Friday, September 16, 2011

கொத்தவரங்காய் பொரியல் - Cluster beans stir fry



பச்சை காய் கறிகள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வது மிகவும் நல்ல , சர்க்கரை வியாதி, பீபி உள்ளவர்கள் இது போல் பொரியல் செய்து ரசத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்..



தேவையானவை

கொத்தவரங்காய்  - கால் கிலோ
உப்பு - அரை தேக்கரண்டி
 மஞ்சள் பொடி  - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய் - கால் முறி ( 4 பத்தை)
தாளிக்க
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு -  ஒரு தேக்கரண்டி
காஞ்சமிளகாய் (வர மிளகாய் )  - இரண்டு
பூண்டு - இரண்டு பல் ( அல்லது) பெருங்காயம் கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது 




செய்முறை

கொத்தவரங்காயை நன்கு கழுவி  இரண்டுஓரங்களையும் அரிந்து விட்டு
பொடியாக அரிந்து 5 நிமிடம் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிக்கவும்.

தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து கொத்தவரங்காயை சேர்த்து வதக்கி உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கி 5 நிமிடம் சிம்மில் வேக விடவும்.

கடைசியாக தேங்காய் பூ சேர்த்து கிளறி வதக்கி இரக்கவும்.
சுவையான கொத்தவரங்காய் பொரியல் ரெடி.

இதை தக்காளி சேர்த்தும் செய்யலாம் , கூட்டு போலவும் செய்யலாம்.

டிப்ஸ்: சைவ குறிப்புகள் அதிலும் பொரியல் வகைகள் செய்வது ரொம்ப சுலபம். எனக்கு ரசம், பொரியல் , அப்பளம், இருந்தால் போதும்.
வாரத்தில் இரண்டு முறை இது போல் செய்து சாப்பிடுவோம்.
அதிலும் கொத்தவரங்காய் நலல் டயட் க்குக்கான பொரியல் தேங்காய் அதிகம் வேண்டாம் என்பவர்கள். இதில் நிறைய வெங்காயம் தக்க்காளி சேர்த்து வதக்கி செய்தால் ரொம்ப சூப்பராக இருக்கும். இதில் பருப்புசிலி செய்தாலும் பிரமாதமாக இருக்கும். மட்டனுடன் சேர்த்தும் சமைக்கலாம்.

கொத்தவரங்காய் பித்த்ம் என்று சொல்வார்கள் அதுக்கு தான் தண்ணீரில் கொத்திக்க வைத்து வடிப்பது.



45 கருத்துகள்:

பாரணை முடிச்ச:) அதிரா said...

அடடா நான் தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:)

பாரணை முடிச்ச:) அதிரா said...

ஜலீலாக்கா கொத்தவரையில் பொரியலோ? சூப்பர். இதுவரை குழம்பு, பொரித்துப் பிரட்டல் கறி இப்படித்தான் செய்ததுண்டு.

சம்பத்குமார் said...

நன்றி சகோ

நட்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான பொரியல்...சூப்பர்ப்...

Angel said...

ரெசிபிக்கு மிக்க நன்றி ஜலீலா .

Chitra said...

I make a little different . will try this version soon :)

Menaga Sathia said...

இந்த பொரியல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...

மதுரை சரவணன் said...

puthumaiyaaka irukku vaalththukkal

ஆயிஷா said...

ஆஹா ..சூப்பெர்..

நம்ம பிளாக்கில் வட்லப்பம் .

http://puthiyavasantham.blogspot.com

Asiya Omar said...

கொத்தவரங்காய் பொரியல் எனக்கு மிகவும் பிடிக்கும்,நான் சிறிய மாறுதலுடன் செய்வேன்,பார்த்தவுடன் செய்ய ஆசை வந்து விட்டது.

அந்நியன் 2 said...

அருமையான டிப்ஸ்

வாழ்த்துக்களும்..மற்றும் பதிவுகளும்.

ஸ்ரீராம். said...

இதைப் பூண்டு இல்லாமல் நாங்கள் செய்வோம். கொத்தவரங்காய் சைசுக்கு அதை இன்னும் சிறிதாக வேறு அரிந்து விடுகிறோமா...சாப்பிடும் திருப்தியே இல்லை என்று தோன்றும். கொத்தவரங்காய் வத்தல் ஓகே.

Samantha said...

wow nice..

Aruna Manikandan said...

looks healthy and delicious :)

பித்தனின் வாக்கு said...

akka akka jalila intha poriyal supero super.

enakku intha poriyal romba pidikkum( parupu usili.
anna highly gastic enbathal adikkadi sapiduvathu illai.

but onnu nee en thangai enbathai nirupithu vittai.
careless mistake pannuvathil than.

கொத்தவரங்காய் பொரியல் - கால் கிலோ athu eppadima kothavarangai poriyala poriyal pannukinrai??.

ha ha nanga romba usarummaaaaa,

Jaleela Kamal said...

வாங்க சுதாகர் சார்

ம்ம்ம் கண்ணிலே விளக்கெண்ணய விட்டுட்ண்டு படிச்சிங்களா?
இது முன்னமே போட்டு வைத்திருந்த குறிப்பு படத்த சரி செய்து போட தான் நாளாகுது.

கீழே உள்ள டிப்ஸ் மட்டும் தான் கவனித்தேன்
மீதி குறிப்ப சரி பார்க்கல.


தவறை சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி

பருப்புசிலி உங்காத்து கல்யாணத்துல ரொம்ப விஷேஷமாச்சே/

Jaleela Kamal said...

ஆமாம் அதிரா
இது என் ஹஸுக்கு ரொம்ப பிடிக்கும், பொரிய்லுக்கு ஏதாவது காய் வாங்கி வாங்கன்னு சொன்னாக்க
கொத்தவரை தான் அரை கிலோ வந்துடும்.

எனக்கு அரிய மட்டும் தான் நேரம் எடுக்கும்.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி சம்பத் குமார்

நேரம் கிடைக்கும் போது உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

ஏஞ்சலின் செய்து பார்த்து சொல்லுங்கள்

Jaleela Kamal said...

சித்ரா இதிலேயே இரண்டு முன்று வகை உண்டு
அதில் இதுவும் ஒரு வகை

Jaleela Kamal said...

மேனகா ஊரிலிருந்து வந்தாச்சா?
கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க மதுரை சரவணன் உங்கள் வாழ்த்துக்கு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கு நன்றீ ஆயிஷா

எங்க வீட்டு பேம்ஸ் வட்லாப்பத்தை பார்த்தேன், ரொமப் அருமை

Jaleela Kamal said...

ஆசியா நான் இதை இரண்டு முன்று முறையில் செய்வேன் அதில் இதுவும் ஒன்று

Jaleela Kamal said...

அந்நியன் உங்கள் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்க்கும் ஓட்டுக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஸ்ரீராம், கொத்தவரங்காய வத்தல் மோர் குழம்புடன் சூப்பரா இருக்குமே.
ஏன் இத ஒரு விரல் நீளத்தில் அரிந்தும் செய்யலாம் இல்லையா?
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சமந்தா உங்கள் முதல் வருகைக்கு மிக நன்றி

Jaleela Kamal said...

நன்றி அருனா

Vikis Kitchen said...

My favorite vegetable always...yummy!

'பரிவை' சே.குமார் said...

ennakku migavum pidiththaathu...

zumaras said...

எனக்கு ரொம்ப் பிடிக்கும்.
உங்க முறையில் செய்து பார்க்கிறேன்.உங்க ப்ளாக்கில் ’தேடுக’வசதி இருந்தால் என்க்கு ரொம்ப உதவியாக இருக்கும் .காத்திருக்கிறேன்

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html

Jaleela Kamal said...

விக்கி வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சே.குமார் எல்லாருக்கும் கொத்தவரங்கான்னா ரொம்ப பிடிக்குமா?
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஜுமாராஸ் , ரொம்ப நாள் ஆச்சு பிலாக் செட்டிங்கில் கை வச்சி.

பார்க்கிறேன் முடிந்தபோது தேடுக , செட் பன்றேன்
ஏன் சைடில் லேபிள் இருக்கே
அதில் ஈசியா எடுக்கலாமே?

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க ராஜேஷ் என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

அதென்னவோ தெரிய வில்லை.இந்த கொத்தவரங்காயை மட்டும் வேக வைத்து வடிகட்டி சமைக்கின்றார்கள்.பெரியவர்களிடம் கேட்டால் அது வாய்வு மிகுந்த காயானதால் அப்படித்தான் சமைக்க வேண்டும் என்கின்றனர்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இது பித்தமா? வாயுவா?

Prema said...

Healthy and delicious poriyal,thanks for sharing...

ADHI VENKAT said...

கொத்தவரங்காய் பொரியல், கூட்டு, பருப்புசிலி, வத்தல் எல்லாமே நன்றாக இருக்கும். பகிர்வுக்கு நன்றிங்க.

மாதேவி said...

கொத்தவரங்காய் இங்கு கிடைக்காது ஜலீலா. பயித்தங்காயில் பொரியல் செய்வோம்.

Jaleela Kamal said...

கருத்துக்கு மிக்க நன்றி பிரேமா

Jaleela Kamal said...

ஆமாம் கோவை 2தில்லி பருப்புசிலி , கூட்டு வத்தல் பொரியல் எல்லாமே நல்ல இருக்கும்
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மாதேவி உங்களுக்கு கொத்தவரங்கா கிடைககதா மற்ற காயிலும் இதே போல் சிம்பிளாக செய்யலாம்.
வருகைக்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா