Saturday, June 19, 2021

ராஜ்மா மினி ஸ்லைடர்/ Rajma burger /என்னுடைய ரெசிபி அவள் கிச்சனில் 2020




#அவள்கிச்சனில் 2020 பிப்ரவரியில் வெளியான என்னுடைய 10 ரஜ்மா குறிப்புகளில் ஒரு ரெசிபி ராஜ்மா மினி ஸ்லைடர் அதாவது உலகில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பர்கர் வெஜ் பர்கர் அதை ராஜ்மாவிலும் செய்யலாம்.
இந்த லாக்டவுன் நேரத்தில் இது போல உணவக ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.





இரத்த விருத்திக்கு , கேன்சர் செல்களை சரி செய்ய இந்த ரெட் கிட்னி பீன் உதவுகிறது இதை சாலட் ஆகவும் சுண்டலாகவும் செய்து சாப்பிடலாம்.



Veg recipes
#Aval kitchen


8. ராஜ்மா மினி ஸ்லைடர்
வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்
துருவி வேகவைத்த பீட்ரூட் - 2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த மஞ்சள் பூசணி - 4 சதுர வடிவ துண்டுகள்
உப்பு - தேவைக்கேற்ப
வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வெங்காயப் பொடி - ஒரு டீஸ்பூன்
பூண்டு பொடி - அரை டீஸ்பூன்
துளசி இலை - கால் டீஸ்பூன் 

பிரெட் ஸ்லைஸ் - 2
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
பிரெட் கிரம்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

மினி ஸ்லைடருக்கு:

ரெடி செய்து வைத்து இருக்கும்ராஜ்மா ஸ்லைடர்கள் 5
குட்டி பன் - 5
லெட்ஸ்யூஸ் இலை  அல்லது ஐஸ்பர்க் லெட்யூஸ்தேவைக்கேற்ப
வட்டவடிவமாக வெட்டிய வெங்காயம் மற்றும் தக்காளி -  தேவைக்கேற்ப
தக்காளி சாஸ் -  தேவைக்கேற்ப

சதுர வடிவ சீஸ் – 5 எண்ணிக்கை
செய்முறை:
மிக்ஸியில் பிரெட் ஸ்லைஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்துப் பொடிக்கவும்.
ஒரு பவுலில் வேகவைத்த ராஜ்மா, பீட்ரூட், மஞ்சள் பூசணி சேர்த்துக் கலக்கி, .
அதை  வேறு பவுலுக்கு மாற்றி, அதில் வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி, துளசி இலை, வெள்ளை மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து பொடித்த பிரெட் கலவை பாதியைச் சேர்க்கவும். இதை  மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து மீண்டும் பவுலில் மாற்றவும். அதில் கலவை பர்கர் பதத்துக்கு வர, கோதுமை மாவு மற்றும் பிரெட் கிரம்ப்ஸ், மீதி உள்ள பொடித்த பிரெட் சேர்த்து நன்கு கலக்கி  உள்ளங்கைக்கும் சிறியதாக, திக்காக வட்ட வடிவில் தட்டவும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி இந்த மினி ஸ்லைடரை இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.

ராஜ்மா மினி ஸ்லைட்  அரேஞ்ச் செய்ய:
மினி பன்னை பாதியாக வெட்டி இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி தவாவில் சூடுபடுத்தவும். ஒரு பாதி மினி பன்னின் மேலே, ஒரு  டீஸ்பூன் அளவு தக்காளி சாஸை தடவி, லெட்யூஸ் இலையை பன் அளவுக்கு கட்  செய்து வைத்து அதன் மேல் வட்டமாக நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயம், அதற்கு மேல் பொரித்து வைத்த ராஜ்மா பர்கர்/ஸ்லைடரை வைத்து , மேலே சதுர வடிவ சீஸை வைத்து மறுபடி மேலே வட்ட வடிவ வெங்காயம், தக்காளியை வைத்து மேலே மற்றொரு பாதி மினி பன்னைக் கொண்டு மூடவும்.

குறிப்பு:
வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி இல்லை என்றால், பொடியாக வெங்காயம், பூண்டை கட் செய்து சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை மிளகுத்தூள் இல்லை என்றால் கறுப்பு மிளகுத்தூள் சேர்க்கலாம். சாஸ் மற்றும் வெஜ் மையானஸ் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கலாம்.

வீடியோ பதிவாகவும் உள்ளது அன்பான தோழ தோழியர்களே  சப்ஸ்கிரைப் செய்து உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவிக்கவும்.

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா