Thursday, December 31, 2009

ஷீர் குருமா பாயத்துடன் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இது இஸ்லாமிய இல்லங்களில் ஈத் பெருநாளின் போது செய்வார்கள்.
சாதாரன விஷேஷங்களுக்கும் செய்யலாம். இது பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம் .பெரும்பாலும் இதை பாக்கிஸ்தானியர்கள் அதிகமாக விசேஷ நாட்களில் செய்வார்கள். நம் நாடுகளில் உருது முஸ்லீம்கள் செய்வார்கள்

டயட் செய்கிறவர்கள். லோ பேட் மில்கில் வெரும் பாதம், அக்ரூட் மட்டும் அரைத்து ஊற்றி, சுகர் பிரியை சேர்த்து சேமியாவை நெயில் வருக்காமல் அப்படியே சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்

தேவையான பொருட்கள்

பால் ‍ ஒரு லிட்டர்
முந்திரி, பாதம், பிஸ்தா = 150 கிராம் (அரைக்க)
பொடி சேமியா கைக்கு இரண்டு கை பிடி 150 கிராம்
சர்க்கரை ‍ முக்கால் டம்ளர் (தேவைக்கு
கன்டென்ஸ்ட் டின் ‍ 200 கிராம்
ஏலக்காய் ‍ 5
நெய் = இரண்டு மேசை கரண்டி
முந்திரி, பிஸ்தா,கிஸ்மிஸ் பழம் ‍ 50 கிராம்
சாஃப்ரான் (குங்கும பூ) = இரண்டு சிட்டிக்கை அளவு


செய்முறை


பாலை ஏலக்காய் சேர்த்து நன்கு காய்ச்சவும். (பால் நல்ல கொதித்து முக்கால் பாகமாக வற்ற வேண்டும்).

பாதம், பிஸ்தா, முந்திரியை அரைத்து ஊற்றி மீண்டும் காய்ச்சவும். (அரைத்த முந்திரி பாதம் கலவை ஒரு டம்ளர் அளவிற்கு வரும்).

ஒரு மேசைகரண்டி நெய்யில் சேமியாவை பொடித்து வருத்து கொதித்து கொண்டிருக்கும் பாலில் சேர்க்க‌வும்.

அடுத்து சர்க்கரை சேர்த்து, முன்று நிமிடம் கொதித்ததும் அடுப்பை அனைத்து விடவும் பால் சூட்டில் வேறு நல்ல வேகும்முந்திரி,பிஸ்தா பொடியாக அரிந்து, கிஸ்மிஸ் பழம் அனைத்தையும் ஒரு தேக்கரண்டி நெயில் கரியாமல் வருத்து சேர்க்கவும்.

கடைசியாக சாஃப்ரானை தூவி இரக்கவும்

சுவையானா ஷீர் குருமா பாயாசம் ரெடி.

ஷீர் குருமா பாயத்துடன் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

குறிப்பு:

அக்ரூட் இருந்தால் அதையும் சேர்த்து கொள்ளலாம். இது இங்கு ரோஸ்டடே கிடைக்கிறது, லேசாக வருத்தால் போதும், வெள்ளி பொடிசேமியாவாக இருந்தால் நன்கு பொன் முறுவலாக வருத்து போடவும்.

மேலும் அடிக்கடி வீட்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். ஹெல்தியும் கூட. தினம் வீட்டில் செய்வதாக இருந்தால் கொஞ்சமாக முந்திரி மட்டும் அரைத்து ஊற்றி கொதிக்கவைத்து பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

இந்த பாயசத்தை செய்து குடித்து டேஸ்ட் பார்த்து விட்டால் வேறு எந்த பாயாசமும் செய்ய தோணாது, செய்வது சுலபம், ஈசியும் கூட ஹெல்தியான பாயசமும் ஆச்சு, சுவைத்து மகிழுங்கள்.


இது எங்க அண்ணி சொல்லி கொடுத்தது,அதோடு பாக்கிஸ்தானி பிரெண்ட் ஒருவரும் சொல்லி கொடுத்தார்கள்,இரண்டு முறையிலும் கலந்து இது என் ஸடைலில் என் இஷ்டத்துக்கு அளவுகள் போட்டு செய்வேன். 15 வருடமா பாயாசம் என்றால் அது ஷீர் குருமாதான். ரொம்ப ரிச்சாக இருக்கும்.

ஜெர்மனியில் உள்ள தமிழ் தோழி இதை என்னிடமிருந்து கற்று கொண்டு போய் பார்டியில் செய்து அசத்தி எல்லாருடைய பாராட்டையும் பெற்று காலி சட்டியை வீட்டுக்கு எடுத்து வந்தார்களாம். அவர்கள் அன்று அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


பிறக்க போகும் வருடத்தில் நடந்து முடிந்த தீமைகளையும், மனக்கசப்புகளையும் மறப்போம். கொஞ்சம் நேரமாவது ஒதுக்கி கடந்த வருடத்தில் என்ன தப்பு செய்தோம், அது இந்த வருடத்தில் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.


பிறக்க போகும் இந்த புது வருடத்தில் ஆண்டவன் அனைவரின் நாட்டங்களையும் நிறைவேற்றி வைக்க ஏக வல்ல ஆண்டவனிடம் பிராத்திப்போம்.
ஓட்டு போட மறக்கக்கூடாது

26 கருத்துகள்:

அண்ணாமலையான் said...

வாழ்த்த படிச்சிட்டேன்
ஆனா பாயசத்த குடிக்க முடியலே
பார்சல்ல அனுப்பி வைங்க...

Mrs.Faizakader said...

அண்ணன் அண்ணாமலையானுக்கு அனுப்பும் பொழுது தங்கைக்கும் ஒரு பார்சல் அனுப்பி வைங்க அக்கா.
எனக்கு ரொம்ப பிடித்த அயிட்டம் இது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

ஏற்கனவே நீங்கள் எனக்கு சொல்லித்தந்த குறிப்பு.சுவையான ஷீர் குருமா.இப்போது படத்துடன்..இனிப்புடன் பிரார்த்தனையும் சேர்த்தே வழங்கிய ஜலிக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

////பிறக்க போகும் வருடத்தில் நடந்து முடிந்த தீமைகளையும், மனக்கசப்புகளையும் மறப்போம். கொஞ்சம் நேரமாவது ஒதுக்கி கடந்த வருடத்தில் என்ன தப்பு செய்தோம், அது இந்த வருடத்தில் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள். பிறக்க போகும் இந்த புது வருடத்தில் ஆண்டவன் அனைவரின் நாட்டங்களையும் நிறைவேற்றி வைக்க ஏக வல்ல ஆண்டவனிடம் பிராத்திப்போம்.////

வழிமொழிகிறேன்.

சிங்கக்குட்டி said...

கலக்கல் வாழ்த்து ஆடுது, நடுவுல பாயசாம் ஓடுது ....அருமை ....

எனக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்க.

இது மாதிரி நம்ம சாப்பிடும் பதிவெல்லாம் பார்த்து நான் எப்படி கவலை படுவேன் என்று விரைவில் ஒரு பதிவில் சொல்கிறேன்.

சிங்கக்குட்டி said...

தவறாக நினைக்க வேண்டாம், இங்கு அது எதுவுமே கிடைக்காது :-(

நட்புடன் ஜமால் said...

ஆஹா! ஷீர் குருமா ஹைதை மக்களோடு இருக்கையில் குடித்துள்ளேன்.

சுவையானதே.

தினம் தினம் நன் நாளே - என்றுன்றும் வாழ்த்துகள்.

மகா said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

seemangani said...

//பிறக்க போகும் இந்த புது வருடத்தில் ஆண்டவன் அனைவரின் நாட்டங்களையும் நிறைவேற்றி வைக்க ஏக வல்ல ஆண்டவனிடம் பிராத்திப்போம்.//

ஆமீன்....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...அக்கா...

suvaiyaana suvai said...

akka unga veeddu address sollungga aduththa flight:) super parcel laavathu anuppunga :D Monday paarpoom Happy New Year

my kitchen said...

Rich payasam,roomba nalla erruku. Wishing you and your family a very happy and prosperous New Year dear:)

இப்படிக்கு நிஜாம்.., said...
This comment has been removed by a blog administrator.
இப்படிக்கு நிஜாம்.., said...

அக்கா! இந்த பாயாசம் போலவே எல்லார் வாழ்க்கையும் இனிக்க இறைவனிடம் துவா செய்கிறேன்.

vijis kitchen said...

ஜலீ புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நல்ல கமகம ஷீர் குருமா. நான் இதை 2 தடவை செய்திருக்கேன். அதன் ருசி இப்பவும் நாவில் இருக்கிறது. ஸ்டெப் பை ஸ்டெபோட அசத்திட்டிங்க.

தமிழ்ப்பெண்கள் said...

புதிய ஆரம்பம்..
2010 புதுவருட தினம் உத்தியோகபூர்வமாக தமிழ்ப்பெண்கள் திரட்டி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
http://tamilpenkal.co.cc/
உங்கள் நண்பிகளுக்கும் தமிழ்ப்பெண்கள் திரட்டியை அறிமுகப்படுத்துங்கள்.

vijis kitchen said...

ஜலீ உங்களுக்காக2010 புத்தாண்டில் ஒரு இனிய விருது காத்திருக்கு.
www.vijisvegkitchen.blogspot.com
பெற்று கொள்ளவும்.

ஹர்ஷினி அம்மா said...

ஜலீலா அக்கா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சூர்யா ௧ண்ணன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Malar Gandhi said...

Wish you and your family a Very Happy New Year.:)

Sheer Khurma sounds awesome...brings back all nostalgic memories of festival and fun' days back home...miss it!!!

Aruna Manikandan said...

Wishing u and ur family a Happy and a prosperous New Year!!!!

SUFFIX said...

பேரு புதுசா இருக்கே, செய்து பார்த்திடுறோமுங்க.

தாஜ் said...

slaam jaleela

sheer payasam parkkumpothum athai padikkumpothum udane seyya thonuthu

அண்ணாமலையான் said...

நம்ம பக்கம் உங்க ஓட்டும், கருத்தும் கானோமே? வரலாமா?

Jaleela said...

அண்ணாமலையான் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுக்கென்ன பார்சல் தானா ம்ம அனுப்பிட்ட்டா போச்சு.

பாயிஜா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? ஒகே உங்களுக்கும் ஒரு பார்சல்.


ஆமாம் நீங்கள் போனவருடமே இதை என்னிடம் கேட்டு ருசி பார்த்து விட்டீர்கள்.

நவாஸ் மிக்க நன்றி போன வருடம் ஊக்குவித்தது போலவே இந்த வருடமும், என் குறிப்புகளுக்கு ஊக்குவிக்கனும்.

நன்றி சிங்கக்குட்டி தப்பா எல்லாம் எடுக்க மாட்டேன். ம்ம் சீக்கிரம் அந்த பதிவை போடுங்கள்.


நன்றி நட்புடன் ஜமால் (தினம் தினம் நன்னாளே)


மகா மிக்க நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்கள் பிராத்தனைக்கு நன்றி, புத்தாண்டு வாழ்த்துக்கள்.


சுவையான சுவை வாங்க கண்டிப்பா செய்து தறேன்.


வருகைக்கு மிக்க நன்றி, ஆமாம் இது ரிச் பாயாசம் நன்றி உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


நிஜாம் வருகைக்க்கும், உங்கள் துஆவிற்கும் மிக்க நன்றி

Jaleela said...

விஜி புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆமாம் போன வருடம் உங்கள் கல்யாண நாளுக்கு இதை செய்தீர்கள். விஜி உங்கள் விருதை பெற்று கொள்கிறேன் மிக்க நன்றி.

ஹர்ஷினி அம்மா என்ன ஆளையே காணும், புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சூரியா கண்ணன் சார் வருகைக்கு மிக்க நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்.


ம‌ல‌ர் காந்தி இனிய புத்தாண்டு வாழ்த்துக்க‌ள் ஆமாம் ப‌ண்டிகைகால‌ ச‌மைய‌லை நினைவு கூறுகிற‌து.

அருனா புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.

சலாம் தாஜ் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி


அண்ணாமலையான் அவர்களே நேரமின்மை காரணத்தால் என் பின்னூட்டமும், ஓட்டும் கடைசி சீட்டு தான்..

Torviewtoronto said...

looks delicious thank you Jaleela for linking

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா