பாராகோட மீன் சால்னா மீன் ஃப்ரை -- Barracuda Fish
பார கோட என்ற மீன் சீலா மீன் போல இருக்கும் ஆனால் ஒரு முழ நீளம் சின்ன மீனாக இருக்கும், அதில் செய்த குழம்பு செய்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், முடிந்தால் செய்த போட்டோக்களை அனுப்பினால் இங்கு பகிர்வேன்.
பாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை
பாரகோடா மீன் – 1 கிலோ
எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை)
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 15 இதழ்
சின்ன வெங்காயம் – 6
பூண்டு - 4 பல்
அரைக்க
வெங்காயம் – 3
பூண்டு – 4 பல் பெரியது
பழுத்த தக்காளி – 6 மீடியம்
மசாலாக்கள்
காஷ்மீரி சில்லி பொடி - 1 மேசைகரண்டி
தனியா(கொத்துமல்லி தூள் ) – 2 ½ மேசை கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
புளி - இரண்டு லெமன் சைஸ் பால்ஸ்
தேங்காய் பவுடர் - 2 மேசைகரண்டி
செய்முறை:
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் சிறிது வினிகர் சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து மீண்டும் கழுவ்வும்.
அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் தக்காளி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
வாயகன்ற பாத்திரதில் எண்ணை ஊற்றி சூடாக்கி, கடுகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை, பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
அரைத்த அதே மிக்சியில் சேர்க்கவேண்டிய மசாலாவகைகளை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் மீன் சால்னாவில் சேர்க்கவும்.
மசாலாவாடை அடங்கியதும் புளியை கட்டியாக கரைத்து சேர்த்து கொதிக்க விடவும்.
புளி மசாலா வகைகள் ஒரு சேர நன்கு கொதித்ததும் மொத்த முன்றில் ஒரு பகுதியை போடவும், தேங்காய் பவுடரை வென்னீரில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கொதிக்க விட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
பாரகோட என்பது ஒரு முழ நீளத்தில் சிறிய மீன் சீலா மீன் போலவே இருக்கும்.
இங்கு துபாயில் இந்த மீன் அதிகமாக கிடைக்கும்.
மீதமுள்ள மீனை ஃப்ரைக்கு பயன் படுத்தவும்
பரிமாறும் அளவு - 5 நபர்களுக்கு
Tweet | ||||||