Wednesday, December 18, 2013

சுக்கு பால் (கர்பிணி பெண்கள் சுகப்பிரசவத்துக்கு)


    கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் சுகப்பிரசவம் ஆக ஒன்பதாவது மாதம் பத்து நாட்களுக்கு பிறகு ஐம்பது கிராம் சுக்கை பொடித்து மூன்றாக பிரித்து ஐந்து நாளைக்கு ஒரு முறை இந்த பாலை காய்ச்சி குடிக்கவும். வயிற்றில் உள்ள வேண்டாத கேஸ் எல்லாம் வெளியாகிவிடும். ஒன்பதாம் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (மூன்று தடவை)தலைக்கு குளித்து விட்டு இதை காய்ச்சி குடித்தால் நல்லது.  தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள வாயு அகன்று சுகப்பிரசம் உண்டாகும்.



  • தேவையானவை
    சுக்கு - ஐம்பது கிராம்
    முழு பூண்டு - ஒன்று
    தேங்காய் - அரை மூடி
    பசும் பால் - ஒரு டம்ளர்
    இஞ்சி - ஐம்பது கிராம்
    தேன் - ஒரு மேசைக்கரண்டி
     நல்லெண்ணெய் - கால் டம்ளர்
      பனை வெல்லம் - முக்கால் டம்ளர்

  • செய்முறை 
சுக்கை நல்ல காயவைத்து தட்டி மிக்ஸியில் பொடித்து மூன்றில் ஒரு பங்கு எடுத்தால் போதும். மீதியை அடுத்த இரு முறை காய்ச்ச வைத்து கொள்ளவும்.
 பனை வெல்லத்தை இளக்கி வடிக்கட்டி வைக்கவும்.
 பூண்டை உரித்து வேக வைத்து மிக்ஸியில் அரைத்து  வைக்கவும்.
 தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
 இஞ்சி சாறு எடுத்துக்கொள்ளவும்.
 எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி சட்டியை காயவைத்து நல்லெண்ணெயை ஊற்றி கலக்கியதையும் சேர்த்து நல்ல கிளறி கிளறி கொதிக்க விடவும்.
 பத்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியில் தேன் கலந்து இறக்கி குடிக்கவும். சளி ஜலதோஷத்திற்கும் நல்லது.


இதில் கொடுத்துள்ள அளவுகளில் சுக்கை மற்றும் முன்று பாகமாக பிரித்து கொள்ளவும்.


இந்த அனைத்து பொருட்களும் கிடைக்காதவர்கள்

//வெரும் ரெடிமேட் ,சுக்கு பவுடரில் தேங்காய் பவுடர் சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்/


ஒரு டம்ளர் தண்ணீர்
ஒரு தேக்கரண்டி தேங்காய் பவுடர்
ஒரு தேக்கரண்டி சர்க்கரை

முன்றையும் ஒன்றாக கலந்து கொதிக்கவைத்து கர்பிணி பெண்கள் 9 மாதத்துக்கு பிறகு தினம் ஒரு டம்ளர் குடித்து வரலாம்.







இந்த குறிப்பு காயல்பட்டிணத்தில் இருந்து ஜாஸ்மீன் உடனே போடும் படி கேட்டதால் அவர்களுக்காக போட்டுள்ளேன்.


 கர்பிணி பெண்களுக்கு, சுகப்பிரசவத்துக்கு - பாரம்பரிய சமையல் வகை.

18 கருத்துகள்:

துளசி கோபால் said...

சுக்கு காஃபி எனக்கு ரொம்பப் பிடிக்கும்ப்பா.

ஆமாம்.... உங்க குறிப்பில் சுக்கும் இருக்கு இஞ்சியும் இருக்கே!

சமீபத்தில் சென்னையில் சுக்குக் காஃபிப்பொடி கடையில் விற்பதைப் பார்த்தேன். சுவை அருமை!

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்ற் துளசி கோபால்

இந்த குறிப்பு சாதாராண சுக்கு காப்பி உரிய அளவு இல்லை\\
இது கால காலமாக தொன்று தொட்டு இஸ்லாமிய இல்லங்களில் கர்பிணி பெண்களுக்கு என்று குழந்தை பிரசவிக்கும் நேரம் செய்து கொடுக்கும் மருந்து.\

என் பாட்டியின, அம்மா செய்த குறிப்பு இது,,

இந்த குறிப்பில் சுக்கும் , இஞ்சியும் சேர்க்கனும்
சுக்கின் அளவை பார்க்கவும். 50 கிராமில் முன்றி ஒரு பகுதி ஒரு வேலைக்கு செய்ய சொல்லி உள்ளேன்

துளசி கோபால் said...

எங்க வீடுகளில் சோம்பு (பெருஞ்சீரகம்) தண்ணி சேர்த்துக் கொதிக்கவச்சு அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடிக்கத் தருவார்கள்.

ஆனால் இது வலி கண்டபின்தான். பொய்வலின்னா நின்னுருமாம்.

மெய்வலின்னா ஆஸ்பத்திரிக்கோ, இல்லை வீட்டுலேயே வச்சுப் பார்க்கணுமுன்னா பிரசவ மருத்துவ உதவி செய்யும் பெண்ணையோ வரவழைக்க ஆள் போகும்.

எங்க பாட்டி சொன்ன 'கதைகளில்' இதுவும் உண்டு.

Jaleela Kamal said...

பூண்டு பால் மற்றும் சோம்பு , சீரக தண்ணீர் கொதிக்க வைத்து கொடுப்பது வலி எடுத்ததும் கொடுப்போம்.

இது இடுப்பில் உள்ள வாயு அகல 9 வது மாதம் கடைசி முன்று வாரத்துக்கு , வாரம் ஒரு முறை இந்த பாலை காய்ச்சி கொடுப்போம், இதின் இஞ்சி 50 கிராம் என்பது அது ஒரு சிறிய துண்டு தான் வரும் மிக்சியில் ஒரு திருப்பு திருப்பி சாறு எடுத்தால் அதுவும் குறைவாக தான் வரும்..


என் தங்கை இங்கு துபாயில் இருந்த போது அவள் இரண்டு குழந்தைகளுக்கும் நான் தான் பார்த்து கொண்டேன் , இந்த மருந்தைதான் செய்து கொடுத்தேன், இரண்டும் நார்மல் டெலிவரிதான்,,

Jaleela Kamal said...

துளசி கோபால் இதன்கீழ் உங்கள் பாட்டி காலத்து டிப்ஸையும் கொடுத்திருப்பது , இந்த குறிப்பு படிக்கும் கர்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி

துளசி கோபால் said...

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க:-))))
குறிப்பை தனியாக் குறிச்சு வச்சுருக்கேன்.

யாருக்காவது (இனி) பயன்படுமான்னு பார்க்கணும்:-)

தங்கை குழந்தைகளுக்கு எங்கள் அன்பு.

Jaleela Kamal said...

இன்னும் இந்த குறிப்புக்கு கருத்து தெரிவிக்க வருகிறவர்கள் அவரவர் வீட்டு வைத்தியத்தை சொன்னால் , அனைத்து பெண்களுக்கும் உதவியாக இருக்கும் ,

Jaleela Kamal said...

தங்கை குழந்தைகள் வளர்ந்து இப்ப ஒருவருக்கு 12 வயது ஆகிறது மற்றவருக்கு 4 வயதாகிறது, உங்கள் அன்புக்கு , மிக்க நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் உதவும் பயனுள்ள பகிர்வு...

Menaga Sathia said...

தகவலுக்கு நன்றிக்கா..இதை முன்பே பகிர்ந்திர்க்கலாம்..ம்ம்ம் இப்போ காலம் கடந்துவிட்டது எனக்கு..

ஸாதிகா said...

தாயாகப்போகும் பெண்கள் குறித்து வைத்துக்கொள்ளவேண்டிய குறிப்பு.

கோமதி அரசு said...

அருமையான குறிப்பு.
பொய்வலியா நிஜ வலியா தெரிந்து கொள்ள சீரகத்தை வெறும் சட்டியில் நன்றாக கறுப்பாய் வறுத்துக் கொண்டு, அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதனுடன், கருவேப்பிலை காம்பு முருங்கை இலை காம்பை போட்டு கொதிக்க வைத்து கால் கப்பாய் தண்ணீர் குறைந்தவுடன் அதில் வெண்ணெய், பனங்கற்கண்டு போட்டு இள்ஞ்சூடாய் குடிக்க கொடுப்பார்கள் . சூட்டு வலியாக இருந்தால் சரியாகி விடும்.
நிஜ வலி என்றால் நிற்காமல் வலி எடுக்கும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விடுவார்கள்.

ADHI VENKAT said...

பயனுள்ள குறிப்பு...

Laxmipriya said...

payanulla kuripu... :)

Asiya Omar said...

இந்தக் குறிப்பு இப்பத்தான் கேள்விப்படுறேன்.பயனுள்ள குறிப்பு.

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு அக்கா...
சுக்குமல்லிக் காபி எனக்கு ரொம்ப பிடிக்கும்...

சாரதா சமையல் said...

தாயாக போகும் பெண்களுக்கு நல்ல பயனுள்ள குறிப்பு.

வெங்கட் நாகராஜ் said...

ராஜம் சுக்கு காபி அவ்வப்போது குடிப்பதுண்டு - சென்னையிலிருந்து வாங்கி வந்தது! :)

இப்போதெல்லாம் தில்லியில் கூட கிடைக்கிறது.

உங்கள் பகிர்வு நன்று!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா