இட்லி தோசைய பார்த்து முகம் சுழிக்கும் பிள்ளைகளுக்கு இத கொடுத்து பாருஙக்ள். கப் சிப்புன்னு எத்தனை உள்ளே போகுதுன்னு...
பிட்சா சாஸ் - ஐந்து தேக்கரண்டி
மொஜெரெல்லா சீஸ் - ஐந்து மேசைகரண்டி
கருப்பு ஆலிவ் காய் - ஐந்து
டெமோட்டோ கெட்சப் - ஐந்து தேக்கரண்டி
பட்டர் - பத்து தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு
கொடமிளகாய் - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி
பட்டர் + எண்ணை - இரண்டு தேக்கரண்டி
1.வெங்காயம், குடை மிளகாயை பொடியாக அரிந்து அதில் உப்பு தூவி பட்டர் + எண்ணை இரண்டு தேக்கரண்டி ஊற்றி வதக்கி கொள்ள வேண்டும்.
2.எல்லா பிரெட்களிலும் படரை லேசாக தடவி கருகாமல் பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.
4. முதலில் பத்து ஸலைஸ் பிரெட்டில் ஐந்து எடுத்து அதில் பிட்சா சாஸை பரவலாக தடவவும்.
5.அடுத்து வதக்கிய வெங்காய, குடை மிளகாய் கலவை மற்றும் ஆலிவ் காயை பொடியாக நருக்கி பிரெட்டில் கொள்ளும் அளவிற்கு தூவவும்.
6.பிறகு மொஜெரெல்லா சீஸை தூவவும். கொஞ்சம் அதிகமாக தூவினால் நல்ல ஒன்றோடொன்று நல்ல ஜாமாகும் சாப்பிடும் போது நல்ல இருக்கும்.
7. கடைசியாக டொமேட்டோ கெட்சப்பை தெளித்து விட வேண்டும்.
8. எல்லா கலவையையும் வைத்திருக்கும் பிரெட்டின் மேல் . மற்றொரு பொரித்த பிரெட்டை வைத்து அழுத்த வேண்டும்.
9.மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்
10.சுவையான யம்மி யம்மி பிட்சா பிரெட் ரெடி.
குறிப்பு
**************
இதை பிரெட், ஸ்மால் பன், லாங் பன், ரவுண்டு பன் , தோசை எல்லா வற்றிலும் செய்யலாம். பிரெட் மில்க் பிரெட் என்றால் இன்னும் சுவை கூடும். பிரெட்டை பொரிக்கமலும் செய்யலாம். குழந்தைகளுக்காக கிர்ஸ்பியாக இருக்கனும் ஆகையால் பட்டரில் பொரித்துள்ளேன். இது நானே டிரை பண்ண ரெஸிபி இது போல எல்லா வகையான காய்களையும் பைனாக சாப் செய்து இந்த மாதிரி செய்யலாம்
.
Tweet | ||||||
38 கருத்துகள்:
பிள்ளைகளுக்கு அருமையானதொரு லன்ச்.வித்தியாசமான முயற்சி ஜலி.
இது ரொம்பவே சுவையா இருக்கும் அக்கா. பல வருடங்களுக்குமுன் அல்-அய்னில் ஒரு மாமி வீட்டுக்குப் போனப்போ என் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தாங்க. அதிலிருந்து பிள்ளைகளுக்கு வாரம் ஒருமுறையாவது இது ஸ்கூலுக்கு வேணும்.
ஃபில்லிங்குக்கு வெங்காயம் குடைமிளகாய்க்குப் பதிலா சிக்கன், காய்கறினு நம்ம இஷ்டம்போல வெரைட்டியாப் பண்ணலாம்.
இதுல ரெண்டு பிரட்டையும் தவாவில் டோஸ்ட் பண்ணாம, டோஸ்டரில் வச்சு டோஸ்ட் பண்ணா நல்லா ஸாஃப்டா இருக்கும்.
அல்லது, சீஸ் போட்ட பிரட்டை மூடாமல் அப்படியே ஓவனில் கிரில் பண்ணி எடுத்தால், பீட்ஸாவேதான்!! பெரியவங்களுக்கே கண்ட்ரோல் பண்ண முடியாது!!
ஆமாம் ஸாதிகா அக்கா இது இபப் செய்த முயற்சி அல்ல பெரியவன் கே ஜி படிக்கும் போதே செய்து கொடுத்தது, மற்ற வேலைகளை விட காலை டிபனுக்கு அதுவும் பிள்ளைகள் லன்ச் பாக்சுக்காக ரொம்ப மெனக்கிடுவேன், அதுக்கு தான் நேரம் எனக்கு அதிகம் ஆகும்,
ஹுஸைனம்மா இதன் சுவைய சொல்ல வார்த்தைகளே இல்லை
உடனே செய்து வீட்டில் சுட சுட சாப்பிடுவதாக இருந்தால் பிரட்டை மூட தேவையில்லை
பள்ளிக்கு எடுத்து செல்வதால் இப்படி மூடி கொடுப்பேன்
ஆமாம் இதே போல பில்லிங்
சிககனிலும் செய்வேன், இதில் லின்க் கொடுத்து இருக்கேன் பாருஙக்ள் பிட்சா தோசை அதே பில்லிங்க் இந்த பிரட்டுக்கும் வைப்பேன்.
superr ahh irukku but shd we close it with another bread i like it if its opened shd try with closed one also..
பிள்ளைங்களுக்கு பிடித்தமான் லன்ச் கொடுதிருக்கீங்க இதே முறையில் செய்து பார்க்கிறேன்,பகிர்வுக்கு ந்ன்றி
குழந்தைகளுக்கு செய்துகொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.. பகிர்வுக்கு நன்றி.
வாவ்,ஜலீலா செமையாக இருக்கு.நானும் செய்வதுண்டு,செய்முறையை சூப்பராக கொடுத்திருக்கீங்க,நல்ல பகிர்வு.
Makes me hungry, seriously am drooling rite now here..
delicious toast,luks yum...
வாழ்த்துக்களும் தமிழ் மண ஓட்டுக்களும்.
மிக அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.
சமையல் என்பது ஒரு கலை என்பதை நான்றாக அறிவேன் . ஆனால் இப்படி தினம் தினம் ஒரு புதுமையான உணவு முறையை எப்படித்தான் நீங்கள் கண்டு பிடிக்கிறீர்களோ !? வியப்பான ஒன்றுதான் . பகிர்ந்தமைக்கு நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்
சூப்பர் . பிள்ளைகளுக்கு தேவையான லஞ்ச்.
செய்து பார்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
தமிழ்மணம் ஓட்டு 3
ஜூப்பர் டிபன்..
அவசரத்துக்கு அவசியமாக சுவையாக செய்து சாப்பிடலாம்... அருமை
wow...tempting and yummy pizza bread...
உங்களுடைய (வெங்காயம் குடை மிளகாய் பிட்சா பிரெட்) செய்முறையைப் பார்த்து மகள் செய்து தந்தார்கள். சுவையோ சுவை. ஜலீலாக்கா!!
நல்லாயிருக்குங்க. செய்து கொடுக்கலாம்.
ஜலீலா பேரக்குழந்தைகளுக்கு செய்து கொடுத்தேன்.ஸ்கூல் விட்டு வந்ததுக் கொடுத்தேன். பாட்டி நாளை லஞ்ச் பாக்சிலும் இதே தாங்கன்னு விரும்பி சாப்பிட்டாங்க. நல்ல சுவையான குறிப்புக்கு நன்றி.
கொடமிளகாயை சும்மாவே பட்டரில் பொரித்தால் சூப்பரா இருக்கும் , இதுல பிரட்டும் சேர்ந்தால் சொல்லவா வேனும் ..!! :-))
நல்லா இருக்குதுங்க!! நான் ப்ரெட்ல் சீஸ் மற்றும் ஒலிவெ வைத்து செய்வேன். குழந்தைகளுக்கு பிடிக்கும்.
கல்பனா வாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஜுமாராஸ் , ஆமாம் இது பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உணவு கண்டிப்பாக செய்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்
இந்திரா வாங்க ரொம்ப ஜந்தோஷமுங்க
ஆசியா இன்னும் நிறைய வெரைட்டியில் செய்யலாம்
வருகைக்கு நன்றி
பிரியா நீங்க தான் ஜெட் வேகத்தில் செய்துடுவீங்கலே, அப்பரம் என்ன உடனே செய்து சாப்பிடுங்கள்
ஹுஸைனம்மா இதன் சுவைய சொல்ல வார்த்தைகளே இல்லை
உடனே செய்து வீட்டில் சுட சுட சாப்பிடுவதாக இருந்தால் பிரட்டை மூட தேவையில்லை
varthai ellam vendam. courier pothum. udane enakku anuppi vaiyunga.
bread dai mudinal enna mudatti enna. porukka mudiyathu. padam parthu enakku pasikkuthu. udane anuppunga. nalla irukku.
Very nice sandwich dear. I do as one sided version only...but yours seem so filling and good.
நன்றி பிரெமலதா
உங்கள் கருத்துக்கும் , ஓட்டுக்கும் மிக்க நன்றி நாட்டாம
நன்றி ராமலக்ஷ்மி கண்டிப்பா செய்து பாருங்கள்
வாங்க பனித்துளி சங்கர் உங்கள் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி
வா அலைக்கும் சலாம்
ஆயிஷா கருத்துக்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றீ
நன்றி சாந்தி
ஆமாம் ரஜேஷ் அவசரத்துக்கு ஈசியா செய்துடலாம்
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கீதாஆச்சல்
சகோ அப்துல் காதர் செய்து பார்த்து உங்கள் மகளே செய்து கொடுத்து சாப்பிட்டு ருசித்து இங்கு வந்து கமெட்ண்ட்டிட்டமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்
கோவை2தில்லி கண்டிப்பா உங்க செல்ல குட்டிக்கு செய்து கொடுங்க
வருகைக்கு மிக்க நன்றி
லஷ்மி அக்கா மிக்க மகிழ்சி உங்கள் பேரக்குழந்தைக்கு
செய்து கொடுத்தீங்களா இனி அடிக்கடி கேட்பார்கள்.
ஜெய்லானி ஆமாம் சும்மா வதக்கினாலே ரொம்ப நல்ல இருக்கும் அதுவும் பிரெட்டில் என்றால் இன்னும் நல்ல இருக்கும்
வருகைக்கும் நன்றி
தெய்வ சுகந்தி இதிலும் ஆலிவ் சேர்த்துள்ள்ளேன்.
வருகைக்கு மிக்க நன்றி
சுதாகர் சார் அக்கறையில் இருந்து கொண்டு பார்சல் என்றால் அனுப்பிடுவேன் ஆனால் வந்து சேரும் போது எப்படி இருக்குமுன்னு தெரியலையே
நேரம் ஒதிக்கி என் பக்கமும் தொடர்ந்து வந்து படித்து கமெண்ட் இட்ட்டமைக்கு மிக்க நன்றி
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா