Tweet | ||||||
Friday, September 1, 2023
ராஜ போக ராஜ்மா கட்லெட் - 2 /Rajma Cutlet
ராஜ போக ராஜ்மா கட்லெட் - 2
ரெசிபி - 2
தேவையான பொருட்கள்
வேகவைத்த ராஜ்மா - 100 கிராம்
வேக வைத்தசர்க்கரை வள்ளி கிழங்கு - 25 கிராம்
வேகவைத்த கேரட் - 25 கிராம்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பூண்டு - 2
பொடியாக அரிந்த பச்ச மிளகாய் - 1
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/4 தேக்கரண்டி
இஞ்சி துருவியது - 1/2 தேக்கரண்டி
சில்லி ப்லேக்ஸ் - 1/4 தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - ஒரு கைப்பிடி
கட்லெட் கோட்டிங் கொடுக்க
****************************** ************
கார்ன் ப்ளார் பவுடர் - 2 தேக்கரண்டி
மைதா - 1 தேக்கரண்டி
ப்ரட் கிரம்ஸ் - கால் கப்
ஓட்ஸ் - 2 மேசை கரண்டி
ரவை - 2 தேக்கரண்டி
#Friends please check below Recipe in My Channel
Please support by subscribe like share comment
செய்முறை
ஒரு பேனை சூடு படுத்தி அதில் பொடியாக அரிந்த பூண்டு, பச்சமிளகாய், துருவிய இஞ்சி வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு சில்லி ப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த ராஜ்மா சேர்த்து நன்கு கிளறி ஆற வைக்கவும்.
சர்க்கரை வள்ளி கிழங்கு மற்றும் கேரட்டை வேக வைத்து மசித்து வைக்கவும்.
ராஜ்மா கலவையுடன் கிழங்கு வகைகளை சேர்த்து கொத்துமல்லி தழையை நன்கு பொடியாக அரிந்து சேர்த்து அத்துடன் கரம் மசாலா மற்றும் சாட் மசாலாவை சேர்த்து நன்கு பிசறி வைக்கவும்.
கோட்டிங் கொடுக்க
மைதாவையும் கார்ன் மாவையும் சேர்த்து அதில் சிறிது உப்பு , மிளகு தூள் போட்டு தண்ணீர் ஊற்றி கட்டியாக கலக்கி வைக்கவும்.
ப்ரட் கிரம்ஸ் உடன் ரவை மற்றும் ஓட்ஸை கலந்து அதில் சிறிது மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
தவ்வாவை சூடு படுத்தி எண்ணை விட்டு கட்லெட்டை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நன்கு மொருக விட்டு எடுக்கவும்.
கெட்சப் அல்லது சட்னியுடன் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிட அருமையாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா