வல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு
Old Post (19.4.18)
வல்லாரை கீரை - Pennywort Soup(Centella asiatica)
கீரை வகைகளில் வல்லாரை கீரைக்கு ஞாபகசக்தியை அதிகரிக்ககும் தன்மை உடையது.
படித்ததெல்லாம் மறந்து போதுமான்னு உங்கள் செல்ல குழந்தைகள்
சொல்கிறார்களா? அன்றட உணவுடன் இந்தவல்லாரை கீரையை உங்கள் வீட்டு
செல்லங்களுகு கொடுத்து வர ஞாபகசக்தியை அதிக படுத்தும். குழந்தைகள் மட்டுமல்ல
நாமும் குடிக்கலாம்.
வல்லாரை கீரையில் சூப், கஞ்சி, சாலட், அடை , சட்னி, மினி கேக் என பல வகைகளாக செய்யலாம்.
வல்லாரை கீரை சூப்
வல்லாரை கீரை - 2 கட்டு
வெங்காயம் – ஒன்று
பூண்டு – 8 பல்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
ஒரிகானோ - கால் தேக்கரண்டி
தண்ணீர் – 4 டம்ளர்
உப்பு – தேவைக்கு
பட்டர் (அ) நெய் – கால் தேக்கரண்டி
செய்முறை
வல்லாரை கீரை நன்கு அலசி
தண்ணீரை வடிகடவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மேலே கொடுக்கப்படுள்ள அனைத்து
பொருட்களையும் ( கீரை, வெங்காயம் பொடியாக அரிந்தது, சீரகம், மிளகுதூள், உப்பு,
சோம்பு , ஒரிகானோ, பட்டர், தண்ணீர் சேர்த்து 10 லிருந்து 15 நிமிடம் வரை வேகவிட்டு
கொதிக்கவிட்டு தண்ணீரை வடிகட்டவும்.
சூடான பிரட்டுடன் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.
குறிப்பு: இதில் ரெடிமேட் புரோக்கோலி சூப் அல்லது வெஜ் சூப்மற்றும் ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க வைத்தும் கொடுக்கலாம்Tweet | ||||||
1 கருத்துகள்:
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்
வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
தமிழ்US
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா