Saturday, April 30, 2011

அன்னு, பெண் எழுத்து

1.அன்னு


அன்னு என் இனிய தமிழ் மக்களே என்ற வலை பூ மற்றும் தாய்தரும்கல்வி பயனுள்ள பதிவுகளை எழுதும் அன்பான தோழி/

இது எனக்காக அவங்க கொடுத்தது. ரொம்ப நன்றி அன்னு,கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனால் பதிவில் அவஙக்ள பற்றி எழுதி போடனும் என்று நாட்கள் கடந்து விட்டது. எதுக்கு என்று கொடுத்தாங்க என்று கேட்கீறீஙக்ளா ,முதல இந்த பதிவுகள்
தாய்மை எனப்படுவது யாதெனில் 4 பாகத்தையும் படிங்க.நான் ஒன்றும் உபகாரம் செய்யவில்லை எனக்கு தெரிந்த டிப்ஸ் களை வழங்கினேன். 
@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@

2. பெண் எழுத்து தொடர்பதிவுக்கு , பேபி அதிரா, அஸ்மா என்னை அழைத்து இருந்தாங்க,, எல்ல்லாரும் எழுதி இந்த பதிவுகளையே மற்ந்து அடுத்த தொடர்பதிவு ஓடி கொண்டு இருக்க்கானு தெரியல.இந்த தொடர்பதிவ நான் தான் கடைசியா எழுதுறேன்னு நினைக்கிறேன்.இது மார்ச் மாத தொடர்பதிவு ,இந்த மாதத்துக்குள் எப்படியாவது முடித்து விடவேண்டும் என்று சுருக்கமாக எழுதிவிடுகிறேன். 


கேரள பத்திரிக்கை துறையில் முத்திரை பதித்திருக்கும் பெண் எழுத்தாளர் டாக்டர் கமலாதாஸ் கடந்த 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் அன்று தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாக உலகுக்கு அறிவித்தார். அத்தோடு தமக்கு ஸுரையா என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டதாகவும் பிரகடனப்படுத்தினார் இவரை பற்றி இங்கு சென்று தெரிந்து கொள்ளுஙக்ள்.
நதியலையில் புதிய பெண் எழுத்தாளர்களின் அறிமுகம்.இங்கு சென்று படித்து கொள்ளலாம்.
பெண் எழுத்து பற்றி நான் என்ன சொல்வது, கவிதை, கதை , கட்டுரைகள் எழுதும் பல பெண்கள் மத்தியில் நான் எழுதுவது ஒன்றும் இல்லை. 
பல பயனுள்ள விடயங்களை சரியான பதிவாக போட்டு கலக்கும் ஸாதிகா அக்கா, எதர்த்த வாழ்கை நிலைய உணர்வுகளின் ஓசையாய் பிரதிபலித்திருக்கும் அன்புடன் மலிக்கா எனக்கு மிகவும் பிடித்த தோழி 
(முகவரியை தொலைக்கும் மொட்டுகள்,  , 20 வருடங்களுக்கு முன்பே பல உண்மை கதைகள் பிரபல பத்திரிக்கைகளில் எழுதிய மனோ அக்கா, விழிப்புணர்வு பதிவுகளை தெரியாக பகிர்ந்து கொள்ளும் அஸ்மா, எல்லா விழியங்களை கடைந்தெடுத்து தெளிவாக பகிர்ந்து கொள்ளும் ஹுஸைனாம்மா,வீட்டில் பேசுவதோ உருது மொழி , தமிழை நன்கு கற்று வலையிலும் அருமையாக வடிவாக பயந்த்ரும் புதுபுது தகவல்களை பகிர்ந்து கொள்ளும் அன்னு எந்த பதிவானாலும் நல்ல உள்கருத்துடன், பூஸாரை வைத்து நகைச்சுவையாகவும், தத்துவமாகவும்,கதை கவிதைகள் எழுதும் அதிரா ,பல உண்மை கவிதை கதை ஆசியா ,புதுமண தம்பதிகளுக்காக அழகாக தொகுத்து எழுதும் கவுசல்யா, இவர்கள் மத்தியில் என் எழுத்து சாதராணமாக தான் எனக்கு தெரியுது.

ஒன்லி சமையல் குறிப்பு ,டிப்ஸ்,குழந்தை வளர்பு இது போல் தான் போட்டு வருகிறேன்.உண்மை சம்பவங்களின் பல கதைகள் இருக்கின்றன , போன வருடம் ஒன்று எழுதவும் செய்தேன், ஆனால் எடுத்துவிட்டேன். பல உண்மை சம்பவங்கள் கொண்ட கதைகள் மனதில் ஓடி கொண்டு தான் இருக்கிறது ஆனால் எழுத தோது நேரம் கிடைக்கல .இப்ப வலையுலகில் அவார்டுக்காக என் பக்கம் வந்து பெண்களை எல்லாம் நினைவு கூர்ந்து பெயர் எழுதும் போது தான் இத்தனை பெண்களா வலையுலகில் எழுதி கொண்டு இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

நான் இந்த பிளாக்(வலையுலகம்) வந்து இந்த முன்று வருடத்திற்குள் ஏனைய பெண்களின் எழுத்து அதிகரித்து உள்ளது. பெண்கள் சுதந்திரமாக தைரியமாக அவரவர் வலைகளில் பல கருத்துகளை எழுத்துகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர், ஏற்று கொள்ள முடியாத சிலர் அவர்களை எழுத விடாமல் எவ்வள்வு சிக்கல் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சிக்கல் இடையூறுகள் கொடுத்து கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் என்ன தான் பெண்கள் எழுதினாலும் பிரபலமானால் சிலருக்கு பொறாமை வந்துடும் போல எப்படி கீழே போட்டு மிதிக்கலாம் என்று காண்டு பிடிச்ச அனானியாக வ்ந்து தேவையில்லாத குழப்பமான கமெண்டுகளை போட்டு கிளப்பி விடுவது, இதுபோல் எழுத விடாமல் செய்கின்றனர்..
இப்போது யாரும் பயபடுவதாக இல்லை யார் என்ன சொன்னாலும் தூசி தட்டி விட்டு பெண் எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.


@@@@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%@@@@@@@@@@@@@

3. அவார்டு .அன்பு தோழி,சினேகிதி பாயிஜா எனக்கு கொடுத்த அவார்டு,தமிழ் குடும்ப தோழி, அருசுவை தோழி, வலை உலக தோழி பாயிஜா எனக்கு கொடுத்த அவார்டு.மிக்க நன்றி சினேகிதி.


ஹே ஹே இப்ப அனானிக்கு மூக்கு வேர்க்குமே./
 என்ன செய்வது தோழிகள் அன்பாக கொடுக்கும் போது வாங்கிக்கதா வேனும்.

@@@@@@@@@@@@@@@@@@@@%%%%%%%%%%%%%%@@@@@@@@@@0

டிஸ்கி: ஏற்கன்வே என் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாதது எல்லோருக்கும் தெரியும்,ஒரு மாதம் மேல் ஆகுது இன்னும் சரியாகல ஆகையால் மனவேதனையாக இருக்கு அதான் என் பதிவுகள் வரல, ஏற்கன்வே பாதி போட்டு வைத்திருந்த பதிவு இது அதான் முடித்தேன்.

ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு கமெண்டாவ்து வந்தாதான், என்னை யும் ஞ்பாகம் வைத்து இருக்கீங்கன்னு ஒரு திருப்தி, இப்ப என் டிப்ஸ், குழந்தை வளர்ப்பை பல பேர் பார்வையிட்டு கொண்டு இருக்கீங்க ஏதாவது கருத்தையும் தெரிவிக்கலாமே.

என் பிலாக் இப்ப போடும் பதிவுகள் இரண்டிரண்டாக தெரியுது எனக்கு இப்ப சரி செய்ய நேரம் இல்லை. கொஞ்சம் பொருத்து கொண்டு படித்து கொள்ளுங்கள் பிறகு பார்க்கிறேன். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அடுத்து வலை உலகில் தோழ தோழியர்கள் கழடப்பட்டு எழுதுவத நோகாம நோன்பு கும்பிடுவாங்களே அது போல் இங்க ஒருத்தங்க நோன்பு கும்பிடுறாஙக் பாருங்கள்.காப்பி பேஸ்ட் பிலாக்.இன்னும் பல லின்குகள் இருக்கு இது போல் வலை யே திருடி அவங்க சொந்த வலையாக்கி பொழப்பு நடத்துறா (- னு -ளு) ங்க,

30 கருத்துகள்:

சசிகுமார் said...

என்ன அக்கா பதிவு இரண்டு முறை வருது கீழே உள்ள தமிழ் நிருபர் பட்டனை நீக்கி பாருங்கள் சரியாகிவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

athira said...

கலக்கிட்டீங்க ஜலீலாக்கா....

அதிலும் இங்குள்ள பெண் பதிவர்களின் பெயரையே போட்டு பெண் எழுத்துப்பற்றிச் சொல்லிட்டீங்க... பக்கத்திலிருப்பதைவிட்டுப்போட்டு... வேறெங்கோ இருக்கும் தெரியாத பெண்களையெல்லாம் உதாரணம் காட்டுவதைவிட்டு, இது புதுமை முயற்சி.. பாராட்டுகிறேன்..

athira said...

///இப்போது யாரும் பயபடுவதாக இல்லை யார் என்ன சொன்னாலும் தூசி தட்டி விட்டு பெண் எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.///

சூப்பர்... ஓயமாட்டோம் ஓயமாட்டோம்... ஆர் என்ன சொன்னாலும் ஓயமாட்டோம் ஓயமாட்டோம்:)...

கடவுளே..., ஜலீலாக்காஆஆஆஆ:நான் இப்போ கட்டிலுக்கு கீழ நடுப்பகுதில ஒளிச்சிருக்கிறேன்.. அதுவும் அண்ட கிரவுண்டில:)))

athira said...

பேபி அதிரா சொன்னதால மறுக்காமல் “பெண் எழுத்தை”த் தொடர்ந்திட்டீங்க:). அப்போ இனி பேபி அதிராவைக் கொண்டுதான் எல்லாம் செய்விக்கவேணும்..

அதுசரி, ஏன் ஜலீலாக்கா ஆரும் “ஆண் எழுத்து” பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாமே என யோசிக்கேல்லை?:))).... ஒருவேளை சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லையோ?:)..

காப்பாத்துங்க ஜலீலாக்கா.. என் வாய் சும்மா இருக்காதாமே அவ்வ்வ்வ்வ்வ்:))).

vanathy said...

நல்லா இருக்கு.
உங்கள் இஞ்சி சாறு ரெசிப்பியை போட்டிருக்காங்க. என்னத்தை சொல்ல? மனசாட்சி உறுத்தாம எப்படி இந்த வேலை செய்கிறார்களோ தெரியவில்லை?!!

தமிழ்த்தோட்டம் said...

கலக்கீட்டீங்க

angelin said...
This comment has been removed by the author.
angelin said...

அருமை ஜலீலா .கமலா தாஸ் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் .இன்று தான் அவரைப்பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.
அந்த கோப்பி பேஸ்ட் பாருங்க திருட்ட கூட சரியா செய்யல .உங்க பேர் அதில
இருக்கு .அதில இன்னொருததும் குறிப்பு
இருக்கு ஆனா அவங்களுக்கு நன்றி என்று அவர்கள் பெயரையும் குறிப்பிட்டு இருக்காங்க .உங்கள் பெயரை குறிப்பிட்டு நன்றின்னு போட்டிருந்தா நல்ல இருக்கும் .

asiya omar said...

வாழ்த்துக்கள் ஜலீலா.நல்ல பகிர்வு.

எல் கே said...

வாழ்த்துக்கள் சகோ.

//“ஆண் எழுத்து” பற்றி ஒரு தொடர் ஆரம்பிக்கலாமே //

ஆணியை புடுங்க வேண்டாம்

எம் அப்துல் காதர் said...

ஸுரையா பற்றியும், பெண் எழுத்துப் பற்றியும் அழகா சொல்லி இருக்கீங்க ஜலீலாக்கா!!

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா! மறைந்த கமலா சுரைய்யா அவர்களைப்பற்றி இங்கு பகிர்ந்துக் கொண்டது இந்தப் பதிவுக்கு ஒரு ப்ளஸ் பாய்ண்ட் ஜலீலாக்கா. என்ன.. தோழிகளின் டாப் லிஸ்ட்டில் என்னையும் சேர்த்து..?! நீங்கள் சொல்வதுபோல் தகுதி இருக்குதான்னு தெரியல. அப்படி இருந்துச்சுன்னா, அதுவும் அதை உங்களை மாதிரி திறமையானவர்கள் சொன்னீங்கன்னா இறைவனுக்கே எல்லாப் புகழும்!

//எப்படி கீழே போட்டு மிதிக்கலாம் என்று காண்டு பிடிச்ச அனானியாக வந்து..//

:)))))))

//...இப்போது யாரும் பயபடுவதாக இல்லை யார் என்ன சொன்னாலும் தூசி தட்டி விட்டு பெண் எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்//

ரிப்பீட்டுகிறேன் :-)

உங்கள் தந்தை (இன்ஷா அல்லாஹ்) விரைவில் பூரண குணமடைய துஆ செய்கிறோம். கவலைப்படாதீங்க ஜலீலாக்கா!

ஸாதிகா said...

உங்களுக்கே உரிய எழுத்து நடையில் அருமையா பகிர்ந்துள்ளீர்கள் ஜலி.விருதுக்கு வாழ்த்துக்கள்.தந்தையார் விரைவில் நல்ல குணமாக என் துஆக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

உண்மைதான் இப்போது நிறைய பேர் எழுதுகிறார்கள். நல்ல முன்னேற்றம்.

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

எதுவுமே உங்கள் பார்வையில் சிம்பிள்தான் - சமையலைக் கூட எளிதான முறையில் தருவது போல இதையும் எளிய நடையில் அழகாக எழுதிட்டீங்க.

வாப்பா உடல்நலம் தேற துஆக்கள்.

அந்நியன் 2 said...

அருமையான பதிவு.

உங்கள் தந்தை பூரண குணம் அடைய அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

தந்தையார் விரைவில் நல்ல குணமாக என் துஆக்கள்.நல்ல கருத்துக்களுடன் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மாஷா அல்லாஹ்.யார் எது சொன்னாலும் நம் கடமையை நாம் செய்து இறைவனிடம் கருணை பெறுவோம்,அக்கா ,இன்ஷா அல்லாஹ்.

அன்னு said...

ஜலீலாக்கா,

என் பெயரிலேயே பதிவா... ஹ ஹ ஹா.... சந்தோஷம்...உண்மையில் சந்தோஷம்.

உண்மையில் அந்த விருது உங்களுக்கு தேவையானதுதான். நாஸியாவிடம் கேட்டால் சொல்லிவிடுவார், எவ்வளவு பொருத்தமான விருது என்று.

மிகுந்த மகிழ்ச்சி, கடைசியில் என் விருதுக்கு அங்கீகாரம் கிடைத்தே விடது. ஹ ஹ ஹா...

சரி சரி, நம்ம மேல கண்ணு பட்டுற போகுது...!!

கமலாம்மா பற்றிதான் படித்துள்ளேனே ஒழிய, அவரின் எழுத்துக்களை படித்ததில்லை. சமயம் வரும்போது படிக்க வேண்டும்.

எல்லா பிரச்சினையான கமெண்ட்டுகளையும், கமெண்ட்டர்களையும் அப்பாலிக்கா உக்கார சொல்லிட்டு, ஜம்முன்னு தளத்தை நடத்துங்க. :)

வாப்பாவுக்கு விரைவில் அல்லாஹ் குணமளிக்கவும், இந்த நொடிகளையெல்லாம் அவர் ஹக்கில் மறுமை நாளில் ஷிஃபா’அத்தாக மாற்றித் தரவும் து’ஆ செய்கிறேன். ஆமீன். :)

அன்புடன் மலிக்கா said...

அக்காவின் பாணியில் அசத்தல்.
ஹை எனக்குமா விருது. விருகளுக்காக ஒரு பிளாக் திறக்கலாமுன்னு இருக்கேன்க்கா . ஹா ஹா

மிக்க நன்றி. வாழ்த்துக்கள் வாங்கியவர்களுக்கும் வழங்கிய தாங்களுக்கும்.

வாப்பா சீக்கிரம் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் கவலைபடாதீங்கக்காகா. எல்லாம் நல்லபடியா நடக்கும்..

ஜிஜி said...

பெண் எழுத்தைப் பற்றி உங்களது கருத்தை அருமையா சொல்லி இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி.

Kitchen said...

சூப்பரா எழுதி அசதிட்டிங்க ஜலீ.
புதுவிதமான் பென் எழுத்து நடை குட்.
அப்பாவுக்கு விரைவில் குண்மடையா ஆண்டவன் அருள் எப்போதும் இருக்கும்.

Viki's Kitchen said...

very nice post akka. Visited that blog. I can't understand why people are copying others. This is plagiarism and I am vexed with people like this. Don't worry , these kind of copy cats will vanish in course of time, as they can't do this forever.

Jaleela Kamal said...

மிக்க நன்றி சசி, தமிழ் நிருபரை நீக்கிவிட்டேன்


அதிரா ஆமாம் பெண் எழுத்து என்று வலை போட்டு தேடுவதை விட இது சுப்லபமல்லவோ.

வருகைக்கு மிக்க நன்றி வானதி ஆமாம் என்ன செய்வது இப்படி பதிவில் சொல்லி தான் ஆற்றி கொள்ளனும்

வருகைக்கு மிக்க நன்றி தமிழ் தோட்டம்

Jaleela Kamal said...

வாங்க ஏஞ்சலின் கருத்த் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

காப்பி பேஸ்ட் ஒன்றும் சொல்ல முடியாது, பதிவில் உங்களிடம் சொல்வதன் மூலம் தான் ஆசுவாசப்படுத்திக்கனும்

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

நன்றி எல்.கே


நன்றி எம் அப்துல் காதர்

வாஙக் அஸ்மா உஙக்ள் கருத்துக்கும் துஆவுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உஙக்ள் துஆக்களுக்கு நன்றி ஸாதிகா அக்கா

நன்றி அக்பர்

உஙக்ள் பாராட்டுக்கும் துஆ வுக்கும் மிக்க நன்றி ஹுஸைனாம்மா

அந்நியன் மிக்க நன்றி ,

Jaleela Kamal said...

// பாத்திமா ஜொஹ்ரா said...
தந்தையார் விரைவில் நல்ல குணமாக என் துஆக்கள்.நல்ல கருத்துக்களுடன் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மாஷா அல்லாஹ்.யார் எது சொன்னாலும் நம் கடமையை நாம் செய்து இறைவனிடம் கருணை பெறுவோம்,அக்கா ,இன்ஷா அல்லாஹ்.///


வாங்க பாத்திமா உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்சி

Jaleela Kamal said...

அன்னு உங்கள் பதில் மிகவும் ஆறுதலாக இருக்கு, நன்றி ஆண்டவன் உஙக்ளுக்கும் நல் கிருபை புரிவானாக

Jaleela Kamal said...

வாங்க அன்பு தோழி மலிக்கா
உஙக்ள் அன்பான வார்த்தைக்கும், துஆ வுக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஜீஜீ


வாங்க விஜி உஙக்ள் கருத்துக்கு மிக்க நன்றி

விக்கி என்ன செய்வது நான் உங்களிடம் தான் புலம்ப முடியும்
காப்பி அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை சும்மா ஒரு லிங்க் இங்கு கொடுக்கிறேன் அவ்வளவு தான்.
நன்றி விக்கி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா