Saturday, March 17, 2012

ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை - Ajwain Loli Pop Chicken Fry


சிக்கன் லாலி பாப் - 10 துண்டு
உப்பு தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு மேசைகரண்டி
பப்பரிக்கா பவுடர் - அரை தேக்கரண்டி
ஓமம் பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைகரண்டி
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி தழை சிறிது
எலுமிச்சை - 1/2 + 1/2
தயிர் - ஒரு மேசைகரண்டி

அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
கடலை மாவு - ஒரு மேசை கரண்டி
கார்ன் மாவு - ஒரு மேசை கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி

எண்ணை + பட்டர் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் லாலிபாப்பை நன்கு 6 முறை கழுவி ஆங்காங்கே கிறி விட்டு அரை பழம் லெமன் பிழிந்து ஊற வைக்கவும்.1 0 நிமிடம் கழித்து கழுவி தண்ணீரை வடிக்கவும்.

சிக்கன் ஆயில் தவிர அனைத்து மசாலா, பவுடர் வகைகளை நன்கு பேஸ்ட் போல் குழைத்து சிக்கனில் பிறட்டி ஆலிவ் ஆயிலும் சேர்த்து விறவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
எண்ணை + பட்டரை சூடு படுத்தி வானலியில் கொள்ளும் அளவு முன்று துண்டுகளாக போட்டு டீப் பிரை செய்யவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள ஓமம் லாலிபாப் ரெடி.






10 கருத்துகள்:

dsfs said...

சூப்பர் அக்கா

Asiya Omar said...

WOW!நல்ல ஃப்லேவர்.

ஸாதிகா said...

ஓமம் ஸ்மெல்லுடன் சிக்கன் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிக்கன் ஐட்டம் ! நன்றி சகோதரி !

அம்பலத்தார் said...

Wowwwwwwwwwwwww... Plate of "ஓமம் லாலிபாப் சிக்கன் ஃப்ரை parcel please.

Jaleela Kamal said...

பொன்மலர் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஆமாம் ஆசியா மிக அருமையான் ஃப்லேவர்

Jaleela Kamal said...

வாங்க ஸாதிகா அக்கா ஓமம் ஸ்மெல்ல்டன் மிக அருமையாக இருக்கும்.
சளி தொந்தரவுக்கும் மருந்து போல் ஆச்சு

Jaleela Kamal said...

திண்டுக்கல் தனபாலம் ஆம் இது ஒரு வித்தியசமாக நான் முயற்சித்தது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

அம்பலத்தார் நான் பார்சல் பண்ணிடுவேன ஆனால் வந்து சேர எத்தனை நாள் ஆகுமுன்னு தெரியாதே??
வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா