Tuesday, December 24, 2013

பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை - Chicken Fry With Basan Flour

பஜ்ஜி மாவு சிக்கன் ஃப்ரை

சிக்கன் – அரை கிலோ
மிளகாய் தூள் – ஒரு மேசை கரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரண்டு தேக்கரண்டி
கடலை மாவு – முன்று மேசை கரண்டி (அ) ஒரு குழி கரண்டி
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள்  - அரை தேக்கரண்டி
ரெட் கலர் பொடி – இரண்டு சிட்டிக்கை.
தயிர்  - ஒரு தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – ஒரு மேசைகரண்டி


எண்ணை பொரிக்க தேவையான அளவு



செய்முறை
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் லெமன் சாறு பிழிந்து மீண்டும் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மசாலாவகைகளை  சேர்த்து நன்கு பிறட்டி – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு வாயகன்ற வானலியில் எண்ணையை ஊற்றீ காயவைத்து முன்று முன்று துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.

கவனிக்க:
சிக்கனில் மசாலாக்கள் நன்கு ஊறினால் தான் சிக்கனும் சீக்கிறம் வேகும், தீயின் தனலை மிதமாக வைத்து வேக விடவும்.

முதலில் எண்ணை சூடானதும் மிகச்சிறிய தனலில் வைத்து 5 நிமிடம் மூடி போட்டு பொரிய விட்டு பிறகு தீயின் தனலை மீடியமாக வைத்து நன்கு பொரியவிட்டு எடுக்கவும்.







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, December 18, 2013

சுக்கு பால் (கர்பிணி பெண்கள் சுகப்பிரசவத்துக்கு)


    கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் சுகப்பிரசவம் ஆக ஒன்பதாவது மாதம் பத்து நாட்களுக்கு பிறகு ஐம்பது கிராம் சுக்கை பொடித்து மூன்றாக பிரித்து ஐந்து நாளைக்கு ஒரு முறை இந்த பாலை காய்ச்சி குடிக்கவும். வயிற்றில் உள்ள வேண்டாத கேஸ் எல்லாம் வெளியாகிவிடும். ஒன்பதாம் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (மூன்று தடவை)தலைக்கு குளித்து விட்டு இதை காய்ச்சி குடித்தால் நல்லது.  தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள வாயு அகன்று சுகப்பிரசம் உண்டாகும்.



  • தேவையானவை
    சுக்கு - ஐம்பது கிராம்
    முழு பூண்டு - ஒன்று
    தேங்காய் - அரை மூடி
    பசும் பால் - ஒரு டம்ளர்
    இஞ்சி - ஐம்பது கிராம்
    தேன் - ஒரு மேசைக்கரண்டி
     நல்லெண்ணெய் - கால் டம்ளர்
      பனை வெல்லம் - முக்கால் டம்ளர்

  • செய்முறை 
சுக்கை நல்ல காயவைத்து தட்டி மிக்ஸியில் பொடித்து மூன்றில் ஒரு பங்கு எடுத்தால் போதும். மீதியை அடுத்த இரு முறை காய்ச்ச வைத்து கொள்ளவும்.
 பனை வெல்லத்தை இளக்கி வடிக்கட்டி வைக்கவும்.
 பூண்டை உரித்து வேக வைத்து மிக்ஸியில் அரைத்து  வைக்கவும்.
 தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
 இஞ்சி சாறு எடுத்துக்கொள்ளவும்.
 எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி சட்டியை காயவைத்து நல்லெண்ணெயை ஊற்றி கலக்கியதையும் சேர்த்து நல்ல கிளறி கிளறி கொதிக்க விடவும்.
 பத்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியில் தேன் கலந்து இறக்கி குடிக்கவும். சளி ஜலதோஷத்திற்கும் நல்லது.


இதில் கொடுத்துள்ள அளவுகளில் சுக்கை மற்றும் முன்று பாகமாக பிரித்து கொள்ளவும்.


இந்த அனைத்து பொருட்களும் கிடைக்காதவர்கள்

//வெரும் ரெடிமேட் ,சுக்கு பவுடரில் தேங்காய் பவுடர் சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்/


ஒரு டம்ளர் தண்ணீர்
ஒரு தேக்கரண்டி தேங்காய் பவுடர்
ஒரு தேக்கரண்டி சர்க்கரை

முன்றையும் ஒன்றாக கலந்து கொதிக்கவைத்து கர்பிணி பெண்கள் 9 மாதத்துக்கு பிறகு தினம் ஒரு டம்ளர் குடித்து வரலாம்.







இந்த குறிப்பு காயல்பட்டிணத்தில் இருந்து ஜாஸ்மீன் உடனே போடும் படி கேட்டதால் அவர்களுக்காக போட்டுள்ளேன்.


 கர்பிணி பெண்களுக்கு, சுகப்பிரசவத்துக்கு - பாரம்பரிய சமையல் வகை.

Friday, December 13, 2013

கிங் ஃபிஷ் 65 & Prawn 65 - King Fish 65 & Prawn 65

கிங் ஃபிஷ் 65

 King Fish 65 & Prawn 65


சிம்பிள் அன்ட் ஈசி

தேவையான பொருட்கள்
கிங் பிஷ்  ‍ அரை கிலோ
பூண்டு பேஸ்ட் ‍ ஓன்னறை தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் ‍ ஒரு மேசை கரண்டி
லெமன் ஜூஸ் ஒரு மேசை கரண்டி
கார்ன் ப்ளார் பவுடர் ஒரு மேசைகரண்டி
உப்பு
எண்ணை பொரிக்க தேவையான அளவு





செய்முறை

கிங் ஃபிஷ் ஐ நன்கு சுத்தம் செய்து அழுக்குகளை களைந்து அதில் சிறிது வினிகர் அல்லது மஞ்சள் தூள் சேர்த்து  நன்கு கழுவவும்.
பிறகு மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை ஒரு சிறிய கிண்ணத்தில் நன்கு கலக்கி மீனில் நன்றாக தடவவும்.

சிறிது நேரம் ஊறவைத்து ஒரு பானில் எண்ணை ஊற்றி சூடானதும் தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.

பிளெயின் ரைஸ்,சப்பாத்தி ரொட்டி , வெரைட்டி ரைஸ் போன்றவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ்.

இதில் இதே மசாலா சேர்த்து  இறாலிலும் செய்துள்ளேன்.

டிப்ஸ்: மீனை பொரித்ததும் அந்த எண்ணையை சால்னாவில் வில் ஊற்றினால் ருசி அதிகமாக இருக்கும். அப்ப எண்ணை அதிகமாகி விடாதா என்று கேட்பீர்கள், தாளிக்கும் போது கொஞ்சமாக எண்ணை விட்டு தாளிக்கனும். எண்ணை கரிந்து இருந்தால் தெளிவாக கருகாமல் இருக்கும் எண்ணையை மட்டும் ஊற்றனும்.

மீன் பொரித்ததும் எண்ணையை வடிய விட கொஞ்சம் சாதம் ப்ளேட்டில் வைத்து அதில் வடிய விடலாம், சூடாக பொரித்து ம்மீனை வைக்கும் போது சில நேரம் டிஸு பேப்பர் மீனில் ஒட்டி கொள்ளும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, December 11, 2013

ஓட்ஸ் சாக்லேட் பாதம் பிஸ்கேட் - Oats chocolate Badam Biscuit




ஓட்ஸ் சாக்லேட் பாதம் பிஸ்கேட்
தேவையானவை
ஓட்ஸ் – 50 கிராம்
மைதா – 50 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
சாக்லேட் பவுடர் – 25 கிராம்
பாதம் ஒன்றும் பாதியுமாக பொடித்த்து – 25 கிராம்
உருக்கிய பட்டர் – 50 கிராம்
சாக்லேட் எசன்ஸ் – 2 துளி
உப்பு – 1 சிட்டிக்கை

செய்முறை

ஒரு வாயகன்ற கிண்ணத்தில் சர்க்கரை + பட்டரை கீரிம் போல கலக்கி கொள்ளவும். ஓட்ஸ், மைதா, சாக்லேட் பவுடரை சலித்து கொள்ளவும்,
ஓட்ஸ் மைதா கலவையுடன் பொடித்த பாத்த்த்தை சேர்த்து சர்க்கரை + பட்டரையும் சேர்த்து சாப்பாத்தி மாவு போல் குழைக்கவும்.
குழைத்த மாவை தடிமனான சப்பாத்தியாக இட்டு வேண்டிய வடிவில் வெட்டவும்.ஓவனை 200 டிகிரி சூடு படுத்தி 10 நிமிடம் பேக் செய்யவும்.

பிஸ்கேட் செய்து முடித்த்தும் பிஸ்கட் வாசனையும், ருசியும் அதிகமாக இருந்த்தால் தட்டு காலி ஆகையால் சரியாக போட்டோகள்  எடுக்க முடியவில்லை.
இது போன வருடம் செய்தது.


சுவையான ஓட்ஸ் பாதம் பிஸ்கேட் ரெடி.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Saturday, December 7, 2013

சங்கரா மீன் டிக்கா ஃப்ரை - Red Snapper Tikka Fry






மீன் வகைகளிலேயே எனக்கு ரொம்ப பிடித்த மீன் இந்த சங்கரா மீன், ஆனால் முள் பார்த்து சாப்பிடனும்.பள்ளி நாட்களில் லன்ச் பாக்ஸ்க்கு காலை டிபனே தான் பெரும்பாலும் கொண்டு செல்வோம். ஆனால் மாலை வரும் போது என் அம்மா வாரம் ஒரு முறை எனக்கு பிடித்த இந்த சங்கரா மீனை வாங்கி சுட சுட பொரித்து கொடுத்து , அந்த சால்னாவாவும் பொரிச்ச மீனும் வைத்து மாலை வந்து சாப்பிட ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா அப்படி இருக்கும். நான் கொஞ்சம் காரம் எல்லாம் குறைவாக தான் செய்வேன். ஆனால் எங்கம்மா சும்மா சுல்லுன்னு காரம் சாரமாக , உப்பு உரப்பா, புளிப்பு சுவை நாவில் ஸ்ஸ்ஸ் அப்படி தட்டும் அப்படி செய்வார்கள். ஏன்ன்னா இப்படி செய்தால் தான் எங்க டாடிக்கு பிடிக்கும்.எங்க டாடி இத சாப்பிட்டு முடித்ததும் வேர்கடலை உருண்டை சாப்பிடுவது வழக்கம். நாங்களும் சாப்பிடுவோம் ,இன்னும் இப்ப கூட எனக்கு மீன் சாப்பிட்டால் கண்டிப்பாக வேர்கடலை பர்பியோ அல்லது உருண்டையோ சாப்பிடும் பழக்கம் எனக்கும் உண்டு.

தேவையானவை

சங்கரா மீன் ‍ அரை கிலோ
சிவப்பு மிளகாய் தூள் ‍ 1 தேக்கரண்டி
ஷான் சிக்கன் டிக்கா மசாலா ‍ ஒரு மேசை கரண்டி
லெமன் சாறு  ‍ ‍ஒரு தேக்கரண்டி
தயிர் ‍ ஒரு தேக்கரண்டி
கார்ன் ப்ளார் பவுடர் ‍ ஒரு தேக்கரண்டி
உப்பு ‍ தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழை சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ ஓன்னறை தேக்கரண்டி

அலங்கரிக்க‌
கொத்துமல்லி தழை

செய்முறை
சங்கரா மீனை கழுவி தலையை ஆய்ந்து எடுக்காமல் வயிற்று பகுதியில் உள்ள அழுக்கை மட்டும் கத்தி கொண்டு கீறி எடுக்கவும்.

சைடில் உள்ள முள், மேலே உள்ள சராம்பல் எல்லாம் கத்திரி கொண்டு வெட்டி எடுக்கவும்.

சைடில் நன்கு ஆழமாக இருபுறமும் கீறி விடவும்.அப்போது தான் மசாலா உள்ளே வரை செல்லும்.



சங்காரா மீன் டிக்கா ஃப்ரை - Red Snapper Tikka Fry

மீனை மஞ்சள் தூள் போட்டு நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி எடுக்கவும்.

மீனுக்கு போட வேண்டிய மசாலாக்களை ஒரு சின்ன கிண்ணத்தில் சிறிது தண்ணீர்விட்டு கலக்கி வைக்கவும்.

மீனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து.  
கலக்கிய மசாலாவை மீனுடன் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி மீனை போட்டு அதன் மேல் ஒரு முடியை போட்டு மூடி நன்கு குலுக்கவும். மசாலா மீனின் எல்லா பகுதியிலும் ஒரு சேர சேர்ந்து இருக்கும். மசாலாக்கள் போட்டு பிரட்டியதும் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

நான் ஸ்டிக் பேனில் எண்ணையை ஊற்றி சூடு படுத்தி மீனை போட்டு நன்கு பொன்னிறமாக கருகாமல் பொரியவிடவும்.
சூப்பரான சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி,

சைட் டிஸ்ஸாகவும் சாப்பிடலாம். ஸ்டாட்டராகவும் சாப்பிடலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, December 3, 2013

ஹைதராபாத் சிக்கன் 65 -Hyderabad Chicken 65






ஹோட்டல்களில் பெரும்பாலும் அசைவத்தில்அனைவரும் விரும்பி முதலில் ஸ்டார்டர் க்கு ஆர்டர் செய்வது சிக்கன் 65 அல்லது சிக்கன் லாலிபாப். அதை ஏற்கனவே நான் என் ரெசிபி இதற்கு முன் போஸ்ட் செய்துள்ளேன். இது ஹைதாரா பாத் சிக்கன் 65, சுவையோ மிக அருமை.

ஏற்கனவே நான் போட்டுள்ள சிக்கன் 65 குறிப்பை இங்கு காணலாம்
 Chicken 65
 இது மற்றொரு வகை ஹைதராபாத் ஸ்பெஷல் சிக்கன் 65
ஹைதராபாத் சிக்கன் 65
Hyderabad Chicken - 65

சிக்கன் – 900 கிராம்
மிளகாய் தூள் – 1 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைகரண்டி
முட்டை – 1
கார்ன்  மாவு + மைதா – தலா ஒரு மேசைகரண்டி
கரம் மசலா பொடி – கால் தேக்கரண்டி
எண்ணை பொரிக்க தேவையான அளவு

தாளிக்க

எண்ணை – 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது  - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை
பச்ச மிளகாய் – இரண்டு
தயிர் – இரண்டு மேசை கரண்டி
கலர் பொடி  - சிறிது
கொத்துமல்லி தழை சிறிது

செய்முறை

சிக்கனை எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கழுவி தண்ணீரை முற்றிலும் வடிக்கவும். அதில் மிளகாய் தூள், உப்பு தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, கார்ன் மாவு+ மைதா மாவு , முட்டை சேர்த்து நன்கு பிரட்டி ஒரு மணி நேரம்  ஊறவைக்கவும்.

ஊறிய சிக்கனை ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை காயவைத்து ஊறிய சிக்கனை முக்கால் பத்த்துக்கு பொரித்து எடுக்கவும்.

பொரித்த சிக்கனை எண்ணையை வடித்துவைக்கவும்.
Menu
Bahara Khan
Mutton Potato Salna
Plain Dhall
Veg Dalcha
Hyderabad Chicken 65

மற்றொரு வாயகன்ற வானலியில் என்ணையை ஊற்றி காய்ந்த்தும் இஞ்சி பூண்டு, கருவேப்பிலை, பச்சமிளகாய், தயிர், கலர் பொடி சேர்த்து நன்கு கிளறி பிற்கு பொரித்த சிக்கனை இதில் சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
(Hyderabad Chicken - 65) ஹைதராபாத் சிக்கன் 65 ரெடி.
How to Make Hyderabad Chicken 65
Step by Step













சிக்கன் 65 என பெயர் வர காரணம் , ஹோட்டல்களில் மெனு கார்ட் வரிசையில் இந்த சிக்கன் ஃப்ரைக்கு 65 வது இடம்.அது எல்லோருக்கும் பிடித்து போகவே இந்த   சிக்கன் 65 பிரபலமாகி  உள்ளது. இதை பல வகைகளை செய்யலாம்.




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Sunday, December 1, 2013

EXPO 2020 & 42nd U.A.E National Day Celebration







EXPO 2020 & 42nd U.A.E National Day Celebration 02.12.2013

 அமீரகத்தில் நேஷனல் டே கொண்ட்டாட்டமும் EXPO2020 துபாய் வெற்றி பெற்ற கொண்டாட்டமும் கோலாகலமாக பல வித விதமான
வான வேடிக்கைகளுடன் கொண்டடப்படுகிறது .

நாங்க எங்கும் வெளியில் செல்வதிலை. சரியான டிராபிக்கில் மாட்டி கொள்ளனும், ஆகையால் பொறுமையாக இங்கு டீவியிலேயே கொஞ்சநேரம் பார்த்து கொள்வோம்.

ஓவ்வொரு வருடம் National Day யின் போது என் கணவரில் ஆபிஸில் அழகிய பரிசு பொருட்கள் நல்ல பாக்கிங் உடன் வரும்.  உயர்ந்த ரக சாக்லேட் வித விதமான பொருட்கள் போன வருடம் தஸ்பி ,UAE வண்ண கொடியி, தஸ்பி, மொபைல் வைக்கும் சின்ன உல்லன் பை மற்றும் பணம் வைக்கும் சுருக்கு பை
2012







2013

இந்த வருடம் UAE வண்ண கொடி கலர்ல் செய்த அழகான பூ கூடை மற்றும் பேனா , சாக்லேட் மற்றும் இந்த குளிருக்கு இதமான ஒரு மஃப்ளர்.
இவ்வள்வு செலவு செய்து அனைவருக்கும் கொடுக்கிறார்களே என்று கேட்ட போது என் கணவர் சொன்னார் இது கைத்தொழில் செய்து பிழைக்கும் ஏழை அரபிகளுக்கு இவர்கள் செய்யும் உபகாரம் என்றார்.

 இந்த சம‌யத்தில் அவர்களிடம் வாங்கினால் அவர்களுக்கு நல்ல வியாபாரம் ஆகும் இல்லையா? அதற்காக தான் என்றார். இது நல்ல விஷியம் தானே



 Sharjah Airport

அதே போல் இங்கு எல்லா மால் களிலும் யு ஏ யி வண்ண கொடி கலரில் குடை , டீ ஷர்ட் , தலை குத்து கிளிப்புகள், பூக்கள்,சின்ன குழந்தைகளுக்கு அடுக்கு அடுக்கு கவுன் மற்றும் வாசலில் கட்டும் தோரணங்கள் எல்லாம் விற்க படுகின்றன. மக்களும் சந்தோஷமாக வாங்கி செல்கின்றனர்.





EXPO 2020 - Abdul Kader முக நூலில் பகிர்ந்தது


துபாய் என்ற ஒரு நகரம் இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலத்தில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடித்தட்டு மட்டும் நடுத்தர மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக் குறியாகியிருந்திருக்கும்.

பல மலையாளிகளும் தமிழர்களும் துபாயின் திர்ஹம்ஸை ஊதியமாகப் பெற்று. குடிசை வீடுகளை மாடி வீடுகளாக மாற்றி இருக்கின்றனர். தாயின், தந்தையின் கனவுகளை நிறைவேற்றி இருக்கின்றனர். வறுமையிலிருந்த எத்தனையோ சகோதரர்கள் தங்களின் சகோதரிகளுக்கு மணமுடித்து வைத்திருக்கின்றனர்.

அமீரகம் ஆன்மீகத்தோடு நெருங்கிய தொடர்புடைய நேர்மறை அதிர்வுகள் கொண்ட பூமி...! இங்கே உழைத்து பெறும் ஒவ்வொரு திர்ஹமும் பரக்கத்தானது. சிறு ஊதியம் பெற்றாலும் அவனால் எல்லாவற்றையும் ஓரளவிற்கு அவன் சொந்த ஊரில் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது.

உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வந்து குடியமர்ந்திருக்கும் அத்தனை மக்களையும் மரியாதையுடனும், அன்புடனும் பாரபட்சமின்றி நடத்தும் அமீரகத்தின் அன்பு மிகக் கம்பீரமானது! பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முன்னுரிமையை, மரியாதையை இந்த உலகத்தின் இன்ன பிற நாடுகள் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்....!

இதோ கடந்த சிலமாதங்களாக ஒட்டு மொத்த அமீரகத்தின் அத்தனை குடிமக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த எக்ஸ்போ 2020ல் துபாய் வென்றிருக்கிறது. அறிவால் இணைவோம் புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம் (Connecting minds creating the future) என்ற கருத்தாக்கத்தோடு களத்தில் நின்ற துபாயின் வெற்றி திடமான தொலை நோக்குப் பார்வை கொண்ட தெளிவான தலைமைத்துவத்தின் வெற்றி!

ஏற்கெனவே அசுரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் துபாய் இன்னும் வேகமாக இயங்கப் போகிறது. அந்த பிரம்மாண்ட உழைப்பு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளால் பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வளம் பெறப் போகிறது என்பது உறுதி....!

@
தேவா சுப்பையா


 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/