Monday, August 31, 2009

பிரியாணி கஞ்சி, நோன்பு கஞ்சி 3



வெளிநாடுக‌ளில் பேச்சுல‌ர்க‌ள் செய்யும் போது நிறைய‌ பேருக்கு செய்வார்க‌ள். அப்போது குக்க‌ரில் செய்ய‌ முடியாது.
சிறிய பேமிலி என்றால் குக்கரில் செய்யலாம் ஆனால் நிறைய பேருக்கு என்கிற போது கறி கீமாவை தனியாக தாளிக்கனும், அரிசியை தனியாக வேகவிடனும்.இது டபுள் மசாலா கொடுத்து பிரியாணி போல் தாளித்து செய்வது.

தேவையான பொருட்கள்

மட்டன் கீமா = 300 கிராம்
அரிசி நொய் = 3 டம்ளர்
பச்ச பருப்பு = அரை டம்ளர்
வெங்காயம் = நான்கு
தக்காளி = முன்று
பச்ச மிளகாய் = முன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் = முன்று மேசை கரண்டி
கேரட் = இரண்டு
கொத்து மல்லி = அரை கைபிடி
புதினா கால் கைபிடி
தயிர் = இரண்டு மேசை கரண்டி
மிளகாய் தூள் = இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
எண்ணை முன்று மேசை க‌ர‌ண்டி
டால்டா = ஒரு தேக்க‌ர‌ன்டி
ப‌ட்டை = ஒரு அங்குல‌ம் அள‌வு
கிராம்பு = முன்று
ஏல‌ம் = ஒன்று
தேங்காய பால் = அரை மூடி


செய்முறை

1. அரிசி நொய் (நொய் மிக்சியில் பொடிக்க முடியவில்லை என்றால் அரிசியை ஊறவைத்து கையால் பினைந்து உடைத்து விடவும்) மற்றும் பாசி பருப்பு (வருத்தது) அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஒரு பெரிய வயகன்ற சட்டியில் ஒன்றுக்கு முன்று மடங்கு தண்ணீரை கொதிக்க விட்டு ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து தேவைக்கு உப்பு போட்டு குழைய வேக விடவும்.

3. கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும், வெங்காயம், தக்காளி அரிந்து வைக்கவும். புதினா, கொத்து மல்லியை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வடித்து வைக்கவும்.தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.

4. இப்போது கீமாவை தனியாக தாளிக்கனும்.சட்டியை காயவைத்து எண்ணை + டால்டாவை ஊற்றி பட்டை, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை அரிந்து சேர்த்து வதக்கி, வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு வாடை போனதும் கொத்து மல்லி புதினா, தக்காளி, பச்ச மிளகாயை போட்டு வதக்கி சிறிது நேரம் தீயை சிம்மில் வைத்து வேகவிடவும்.

5. கேரட்டை பொடியாக அரிந்து சேர்த்து, கீமா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிடவும்.பாதி வேகும் போடு தயிரை சேர்க்கவும்.கூட்டு ந‌ல்ல‌ வெந்து கிரிப்பாகி எண்ணை தெளிந்து வ‌ரும் போது இர‌க்கி விட‌வும்.
6. வெந்து கொண்டிருக்கும் அரிசியில் இந்த‌ க‌ல‌வையை சேர்த்து தேங்காய் பாலும் சேர்த்து அடி பிடிக்காம‌ல் ந‌ன்கு கிள‌றி கொதிக்க‌ விட்டு க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி புதினா தூவி இர‌க்க‌வும்.

குறிப்பு:

இதே போல் சிக்க‌ன் கீமாவிலும் செய்ய‌லாம் இல்லை சிக்க‌ன் (அ) ம‌ட்ட‌னை பொடியாக‌ அரிந்து போட்டும் செய்ய‌லாம் அரிந்து போட்டு செய்யும் போது 400 கிராம் அள‌வு எடுத்து கொள்ள‌வும். க‌றி அதிக‌மா விரும்பாத‌வ‌ர்க‌ள் இதே அள‌வே போதும்.

பேச்சுல‌ர்க‌ள் பிரியாணி க‌ஞ்சி என்றில்லை சாதா க‌ஞ்சியையும் ம‌சாலா க‌ம்மியாக‌ போட்டு இதே போல் செய்ய‌லாம்.

வெஜிடேரியன்கள்வெஜ் க‌ஞ்சியும் இதே முறையில் க‌றி, சிக்க‌னுக்கு ப‌தில் (முட்டை கோஸ், கேர‌ட், பீன்ஸ், முழுபாசிப‌ருப்பு சிறிது சேர்த்து செய்ய‌லாம்)
ப‌ச்ச‌ ப‌ருப்புக்கு ப‌தில் க‌ட‌லை ப‌ருப்பும் போட‌லாம்.
இதே போல் லைட் ம‌சாலாவில் ப‌ச்ச‌மிளகாய் ம‌ட்டும் சேர்த்து ப‌ள்ளி வாச‌ல் க‌ஞ்சி போல் த‌யாரிக்க‌லாம்.

Sunday, August 30, 2009

ஸ்பினாச் வடை - Spinach Vadai

தேவையான‌ பொருட்க‌ள்

உளுந்து பருப்பு = ஒரு கப்
ஸ்பினாச் கீரை = அரை கப்
வெங்காயம் = அரை
கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி
கொத்து மல்லி = ஒரு மேசை கரண்டி
பச்சமிளகாய் = ஒன்று
இஞ்சி = ஒரு தேக்கரண்டி (துருவியது)
மிளகு = அரை தேக்கரண்டி ( முக்கால் பாகம் திரித்தது)
உப்பு = முக்கால் தேக்கரண்டி (அ) அவரவர் ருசிக்கு

செய்முறை

1.உளுந்து ப‌ருப்பை ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை வ‌டித்து மையாக‌ அரைக்க‌வும்.
2. ஸ்பினாச், கொத்து மல்லி, கருவேப்பிலையை மண்ணில்லாமல் கழுவி நல்ல பைனாக (பொடியாக) அரிந்து வைக்கவும்.
3. அரைத்த‌ மாவில் உப்பு, பொடியாக‌ அரிந்த‌ ஸ்பினாச் (பால‌க்) கீரை பொடியாக‌ அரிந்த‌ ப‌ச்ச‌மிளகாய் , துருவிய‌ இஞ்சி, கொத்து ம‌ல்லி , க‌ருவேப்பிலை மிள‌கு எல்லாம் சேர்த்து ந‌ன்கு கிள‌ற‌வும்.
4. எண்ணையை காய‌ வைத்து வ‌டைக‌ளாக‌ பொரித்து எடுக்க‌வும்.
சுவையான‌ ஸ்பினாச் வ‌டை ரெடி. தொட்டுக்கொள்ள‌ புதினா துவைய‌ல் (அ) பொட்டுக‌ட‌லை துவைய‌ல், நோன்பு க‌ஞ்சிக்கும் பொருந்தும்.

குறிப்பு:
எண்ணையை ரொம்ப சூடு படுத்தி விட்டு வடையை போட்டால் உள்ளே வேகாது, எண்ணை சூடானதும் தீயின் அளவை சிறிது மீடியமாக வைத்து வடையை போட்டு திருப்பியதும் ஒரு முறை கரண்டியால் அமுக்கி விடவும் பிறகு நல்ல வெந்து வரும்.
இஞ்சி மிளகு சேர்வதால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
ந‌ல்ல‌ ஷாஃப்டாகவும் , கிரிஸ்பியாகவும் இருக்கும், இத‌ற்கு சோடா மாவு கூட‌ தேவையில்லை

மோர் குழம்பு -Moor kuzampu





தேவையான பொருட்கள்.


ஊறவைத்து எண்ணையில் வருத்து அரைக்க‌


எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசை கரண்டி
துவரம் பருப்பு - ஒரு மேசை கரண்டி
அரிசி - ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் ‍ இரண்டு பெரியது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் ‍ இரண்டு பத்தை பெரியது
வெந்தயம் - ஐந்து
உப்பு ‍ = ஒரு தேக்கரண்டி (அ)தேவைக்கு




மிக்சியில் அடித்து கொள்ள


மோர் - ஒரு டம்ளர்
தயிர் - ஒரு கப்
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = அரை தேக்கரண்டி


தாளிக்க‌


எண்ணை ‍ இரண்டு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் - முன்று
பூண்டு - இரண்டு பல்
பொருங்காய பொடி = ஒரு பின்ச்
கருவேப்பிலை - ஆறு இதழ்
மஞ்சள் தூள் ‍= அரை தேக்க‌ரண்டி
கொத்துமல்லி தழை சிறிது






செய்முறை


1. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தனியாக வைக்கவேண்டும்.(எண்ணை ,கடுகு, காஞ்ச மிளகாய்,பூண்டு,கருவேப்பிலை, கொத்து மல்லி)


2. மோர் + தயிரை ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நுரை பொங்க அடித்து ரெடியாக வைக்கவும். (இதற்கு இரண்டு கப் மோரும் ஊற்றலாம் (அ) தயிறும் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அடித்தும் ஊற்றலாம்)






3. கடலை பருப்பு,துவரம் பருப்பு,அரிசி , தேங்காய்,பச்சமிளகாய்,சீரகம், வெந்தயம் அனைத்தையும் அரை மணிநேரம் ஊறவைக்க வேன்டும்.


4. ஊறவைத்ததை ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி தண்ணீரை வடித்து வருத்தெடுத்து ஆறவைக்கவேண்டும் ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்க வேண்டும்.


5. அரைத்த கலவை கட்டியாக இருந்தால் தேவைக்கு தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.


6. நல்ல கொதித்து பச்ச வாடை அடங்கனும் கொதிக்கும் போது பொங்கும் அடி பிடிக்கும் இடை இடையே கிளறி விட வேண்டும்


7. மோர் தயிர் கலவையை கொதித்து கொண்டிருக்கும் கலவையில் ஊற்றி கொதிக்க விடாமல் கலக்கி உடனே இரக்கவும்.
8. தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மோர் கலவையில் ஊற்ற வேன்டும்.
சுவையான மோர் குழம்பு ரெடி.


குறிப்பு


இதில் காய் தேவை படுபவர்கள் வெண்டைக்காயை அரிந்து தனியாக வதக்கி போட்டு கொள்ளலாம்.
இது வயிறு உபாதைகளுக்கு ஒரு அரு மருந்து தயிர் புளிப்பில்லாதது என்றால் குழந்தைகளுக்கும் நல்ல குழைவாக பிசைந்து ஊட்டி விடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள அப்பளம், மசால் வடை,பகோடா, பீட்ரூட் (அ) கேரட் பொரியல் செய்து கொள்ளலாம்.
இல்லை முட்டை அவித்து மசாலா போட்டு பொரித்து கொள்ளலாம், சிக்கன் மற்றும் மட்டன் பிரையும் நல்ல இருக்கும்.

நான்கு ந‌ப‌ர்க‌ள் சாப்பிட‌லாம்

மோர் குழம்பு,

இந்த மோர் குழம்பு நான் கற்று கொண்டது 1993 யில் ஆனால் கொஞ்சம் சிம்பிளாக தான் , நான் இதில் பலவகைகள் செய்து பார்த்து விட்டேன் , அதாவது தயிரை கடைந்து தான் மோர் குழம்பு செய்வார்கள், தயிர் + மோர் , அல்லது மோர் மட்டும் வாங்கி செய்தால் சுவை சூப்பர், இதில் வெண்ண்டைக்காயை எண்ணையில் வதக்கி சேர்த்தால் வெண்ண்டைக்காய் மோர் குழம்பு, அப்படி யே வெறும் சாதத்தில் ஊற்றி பிரட்டி சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
இதற்கு வெறும் பீட்ரூட் பொரியல் மட்டும் போதும், , இல்லை துருவிய மாங்காய் தொக்கு, அப்பளம் , வயிறுக்கு இதம் அல்சர், வயிறு உபாதை உள்ளவர்கள், மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு ஏற்ற அருமையான உணவு

Saturday, August 29, 2009

பிளெயின் கடல்பாசி (ரூ ஆப் ஷா) - rooapsa agar agar




தேவையான‌ பொருட்க‌ள்



கடல் பாசி = 10 கிராம்
தண்ணீர் = முன்று டம்ளர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கர‌ண்டி
சர்க்கரை = தேவையான அளவு
பாத‌ம் , பிஸ்தா = வேண்டிய நட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி




செய்முறை


1. ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.


2. நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.


3. நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.வடிகட்டி கொள்ளவும்.மீதி அதில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.


4. இப்போது ரூ ஆப் ஷா சேர்த்து, ந‌ட்ஸ் வ‌கைக‌ளை பொடியாக‌ தூவி ஒரு த‌ட்டில் ஊற்றி ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்க‌வும்.


5. வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌வும்.






குறிப்பு

இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம்.

அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.

நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது.


linking to Agar Agar Recipe contest sponsored by Marine Chemicals , Kochi. www.Indiaagar.com hosted at Food Corner
 

உளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை







உளுந்து வடை டிப்ஸ்


1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும்.
இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள் செய்வார்கள், சிலருக்கு வடை , கருப்பு உளுந்து சுண்டல் தவிர வேறு எதுவும் பிடிக்காது.அதற்கு இப்படி வடையாக செய்து கொடுக்கலாம் (இடுப்பெலும்பு பலம் பெற என்பதைதான் விழுந்து போன இடுப்பையும் பலப்படுத்தும் என்றேன்)
காலை டிபனுக்கு அதில் மிளகு தட்டி போட்டு, இஞ்சி,பச்சமிளகாய் சேர்த்து வடை செய்து அதற்கு புதினா துவையலும்,குழந்தைகளுக்கு சர்க்கரையும் தொட்டு சாப்பிட்டால் ரொம்ப சூப்பர். வயிறும் திம்முன்னு ஆகிடும்.
விழுந்து போன இடுப்பையும் தூக்கி நிறுத்தும் உளுந்து.


2. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கலவை தண்ணியாக போய் விட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும்.


3. உளுந்து வடைக்கு அரைக்கும் போது கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைக்கனும், மிக்சி பிளேட் நடுவில் சிறிது எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.


4. அரைக்கும் போது அப்ப ஒரு கத்தி கொண்டு வழித்து விட்டு அரைக்கலாம்.
ஐஸ் வாட்டரில் ஊறவைத்தால் மாவு நல்ல காணும்.


5. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சமிளகாய், இஞ்சியை அரைத்து விட்டால் காரம் வாயில் உரைக்காது, அவர்களுக்கு சிறிது துருவிய கேரட் (அ) பீட்ரூட் கலந்து சுட்டு கொடுக்கலாம்.


6.பொடியாக‌ கீரையும் அரிந்து போட்டு கீரை வ‌டையாக‌ சுட‌லாம்.


7.ந‌ல்ல‌ பெரிய‌தாக ஹோட்ட‌ல் போல் வ‌ர‌வேண்டும் என்றால் சிறிது ஈஸ்ட் ஊறவைத்து சேர்த்து பொரிக்க‌லாம்.


8. வ‌டைக்கு அரைத்து விட்டு அந்த‌ மிக்சியை அப்ப‌டியே வைத்து விட்டால் காய்ந்து மிக்சியில் ஒட்டி கொள்ளும். ஆகையால் அரைத்த‌ உட‌னே சிறிது த‌ண்ணீர் ஊற்றி சுழ‌ற்றி அரைத்து விட்டால் சுத்த‌மாக‌ க‌ழுவி எடுத்த‌து போல் ஆகிவிடும்.


9.பூபெய்திய‌ பெண்க‌ளுக்கு உளுந்து வ‌டை, உளுந்து சுண்ட‌ல், உளுந்து க‌ளி, உளுந்து அடை, உளுந்து பால், உளுந்து வட்லாப்பம் என்று செய்து கொடுக்க‌லாம்.


10. உடல் சூட்டை தணிக்க தயிர் வடை செய்தும் சாப்பிடலாம்.



11.குழ‌ந்தைக‌ளுக்கு மினி த‌யிர் வ‌டை செய்தும் கொடுக்க‌லாம்.


கிட்ஸ் கலர் புல் தயிர் வடை










வடைக்கு



உளுந்து பருப்பு =‍ அரை டம்ளர்
உப்பு = கால் தேக்கரண்டி
இஞ்சி ஒரு சிறிய‌ துண்டு
ப‌ச்ச‌ மிளகாய் = ஒன்று
ஆலிவ் ஆயில் ‍ = அரை தேக்க‌ர‌ண்டி


த‌யிர் தாளிக்க‌



ஒரு க‌ப் = த‌யிர்
பால் ‍ = சிறிது
எண்ணை ‍ அரை தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
பெருங்காய‌ம் = ஒரு பின்ச்
மோர் = வ‌டை தோய்க்க‌


அல‌ங்க‌ரிக்க‌



க‌ல‌ர் புல் = காரா பூந்தி (தேவைக்கு)
வேர்க‌ட‌லை = சிறிது
வ‌ருத்த‌ முந்திரி = (தேவை ப‌ட்டால்)
கேர‌ட் ‍ ‍= அரை துண்டு

செய்முறை

1. உளுந்து பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து அதில் உப்பு, ஆலிவ் ஆயில்,இஞ்சி , பச்ச மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். ஆலிவ் ஆயில் சேர்ப்பதால் ஈசியாக அரையும்

3. அரைத்த மாவை எண்ணையை காயவைத்து சிறிய ஒரு ரூபாய் காயின் அள‌விற்கு குட்டி குட்டி மினி வடைகளாக தட்டி போடவும்.

4. வடைகளை திருப்பி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.



5.சூடான வடைகளை எடுத்து மோரில் நனைக்கவும்.


6.தனியாக சட்டியில் எண்ணை ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து தயிர் நன்கு கலக்கி சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.தேவைக்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.மோரில் ந‌னைத்த‌ வ‌டைக‌ளை தாளித்த‌ த‌யிர் க‌ல‌வையில் சேர்க்கவும்.


7.சிறிய கிண்ணத்தில் இரண்டு இரண்டு வடைகளாக வைத்து அதில் வேர்கடலை, கேரட், கலர் ஃபுல் காரா பூந்தியை தூவி பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.



குறிப்பு



இந்த கலருக்கே உங்கள் குழந்தைகள் நல்ல சாப்பிடுவார்கள்.நீங்களும் அடிக்கடி செய்ய வேண்டி வரும். பெரிய‌வ‌ர்களுக்காக‌ இருந்தால் ந‌ல‌ல் கார‌ம் தேவைக்கு சேர்த்து தாளிக்கும் போது சின்ன‌ வெங்காயம் சேர்த்து தாளித்து கொத்தும‌ல்லி தூவி சாப்பிட‌வும்.கோடைக்கு ஏற்ற‌ குளு குளு கிட்ஸ் க‌ல‌ர் ஃபுல் த‌யிர் வ‌டை ரெடி.இது நோன்பு கால‌த்திலும் செய்து சாப்பிட‌லாம்.

Friday, August 28, 2009

பாப் கார்ன் சிக்கன் பிரை


தேவையான பொருட்கள்

ஊற‌ வைக்க‌

போன்லெஸ் = 50 கிராம்
வெள்ளை மிளகு தூள் (அ) கருப்பு மிளகு தூள் ‍= கால் தேக்கரண்டி
உப்பு = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
ரெட் கலர் பொடி = சிறிது
எலுமிச்சை சாறு = கால் தேக்கரண்டி

தோய்க்க‌

முட்டை = சிக்கன் தோய்க்க தேவையான அளவு (கால் பாகம்)
கிரெம்ஸ் = இரண்டு மேசை கரண்டி
கார்ன் பிளார் மாவு = அரை தேக்கரண்டி

செய்முறை

போன் லெஸ் சிக்கனை பொடியாக அரிந்து அதை நன்கு கழுவி ஊறவைக்க வேன்டிய மசாலாக்கலை போட்டு ஊறவைக்கவும்.
முட்டையை நன்கு அடித்து அதில் சிக்கன் துண்டுகளை தோய்த்து கிரெம்ஸ் மற்றும் கார்ன் மாவை கலந்து அதில் பிரட்டி அப்படியே உருண்டையாக உருட்ட வரும்.
உருண்டைகளை பட்டர் + எண்ணை கலந்த கலவையில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பாப் கார்ன் சிக்கன் பிரை ரெடி, எடுத்து சாப்பிட இலகுவாக இருக்கும்.
சிக்கன் சீக்கிரம் வெந்து விடும் எளிதில் தயாரித்து விடலாம்.

Thursday, August 27, 2009

அகர் அகர் கடல்பாசி






ஹ‌ர்ஷினி அம்மா க‌ட‌ல்பாசி ப‌ட‌ம் போட‌ சொன்னார்க‌ள், அவ‌ர்க‌ளுக்காக‌ க‌ட‌ல் பாசி ப‌ட‌ம்.
இது ஒரு வெஜ்டேரிய‌ன் வ‌கை உண‌வு.

கடல்பாசி என்ப‌து சைனா கிராஸ், அக‌ர் அக‌ர்


இளநீர் கடல்பாசி




இது புட்டிங், ஐஸ் கிரீம், பாலுதா, ஸ்வீட்ஸ்க்கு பயன் படுத்துவது, ஜெல்லி ஆகியவற்றிற்கு ரெஸ்டாரண்ட்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள்
இது ஒரு வெஜ்டேரியன் உண‌வு தான். இது வெள்ளை கலர் நூல் போல் ஒரு முழம் அளவிற்கு இருக்கும். இதை பல வகைகளில் சமைக்கலாம்.

. உடல் சூட்டை தணிக்கும் இந்த கடல்பாசி.

நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் செய்வது.

பாக்கிஸ்தானியர்களும் இதை அதிகமாக செய்வார்கள்.


ரைஸ்கேக் செய்ய இதை பயன் படுத்துவார்கள்.


இது கிராம் க‌ண‌க்கில் தான் விற்க‌ப்ப‌டுகிற‌து.


செய்முறை

மொத்த‌மாக‌ செய்வ‌தாக‌ இருந்தால் 5 கிராம் எடுத்து ஒரு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைத்து த‌ண்ணீரை வ‌டிக‌ட்டி இர‌ண்ட‌ரை ட‌ம்ள‌ர் பாலில் ந‌ன்கு வேக‌ வைத்து அதில் விருப்ப‌மான‌ கல‌ர் கொஞ்ச‌ம் சேர்த்து ந‌ட்ஸ் வ‌கைக‌ள், பேரிட்சை, இல்லை ப‌ழ‌ங்க‌ள் பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிர‌வைத்து வேண்டிய‌ வ‌டிவில் க‌ட் செய்து சாப்பிட‌லாம்.






குறிப்பு



இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம். அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது. நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது