தேவையான பொருட்கள்
பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்
பாசி பருப்பு – இரண்டு மேசைகரண்டி
கேரட் – ஒரு சிறிய துண்டு
மஷ்ரூம் - 50 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
எண்ணை + நெய் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
பச்ச மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைக்கு
பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த பூண்டு - முன்று
கொத்துமல்லி தழை – சிறிது
புதினா – சிறிது
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
கடைசியாக தாளிக்க
எண்ணை + நெய் - இரண்டு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஆறு எண்ணிக்கை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
கொத்து மல்லி தழை - கைக்கு ஒரு கொத்து
செய்முறை
தக்காளி மடங்கியதும் மஷ்ரூமை நான்காக வெட்டி சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 4 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட்டு கொதி வந்ததும் தேங்காய், அரிசி + பாசிபருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறி விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் வந்ததும் இரக்கவும். ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கி கட்டி பிடிக்காமல் கிளறி விட்டு கொதிக்க விடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கிளவும்.
அரிசி பருப்பு இரண்டும் வெந்து கஞ்சி பதம் வந்ததும் இரக்கவும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
2 கருத்துகள்:
எனக்கு நோன்பு கஞ்சி பிடிக்கும். ரம்ஜான் போது மசூதில போய் வாங்கி வந்து குடிப்பேன்
அருமையான நோன்பு கஞ்சி ஜலீலா, செய்து பார்க்கிறேன்.
காளான் இல்லாமல் செய்து பார்க்கிறேன்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா