Monday, April 5, 2010

காயம் லேகியம்,மருந்து சோறு

மருந்து சோறும், காய லேகியமும்
//இது கர்ப்பை வீக்காக இருந்து அடிக்கடி குழந்தை அபார்ஷன் ஆகிறவர்களுக்கும், பிள்ளை பெற்ற பிறகு கர்ப்பை வலுவடையவும், அதில் உள்ள அழுக்குகள் வயிற்று புண் போகவௌம் இந்த இரண்டு ரெசிபியும், இதை ஆண்களும் சாப்பிடலாம், இடுப்பெலும்பு மற்றும் முதுகெல்லும்பு பலம் பெரும், கீரைஸுக்கு பதில் இதை கூட செர்ய்து சாப்பிடலாம் மருந்தின் அளவை சரியாக சேர்த்து தேங்காய் பால் சேர்த்து செய்வதால் இதில் கசப்பு தெரியாது சுவையாக இருக்கும், காலை டிபனுக்கு கூட மாசி துவையலுடன் சாப்பிடலாம்.//


தேவையான பொருட்கள்
மருந்து பொடி = 75 கிராம்
முழு தேங்காய் = ஒன்று
இஞ்சி = 25 கிராம்
பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் = 400 கிராம்
ம‌லை பூண்டு = இர‌ண்டு முழுவ‌தும்
நல்லெண்ணை = 100 கிராம்
நெய் = 50 கிராம்
கருப்பட்டி வெல்லம் = கால் கிலோ
தேன் = ஒரு குழி கரண்டி
1. தேங்காயை பாலெடுத்து வைக்கவும்.இஞ்சி அரைத்து சாறு எடுத்து நஞ்சை தெளியவைத்து கொள்ளவும். பாதம் பிஸ்தா முந்திரி அக்ரூட்டை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.கருப்பட்டியை இளக்கி மண்ணில்லாமல் வடி கட்டிகொள்ளவும்.பூண்டை உறித்து பொடியாக நருக்கி வைக்கவும்


2. வெல்லம் மருந்து பொடி, இரண்டாவது எடுக்கும் தண்ணீ தேங்காய் பாலுடன் கலக்கவும்


3. அரைத்து வைத்துள்ள பாதம் கலவையையும், கட்டி தேங்காய் பால், இஞ்சி சாறையும் சேர்த்து கலக்கவும்.


2. வெல்லம் மருந்து பொடி, இரண்டாவது எடுக்கும் தண்ணீ தேங்காய் பாலுடன் கலக்கவும்.அரைத்து வைத்துள்ள பாதம் கலவையையும் கலந்து கொள்ளவும்.

3.ஒரு வாயகன்ற பெரிய சட்டியில் ந‌ல்லெண்ணை + நெய்யை ஊற்றி பூண்டை போட்டு வ‌றுக்க‌வும்.க‌ட்டி தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி கொதிக்க‌ விட‌வும்.5. க‌ல‌ந்து வைத்த‌ காய‌க்க‌ல‌வையை அதில் ஊற்றி கிள‌றி ந‌ன்கு காய்ச்ச‌வும், மருந்து வாடை போகும் வரை காய்ச்சவும்கலவை சுருண்டு ஹல்வா பதம் வர கொஞ்சம் டைம் எடுக்கும்.கடைசியாக தேன் கலந்து இரக்கவும்.


இதில் முட்டை உடைத்து ஊற்றுவார்கள். முட்டை ஊற்றுவதாக இருந்தால் லேகியம் மாதிரி இல்லாமல் தளர்வாக காய்ச்சி கொள்ளவும்.

Note:
ஹ‌ல்வா ப‌த‌த்திற்கு கிளற ஒரு க‌ண்டெயின‌ரில் போட்டு வைத்து பிள்ளை பெற்றவர்கள் தின‌ம் சாப்பிடும் போது முட்டையை அவித்து இத‌னுட‌ன் சாப்பிட‌லாம்.கர்ப்பபை புண்ணை ஆற்றும் பலம் பெற்ம். இதை காய்ச்ச முடியவில்லை என்றால் மருந்து சோறு போலவும் ஆக்கி சாப்பிடலாம்

இது குழந்தைபெற்றவர்களுக்கு, அபார்ஷன் ஆனவர்களுக்கு பூப்பெய்திய பெண்களுக்கு எல்லாம் செய்து கொடுக்கலாம்.இதற்கு தோசை, இடியாப்பம், ஆப்பம், பிரெட் எல்லாம் தொட்டு கூட சாப்பிடலாம்


இந்த மருந்து பொடி கிடைக்கும் இடம் சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் தாயார் மருந்து கடை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல் எதிரில்வுள்ளது
இது மருந்து சோறு ஸ்டெப் பை ஸ்டெப் அருசுவையில் கொடுத்துள்ளேன் பார்த்து கொள்ளவும்.

மருந்து சோறு

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி (அ) பொன்னி புழுங்கல் அரிசி - அரை படி - 400 கிராம் (நாலு ஆழாக்கு)
நல்லெண்ணை ( அ) சன் பிளவர் எண்ணை - 125 கிராம்
தேங்காய் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 75 கிராம்
மருந்து பொடி - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 50 கிராம்
உளுந்து - 50 கிராம்முட்டை - இரண்டு
வெல்லம் - கொஞசம்
உரித்த முழு பூண்டு - இரண்டு உப்பு - தேவைக்கு
பட்டை - இரன்டு அங்குலம் இரண்டு துண்டு
கிராம்பு - நன்கு
ஏலம் - இரண்டு

பச்ச மிளகாய் - இரண்டு

செய்முறை

1. தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

2.தேங்காயை மிக்சியில் அரைத்து கொள்ளவேண்டும்.

3.அரைத்த தேங்காயை ஒரு வெள்ளை துணியில் வடித்து பிழிந்து பால் எடுக்கவும்.

4.அரிசி உளுந்தை ஒன்றாக ஊறவைத்து கொள்ள வேண்டும்.மருந்து பொடியை கடைசியாக எடுக்கும் தண்ணீர் தேங்காய் பாலில்கரைத்து வைத்து கொள்ள வேண்டும், பூண்டை உறித்து வைக்க வேண்டும்.முட்டை அடித்து வைக்கவேண்டும்.

5.ஒரு வாயகன்ற சாட்டியை காயவைத்து அதில் எண்ணையை ஊற்றி பட்டை ஏலம் கிரம்பு போட்டு வெடிக்க விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு கொத்துமல்லி புதினா, பச்ச மிளகாயை ஒவ்வொன்றக போட்டு வதக்க வேண்டும்.

6.இப்போது கலக்கிய மருந்து பொடியை முதலில் ஊற்றி , உப்பு, மஞ்சள் தூளையும் சேர்க்க விடவேண்டும்.
7.கட்டியான தேங்காய் பாலை ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

8.கொதி வந்ததும் அரிசியை தட்டி , வெல்லம், உரித்துவைத்துள்ள பூண்டையும் போட்டு தீயை மித மாக வைத்து வேக விட வேண்டும்.

9. முக்கால் பாகம் வெந்துவரும் இப்போது தீயை குறைத்து விடவும்.


10.தம் போடும் கருவியை கேஸ் அடுப்பின் மேல் வைத்து தீயை சிம்மில் வைக்க வேண்டும்.

11. முட்டை நன்கு கலக்கி ஊற்ற வேண்டும்.

12. மருந்து சாதத்தை நன்கு பிறட்டி விட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும்.


12. மருந்து சாதத்தை நன்கு பிறட்டி விட்டு சிறிது நேரம் வேக விட வேண்டும்.மூடி போட்டு அடுப்பின் மேல் ஏற்றி மேலே ஒரு கணமான பாத்திரம் (அ) சூடான குழம்பு சட்டி வைக்கவேண்டும்.

13 சுவையான மருந்து சாதம் ரெடி.


குறிப்பு

**********

இந்த மருந்து பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் பெயர் காயப்பொடி. திருநெல்வேலி சைடில் தயார் செய்கிறார்கள்.இது பிள்ளை பிறந்த பிறகு இத்துடன் நிறைய பொருட்கள் சேர்த்து லேகியம் போல் செய்வார்கள்,இந்த பொடியில் சாப்பாடும் செய்வார்கள்.இது பிள்ளை பெற்றவர்களுக்கு செய்து கொடுப்பார்கள். வயிற்று புண்ணை ஆற்றும்.மற்றவர்களும் சாப்பிடலாம் இதற்கு தொட்டு கொள்ள மீன் குழம்பு,சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, பிளெயின் தால் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.இதற்கு பொன்னி புழுங்கல் அரிசியும் நல்ல இருக்கும்.


///இந்த காயப்பொடியில் உள்ள மருந்துகள் 12 வகை என்று அருசுவையில் கொடுத்துள்ளேன், அது 12 கிடையது, என் மாமியார் வந்திருந்த போது கேட்டு எழுதி வைத்துள்ளேன் , அதில் இருக்கும் பொடி வகைகள் மட்டும் சொல்கிறேன். இது மொத்தமா நாங்க வாங்கி வைத்து கொள்வோம், யாரும் வீட்டில் திரிபப்து கிடையாது. //


இதில் சேர்ந்துள்ள பொடிவகைகள்.
பட்டை = ஒரு பங்கு
அதில் பாதி சாலியல்
அதில் பாதி சரக்குப்பை
வெந்தயம்
மஞ்சள்

இதெல்லாம் நாட்டு மர்ருந்து கடைகளில் கிடைக்கும்.

கொசுறு தகவல்கள்: நம்ம மங்கு அமைச்சருக்கு ஸ்பெஷலா ஜெய்லானி கொசு முட்டையிலும், மரவட்டிலும் லேகியம் தயாரித்து கொடுப்பார்44 கருத்துகள்:

பித்தனின் வாக்கு said...

அம்மா வாங்க, அய்யா வாங்க, எங்க ஜலிலாக்கா பண்ணிய லேகியத்தை சாப்பிட்டிங்கன்னா, உங்க உடம்பு சொன்னது கேக்கும். இது போலி இல்லிங்க. நீங்களே செய்யலாம், நம்பி சாப்புடலாம். லேகியத்தை ஒரு மண்டலம் சாப்புட்டா கண்டிப்பா லேகியம் தீர்ந்து போயிடும்ன்னு உறுதியா சொல்றேம்.

அக்காவ் நல்லா சேல்ஸ் ஆச்சுன்னா எனக்கு கமிசன் தரனும் சொல்லிட்டேன்.

நல்ல பயனுள்ள மருத்துவ குறிப்பு. இது அல்சருக்கும் கேக்குமா?

ஜெய்லானி said...

மருந்து பொடின்னா என்ன ? அதுக்கு வேற பேரு எதுவும் இருக்கா?

மங்குனி அமைச்சர் said...

ஆஹா , ஒரு க்ருபா தான்யா அலையுறாக , அங்க ஆயிஷா மேடம் என்னானா சுருட்டு குடிக்க சொல்றாக , இங்க ஜலீலா லேகியம் விக்குராக , டே மங்கு பே கேர் புல் , (டே ஜெய்லானி இவுக ரெண்டு பேரும் சேந்து ஏதோ பிளான் பன்றாக பாத்துக்க )

நாஸியா said...

ஆ!! மருந்து சோறு... அழுது அழுது திண்டிருக்கேன்.. எங்க கம்மா (பாட்டி) தான் செய்வாங்க... அதோட கரி ஆனம் ஊத்தி திண்டா நல்லாத்தான் இருக்கும்.. இதை சாப்பிட்டாகுறுக்கு (முதுகுப்பகுதி) நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும்னு சொல்லுவாங்க.. ஆனா கடைசியில நல்லெண்ணைய ஊத்தி அதுல முட்டைய போட்டு கிண்டி தருவாங்க.. டைப் பண்ணும்போதே கண்ணுல தண்ணி வருது... யப்பாஅ...

ஊருக்கு போனா இருக்கு எனக்கு ஆப்பூ..ஹிஹி...

Jaleela said...

சுதாகர் சார்நகைசுவையுடன் லேகியம் விற்க சொல்லி தந்தமைக்கு மிக்க நன்றி,

ஆமாம் இது அல்சருக்கு நல்ல மருந்து, உடல் சூட்டை தனிக்கும்

malar said...

மருந்து சோறு எங்க ஊரிலும் உண்டு..

நல்ல விளக்கமாக எழுதி இருகேங்க...

மன்னார்குடி said...

உபயோகமான பதிவு.

Jaleela said...

ஜெய்லானி உங்களுக்காக குறிப்பை மாற்றி அமைத்துள்ளேன்.
பார்த்து கொள்ளவும்.

இது போன வருடம் தங்கைக்கு டெலிவெரி ஆனபோது இங்கு வைத்து நான் தான் பார்த்து கொண்டேன் அப்ப செய்தது செய்த லேகியம் , இத நான் தமிழ் குடும்பத்திலும் கொடுத்துள்ளேன். இந்த லேகியம் செய்வது ரொம்ப சிரமம் என்பார்கள் ஊரில் ஆனால் எல்லா பொருளும் ரெடியா இருந்தால் ஒன்றும் சிரமம்கிடையாது, இது பிள்ளை பெற்ற வீட்டில் மட்டும் தான் செய்வார்கள். செய்தால் ஊரே மணக்கும். பெரிய சட்டியில் சிறைய செய்து எல்லோருக்கு பங்கிட்டு கொடுப்பார்கள்.

மருந்து சோறு தேங்காய் சோறு போல் தான் அது நினைத்த நேரம் அடிக்கடி செய்யலாம்/

Jaleela said...

அமைச்சரே நீர் பண்ணும் லொள்ளூக்கு இந்த லேகியம் சரி பட்டு வராது, ஜெய்லானி உங்களுக்காக தயாரிப்பார் அது தான் நல்ல முக்க மூடிட்டு முன்று வேலைக்கு சாப்பிடனும். சரியா? ஆயிஷா மேடம் இல்லை ஆசியா,

Jaleela said...

நாஸியா நீங்கள் சொல்வது சரி தான் , மருந்தின் அளவு அதிகமானால் தான் சாப்பிட முடியாது./

Jaleela said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மன்னார் குடி..

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே நீர் பண்ணும் லொள்ளூக்கு இந்த லேகியம் சரி பட்டு வராது, ஜெய்லானி உங்களுக்காக தயாரிப்பார் அது தான் நல்ல முக்க மூடிட்டு முன்று வேலைக்கு சாப்பிடனும். சரியா? ஆயிஷா மேடம் இல்லை ஆசியா,//

ஆஹா , ஜெய்லானி சும்மாவே சாவடிப்பான் , இதுல நீங்க வேற போட்டுகுடுகுரீக ....... என்னா வில்லத்தனம்

Chitra said...

அக்கா, நாட்டு மருந்துகள் தனித்துவம் வாய்ந்தது தான். அக்கா, உங்களுக்கு தெரியாதே விஷயமே சமையலில் கிடையாதா? அசத்தல்.

பித்தனின் வாக்கு said...

// பட்டை = ஒரு பங்கு
அதில் பாதி சாலியல்
அதில் பாதி சரக்குப்பை
வெந்தயம்
மஞ்சள் //

என்னங்க,,, பட்டை அப்படின்னு சொல்றீங்க. சரக்குன்னு சொல்றீங்க. ஒன்னும் வில்லங்கம் இல்லையே. ஏன்னா நான் இது எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆவுது. அதான் டவுட்டு.

karthik said...

பயனுள்ள பதிவு நண்பரே

ஜெய்லானி said...

(சாலியா, சதகுப்பை,) அட இது நம்ம களி கிண்டியது. என்னுடைய ஃபேவரைட். வீட்டில் அடிக்கடி செய்ய சொல்லி சாப்பிடுவது வழக்கம் . அடடா வீட்டு நினைவு வந்துடுச்சே !!

Kanchana Radhakrishnan said...

நல்ல பயனுள்ள மருத்துவ குறிப்பு

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் said...

ஆஹா , ஜெய்லானி சும்மாவே சாவடிப்பான் , இதுல நீங்க வேற போட்டுகுடுகுரீக ....... என்னா வில்லத்தனம்//

மங்கு எங்க ஆ...காட்டு..ஹூம்...கொஞ்சமா..ம்..சாப்புடு..கசக்காது ராஸா..தவளை நாக்கு + மூட்டைபூச்சி ரத்தம் + பெருச்சாலி வால் + குதிரை முடி ..வேற எதுவும் கலக்கல . நல்ல புள்ள தானே நீ ...எங்க .வாய் காட்டு....இன்னும் ..கொஞ்சமா... ஆ...டேய்..ஓடாத..டாய்..புடிங்கடா அவனை..........

அநன்யா மஹாதேவன் said...

ரொம்ப உபயோகமான மருத்துவக்குறிப்பு! பின்னூட்ட கும்மிகளும் தூள்! :-))

SUFFIX said...

சோறே மருந்தாயிடுச்சா, நல்லது. கலக்குறீங்க போங்க.

சசிகுமார் said...

அக்கா சற்று புரிய வைக்கவும் மருந்து பொடியா இல்லை மருந்து சோறா நான் கடையில் எப்படி கேட்பது இது என் மனைவிக்கு உபயோகமானதாக இருக்குமென்று நம்புகின்றேன். நல்ல பதிவு அக்கா.

அன்புத்தோழன் said...

முதல்ல என்னடானா குழந்தை உண்டானது முதல் சாப்பிட வேண்டிய விஷயத்த பத்தி போட்டீங்க.... இப்போ குழந்தை பிறந்த பிறகு உடல் வலிமைக்கு இந்த பதிவு போட்டுருக்கீங்க.... ஆக இவை அனைத்திலும் ஒரு உள்குத்து இருக்கத்தான் செய்யுது... ஹி ஹி....:-)நல்ல பகிர்வு..

ஸாதிகா said...

இந்த மருந்து சோறு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மட்டுமல்ல திருமணம் ஆகாதவங்களுக்கு திருமணம் ஆகிவிடும்.//..தவளை நாக்கு + மூட்டைபூச்சி ரத்தம் + பெருச்சாலி வால் +//இது கலக்காத சோறை வைத்துக்கொண்டு பிடித்தவர்களுக்கு சுலப ஓடி ஓடி ஊட்டிவிடலாம்.சாகடிக்கவர்ரவங்களுடன்.. சூப்பரா மல்லுக்கு நிக்கலாம்.கம்மா ஊட்டி விடுவதை மறுத்தால் அடியும் விழலாம்

Mrs.Menagasathia said...

நல்ல பதிவு அக்கா!!

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...


மங்கு எங்க ஆ...காட்டு..ஹூம்...கொஞ்சமா..ம்..சாப்புடு..கசக்காது ராஸா..தவளை நாக்கு + மூட்டைபூச்சி ரத்தம் + பெருச்சாலி வால் + குதிரை முடி ..வேற எதுவும் கலக்கல . நல்ல புள்ள தானே நீ ...எங்க .வாய் காட்டு....இன்னும் ..கொஞ்சமா... ஆ...டேய்..ஓடாத..டாய்..புடிங்கடா //

ஆ...... காட்றது அப்புறம் இருக்கட்டும் , முதோ உன் வலது கைய எங்க ? போய் ஆசியா ஓமர் மேடம் ப்ளாக்ல தேடு

Geetha Achal said...

சூப்பர்ப் லேகியம் + மருந்து சோறு...அருமை...

ஜெய்லானி said...

//மங்குனி அமைச்சர் --ஆ...... காட்றது அப்புறம் இருக்கட்டும் , முதோ உன் வலது கைய எங்க ? போய் ஆசியா ஓமர் மேடம் ப்ளாக்ல தேடு//

அப்புடியா உனக்கு அங்கேயே ஆப்பு வச்சிட்டேனே பாக்கலயா??. அவங்க பபலிஷ் பண்ணுவாங்க பாருய்யா!! அலறிஅடிச்சி வரப்போற (( உனக்குனு தனியா ஆபீஸ் தொறந்திருக்கேனே தெரியாதா ))

ஜெய்லானி said...

ஸாதிகாக்கா வாழ்க!! வாழ்க!!!. ஏங்க , இது மங்குக்கு ஸ்பெஷலா செஞ்சது. அப்ப டெஸ்ட் ஓகே. மங்கு கொஞ்சமா குடிச்சிட்டு ஓடிப்போச்சி..எங்க இன்னேரம் விழுந்து கிடக்கோ! யாரு கண்டது !! சரி நீங்க தந்த டிப்ஸும் ஓகே , சரிதான் கடைய போட்டுட வேண்டியதுதான். கடை கேசியர் யாரு நம்ம பித்தன் சுதாகர் சார்தான், இதுல முதல் கமெண்டுலயே அனுபவம் புரியுதே..>>

seemangani said...

மருதாணி கை
மகத்துவத்தில்
மருந்து சோறு...(எப்பூடீ...)

கவித கவித ம்ம்ம்ம்...அருமை ஜலி அக்கா...

Jaleela said...

//ன்னங்க,,, பட்டை அப்படின்னு சொல்றீங்க. சரக்குன்னு சொல்றீங்க. ஒன்னும் வில்லங்கம் இல்லையே. ஏன்னா நான் இது எல்லாம் பார்த்து ரொம்ப நாள் ஆவுது. அதான் டவுட்டு.//

இந்த தொப்பையானாந்தா பிடித்த பத்து பெண்களில் சில்க போட்டதிலிருந்து ஒரே பட்டை சரக்குல தான் மிதப்பார் போல

Jaleela said...

ஸாதிகா அக்கா பூனைக்கு யார் மணிகட்டுவது என்று நினைத்தேன், ஜெய்லானி மட்டும் அமைச்சர் கிட்ட மட்டிக்கிட்டரே,
பராவயில்லை நிங்களும் சேர்ந்துல்ல கலாச்சிட்டீங்கல்.

இன்னேரம் கொசு லேகியம் சாப்பிட்டு விட்டு அந்த தெம்பில் தெளிச்சளா அடுத்தது யாரை கலாய்க்கலாமுன்னு யோசிச்சிட்டு இருபபார் மங்கு.

athira said...

ஜலீலாக்கா சூப்பர் ரெசிப்பி. பார்க்க ஆசையாக இருக்கு ஆனால் யாராவது செய்து தந்தால் மட்டுமே சாப்பிடலாம்:(, அவ்வளவு பொருட்கள் சேர்த்திருக்கிறீங்க.

பி.கு:
தெரியாமல் கேட்கிறேன் ஜலீலாக்கா, இது நமக்குள்ளேயே இருக்கட்டும்... ஜெய்..லானி ஆணி பிடுங்கிறேன் எனச் சொல்லிச் சொல்லி கொசுமுட்டை வியாபாரமோ பண்ணுகிறார்.... அதி...எஸ்ஸ்ஸ்ஸ்.

வேலன். said...

அசத்தல் பதிவு சகோதரி...பிரசவ லேகியம் என்கின்ற பெயர் சரியாக வருமோ.?
வாழ்க வளமுடன்.
வேலன்.

asiya omar said...

ஆகா ஜலீலா அருமையான தொகுப்பு.உங்களின் 400 வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்.

Jaleela said...

சுதாகர் சார்,

ஜெய்லாணி

நாஸியா

மங்குனி அமைச்சர்

மலர்

மன்னார்குடி

சித்ரா

கார்த்திக் (உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி)

காஞ்சனா

அநன்யா மஹாதேவன் , வருகைக்கு மிக்க நன்றி

ஷபிக்ஸ்

சசி குமார்

அன்புதோழன்

ஸாதிகா அக்கா

மேனகா

கீதா ஆச்சல்

சீமான் கனி

அதிரா

வேலன் சார், நீஙக்ள் சொல்வதும் சரிதான் பிரசவ லேகியம். மாற்றிடுவோ, ஆனால் இஸ்லாமியர்களுக்கு காயம் மருந்து என்று சொன்னால் தான் தெரியும்.

ஆசியா

நீங்கள் அனைவர் கொடுக்கும் ஊக்கத்துக்கும், தொடர் வருகைகக்கும், அன்பான பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி.

அதிரா ஜெய்லானி கொசு லேகியத்தை அமைச்சருக்காக தான் விற்கிறார்

பித்தனின் வாக்கு said...

என்னங்க நம்ம பிளாக் பக்கம் ஆளைக்காணேம் வந்து கொஞ்சம் அழுதுட்டுப் போங்கோ. அப்படியே அழுதுட்டு பின்னூட்டம் ஓட்டும் போடுங்க ஜலில்லா மாமி.

ஹுஸைனம்மா said...

அட மருந்துச் சோறும், காயமும்!!

காயம்தான் குடிக்க/ சாப்பிட கஷ்டம். மருந்துச் சோறு நல்லாருக்கும்.

நாஸியா, ஈஸியா இதச் சாப்பிட உங்களுக்கு ஒரு வழி சொல்லட்டுமா? நீங்களே செய்யணும் அவ்வளவுதான்!! நாம கஷ்டப்பட்டு செஞ்சதை, தூரப்போட மனசு வருமா, சாப்பிட்டுத்தானே ஆகணும்? நான் அப்படித்தான் சாப்பிட ஆரம்பிச்சேன்!!

முன்னாடி, எங்கம்மா வச்சுகிட்டு சாப்பிடு சாப்பிடுன்னு தாங்குவாங்க; நானும் பிடிக்கலைன்னு சண்டை போடுவேன்; ஆனா, இப்ப இருக்க முதுகு வலிக்கு யாராவது செஞ்சு தரமாட்டாங்களான்னு இருக்கு!! அதனால கஷ்டமா இருந்தாலும் தரும்போது சாப்பிட்டுடுங்க நாஸியா, சரியா??

மனோ சாமிநாதன் said...

ஜலீலா!

மருந்து சோறு செய்யும் விதம் அழகாக காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!!

Jaleela said...

ஹுஸைனாம்மா நல்ல யோசனை சொன்னீங்க நாஸியாவுக்கு.

ஆமாம் அது செய்யும் விதத்தில் செய்தால் நல்ல இருக்கும், கசப்பும் தெரியாது

Jaleela said...

மிக்க நன்றி மனோ அக்கா, தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

பாக்க நல்லா இருக்குது. ஆனா அந்த லேகியத்த நினைச்சா கண்ணு கலங்குது.முழுங்கறதுக்கு அம்புடு கஷ்டப்படுத்துவேன்.. எங்க ஆச்சி விடியக்காலைல நான் தூக்கக்கலக்கத்துல இருக்கும்போதே ஊட்டி விட்டுடுவாங்க.

நாஸியா said...

ஹிஹி.. ஹூசைனம்மா நல்ல யோசனை தான்.. எங்கும்மாவும் இன்ஷா அல்லாஹ் குடுத்து விடுறேன், செஞ்சு சாப்பிடுன்னு சொன்னாங்க...

ஆனா என்ன மேட்டர்னா, நான் செஞ்ச மேகியே என்னால வாய்ல வெக்க முடில, மருந்து சோறு செஞ்சா அதோட நிலமை.. சாரி என்னோட நிலமை.. நல்லா துவா செஞ்சிட்டே செய்யனும் இன்ஷா அல்லாஹ்
:)

Viki's Kitchen said...

Akka I belong to Tirunelveli and this marunthu choru / kulambu recipe is very famous there. Thanks for this nice post. Again and again kalakkuringa.

Thasnim Yousuf said...

Nice medicinal recipe

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா