ஹிமோ குளோபின் அளவை அடிக்கடி பெண்கள் சரிபார்ப்பது போல் ஆண்கள் யாரும் சரி பார்த்து கொள்வதில்லை.பெண்களுக்கு திருமணம் முடிந்ததும் கர்ப காலத்தில், பிரசவ நேரத்தில் இரத்ததின் அளவை மருத்துவர்கள் சரி பார்ப்பதால் ஹிமோ குளோபின் அளவு குறைவாக உள்ளதை கண்டு பிடித்து அதற்குறிய சிகிச்சையை அளிக்கின்றனர். என்ன உணவு உட்கொண்டால் ஹிமோ குளோபின் அளவு அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால் ஆண்கள் தங்கள் ஹிமோகுளோபின் அளவை சரிபார்க்க வாய்ப்பே இல்லை. குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஏதேனும் உடல் உபாதைகள் வரும் போது தான் தெரிய வருகிறது.
ஆண்கள் படிப்பிற்க்காக மேற்படிப்பிற்காக ஹாஸ்டலில் தங்க வேண்டிய சூழ் நிலை,உள்ளூரிலேயே வேறு வேறு ஊர்களில் படிப்பு மற்றும் வேலை தேடுதல், வெளிநாடுகளில் படிப்பு மற்றும் வேலைக்காக செல்ல நேர்வதால் முறையான உணவுவகைகளை உட்கொள்வதில்லை.
பெற்றோர்களுடன் இருக்கும் வரை அவர்களுக்கு கவலை இல்லை சத்தான சாப்பாடு வீட்டு சாப்பாடு அம்மாவின் பராமரிப்பில் அமைந்து விடுகின்றன.
ஆனால் இப்படி வெளியிடங்களுக்கு போய் சாப்பிடும் போது சிலருக்கு அந்த வகை சாப்பாடு ஒத்துக்கொள்ளவே நாள் எடுக்கும். (இப்படிதான் ஒருத்தருக்கு உணவு முறை ஒத்துக்கொள்ளாததால் இரத்தில் கேன்சர் வந்து விட்டது அதிர்ஷ்டவசமா இரண்டு வருடமாக சிகிச்சை பெற்று சரியாகி விட்டார்)
அதே போல் வேலை பார்க்கும் ஆண்களும் பெற்றோர்கள், மனைவி, பிள்ளைகள் என குடும்பங்களை நேர் வழியில் கொண்டு செல்லவே சரியாக இருக்கு ஆனால் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதில் மன அழுத்தம் இயலாமை , உடல் சோர்வு , கிட்னி ஸ்டோன், ஈரல் வீக்கம், ஹெர்னியா , அல்சர் , வயிறு எரிச்சல் , ஹார்ட் அட்டாக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறை இரத்த அழுத்தம் , சர்க்கரை வியாதி ,கேஸ் பிராப்ளம் இது போல் பல வியாதிகளில் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு மாதிரியான நோய் சூழ் நிலை, உணவு , இருப்பிடத்தை பொறுத்து கண்டிப்பாக தாக்குகிறது.இது போல வியாதிகளுக்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் மன அழுத்தம், கவலை, சூழ்நிலையாகவும் இருக்கலாம்.
இந்த நோய் ஏன் எப்படி தாக்குகிறது என பார்ப்போம்.
மன அழுத்தம் : பல விழியங்களை மனதிலேயே தேக்கிவைத்து யாரிடமும் மனம் விட்டு பேசாததினால் ஏற்படுகிறது, இதுவே தலை வலியாக மாறுகிறது.
உடல் சோர்வு: சரியான சாப்பாடு கிடைக்காமல் , சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் அதிக கடின உழைப்பினால் வருகிறது.
இயலாமை உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இல்லாததால் இரத்ததின் அளவு குறைத்தல்
கிட்னி ஸ்டோன்: ஆபிஸில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கணனியிலேயே இருப்பவர்கள் , சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரஜெக்டுகளில் உட்கார்ந்தால் இரவு பகல் பாராமல் நேரம் போவதே தெரியாது அப்போது தண்ணீரோ , சாப்பாடோ எல்லாம் அவர்களுக்கு சுத்தமாக மறந்து விடுகிறது. அதே போல் பெரிய பெரிய ஷாப்பிங் மாலில் வேலை பார்க்கும் சேல்ஸ் மேன் கள் நின்று கொண்டே தான் இருக்கனும் உட்காரமாட்டார்கள். இதனாலும் அவர்கள் தண்ணீரோ சாப்பாடோ உட்கொள்ள நேரம் கிடைப்பதில்லை. இதனால் கண்டிப்பாக கிட்னி ஸ்டோன் வருகிறது. அப்படியே உட்கார்ந்து இருப்பதாலும் ஈரல் வீக்கமும் ஏற்படுகிறது.
ஹெர்னியா குடல் இரங்கி விடுவது இது லேபர்கள் அதிக வெயிட்டை தூக்குவதால் வருகிறது.அல்சர் வயிறு எரிச்சல் எல்லாமே முறையான சரியான உணவு வகைகள் எடுக்காததால் தான் வருகிறது.
இதற்கெல்லாம் முக்கியம் ஆண்கள் உழைக்கும் காலத்தில் தொடர்ந்து ஜுரம், தலைவலி, வந்தால் உடனே மருத்துவரை அனுகி முதலில் அவரவர் ஹிமோகுளோபின் அளவை முறையாக பரிசோதித்து. அதற்கு தகுந்த சத்து மாத்திரைகள், சத்தான உணவு வகைகள் உட்கொள்வது நல்லது.
உடலில் கிட்னி, லிவர் போன்றவை சரி வர வேலை செய்தால் தான் மற்ற நோய்கள் தாக்காமல் இருக்கும். அதற்கு ஆண்களும் தங்கள் ஹிமோ குளோபின் அளவை சரி பார்த்து கொள்வது நல்லது.
(நல்ல உழைத்து விட்டு கழ்ட பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு கல்யாணம் செய்யும் நேரம் கல்யாணத்துக்கு முன் ஹார்ட் அட்டாக்கில் அப்பா இறந்துட்டார் என்று நிறைய இடங்களில் கேள்வி படுவதுண்டு. இது அவர்கள் தங்களை கவனித்து கொள்ளாதது தான் காரணம் என்பது என் கருத்து)
உடல் சோர்வோக இருந்தாலோ உடல் நிலை சரியாக இல்லை என்றாலோ உங்கள் இரத்தத்தில் அளவை (ஹிமோ குளோபின் ) யும் சரி பார்த்து கொள்வது நல்லது.
உடலில் இரத்ததின் அளவு சரியாக சீராக இருந்தால் ஓரளவுக்கு இது போல் நோய் தாக்குதலில் இருந்து விடை பெறலாம்.காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்டீ காஃபி குடிக்காமல் முடிந்த வரை தண்ணீர் குடிப்பது ஓரளவுக்கு உடல் நிலையை சீராக்கும்.
உணவு வகைகள்
பச்சை கீரை வகைகள்,பச்சை காய்கறிகள்,பழச்சாறுகள், பேரிட்சை,புரோக்கோலி,பீட்ரூட், மாதுளை பழம், அத்தி பழம் ,ஆட்டு ஈரல்,கிட்னி, மட்டன் , மீன் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது நல்லது.
பருப்பு சேர்த்து கீரை மற்றும் காய்கறி கூட்டு வகைகள்
அத்திழ ஜுஸ்
மாதுளை ஜூஸ்
பேரிட்சை துவையல்
பீட்ரூட் கூட்டு
ப்ரோக்கோலி சூப்
புரோக்கோலி பாஸ்தா
புரோக்கோலி பொரியல்
எலுமிச்சை ஜூஸ்
சுண்டல் வகைகள்
பழ வகைகளில் ஆப்பில் எல்லோரும் சாப்பிடலாம்.
மாலை நேரம் பசி எடுத்தால் நட்ஸில் குறிப்பா வால்நட் ரொம்ப நல்லது. நட்ஸ் வகைகள் , கருப்பு கிஸ்மிஸ் பழம், பேரிட்சை இது போல் சாப்பிடலாம்
கேழ்வரகு, இன்னும் ரெடிமேடாக கிடைக்கும்.
கோதுமை, கம்பு , கேழ்வரகு போல் இப்ப Flax seed என்னும் ஆளிவிதையில் அதிக சத்து ஒமேகா3 மீன் உணவுக்கு சமமான சத்து உள்ளது. இதை வெஜ்டேரியன்கள் அதிகமாக சாப்ப்பிடலாம்.
ஆளிவிதை ரொட்டி.
கார்ன் பிளேக்சில் அதிக சத்து எல்லாமே அதில் கிடைத்து விடுகிறது, அனைத்து வகையான விட்டமின்களும் அதில் உள்ளது.தினம் பாலுடன் கார்ன் பிளேக்ஸ் கூட ஒரு கப் சாப்பிடலாம், ஓட்ஸ் கஞ்சி போல் காய்ச்சி குடிக்கலாம் ,தினம் அதை குடிக்க விரும்பாதவர்கள் ஓட்ஸ் காய்ச்சி அதில் சிறிது அவல் ஊறவைத்து சேர்த்து இனிப்புக்கு பதிலாக கிஸ்மிஸ் பழம் , சிறிது நட்ஸும் சேர்த்து சாப்பிட்டால் சுவையும் வித்தியாசமாக இருக்கும். சத்தும் அதிகம்.வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவு போல் வெளியிடங்களில் இருக்காது ,சாப்பிடும் போது காய் கறி, மற்றும் கடல் உணவுகள் மட்டும் அதிகமாக எடுத்து கொள்வது நல்லது.
டிஸ்கி: இந்த பதிவு அதீததில் நவம்பர் ஹெல்த் கார்னரில்.
( இது என் செந்த ஆலோசனை மற்றும் கருத்து. அப்பா, சித்தப்ப்பா மற்றும் குடும்பத்தில் இருவரின் உடல் நிலையை நேரில் கண்டதில் என் கருத்து கணிப்பு)
எங்க டாடிக்கு இடுப்பு எலும்பு ஆப்ரேஷன் 8 மணி நேரமா நடந்தது. ஆனால் ஆப்ரேஷன் சக்ஸஸ் என்று சொன்னார்கள் இரத்ததில் அள்வை கவனிக்கல, கொஞ்சம் நல்ல நினைவு வந்தது சில நேரம் நல்லவும் சில நேரம் குழம்பிய நிலையிலும் பேசினார்கள், அப்படியே வீட்டுக்கும் அனுப்பி ஒரு மாதம் ஆகிவிட்டது. தீடீருன்னு ஆப்ரேஷன் பண்ண காயம் ஆரல பிளட் வந்து கொண்டே இருக்கு சாப்பாடும் ஏற்கல பிஸியோ தரபி வந்தால் நடக்க வைக்கவும் முடியல,உடனே மறுபடி ஹாஸ்பிட்டலில் சேர்த்தால் சத்து இல்லை, பிளட், ஹிமோகுளோபின் அளவு 6 ஆக குறைந்து விட்டது . பொதுவாக 12 லிருந்து 13 இருககனும் அது தான் நார்மல்) அப்பரம் எல்லாம் பார்த்து ஒன்றும் பிளட் ஏற்றியும் ஒன்னும் முடியல .அம்மா எவ்வளவோ போராடினாங்க. .... பிரிவின் துயரால்
Tweet | ||||||
29 கருத்துகள்:
What u said is very true.guys dont care abt their health.We have to look after them:)
ஆண்களுக்கும் அனீமியா, தைராய்டு ப்ராப்ளம் எல்லாம் இருக்கும். பாவம் அவர்களை சரியா மருத்துவம் பார்த்துக்கொள்வது கிடையாது. (நேரம் இருக்காது + தெரியாது). அருமையான அதேசமயம் தேவையான பகிர்வு.
நன்றி
Wat a informative post Jaleela, unmai then, they wont care much about their health..hope after seeing this post they will atleast take care a bit..
வழக்கம் போல பதிவ படிக்காம லின்கை வீட்டுக்காரவங்களுக்கு அனுப்பிட்டேன், முதல்ல நீங்க படிங்க அதைன்னு பதில் வருது, லேட்டா படிப்போம்ன்னு இருந்தேன், வந்து பார்த்தா தான் தெரியுது, பதிவு மற்றும் கமெண்டர்களும் பொங்குறாங்கன்னு ...
மிக்க நன்றி அக்கா...
சகோதரிகள் பக்கத்தில் இருந்து இப்படியான மிக ஆழமான பதிவு வருவது அரிதாகவே உள்ளது... அந்தளவு ஆழமான விடயம் ஒன்று மிக்க நன்றி அக்கா...
அக்கா ஆண்கள் Hb ல் கவனம் கொள்ளாததற்கு ஒரு காரணமும் இருக்கிறது... பெண்கள் தானே அடிக்கடி பார்க்கணும் அவர்களுக்கு மாதவிடாய்க்காலத்தில் அதிகளவு இழக்கப்படுகிறது... ஆனால் நீங்கள் சொல்வது போல ஆண்கள் கவனிக்காமல் இருப்பதால் தான் பிரச்சனை வரும் போது பாரதூரமான விளைவை ஏற்படுத்துகிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)
நல்ல பகிர்வு.ஆண்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகளை அழகாக எடுத்து சொல்லியிருக்கீங்க.
நீங்க சொன்னதுக்கப்புறம் தான் ஹிமோகுளோபின் பற்றிய யோசனையே வருது ஜலீலாக்கா. பயனுள்ள தகவல்களுடன் மிளிரும் பதிவு.
பயனுள்ள அருமையான பகிர்வு.
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. தங்களின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள். மிக்க நன்றி!
உடலாரோக்கியமும், ஆரோக்கியமான உணவுகளும் பற்றிய விழிப்புணர்வு, பதிவு ஒவ்வொருவருக்கும் உபயோகமான பதிவு.
நிறைய பயன் உள்ள தகவல்
வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்
உங்கள் பதிவு வெளி வந்தமைக்கு
உங்கள் தந்தை
உங்களுடன்தான் இருக்கிறார்
வருத்தம் வேண்டாம்
அருமையான பதிவு சகோ.
வாழ்த்துக்கள்.
கொஞ்சம் பிஸி அதான் வர இயலவில்லை.
நிறைய மருத்துவத் தகவல்கள், டாக்டர் ஜலீலாக்கா வாழ்க!!!..
உண்மையான நல்ல நல்ல தகவல்கள் ஜலீலாக்கா... தொடர்ந்து கலக்குங்கோ.
முடிந்தால்... புதுத்தலைப்பு போடும்போது எனக்கு மெயில் பண்ணுங்கோ.
அருமையான பதிவு.
எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
//ஆண்களுக்கும் அனீமியா,//
yes ... me too in that props
வாங்க சித்ரா வருகைக்கு மிக்க நன்றி
ஆம் நாம் தான் அவர்களை கவ்னித்து கொள்ளனும்.
ஆமாம் புதுகை தென்றல் உழைப்பு உழைப்பு என ஓடுபவர்களுக்கு எங்கிருந்து உடல் ஆரோக்கியத்த பார்த்துகொள்ள நேரம் இருக்கு
ஆமாம் பிரியா தன் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு/
வருகைக்கு மிக்க நன்றி
சகோ ஜமால் அவஙக் சொல்லி யாவது படிச்சீங்க்ளே. நன்றி
மதிசுதா வருகைக்கு மிக்க நன்றீ ,பெண்களுக்கும் பார்த்து கொள்ளனும்,இது ஆண்கள் செக் பண்ணி கொள்வதில்லை.
வருகைக்கு மிக்க நன்றி
உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந்னறி ஆசியா
எம் அப்துல் காதர் இனிமேலாவது உடல் நலத்தில் கவ்னம் கொள்ளுங்கள்
நன்றி ஸாதிகா அக்கா
திண்டுக்கல் தனபாலம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அம்பலத்தார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சிவா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
நாட்டாம முடிந்த போது வாங்க.
அதிரா ஜெய்லானிக்கு அடுத்து டாக்டர் பட்டம் நீன்க்க எனக்கு கொடுக்குறீங்க
ஏன் என் பதிவு உங்களுக்கு முகப்பில் வரலைய்யா?
ரத்ன வேல் ஐய்யா வ்ருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் , முகநூலில் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி
ஷர்புதீன் உங்களுக்கு அனீமியா பிராப்ளம் இருக்கா சரியான மருத்துவம் எடுட்து கொள்ளுங்கள்.
இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_18.html
விச்சு வலச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க.
இந்த ”ஆண்களுக்கு ஹிமோகுளோபின்”டிப்ஸ் எல்லா ஆண்களுக்கும் தெரியவந்து அவரவர் அவர்க்ள் இரத்தத்தின் அளவை சரியாக பார்த்து கொண்டால் ரொம்ப சந்தோஷம் தான்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா