Wednesday, April 14, 2010

குலோப் ஜாமுனுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து - gulab jamun




என் இனிய வலை உலக தோழ தோழியர்கள் அனைவருக்கும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்








.
அனைவ‌ரும் வாழ்வில் அனைத்து ந‌ல‌ன்க‌ளையும் இனிதாய் பெற்று நோயின்றி வாழ‌ வாழ்த்துகள்.












தேவையானவை


பால் பவுடர் = 200 கிராம்
ரவை = ஒரு தேக்கரண்டி
மைதா (அ) கோதுமை ஒருதேக்கரண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = ஒரு தேக்க‌ர‌ண்டி
பால் = தெளிக்க குழைக்க‌
ச‌ர்க்க‌ரை பாகு
ச‌ர்க்க‌ரை = இரண்டு ட‌ம்ள‌ர்
த‌ண்ணீர் ச‌ர்க்க‌ரை மூழ்கும் அள‌வு
சாப்ரான் = சிறிது
ந‌ட்ஸ் வ‌கைக‌ள் (பாத‌ம் பிஸ்தா,முந்திரி = தேவைக்கு
ஏல‌க்காய் = இர‌ண்டு
ரெட் க‌ல‌ர் பொடி = சிறிது தேவைப்ப‌ட்டால்












செய்முறை
பால் பவுடர்,ரவை,மைதா , பேக்கிங் பவுடர் சேர்த்து சிறிது பால் தெளித்து மென்மையாக பிசைந்து சின்ன உருண்டைகளாக வேண்டிய வடிவில் உருட்டி வைக்கவும்.




சர்க்க‌ரையில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஏலக்காய் கலர் பொடி சேர்த்து பாகு காய்ச்சவும்



உருட்டிய உருண்டைகளை எண்ணை + டால்டா (அ) அசீல் சேர்த்து சூடு வந்ததும் மிதமான சூட்டில் போட்டு பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.








சர்க்கரை பாகில் சாப்ரான், நட்ஸ் வகைகளை சேர்த்து ,உருண்டைகளையும் சேர்த்து கரண்டியால் கிளறாமல்(கரண்டியால் போட்டு கிண்டினால் உடைந்து விடும்) சட்டியை இரண்டு பக்கமும் பிடித்து குலுக்கி விட்டு பிரிட்ஜில் வைத்து குளிர விட்டு பிறகு சாப்பிட‌வும்.

இதில் ரவை சேர்க்க சொன்னது என் தங்கை பஷீரா. சாப்பிடும் போது கொஞ்சம் கிரிஸ்பியாகவும் இருக்கும்










49 கருத்துகள்:

Ananya Mahadevan said...

ரொம்ப நாளா இந்த ரிசிப்பீ தேடிண்டு இருந்தேன். பகிர்வுக்கு ரொம்ப நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்! :)

ஜெய்லானி said...

ரச குல்லாவை காட்டி ஜொள்ள்ள்ள்ள்ள்ள வச்சிட்டீங்களே!!!

வருடத்தின் எல்லா நாளும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்

மன்னார்குடி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

ரெசிபி சூப்பர்.

85 வயது "குளோப்" ஜாமுன் ஒக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...



ச்சும்ம்ம்மா...........

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு மிகவும் பிடித்த "குளோப் ஜாமுன்" உடன்
வருடத்தை ஆரம்பித்த, உங்களுக்கும், உங்கள்
குடும்பத்தாருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. இது எங்க மண்ணியின் உடனடி சுவீட். நீங்களும் புத்தாண்டு சுவீட் கொடுத்து அசத்திட்டிங்க. மிக்க நன்றி ஜலில்லா.

சசிகுமார் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

நல்ல நாளில் இனிப்பு கொடுத்து அசத்துறீங்க அதெல்லாம் சரிதான். ஒருவருடைய படத்தை போட்டு உள்ளீர்களே யாரது. எதற்க்காக அவருடைய படத்தை போட்டு இருக்கிறீர்கள். ஒண்ணுமே புரியல சற்று விளக்கவும்.

ஸாதிகா said...

காலையிலேயே குலோப்ஜாமூனை காட்டி கிறுகிறுக்க வைத்து விட்டீர்கள் ஜலி.படமும் அழகு,குறிப்பும் அழகு!

ஸாதிகா said...

ரச குல்லாவை காட்டி ஜொள்ள்ள்ள்ள்ள்ள வச்சிட்டீங்களே!!!
//ரச குல்லாவை காட்டி ஜொள்ள்ள்ள்ள்ள்ள வச்சிட்டீங்களே!!!//ஏனுங்க ஜெய்லானி வீட்டம்மா கிட்டே ரசகுலாவுக்கும் குலோப்ஜாமூனுக்கும் உள்ள வித்தியாசத்தை கேட்டுடுங்கோ முதல்லே.

ஏம்மா ஜலி எதுக்கு இப்ப தாத்தாவோட போட்டோ???எலக்ஷன வரப்போகுதே.சென்னை துறைமுகம் தொகுதியிலே நிற்பதற்கு இந்த பாஸ்கிண் &ரபின்ஸா?

மங்குனி அமைச்சர் said...

என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

சூபர் சுவீட் மேடம்

Prathap Kumar S. said...

புத்தாண்டு வாழ்த்தக்கள் ஜலீலாக்கா...
அதுக்கு ஏன் தாத்தா படத்தை போட்டுருக்கீ்ஙக....
தேவையா என்ன?

சாருஸ்ரீராஜ் said...

ஜாமூன் சூப்பர்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Priya said...

குளோப் ஜாமுன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.படத்தை பார்த்ததுமே உடனே செய்து சாப்பிடனும் போலிருக்கு:)

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Jaleela Kamal said...

தாத்தா சொல்வது போல் படிக சொல்லலாம் என்று பார்த்தேன், சரி யாருக்கும் பிடிக்கல தாத்தா போட்டோவ எடுத்துட்டேன்/

Jaleela Kamal said...

ஜெய்லானி இது ரசகுல்லாவா, குலாப் ஜாமுனா> முதலில் பார்த்து கொள்ளுங்கள்

எல் கே said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் .குலோப் ஜமுனா போட்டு மனச அலைபாய வச்சுடீங்க.

vanathy said...

ஜலீலா அக்கா, புத்தாண்டு வாழ்த்துக்கள். பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கு.

Menaga Sathia said...

குலோப்ஜாமூன் அருமையாக இருக்கு!!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Anonymous said...

aahaaa gulab jaaamun

vaai ooring!

Chitra said...

Thank you for posting it. It was a sweet surprise!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

அன்புத்தோழன் said...

mchu mchu... yummy.... ipdi sappu kotta vechutteengale idhu ungalukke niyaayama...?

Presentation super....

Boxla pack pannadhu enakaaa?!?!?!?!;-)

எல்லா நாளும் இனிய நாளாக அமைய இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஹைஷ்126 said...

மிகவும் நன்றி இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

ஜெய்லானி said...

@@@Jaleela--//ஜெய்லானி இது ரசகுல்லாவா, குலாப் ஜாமுனா> முதலில் பார்த்து கொள்ளுங்கள்//

@@@ஸாதிகா--//ஏனுங்க ஜெய்லானி வீட்டம்மா கிட்டே ரசகுலாவுக்கும் குலோப்ஜாமூனுக்கும் உள்ள வித்தியாசத்தை கேட்டுடுங்கோ முதல்லே.//

எல்லாருடைய ப்ளாகிலயும் இன்னைக்கி ஒரே ஸ்வீட்டா இருக்கிறதால ஒரு மயக்கம் , ஒரு குழப்பம்.

நீங்க தந்த வேகாத கொழுக்கட்டையால ஒருத்தருக்கு கண்ணு பட்டு போச்சி. பாவம் , அவங்களுக்கு ஒரு நாள் லீவு வேனுமாம்

வசந்தமுல்லை said...

ragulla is fine in photo as well as as sweet to taste!!!!!!!

GEETHA ACHAL said...

சூப்பர் குலாப்ஜாமூன்..படத்தினை பார்க்கும் பொழுது ஆசையாக இருக்கின்றது...சூப்பர்ப்...

athira said...

ஜலீலாக்கா... குலாப் ஜாமூன்(கரெக்ட்டாச் சொல்லிட்டேன்) சூப்பர்.

///Jaleela said...
ஜெய்லானி இது ரசகுல்லாவா, குலாப் ஜாமுனா> முதலில் பார்த்து கொள்ளுங்கள்//// ஆ... வலதுகைபற்றித்தான் கேள்விப்பட்டேன், இப்போ கண்ணுமோ? கடவுளே.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

ஜலீலாக்கா.... தெரிஞ்சாக்களெல்லாம் வந்திருக்கினம்போல தெரியுது... எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்ஸ்

வேலன். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி...குலோப்ஜாமுன் பதிவு அருமை.படங்களும் அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

சீமான்கனி said...

ஜலி அக்கா விருந்து ஜூப்பர்......உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

R.Gopi said...

தோழமைகள் அனைவருக்கும் மனம் கனிந்த இனிய “விக்ருதி” புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

என் புத்தாண்டு பதிவு இதோ

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

ஜலீலா மேடம்...

குலோப் ஜாமூன் என்னை சாப்பிட வா...வா ... என்றழைக்கிறது...

அது என்ன நீங்க கஷ்டப்பட்டு குலோப் ஜாமூன் பண்ணி இருக்கீங்க. அதை.. ஜெய்லானி ரசகுல்லான்னு சொல்றாரு??

அந்த ”தல” தாத்தா படம் எதுக்கு?

ஜெய்லானி said...

@@@athira --.//ஆ... வலதுகைபற்றித்தான் கேள்விப்பட்டேன், இப்போ கண்ணுமோ? கடவுளே.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.//


நல்ல வேளை கிட்னிஐ பத்தி ஒன்னும் சொல்ல. அப்பாடி தப்பிச்சேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

புகைப்படத்தில் உள்ள குலப்ஜாமுன் பார்க்கும்போதே பசி பறந்து போச்சு.

தமிழை எழிய முறையில் எழுத தங்கள் அனைவருக்கும் உதவிய யூனிகோட் உமர்தம்பி அவர்கள் பற்றிய செய்தியை இங்கே சென்று பாருங்கள், http://thaj77deen.blogspot.com/2010/04/blog-post_14.html கருத்துக்களை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாதேவி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நீங்கள் வழங்கிய புத்தாண்டு இனிப்பு குளோப் ஜாமுன் இனித்தது.

Kanchana Radhakrishnan said...

ஜாமூன் சூப்பர்...

Mrs.Mano Saminathan said...

ஜலீலா!

குலோப்ஜான் பார்க்க மிக அழகாய் சாப்பிடத் தூண்டுகிறது!

ஹுஸைனம்மா said...

இந்த முறையில் செய்து பாக்கனுன்னு நினைச்சுகிட்டேஏஏஏஎ இருக்கேன்; செய்யணும்; ரவை சேக்கிறதுப் புதுசா இருக்கு; கிறிஸ்ப்னஸுக்காகவா?

Jaleela Kamal said...

1.முதலாவதாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி அநன்யா, உங்களுக்கும் இனிய புத்தாண்டுகள்.


2.நன்றி ஜெய்லானி
3. மன்னார் குடி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
4.சைவ கொத்து பரோட்டா உஙகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.5.சுதாகர் மூச்சுக்கு முன்னூரு தரம் உங்கள் மன்னி பற்றி சொல்கிறீர்கள், நல்ல சாப்பாடு போட்டு படிகலன்னா தலையில கொட்டும் வைபபர்களா?

6. அகமது இர்ஷாத் தொடர் வருகைக்கு மிக்க நன்றி, சும்மா அவர போல் புத்தாண்டு வாழ்த்த படிக்க சொல்லலாமேன்னு தான்.

7.த‌லைவா மிக்க‌ ந‌ன்றி/
8. ச‌சிகுமார் , ஏற்க‌ன‌வே இர்ஷாத்துக்கு சொன்ன‌ ப‌தில் தான், உங்க‌ளுக்கு புத்தாண்டு வாழ்த்துக‌க்ள்/

9.ஸாதிகா அக்கா மிக்க‌ ந‌ன்றி, ஜெய்லாணி எல்லா பிளாக்குகும் ஓடி ஆடி எது ர‌ச‌குல்லா, எது குலோப் ஜாமுன்னு தெரியாம‌ போச்சு போல‌, அவ‌ருக்கு ம‌ய‌க்க‌மே வ‌ந்து விட்ட‌தாம்.

10. அமைச்ச‌ரே ந‌ன்றி எங்கே உங்க‌ டிஸ்கிய‌ காணும்.

Jaleela Kamal said...

11.நாஞ்சிலாந்தா பதிலே சொல்லிட்டேன் இப்ப புரிந்திருக்கும்.

12. சாருஸ்ரீ மிக்க நன்றி பா/

13.பிரியா குலோப் ஜாமுன் என்றாலே பிடிக்காதவரக்ள் யாரும் கிடையாது. வருகைக்கு மிக்க நன்றி.


14.ஆமாம் எல்.கே . எல்லொருக்கும் இந்த‌ ஸ்வீட் ரொம‌ப் பிடித்த‌து.
வ‌ருகைகு மிக்க‌ ந‌ன்றி.
15. வான‌தி வாங்க‌ வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.


16, மேன‌கா தொட‌ர் வ‌ருகைக்கு மிக்க‌ ந‌ன்றி.

17. நாஸியா வேணும் நா ஒரு எட்டு வ‌ந்து கொடுத்துட்டு போக‌ வா.

18. ந‌ன்றி சித்ரா உங்க‌ளுக்கு புத்தாண்டு வாழ்த்துக‌க்ள்.

19.அன்பு தோழ‌ன் பாக்ஸ்ல‌ உள்ள‌து உங்க‌ளுக்கே தான்.

20.ச‌கோத்ர‌ர், ஹைஷ் வாங்க‌ என்ன் வெகு நாட்க‌ள் க‌ழித்து, உங்க‌லுகு .உங்க‌ள் குடும‌ப்த்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்‌

சிநேகிதன் அக்பர் said...

செய்முறை விளக்கம் அருமை.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

21.வசந்த முல்லை வருகைக்கு மிக்க நன்றி.

22.கீதா ஆச்சல் எல்லோருக்கும் நாவூரும் ரெசிபி இது.


23. அதிரா வெரி கரெக்ட் குலோப் ஜாமுன், அதிரா ஜெய்லனிக்கு இன்று எல்லா வீட்டுக்கும் சென்று மயக்கமாம் அதான் கண்ணு கொஞ்சம் கலக்கமா போச்சு, இங்க வேற இலல் வார,


24.வேலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி, உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

25.சீமான் கனி ரொம்ப ஜூப்பரா இருக்க மிக்க நன்றி

26.கோபி வழ்க்கம் போல உங்கள் கலக்கலான கமென்டுக்கு மிக்க நன்றி, புத்தாண்டு வாழ்த்துக்கள்.



27.அதிரா வாங்க கிட்னி பற்றியும் சொல்லிட்டு போங்க.

28.தாஜுதீன் வருகைகு மிக்க நன்றி, கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்,

29.வாங்க மாதேவி தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

30.நன்றி காஞ்சனா.

Jaleela Kamal said...

31.மனோ அக்கா வருகைக்கு மிக்க நன்றி, புத்தாண்டு வாழ்த்துக்கள்.

32.ஹுஸைனாம்மா வாங்க , செய்து பாருங்கள், பொரித்துவைத்து ஆறியது சர்க்க்ரை பாகில் போட்டு வைத்தால் கொஞ்சம் ஷாப்டாவும், கிரிஸ்பியாகவும் இருக்கும்.

33. அக்பர் வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

athira said...

ஜலீலாக்கா... நான் ரொம்ப நல்ல பிள்ளை, ஒருவரிடம் இருக்கிற விஷயம் பற்றித்தான் கதைப்பேன், இல்லாததைப்பற்றி பப்ளிக்கில கதைத்து மானத்தை வாங்க மாட்டேன்.. பாவம் ஜெய்..லானி அவரிடம் போய் “கிட்னி” பற்றியெல்லாம் கதைப்பேனோ... சீ... சீ..... மாட்டவே மாடேன் கதைக்க.

மங்குனி அமைச்சர் said...

/// athira said...

ஜலீலாக்கா... நான் ரொம்ப நல்ல பிள்ளை, ஒருவரிடம் இருக்கிற விஷயம் பற்றித்தான் கதைப்பேன், இல்லாததைப்பற்றி பப்ளிக்கில கதைத்து மானத்தை வாங்க மாட்டேன்.. பாவம் ஜெய்..லானி அவரிடம் போய் “கிட்னி” பற்றியெல்லாம் கதைப்பேனோ... சீ... சீ..... மாட்டவே மாடேன் கதைக்க.///


ஹலே மேடம் , சும்மா தெரியாததா எல்லாம் சொல்லகூடாது , ஜெய்லானிக்கு அழகா அருமையா ரெண்டு கிட்னி இருக்கு , உங்களுக்கு புரூப் வேணும்ன்னா (டேய் ஜெய்லானி உன் கிட்னியா ஸ்கேன் பண்ணி மேடத்துக்கு அனுப்பு ) வாங்கிகன்ங்க , இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல கூடாது , ஜெய்லானிக்கு மூளைதான் இல்லை (கொஞ்ச நாள் முனாடி நம்ம ஜலீலா மேடம் "பிரைன்" பிரை போட்டாங்க பாக்கள ), பாவன் அவனே வலதுகையும் மூளையும் இல்லாம திரியுறான் அவன்போய் ....................................... ஜெய்லானி கிட்னிய வச்சு வர்ற மண்டே தான் ஆசியா ஓமர் மேடம் கிட்னி பிரைபோடுவாங்க

ஜெய்லானி said...

அடப்பாவிங்களா..இப்டி எல்லாரும் குருப்பா சேந்து கும்மினா நா யார்க்குதான் பதில் சொல்வேன்...ச்சே.. நா இல்லாத நேரமா பாத்து வந்துட்டு ஓடிடறாங்க.

மங்கு நீ மட்டும் கைல மாட்டினா ”ஷுவர்மா சிக்கன்” மாதிரிதான்லே உன் நிலை. ஐடியா வா குடுக்கிற பிரைன் ஃபரைக்கு.

டாம் அண்ட் ஜெரி மாதிரி இருக்கு பூஸார். இதுக்காவது ஒரு டியூஷ்னல நான் சேரனும்.

Nithu Bala said...

Gulab jamun is very yummy..I love all the pictures and just tempted to grab them from the screen:-)

Umm Mymoonah said...

hmmm, super jamun

Anonymous said...

அனைவருக்கும்
சித்திரைப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்!

Angel said...

thanks for sharing this yummy recipe.
and wishes to you also .

நட்புடன் ஜமால் said...

ரவை ஐடியா(வும்) ஜூப்பரு ...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா