இந்த திரெட் ஸ்டாண்ட் என் பையன் ஹனீஃப் எனக்காக செய்து கொடுத்தது.
தினம் தையல் தைக்கும் டெயிலர்கள் ஊசி நூலை மொத்தமாக டப்பாவில் போடுவதுண்டு, அவசரத்துக்கு ஒரு நூலை எடுக்க போனா நூல் கரந்து ஊசியுடன் சேர்ந்து வரும் அல்லது சிக்கி கொள்ளும்.ரொம்ப நாளா சொல்லி கொண்டு இருந்தேன் ஒரு தெர்மாக்கோலில் மெல்லிய ஆணி லைனாக வைத்து நூல் மாட்ட ஒரு ஸ்டாண்ட் செய்யனும் என்று. அவசர தேவைக்கு கத்திரி கோல் எடுக்க போகும் போது அவன் கையில் நூல் சிக்கி அதை கையால் வெட்டும் போது கை வெட்டி கொண்டது.
ஊரில் உள்ள நூலில் தைத்தால் துணிகள் துணி இரண்டு தடவை போட்ட வுடன் தையல் விட்டு நூல் அறுந்து விடும். ஆனால் இங்கு துபாயில் இருக்கும் நூல் துணி வெளுத்து போய் கிழிந்தாலும் தையல் விட்டு போகாதாது அவ்வளவு ஸ்டாரங்
சரி இப்ப அந்த ஸ்டாண்ட் எப்படி செய்தான்னு பார்ப்போம்.
தீடிருன்னு இரண்டு நாள் முன் நோன்பு திறக்கும் ஒரு மணி நேரம் முன் பெயிண்டிங்க்கு கீழே பேப்பர் விரித்து தெர்மாகோலில் பெயிண்ட் செய்ய ஆரம்பித்தான். அத பார்க்கும் போதேல்லாம் ஆளாளாளுக்கு என்ன இப்ப உட்கார்ந்து பெயிண்ட் செய்ற வேர நேரம் காலம் கிடைக்கலையா என்ன செய்ற ஹாலிடே ஹோமர்க்கா என்று கேட்டோம் ஒன்றும் பதில் சொல்லல.
நோன்பு காலத்தில் கிச்சனில் நுழைந்தால் வெளி என்ன நடக்குதுன்னு கூட தெரியாது வேலை அவ்வளவு பிஸி.
கலரிங் செய்து முடிச்சாச்சு.
சீக்கிரம் உன் கடைய தூக்கு டைம் ஆகுது நோன்பு திரக்க நான் கத்த பேசாமல் எல்லாத்தையும் எடுத்துட்டு என் நூல் டப்பாவும், டூத் பிக் டப்பவும் எடுத்து வந்து எல்லாத்தையும் அடுக்கி விட்டு உங்களுக்கு தான் செய்தேன் என்றான்.
எல்லோரும் எதுக்கு இந்த ஐஸ், சிக்கன் பஜ்ஜிக்கா (அ) உங்கள் லேப்டாப்பில் கேம் விளையாடுவதற்கா என்றார்கள்.
கத்தி கொண்டே இருந்த எனக்கு சே இவ்வளவு நேரம் திட்டி கொண்டே இருந்தோமே என்ன செய்யன்னு புரியல உடனே முதலே சொல்லி இருந்தா எல்லாத்தையும் போட்டோ எடுத்து இருப்ப்பேனே.
அவனுக்காக வே அன்று அவன் கேட்டு கொண்டிருந்த சிகக்ன் பஜ்ஜியை பத்தே நிமிஷத்தில் தயார் செய்து கொடுத்தேன்.
மம்மி இத நான் செய்தேன் என்று என் பெயர் போட்டு தான் போடனும்.
தேவையான பொருட்கள்
சதுர வடிவ தெர்மாகோல் - 1
பெயிண்டிங் செய்ய தேவையான் பொருட்கள்
டூத் பிக் - தேவையான அளவு
1. சதுர வடிவ தெர்மாக்கோலில் வேண்டிய டிசைன்வரைந்து பெயிண்ட் செய்யவும்.
கலரிங் செய்து முடிச்சாச்சு.
சீக்கிரம் உன் கடைய தூக்கு டைம் ஆகுது நோன்பு திரக்க நான் கத்த பேசாமல் எல்லாத்தையும் எடுத்துட்டு என் நூல் டப்பாவும், டூத் பிக் டப்பவும் எடுத்து வந்து எல்லாத்தையும் அடுக்கி விட்டு உங்களுக்கு தான் செய்தேன் என்றான்.
எல்லோரும் எதுக்கு இந்த ஐஸ், சிக்கன் பஜ்ஜிக்கா (அ) உங்கள் லேப்டாப்பில் கேம் விளையாடுவதற்கா என்றார்கள்.
கத்தி கொண்டே இருந்த எனக்கு சே இவ்வளவு நேரம் திட்டி கொண்டே இருந்தோமே என்ன செய்யன்னு புரியல உடனே முதலே சொல்லி இருந்தா எல்லாத்தையும் போட்டோ எடுத்து இருப்ப்பேனே.
அவனுக்காக வே அன்று அவன் கேட்டு கொண்டிருந்த சிகக்ன் பஜ்ஜியை பத்தே நிமிஷத்தில் தயார் செய்து கொடுத்தேன்.
மம்மி இத நான் செய்தேன் என்று என் பெயர் போட்டு தான் போடனும்.
தேவையான பொருட்கள்
சதுர வடிவ தெர்மாகோல் - 1
பெயிண்டிங் செய்ய தேவையான் பொருட்கள்
டூத் பிக் - தேவையான அளவு
1. சதுர வடிவ தெர்மாக்கோலில் வேண்டிய டிசைன்வரைந்து பெயிண்ட் செய்யவும்.
Tweet | ||||||
49 கருத்துகள்:
super akka , unga payanuku vazthukkal ....
ஆல் இன் ஆல் மகனாராச்சே :)
சூப்பர், அதைவிட அம்மாவுக்கு உதவி என்பது மிக பெரியது:)
வாழ்க வளமுடன்...
akka, super thread stand!
வாவ் அன்பு மகனின் அன்பான பரிசா.. ரொம்ப அழகா செய்திருக்கார். என் வாழ்த்துக்களை சேர்த்துவிடுங்கள்.
@@@ நட்புடன் ஜமால்--//
ஆல் இன் ஆல் மகனாராச்சே :) //
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்
நல்லா ஈஸியாதான் இருக்கு..
வாழ்த்துக்கள..
ஜூனியர் கிரியேட்டர்க்கு வாழ்த்துகள்....
ஆஹா...சூப்பர்பாக இருக்கின்றது...அம்மாவை போல உங்கள் மகனும் கலங்குறாங்க...வாழ்த்துகள்...
//ஆல் இன் ஆல் மகனாராச்சே :) //
சரியா சொன்னீங்க ஜமால் :)
நல்ல விஷயம் ,உங்கள் மகனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஹனிப்புக்கு என்னோட வாழ்த்துக்கள் மறக்காமல் சொல்லிடுங்க. சூப்பர்ரா பெயிண்டிங் + அம்மாவுக்கு ஹெல்ப் Gr8.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்... ஜலீலாவுக்கு என் பாராட்டுக்கள். ;)
அழகாக இருக்கிறது. கரிசனமான, பொறுமையான பிள்ளைக்கும் என் பாராட்டுக்கள்.
அன்பு பரிசளித்த மகனுக்கும் மகிழ்ச்சியுடன் பெற்றுப் பகிர்ந்த அம்மாவுக்கும் வாழ்த்துகள்.
அழகாருக்கு;
“தாயைப் போலப் பிள்ளை;
நூலைப் போலச் சேலை;”
:-)))
நமக்கும் இதற்கும் ரொம்ப தூரம், ஆனா, தங்கமணி எங்கே போனாலும் ஒரு பெரியா டப்பா நிறைய இதெல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
நன்றி சாரு
சகோ.ஜமால் நன்றி
குறிப்ப போட்ட்டதும் எத்தனை கமெண்ட் வந்துள்லது என்று வந்து பார்கக் வந்துட்டார். ஒரெ சந்தோஷம் வேறு அவருக்கு.
//சூப்பர், அதைவிட அம்மாவுக்கு உதவி என்பது மிக பெரியது:)
நன்றி சகோ ஹைஷ், என்றும் இப்படி இருக்கனும்.
நன்றி வானதி
உங்கள் அன்பான வாழ்த்துக்கு மிகக் நன்றி பிரியா.
நன்றி ஜெய்லானி
தமிலிஷ் பப்லிஷ் செய்ததற்கும் மிக்க நன்றி
நன்றி சீமான் கனி
நன்றி கீதா ஆச்சல்
நான் நெட்டில் குறிப்பு கொடுகக் காரமே அவன் தான்
நன்றி அக்பர்
இளம் தூயவன் மிக்க நன்றி
விஜி எப்படி இருக்கீஙக் ,
வாழ்த்துக்கு மிக்க நன்றி
//ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்... ஜலீலாவுக்கு என் பாராட்டுக்கள். ;)//
உங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி இமா
மாதேவி உங்கள் அருமையான கமெண்டுக்கு மிக்க நன்றி
நன்றி ஹுஸைனாம்மா.
உங்கள் பக்கம் வர முடியல முடிந்த போது வருகிறேன்,
பதிவு படிச்சிட்டேன்.
சிங்கக்குட்டி அப்ப உங்கள் தங்கமணி கிட்ட சொல்லிடுங்க, அவஙக்ளுக்கு உதவும்.
வருகைக்கு மிக்க நன்றீ.
சூப்பர் ஹனீஃப்.நான் நேரில் உன்னை பார்த்து இருக்கிறேனே ! அருமை ஜலீலா .
அக்கா ரொம்ப அழகாக இருக்கு செய்து பார்க்கிறேன்.. புது ஐடியாவா இருக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் .சகோதரி ரமலான் கரீம்.தங்கள் தளத்தினை என் இணையத்தில் இணைத்துள்ளேன்.
Mohamed Thasthageer(usa)
creative mind என்பது ரத்தத்திலேயே ஊறி வரும் போல!! வாழ்த்துகள் ஜலீலக்கா!!
அட...அட....அட....
ஆல் இன் ஆல் ஜலீலா மகன்னா சும்மாவா....
பையன் அம்மாவை போலவே படு சுட்டி....
இது மாதிரி த்ரெட் ஸ்டாண்ட் செய்து, எனக்கு பரிசளித்தால் மகிழ்வேன்...
Great! This is what I looking for. Thank you. My best wishes for your son.
பையனும் உங்கள மாதிரியே ஆல் இன் ஆலா இருக்கிறான் போல. வாழ்த்துக்கள்!!
hi all thank you for the appreciation.
enake wande tamil la eleda theriyade
so elarkum thank you
By Haneef :)
நன்றி ஆசியா,
ஆசியா ஆண்டி உனக்கு வாழ்த்து தெரிவித்தாங்க என்று.
ஹனீஃப் கிட்ட சொல்லிட்டேன்
பாயிஜா உங்களுக்கு தெரியாத கை வேலை இல்லை,
நீங்கள்வந்து புது ஐடியா என்று சொன்னது சந்தோஷம்.
வா அலைக்கும் அஸ்ஸலாம் கிரவுன் எந்த தளத்தில் இனைத்திருக்கீங்க
எம் அப்துல் காதர் எனக்கு சமையல் தவிர மற்ற ஆர்ட் வொர்க் எல்லாம் ஒன்றும் தெரியாது,
ஆனால் பிள்ளைகள் நல்ல வரைவார்கள்
கோபி உங்களுக்கு வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்து தர சொல்கிறேன்,
தென்றல் புது வரவு , வாங்க உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
தெய்வ சுகந்தி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
hi, I have tried this. Have a look and give your feedback.
http://thendralscraft.blogspot.com/2010/09/thread-box.html
thank you for sharing this.
very happy, sure i will come.
ஜலீலா தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா