Monday, June 25, 2012

மருதாணி கோன் செய்யும் போது

இது என் தங்கை பசிராவின் டிப்ஸ்

1. மருதாணி கோன் செய்யும் போது ஸ்பூனால் எடுத்து போடுவார்கள் அது சரியா உள்ளே விழாது.ஆகையால் முதலில் ஊரில் நாட்டங்கடையில் சர்க்கரை அரிசி போன்றவைக்கு பெரிய பொட்டலம் மடிப்பார்கள் அது போல் பொரிய பொட்டலமா கோன் செய்து கலக்கிய மருதாணியை எல்லாம் அதில் போடுங்கள்.

2. இப்போது சிறிய சிறிய கோன்கள் தயாரித்து சல்வர்டேப் போட்டு ஒட்டுங்கள்.


3. அடுத்து பெரிய கோனின் அடியில் கொஞ்சம் பெரிய ஹோலாக கட் செய்து சிறிய கோனில் விட்டு முக்கால் பாகம் வந்ததும் மடித்து டேப் போட்டு ஒட்டி கொள்ளுங்கள்.

4. இது போல் நிறைய செய்து கல்யாண வீட்டில் எல்லோருக்கும் ஒவ்வொரு கோன் கொடுக்கலாம்.


5. பியுட்டி பார்லர் வைத்து இருப்பவர்களுக்கும் இது போல் செய்வது சுலபம்.

6. நாமும் நிறைய தயாரித்து பிரீஜரில் போட்டு வைத்து கொள்ளலாம்.தேவைக்கு எடுத்து பயன் படுத்தலாம்.
7.விருந்தினர்கள் வந்தாலும் குழந்தைகளுக்கு போட்டு விடலாம்.





Friday, June 15, 2012

குழந்தைகளின் நகத்தை

1. குழந்தைகளின் நகத்தை உடனே உடனே வெட்டி விட வேண்டும்.
ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், ஷாஃப்ட் நகவெட்டி வைத்து வெட்ட வேண்டும்.
2.குழந்தைகள் குளித்து முடித்ததும் அவர்களின் கையை ஈர படுத்தி லேசாக நாம் கடித்தால் உடனே வந்துவிடும்.நக வெட்டி போட்டால் கையை ஆட்டினால் குத்தி விடும் .


2. நகத்தை வெட்ட வில்லை என்றால் முகம் முழுவதும் கீறிக்கொண்டு ஒரே வீல் வீல் என்று அழுவார்கள்.
உங்களுக்கும் பார்த்தால் ஒன்றும் புரியாது எதற்காக அழுகிறார்கள் என்பது, எங்கே கீறியதும் என்றும் உங்களுக்கு தெரியாது.

Wednesday, June 6, 2012

குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து


ஆறு மாதத்திலிருந்து எல்லா உணவும் கொஞ்ச கொஞ்சமாக பழக்க படுத்தலாம். நல்ல மசித்து முன்று ஸ்பூன் அளவில் கொடுத்தால் போதும்.

ஆறு மாதம் முதல் லேசான காரம், புளிப்பு,இனிப்பு எல்லா சுவையையும் கொடுத்து பழக்க படுத்தனும்.

மில்க் பிக்கிஸ் பிஸ்கேட், மேரி பிஸ்கேட் கூட ஒன்று வெண்ணீரில் ஊறவைத்து ஊட்டி விடலாம்.

சாதம் நல்ல குழைய வேகவைத்து அதில் கீரை வெந்த தண்ணீர் சேர்த்து ஒரு சொட்டு நெய் உருக்கி சேர்த்து ஊட்டி விடவும்.

பிறகு பருப்பு வேகவைத்து அதையும் சேர்த்து சாததில் கலந்து நன்கு மசித்து கொடுக்கலாம்.
பருப்பு சிருபருப்பு சேர்த்து கொண்டால் நல்ல வெந்து விடும் ஈசியாக ஜீரணம் ஆகும்.

கிழங்கு வகைகளை வேகவைத்தும் ஊட்டி விடலாம்.


ஆப்பிலை வேக வைத்து தோல் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் அரைத்து ஊட்டி விடலாம்.

கிச்சிடி போல் அரிசியுடன் கேரட், உருளை, எலும்பில்லாத சிக்கன் சிறிது சேர்த்து பூண்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து வேகவைத்து மசித்து அல்லது மிக்சியில் கூழ் போல் அரைக்காமல் முக்கால் பதம் அரைத்து ஒரு விரலால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடவும்.

(தொடரும்)

Sunday, June 3, 2012

வரனும் ஆனா எப்ப வருவேன்னு தெரியல





பதிவுலக தோழ தோழியர்களே எல்லாரும் நலமா? என்ன கொஞ்சம் நாளா ஜலீலாக்காவ காணுமே தேடினீங்களா? என்ன செய்வது தீடீருன்னு உடல் நலம் சரியில்லாம போய்விட்டது. இவ்வளவு நாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வந்தேன். இப்ப பரவாயில்லை. ஒன்னும் இல்ல சாதாரான இருமல் தான் சீரியஸ் ஆகிவிட்டது. இனி தான் உடல் நலம் தேறிவரனும். கை துரு துன்னுவருது ஆனா டைப் பண்ண முடியல, சீக்கிரம் வரனும் ஆனால் எப்ப நல்ல ஆகிவருவேன்னு தெரியாது.. எனக்காக துஆ செய்யுங்கள்.

என்னை கவனித்து கொண்டு ஆதரவு கொடுத்த என் கணவர், என் பிள்ளைகள், இரு தோழிகள் ஹபஷியா குடும்பத்தினர் மற்றும் சல்மா வுக்கும் மிக்க நன்றி என் அதிக துஆக்களும் நீங்களும் அவர்களுக்கு துஆ செய்யுங்கள்.


ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து பார்த்து பயனடைகிறீர்கள், ஏன் ஒரு கமெண்ட் போட கூட மனமில்லையா? ஒரு பதில் போட்டால் எனக்கும் சந்தோஷமாக இருக்கும் இல்லையா? சில பழைய பயனுள்ள பதிவுகள் நிறைய  யாரும் படிக்காதது நிறைய இருக்கு . ஏற்கனவே இருப்பதை போன மாதமே  ரீபோஸ்ட் கொடுத்து வைத்துள்ளேன். அனைவரும் பயனடைந்து கொள்ளுங்கள்.



டிஸ்கி: சென்னை ப்ளாசா பக்கமும் வாங்க. அப்டேட் டிசைன்ஸ் வரும் யாருகும் ஆர்டர் தேவை என்றால் மெயில் பண்ணுங்கள். இதன் முலம் நிறைய தோழிகள் புர்கா விபரம் கேட்டு இருக்கிறார்கள் சிலர் ஆர்டரும் கொடுத்து இருக்கின்றனர். ரொம்ப சந்தோஷம்.