Tweet | ||||||
Wednesday, July 26, 2017
ஏர் ப்ரையர் கிரில் பிஷ் - Air Fryer Grill Fish Fry
ஏர் ப்ரையர் கிரில்
பிஷ்
Air Fryer
Grill Fish Fry
சங்கரா மீன் –
அரை கிலோ
உப்பு – முக்கால்
தேக்கரண்டி
ஆச்சி மீன் ப்ரை
மசாலா – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
ஆனியன் பொடி –
ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடி –
ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணை
– தேவையான அளவு
செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து அங்காங்கே குறுக்காக கீறி
விடவும் ( மசாலா நன்கு மீனுக்கு செல்ல) 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஏர் ப்ரையரை ஆன்
செய்து 16 நிமிடத்துக்கு செட் செய்து தேங்காய் எண்ணையை மீனின் மேலே முழுவதும் படுமாறு
பரவலாக ஊற்றி விடவும்.
ஒரு பக்கம் 8 நிமிடம்
கிரில் ஆனதும் , திருப்பி போட்டு மறுபக்கம் தேங்காய் எண்ணை தடவி 8 நிமிடம் கிரில் செய்யவும்.
இருபுறமும் மொருகலாக
கிரில் ஆகி அருமையாக இருக்கும்.
ரொம்ப ஈசியான ஏர்
ப்ரையர் கிரில் ஃபிஷ் ரெடி
பேலியோ டயட் ரெசிபி, மீன் வறுவல், ஏர் ப்ரையர் ரெசிபி
How to make Air Friyer Fish Fry
Paleo Diet Dinner Recipe
இந்த ஏர்ப்ரையரில் சிக்கன் மற்றும் காய்கறிகளுக்கு நடுவில் சுற்றுவது போல் ( கிரைண்டர் சுற்றுவது போல ) ரோலர் இருக்கும் , மீனுக்கு மட்டும் அதை எடுத்து வைத்து விட்டு தவ்வா போல அப்படியே இரண்டு பக்கமும் வைத்து டைம் செட் பண்ணால் போதும்/
Sunday, July 9, 2017
தினை & குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி- Foxtail Millet & Barnyard Millet soup
.
தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup
தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup
தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி
Foxtail Millet & Barnyard Millet ,Garlic Centella asiatica soup
தினைஅரைகப்
அரிசி – கால்கப்
குதிரைவாலிஅரைகப்
பூண்டுஒருபெரியபூண்டுமுழுவதும்
சீரகம் – ஒருதேக்கரண்டி
மிளகு – 3
தனியாதூள் – ¼ தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒருசிட்டிக்கை
சின்னவெங்காயம் – 6
தேங்காய் பால் – ஓரு டம்ளர்
தாளிக்க
எண்ணை + நெய் – 2 தேக்கரண்டி
சின்னவெங்காயம் – 3 பொடியாகஅரிந்த்து
கருவேப்பிலை – 4 இதழ்
வல்லாரைகீரை – 10 இதழ்
செய்முறை
தினை , குதிரை வாலி மற்றும் அரிசியை மிக்சியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.
குக்கரில் அரிசிவகைகளை களைந்து சேர்க்கவும். அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், பூண்டையும் பொடியாக அரிந்து சேர்த்து, தனியாத்தூள், மிளகு, சீரகம் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து முடிபோட்டு வேகவிட்டு 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.
ஆவி அடங்கியதும் நன்கு மசிக்கவும், தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
கடைசியாக எண்ணை + நெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வல்லாரை கீரை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.
சுவையான தினை குதிரை வாலி பூண்டு வல்லாரை கஞ்சி ரெடி.
பொட்டுகடலை துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
வல்லாரை english name Centella asiatica
தினை english name Foxtail Millet
குதிரை வாலி English Name Barnyard Millet
Tweet | ||||||
Labels:
சூப் வகைகள்,
டயட் சமையல்,
நவதாணியம்,
நோன்பு கஞ்சி
Wednesday, July 5, 2017
Heart shaped Idly- இதயவடிவ இட்லி- சமையல் அட்டகாசங்கள்
Heart Shape Idly
இதய வடிவ இட்லி
இட்லி மாவு தேவைக்கு
ஹார்ட் ஷேப் குக்கி கட்டர்
இட்லி மாவை இட்லி சட்டியில் குக்கர் உள்ளே வைக்கும் டப்பா அல்லது தாளி பிளேட்டில் பரவலாக ஊற்றி ஆவியில் இட்லி அவிப்பது போல அவித்து எடுக்கவும்/
சூட்டு சிறிது ஆறியதும் ஹார்ட் ஷேப் குக்கி கட்டர் வைத்து கட் செய்து எடுக்கவும்.
பிள்ளைகளுக்கு இப்படி கட் செய்து கொடுத்து இட்லி சான்ட் விச் போல கொடுக்கலாம்.
துபாயில் நடந்த ரேடியா சலாம் மகளிர் தினம் சாம்பார் கம்பட்டிஷன் க்கு சாம்பார் கூட இது போல இந்த இட்லியை செய்து வைத்து இருந்தேன்.
அப்ப புரோகராம் முடிந்து கடைசியில் தான் இதை ருசிபார்த்தார்கள், அதற்குள் அங்குள்ள குழந்தைகளிடம் இருந்து இந்த இதவ வடிவ இட்லிய பாது காப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
Tweet | ||||||
Labels:
இட்லி,
குழந்தை உணவு,
சாம்பார்,
துபாய்,
ரேடியோ சலாம்,
வீடியோ சமையல்
Monday, July 3, 2017
லெமன் தால் - Lemon Dal
அன்னபூரனா உணவகத்தில் காலை டிபன் பூரிக்கு கிழங்குடன் சட்னியும் இந்த லெமன் தாலும் கொடுப்பார்கள். கிழங்கை விட பூரிக்கு தால் சூப்பராக இருக்கும்.
லெமன் தால்
பாசி பருப்பு
– 100 கிராம்
மஞ்சள் தூள் –
½ தேக்கரண்டி
பச்ச மிளகாய்
– 1 நீளவாக்கில் அரிந்தது
லெமன் ஜூஸ் – ஒரு
மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
தாளிக்க
நெய் – ஒரு மேசைகரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
பச்சமிளகாய் -
- ஒன்று பொடியாக அரிந்ந்தது
செய்முறை
பாசிபருப்பை கழுவி தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்/
குக்கரில் ஊறிய
பருப்பை சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் ஒரு பச்சமிளகாய் சேர்த்து
முன்று விசில் விட்டு இரக்கவும்
வெந்த பருப்பை
லேசாக மசிக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை
சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து கலக்கி லெமன் ஜுஸ் சேர்த்து கலக்கி இரக்கவும்.
பூரி சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)