கடல்பாசியில் சர்க்கரை மற்றும் கண்டெண்ட் மில்க் சேர்த்து செய்வோம், சர்க்கரை வியாதிகாரகள் அதிகமாக சாப்பிட முடியாது அதற்கு என்ன செய்யலாம். ஒரு சேன்ஞ் க்கு கருப்பட்டி சேர்த்து செய்யலாம்.
Friends please click below link and shupport by subscribe like share
கருப்பட்டி கடல்பாசி/ Jaggery Agar agar
தேவையான பொருட்கள்
Thick coconut milk or தேங்காய் தண்ணீர் - 150 மில்லி
தண்ணீர் - 150 மில்லி
கடல் பாசி – 5 கிராம்
கருப்பட்டி வெல்லம் - 50 கிராம்
( தேவைக்கு கூட்டி போட்டுகொள்ளலாம்)
உப்பு - அரை சிட்டிக்கை
செய்முறை
கருப்பட்டியை சிறிது தண்ணீரில் தூள் செய்து போட்டு காய்ச்சி வடிக்கட்டி வைக்கவும்.
தண்ணீர் + coconut milk or தேங்காய் தண்ணிரில் கடல் பாசியை உதிர்த்துபோட்டு 10 நிமிடம் ஊறவைத்து
நன்கு கரைய காய்ச்சவும்.
கருப்பட்டியை சேர்த்து சூடு படுத்தி ஒரு சதுர வடிவ டப்பாவில் ஊற்றீ ஆறவைத்து குளிரூட்டியில் வைத்து குளிர வைத்து தேவைக்கு துண்டுகள் போட்டு சாப்பிடவும்.வித்தியாசமான ருசியில் அருமையாக இருக்கும்.
Tweet | ||||||