நான் இங்கு ஏகப்பட்ட டிப்ஸ்களை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
யார்வீட்டுக்கு போனாலும் என்னை விட சின்னவர்களாக இருந்தாலும் அவர்கள் சொல்லும் டிப்ஸை மிகவும் விரும்பி கேட்டு கொள்வது.
அப்படி கேட்டதில் சில டிப்ஸ்கள் உங்களுக்காக ..
ஜுபைதா - துபாய்
1. பிரியாணிக்கு சாதம் வடிக்கும் போது சிலருக்கு பதமாக முக்கால் பதத்தில் வடிக்க வராது. அதற்கு ரைஸ் குக்கரில் ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் வைத்து சமைத்து பிரியாணி கறி தாளித்து விட்டு இந்த சாதம் சேர்த்து தம்மில் விட்டால் பிரியாணி ஒன்னு ஒன்னாக உதிரியாக நீட்டு நீட்டாவரும்.
இது தண்ணீர் கொதிக்க வைத்து வடித்து தம் போட தெரியாதவர்களுக்கு உதவும்.
அஜ்ஜா - சென்னை
2. தொடர் இருமல் , தொண்டை வலிக்கு வடித்த சுடு கஞ்சியில் சிறிது மிளகு தூள் சேர்த்து குடித்தால் தொண்டை இதம் பெறும்.
சித்திக்கா - அஜ்மான் , யு. ஏ.யி.
3. புறை யேறி புறையேறி இருமல் வருவதற்கு எல்லோரும் கிராம்பை வாயில் அடக்கி கொள்வார்கள், அது கரைந்து இன்னும் தொண்டைக்குள் போய் ரொம்ப பாடுபடுத்தும், அதுவும் நாளெல்லாம் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஒன்றும் தெரியாது, பகலில் இருமல் இருந்தால் அந்த அளவுக்கு உங்களுக்கு சிரமமாக இருக்காது. இரவு தூங்க போகும் போது தான் அதிக இருமல் வரும். அதற்கு
முன்று மிளகு கிஸ்மிஸ் பழம் 7 சேர்த்து வாயில் வைத்து மிட்டாய் போல் ரொம்ப நேரம் வைத்திருந்து சுவைத்து வாயில் அடக்கி கொண்டு படுத்தாலும் அதன் சாறை முழுங்கினாலும் நிம்மதியாக தூங்கலாம்.
இது ஏற்கனவே இவங்க டிப்ஸும் என் டிப்ஸும் சேர்த்து தொண்டை கரகரப்புன்னு என்று பதிவாக போட்டுள்ளேன்.
தளிகா - அபுதாபி (அறுசுவை தோழி)
4.மீன் பொரிக்கும் போது சில நேரம் பொரிக்கும் தவ்வாவில் போய் ஓட்டி கொள்ளும். அதற்கு கருவேப்பிலையை நீளமான ஆர்க்கோடு எண்ணையில் வைத்து விட்டு அதன் மேல் மசாலா தடவிய மீனை வைத்து பொரித்தால் ஒட்டவும் செய்யாது, மணமும் அபாரமாக இருக்கும்.
இது என்னுடைய டிப்ஸ்
நான் கருவேப்பிலையை பொடியாக அரிந்தே சேர்த்து மசலாவுடன் பிரட்டி கொள்வது, மணம் அருமையாக இருக்கும்.
மவுலானா - துபாய்
மீனுக்கு மசாலா போடும் போது அதில் எண்ணை சிறிது கலந்து தடவி பொரித்தால் கூட பேனில் ஒட்டாது
(பார்பிகியு செய்யும் போது மீனில் மசாலாவுடன் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து தான் பிரட்டி வைப்போம்.)
இது என் மாமியார் சொன்னது.
குழந்தைகளுக்கு தொடர் பேதி மற்றும் அதனால் சோர்வடைந்து தெம்பில்லாமல் இருந்தால்
உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் அதிகமாக கொடுக்கனும். ஆனால் குழந்தைகள் அதை விரும்ப மாட்டார்கள். அதற்கு டேங்க் லெமன் அல்லது ஆரஞ்ச் ஒரு டம்ளர் கரைத்து அதில் குளுக்கோஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கொடுக்கலாம்.8 மாத குழந்தைகள் முதல் கொண்டு இதை கொடுக்கலாம். பாட்டிலில் ஊற்றியும் கொடுக்கலாம்.
எலலா வயதினரும் இப்படி குடிக்கலாம்.
எப்போதும் நான் கொஞ்சம் கார்ன் மாவு சேர்த்து பொரிப்பேன் ஒட்டாது, முட்டை சேர்த்து பொரித்தாலும் ஒட்டாமல் வரும்
மீனை ஒட்டாமல் பொரிக்க உங்கள் யாருக்கும் ஏதும் ஐடியா இருந்தால் சொல்லலாம்
USEFUL KITCHEN TIPS
Tweet | ||||||