை இரண்டு டம்ளர் குடித்து இரண்டு புல்ஸ் ஐ சாப்பிட்டால் போதுமானது.அதிகம் தேவைபடுபவர்கள் அளவுகளை கூட்டி கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பூசனி துருவியது 4 மேசைகரண்டி
பாலக் பொடியாக அரிந்த்து – 2 மேசைகரண்டி
தில் கீரை பொடியாக அரிந்தது – 2 மேசைகரண்டி
வெங்காயம் – இரண்டு மேசைகரண்டி
பூண்டு – ஒரு பெரிய பல்
வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி ( தேவைக்கு)
பச்சமிளகாய் -1 பொடியாக நருக்கியது
தண்ணீர் – இரண்டரை கப்
பட்டர் – 10 கிராம்
செய்முறை
வாயகன்ற சட்டியில் தண்ணீரை கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் வெங்காயம், பூண்டு, மஞ்சள் பூசனி, பாலக் , தில் கீரையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீர் அரை கப் அளவிற்கு வற்றட்டும். பிறகு வெள்ளை மிளகு தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவிட்டு பிளன்டரில் லேசாக ஒரு திருப்பு திருப்பவும். பிறகு சூடான சூப்பில் பட்டரை சேர்த்து பருகவும்.
தில் கீரை என்பது அரபுநாடுகளில் அரபிக் சாலடில் பயன்படுத்துவார்கள், இதில் ஓமம் வாசனை அடிக்கும். சூப்பில் சேர்க்கும் போது சுவை அருமையாக இருக்கும்.
இந்தியாவில் இந்த கீரை கிடைக்குமான்னு தெரியவில்லை, கிடைக்காதவர்கள் வல்லாரை, மண்தககளி, பொன்னாகன்னி கீரை இது போல் ஏதாவது இருவகைகீரைகளை சேர்த்து கொண்டு சிறிது வறுத்து திரித்த ஓமம் பொடியை சேர்த்து கொள்ளுங்கள்.
பரிமாறும் அளவு – ஒரு நபருக்கு
ஆக்கம்
ஜலீலா கமால்
Pumpkin
Iftar Recipe,Paleo Diet Soup
Tweet | ||||||