இது கர்பிணி பெண்களுக்கு மற்றும் பிள்ளை பெற்றவர்களுக்கு செய்யும் சூப்பாகும். குழந்தை பெறும் நேரத்தில் உடல் இளகி தெம்பில்லாமல் இருக்கும் அதற்கு இந்த சூப்பை செய்து தினமும் மதிய உணவிற்கு பொரியல் அவித்த முட்டையுடன் சாப்பிடுவது நல்லது. சூப்பாகவும் குடிக்கலாம்.
இந்த சூப்பை ஒரு நாள் கறி எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும்.
ஹிமோகுளோபின் கம்மியாக உள்ளவர்கள் ஆட்டு ஈரலிலும் மட்டனிலும் சூப் செய்து சாப்பிட்டால் ஒரே மாதததில் ஹிமோகுளோபின் அளவு கண்டிப்பாக அதிகரிக்கும் . இது என் அனுபவ குறிப்பு .
தெம்பிழந்து இருக்கும் நோயாளிகளுக்கும் தினசரி இந்த சூப் கொடுத்து வந்தால் மிகவும் நல்லது.
பூப்பெய்திய பெண்களுக்கும் தினசரி உணவில் கொடுத்து வந்தால் இடுப்பெலும்பு பலம் பெறும்.
இதை குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போது கால் முட்டி பலம் பெற சிக்கனில், ஆட்டுக்காலில் அல்லது மட்டனில் கொடுக்கலாம்.
சளி அதிகமாக இருந்தாலும் உடனே சரியாகும். தேவைக்கு சிறிது மிளகு கூட்டிகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எலும்பில் வேக வைக்க வேண்டியது
· கறி உடைய மார்கண்டம் எலும்பு - ஆறு துண்டு · வெங்காயம் - ஒன்று · தக்காளி - ஒன்று · இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி · உப்பு - தேவைக்கு · மிளகு தூள் - அரை தேக்கரண்டி · தனியாதூள் - ஒரு மேசை கரண்டி · தேங்காய் பால் - கால் டம்ளர்
தாளிக்க
· நெய் (அ) நல்லெண்ணை - இரண்டு தேக்கரண்டி · கரம் மாசாலா தூல் - கால் தேக்கரண்டி · வெங்காயம் - கால் · இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி · கொத்து மல்லி தழை - கொஞ்சம்
|
செய்முறை · எலும்பை கழுவி சுத்தம் செய்து முன்று கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வேகவைக்கவும். · வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். · நெய்யில் தளிக்க வேண்டியவைகளை போடு தாளித்து சூப்பில் கலக்கவும்.
|
குறிப்பு:
இந்த சூப்பை ஒரு நாள் கறி எலும்பிலும், ஒரு நாள் சிக்கன் எலும்பிலும் செய்து குடிக்கவும். ஹிமோகுளோபின் கம்மியாக உள்ளவர்கள் ஆட்டு ஈரலில் சூப் செய்து சாப்பிட்டால் உடனே சரியாகும்.
sending to umm mymoonah's healthy morsel pregnancy and anyone can cook.
பூண்டு முட்டை சாதம் (கர்பிணி பெண்களுக்கு)
தமிழ்குடும்பம் (பூண்டு முட்டை சாதம்)
23 கருத்துகள்:
rusiyaana soup Jaleela !! aamaam ithu kuzhandai petravargalukku migavum nallathu. athanudan kootthu-nalla combination ! ippozhuthey saappidalam endra ennam varugirathu :)
Healthy Morsels-Pregnancy'ku anuppiyatharku mikka nanri !
அருமையான சூப்.
நல்ல உபயோகமான குறிப்பு ஜலீலா..
ஆஹா ஜலீலா சூப்பர்.எனக்கு இதை பார்த்தவுடன் எல்லாரும் கவனித்த கவனிப்பு தான் மலரும் நினைவுகள் வருது.
Lecker and yummy Recipes
வருகைக்கு மிக்க நன்றி
உஙக்ள் கருத்துக்கு மிக்க நன்றி ஸாதிகா அக்கா
பாசமலர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ம்ம ஆமா ஆசியா அந்த் காலம் எல்லாம் இப்ப திரும்பி வராது ,
இப்ப நாம தான் கவனிக்கனும்
Jaleela, is Asiya Omar related to you ? Just curious :)
yummy
Salaams Jaleela...
Engal amma vaikum soup polave ulladhu... migavum rusiyaaga irukkum.. paarkum bodhe saapida thondrugiradhu...
Koodiya seekiram insha Allah India sella ullen... appodhu ammavidam seydhu kettu saapida vendum... :)
Healthy Morsels - Pregnancy ku anuppiyadharku mikka nanri :)
சூப்...ஜலீலா சத்தான பாரமில்லாத உணவிது.நன்றி !
Yum yum, soup makes me hungry..its been a while i had it..
ஐயோ ! பசிக்குதே !
நானும் ஆசியாவும் வலை உலகத தோழிகள். தூரத்து உறவும் கூட
வருகைக்கு மிக்க நன்றி ரேஷ்மி
வாங்க ஆயிஷா இந்த குறிப்பு பார்த்ததும் உஙக் அம்மா நினைவு வந்து விட்டதான்
ரொம்ப ஈசியான குறிப்பு எளிதில் செய்துவிடலாம்.
வருகைக்கு மிக்க் நன்றி
அனானி வருகைக்கு மிக்க ந்னறி
ஆமாம் ஹேமா மிகவும் சத்தான உணவு
வருகைக்கு மிக்க நன்றி
பிரியா எல்லாருக்கும் அப்ப்டி தான் இப்படி ஃபுல் மீல்ஸ் பார்த்ததும் உடனே சாப்பிடனும் போல் இருக்கும்
நீஙக் தான் ஜெட் வேகத்தில் சமைத்து விடுவீர்களே ,
திண்டுக்கல் தனபாலன் உடனே உஙக்ள் மனைவியிடம் சொல்லி செய்து சாப்பிடுஙக்ள்
வருகைக்கு மிக்க நன்றி
Lecker and Yummy Recipes has left a new comment on your post "சௌராஷ்ட்ரிய சிக்கன் கிரேவி":
Jaleela, a BIG surprise is awaiting you at Healthy Morsels ;)
Please check one of our blogs for details ...
http://www.leckerandyummyrecipes.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html
http://www.schmetterlingwords.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html
http://www.tasteofpearlcity.blogspot.de/2012/04/healthy-morsels-pregnancy-roundup.html
Your Healthy Morsels Team !
schmetterlingwords has left a new comment on your post "சௌராஷ்ட்ரிய சிக்கன் கிரேவி":
Dear Jaleela, congratulations on getting selected in Healthy Morsels - Pregnancy. You deserved it!!
Heartfelt thanks for your participation :)
Healthy Morsels Team
ஆரோக்கியமான மற்றும் புதுமையான பலவித சுவைகளில் உணவு சமைத்துக் கொடுக்க என் மனைவிக்கு உதவியாக இருக்கும் என்பதற்க்காக் பார்க்க சொன்னேன். பார்த்து மகிழ்ந்தார்கள் .
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா