Monday, November 1, 2010

பிஸ்தா கீர்(பீர்னி) - पिस्ता खीर - pista kheer

கீர் பல வகையாக தயாரிக்கலாம். இது சிம்பிளாக அரைத்து செய்யும் கீர் இதில் நெய் கூட சேர்க்கவில்லை. டயபட்டீஸ் உள்ளவர்கள் கூட இதை லோ பேட் பாலில் செய்து சுகர் பிரி சேர்த்து செய்து சாப்பிடலாம். இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு வெரும் பஞ்சி தோசைக்கு வைத்து கொடுக்க்லாம், மெயினாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை பிஸ்தா சேர்க்காமல் வெரும் பாலில் ரவை சேர்த்தும் செய்யலாம்
.தேவையானவை

பிஸ்தா – 25 கிராம்
அரி்ி - 1 மேசை க்்்்ி
பிஸ்தா – பொடியாக அரிந்த்து (ஒரு மேசை கரண்டி)
பால் - அரை லிட்டர்
ரவை – ஒரு மேசை கரண்டி
ஏலக்காய் – 2
பிஸ்தா எஸன்ஸ் – ஒரு துளி
சர்க்கரை – 50 கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்

செய்முறை
அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும், பிஸ்தாவை வெண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பிஸ்தாவையும் , அரிசியையும் அரைத்து எடுக்கவும்।

பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து அரைத்த பேஸ்டை சேர்க்கவும்.
தீயின் தனலை குறைத்து ரவை தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.

கொதித்து திக்காகும் போது ஒரு துளி பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி பொடியாக அரிந்த பிஸ்தாவை தூவி இரக்கவும்.தோசை ,குட்டி பன்னுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

முஸ்லீம் திருமணங்களில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி  ,மஞ்சள் பீர்னி ன இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.இதை பன், நாண், தோசை, இடியாப்பம் ஆகியவைக்கு பக்க உணவாக வைத்து சாப்பிடலாம்.

This recipe goes to umm mymoon's celebrate sweets kheer event


26 கருத்துகள்:

ஸாதிகா said...

அடடா..அட்டகாசமாக உள்ளது பிஸ்தா கீர்.பொருத்தமாக பச்சை நிற சாசர் மீது வைத்து இருப்பது அழகோ அழகு.

தெய்வசுகந்தி said...

நான் பாதாம் கீர்தான் செஞ்சுருக்கேன். இது நல்லா இருக்குது.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா உங்கள் அன்பான கமெண்ட்டுக்கு மிக்க நன்றி
இது இரண்டு முன்று முறையில் செய்தாச்சு
படம் சரியா வரல இதான் கொஞ்சம் பரவாயில்லை

Jaleela Kamal said...

தெய்வ சுகந்தி நான் ,பாதம், பிஸ்தா, முந்திரி மிக்ஸ்ட் நட்ஸில் செய்வதுண்டு.
இதில் நெய்யும் கிடையாது,
இன்னும் லோபேட் மில்ல்கில் செய்தால் இன்னும் டயட் செய்கிறவர்கலுக்கு நல்லதா இருக்கும், சர்க்கரை கொஞ்சமா சேர்த்துக்கனும். உடன் வருகைக்கு மிக்க நன்றி

அன்னு said...

ஆசையாத்தான் இருக்குக்கா. ஆனா அவருக்கு சுகர். என் பையனுக்கு இனிப்புன்னாலே அலர்ஜி, சிப்ஸ், வடை, முறுக்கு மாதிரி ஐட்டங்கள்தான் உள்ள போகும். ஒத்தையாளுக்காக செய்யணுமான்னு அதிகம் செய்றதே இல்லை. இந்த அள்வில் எத்தனி பேர் சாப்பிடலாம். ரெண்டு ஆள் போலன்னா இன்னிக்கே செஞ்சிடுவேன், இன்ஷா அல்லாஹ்...:))

Krishnaveni said...

looks yum, beautiful click too

Chitra said...

அரிசி எவ்வளவுன்னு சொல்லுங்க, அக்கா! கீர் பார்க்கவே சூப்பர் ஆக இருக்குதுங்க.

சிநேகிதி said...

பார்க்கும் பொழுதே.. குடிக்கனும் போல் இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு அக்கா

asiya omar said...

அருமையாக இருக்கு.அசத்தலான பரிமாற்றம்.

mangai said...

rice or rava pl clarify

ஆமினா said...

அரிசியின் அளவு என்னக்கா?

இங்கே இது ரொம்ப பேமஸ். அடிக்கடி கடைகளில் வாங்கி சாப்பிடுவோம். இனி வீட்டிலேயே செய்ய வேண்டியது தான் :)

வெறும்பய said...

பாக்கும் போதே கண்ண கட்டுதே...

Jaleela Kamal said...

யாரும் குழம்பி கொள்ள வேண்டாம்
இது பிளைனாக நான் அடிக்கடி தோசைக்கு செய்யும் ரவை கீர்..
இதை ஒரு 3 வகையில் செய்யலாம்.
அதில் பிஸ்தா சேர்த்து முன்று வகை. இதில் அரிசி ஒரு மேசை கரண்டி சேர்த்தேன் அதை குறீப்பில் குறிப்பிட வில்லை.
பாண்ட் சரியாக வரவில்லை, ஆகையால் உடனுக்குடன் யாருக்கும் பதிலும் தர முடியவில்லை.ஒரு நேரம் தமிழ் பாண்ட் ஒழுங்கா வருது ஒரு நேரம் எழுத்துக்கள் புள்ளீ புள்ளி யாக வருது முன்பு டைப் செய்து வைத்து இருந்த்தை காப்பி பேஸ்ட் அதான் , இதில் தேவையான் பொருளில் அரிசி ஒரு மேசை கரண்டி சேர்க்கனும்.

Jaleela Kamal said...

ஆமினா சரியான அளவுன்னு இல்ல்ல.

முதலில் செய்யும் போது ரவை ஒரு மேசை கரண்டி, அரிசி ஒரு மேசை கரண்டி
இரண்டாவது செய்யும் போது. அரிசி மட்டும் கைக்கு ஒரு குத்து அரிசியை பிஸ்தாவுடன் சேர்த்து அரைக்கனும்.
ரவை கடைசியாக தூவி கிளறனும். பிஸ்தா அவரவர் விருப்பத்துக்கு இன்னும் சேர்க்கலாம், இதை பன்னுடன் சாப்பிட நல்ல இருக்கும் , ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் ஐஸ்கிரீம் போல் இருக்கும்.

R.Gopi said...

அட...

பிஸ்தா கீர் ஃபோட்டோ தான் பச்சை, பசுமையா இருக்குன்னு பார்த்தா, அதை தொடர்ந்து வந்த அந்த ஒரு பாரா குறிப்பும் பச்சையோ பசுமை....

அட்டகாசத்தின் உச்சம்...

ஈரோடு தங்கதுரை said...

சூப்பர்...! இந்த தீபாவளிக்கு செய்திடவேண்டியது தான் ....!

சிங்கக்குட்டி said...

ம்ம்ம்....சூப்பர் டிஷ்....அந்த பசுமையான படம் பார்கவே அழகு :-)

அப்புறம் தமிழ் பதிவில் ஹிந்தியா என்று யாரும் தார் பூசி விட போகிறார்கள் ...நம்ம ஊரில் கலாசார காவலர்கள் அதிகம் :-).

பகிர்வுக்கு மிக்க நன்றி.

THOPPITHOPPI said...

உங்கள் பதிவுகளில் சிலவற்றை பிரிண்ட் ஒவுட் எடுத்து எங்கள் வீட்டில் கொடுத்தேன் தீபாவளிக்கு செய்றதா சொல்றாங்க பார்க்கலாம் எப்படி செய்றாங்கன்னு

Umm Mymoonah said...

Hmmm, very delicious. I used to have kheer with puri but never tried dosai. I'll try with dosai next time inshallah. Thank you for sending this delicious kheer to the event :)

எம் அப்துல் காதர் said...

பாதாம் கீர் அருமையா இருக்கு ஜலீலாக்கா!

ஜெய்லானி said...

உங்க வீட்டுக்கு பக்கத்தில ஃபிளாட் எதுவும் காலியா இருக்கான்னு பாக்க வேண்டியதுதான் ..!! ஐட்டம் கிடைக்காட்டியும் விதவிதமா வாசனையாவது பிடிக்கலாம் :-))சூப்பர்

Jaleela Kamal said...

கிருஷ்ன வேனி, சித்ரா, சினேகிதி, ஆசியா கருத்து களுக்கு மிக்க நன்றி
மங்கை குறீப்பில் மாற்றி விட்டேன் பார்த்து கொள்ளுங்கள்
ஆமினா எங்க பா லக்னோ வில் இந்த ஸ்வீட் பேமஸா. நான் ஏனோ தானோன்னு என் இஷட்த்துக்கு முயற்சித்த்து,
நல்ல வரவே போட்டு விட்டேன், அரிசியின் அளவை குறிப்பிட்டு விட்டேன்
நன்றி வெறும் பய
கோபி உங்கள் அழகான கமெண்டுக்கு மிக்க நன்றி
ஈரோடு தஙக் துரை கண்டிப்பாக செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

சிங்க குட்டி வாங்க நீங்க வேற தமிழ் பாண்ட் சரியாக வராத்தால் ஆங்கிலத்தில் அடித்த ஹிந்திக்கு போய் விட்ட்து
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

தொப்பி தொப்பி செய்து பார்க்க சொல்லுங்கள்.
என்ன செய்தீங்கன்னு வந்து சொல்லனும்

Jaleela Kamal said...

உம்மு மைமூன் , இது நான் அடிக்கடி ட்தோசைக்கு செய்யும் கீர், வீட்டுக்கும்மட்டும் என்றால் நட்ஸ் வகைகள் குறைத்து போடுவேன், விஷேஷங்களுக்கு கொஞ்சம் நிறைய அரைத்து ஊற்றுவது. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர். உங்கல் கருத்துக்கு மிக்க நன்றி

ஜெய்லானி வாசனை அதிகமாக இருப்பதால் யாரும் காலி பண்ணவில்லை வீடு காலியான் சொல்றேன், நீங்கள் வந்தால் செய்து,ம் தரேன்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா