புத்துணர்வு தரும் புதினா, துவையல் சாப்பிட்டாலே அருமையாக இருக்கும் அதுவே சாதமாக என்றால் ஒரே மணம் தான்.சும்மா கும்முன்னு இருக்கும்.
இது ஏற்கனவே அரிசியில் செய்த புதினா சாதம் அதே பேலியோடயட்டில் அரிசிக்கு பதில் காலிப்ளவர் பயன் படுத்ததனும், காலிப்ளவரில், தயிர் சாதம், தக்காளி சாதம் , ப்ரைட் ரைஸ்ம் கொத்துமல்லி சாதம் , புதினா சாதம் கருவேப்பிலை சாதம் என பல வகைகளாக தயாரிக்கலாம்.
இது ஏற்கனவே அரிசியில் செய்த புதினா சாதம் அதே பேலியோடயட்டில் அரிசிக்கு பதில் காலிப்ளவர் பயன் படுத்ததனும், காலிப்ளவரில், தயிர் சாதம், தக்காளி சாதம் , ப்ரைட் ரைஸ்ம் கொத்துமல்லி சாதம் , புதினா சாதம் கருவேப்பிலை சாதம் என பல வகைகளாக தயாரிக்கலாம்.
காலிப்ளவர் துருவல் ( ரைஸ்) – 200 கிராம்
1. வறுத்து பொடிக்க
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – ஒரு சின்ன துண்டு
பிரியாணி இலை – இரண்டு
2.வதக்கி அரைக்க
பட்டர் (அ) நெய் – ஒரு ஸ்பூன்
புதினா ஒரு கட்டு
வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
3. தாளிக்க
எண்ணை + பட்டர் – ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் – பொடியாக அரிந்த்து ஒரு மேசை கரண்டி
செய்முறை
1. காலிப்ளவரை துருவி சோறு வடிப்பது போல் வடித்து கொள்ளவும் அல்லது இட்லி பானையில் அவித்து கொள்ளவும் அல்லது மைக்ரோ வேவில் 10 நிமிடம் வைத்து உப்பு சேர்த்து வேகவைத்துகொள்ளவும்.
2. வதக்கி அரைக்க வேண்டியவைகளை வதக்கி அதனுடன் பொடித்த பொடியையும் கலக்கவும்.
3. குக்கரில் எண்ணை + பட்டர் சேர்த்து கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
4. வேகவைத்துள்ள காலிப்ளவர் சாதத்தை குக்கரில் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான மனமான காலிப்ளவர் மின்ட் புலாவ் ரெடி
பேலியோவில் அரிசிக்கு பதில் காலிப்ளவர் அரிசி உணவு போல செய்து சாப்பிட வேண்டும்.
அதை நம் சுவைக்கு ஏற்ப பொங்கல்,தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம்,ப்ரைட் ரைஸ், புதினா புலாவ், வெஜ் பிரியாணி, சிக்கன் , மட்டன், மீன் , இறால் பிரியாணி போல செய்து சாப்பிடலாம்.
weight loss Recipes, Paleo diet recipes, puthinaa saatham
Tweet | ||||||
3 கருத்துகள்:
புது ரெசிப்பியை அறிமுகப்படுத்திய நன்றி
நான் அடிக்கடி பிரைட் ரைஸ் செய்வேன் புதினா ரைஸ் நல்லாருக்கும்போலிருக்கு செய்து பார்க்கிறேன்
புதிய ரெஸிபி.
அறியத் தந்தீர்கள் அக்கா....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா