சிறப்பு விருந்தினர் பதிவு - அரசர்குளம் ஸ்பெஷல் பாசிபருப்பு ஆணம்.
பாசிப்பருப்பு ஆணம்
இது பத்ரியா
Sirajudeen னுடைய குறிப்பு
பத்திரிக்கையாகட்டும், முகநூலாகட்டும், ஒரு டீக்கடை பெஞ்ச் இல்லாமல் இருக்காது, பலடீக்கடைகளில் தம்பி சிராஜ் வைத்து டீக்கடை ஒரு வித்தியாசமானது
சமையல்,பொது அறிவு, மார்க்க சம்பந்த பட்ட வினாவிடைகள் பல போட்டிகளை நடத்துகிறார்.பல பேர் பரிசுகளும் வாங்கி இருக்கிறார்கள்.
அதில் நபி மொழி ஸஹீஹ் புகாரி ஹதீஸ் தமிழ் குர் ஆன் டாட் காமில் இருந்து மாதம் இருமுறை வினா விடைகள் கேட்கப்படும். நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை ஆகையால்
கொஞ்சம் இஸ்லாம் மார்க்க அறிவையும் வளர்த்துகொள்ளலாம் என்று இது ஒன்றில் மட்டும் மாதம் இரண்டு முறை கலந்து கொள்கிறேன்.
8 கேள்விகள் கொடுக்கப்படும். ஆனால் 20 நிமிடத்துக்குள் முடிக்கனும். அதில் ஒரு முறை மட்டும் எனக்கு ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்தது.
சமையல் போட்டியில் முன்றாம் பரிசும் கிடைத்தது , இதிலும் ரூபாய் 100 க்கான புத்தகம் பரிசாக கிடைத்து.
சிராஜ் நான் ஊரில் இருக்கும் போது குடும்பத்துடன் எங்க
சென்னை ப்ளாசா கடைக்கு இரண்டு முறை வந்து புர்கா எடுத்து சென்றார். சிராஜுக்கு ஒரு மகன் , ஒரு மகனார் செம்ம வாலு.
சிராஜ் மனைவி பத்ரியா கடைக்கு வந்த கொஞ்ச நேரம் பழக்கம் தான், அருமையான தங்கை, அவங்க டீக்கடைசமையல் போட்டிக்கு போஸ்ட் பண்ண குறிப்பை தான் நான் இங்கு செய்து பதிந்துள்ளேன்.
அவங்க சொந்த ஊர் அரசர் குளம். பாசிப்பருப்பை அவரவர் ஊர் வழக்கப்படி பல வகைகளில் செய்வார்கள், அதில் இது பத்ரியாவின் ஊரானா அரசர்குளத்து ஸ்பெஷல் பாசிப்பருப்பு ஆணம்.
வடை பஜ்ஜி என்ற வலைதளத்தை எழுதி வரும் சிராஜின் மனைவி பத்ரியாவின் குறிப்பு இது.
ஆணம் என்றால் குழம்பு/சால்னா.
பாசிப்பருப்பு ஆணம்.
எல்லாரும் சுலபமாக செய்து பார்க்கலாம்.
பாசிபருப்பு முட்டை ஆணம்
பாசிப்பருப்பு காய்கறி ஆணம்
பாசி பருப்பு தேங்காய் பால் ஆணம்
எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.
பாசிப்பருப்பு ஆணம்.
தேவையான பொருட்கள் :
1. பாசி பருப்பு - 3 கைப்பிடி அளவு
2. சின்ன வெங்காயம் - 20
3. தக்காளி - 2
4. மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
5. தேங்காய் பால் - முழு தேங்காயின் திக்கு பால் மற்றும் தண்ணி பால் 2 முறை எடுத்துக்கொள்ளவும்.
6. முருங்கைக்காய் - 1
7. கத்தரிகாய் - 2
8. கேரட் - 2
9. இளம் தேங்காய் - 10 கீறல்கள் ( கிடைத்தால் மட்டும் போடலாம் )
10. முட்டை - ஒரு ஆளுக்கு ஒன்னு வீதம்
11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
12. நெய் - தேவையான அளவு ( எண்ணெயும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
13. கடுகு மற்றும் உளுந்து - ஒரு டீ ஸ்பூன்
14. கறிவேப்பிலை - தேவையான அளவு
15. காஞ்ச மிளகாய் - 3
16. சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் - தேவையான அளவு
17. மிளகாய் தூள் - ஒரு டீ ஸ்பூன்
செய்முறை
பாசிபருப்பை லேசாக வறுத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீயாக எடுத்த தேங்காய் பால் சேர்த்து மஞ்சள் பொடி, வெங்காயம் , தக்காளியை சேர்த்து 3 விசில் விட்டு இரக்கவும்.
வெந்ததும் . அதில் மீதி இருக்கும் தண்ணீ தேங்காய் பால், கேரட், முருங்கக்காய், கத்திரிக்காய் ,உப்பு இளம் கீரல் தேங்காய் சேர்த்து குக்கரை முடிபோடாமல் திறந்தே வைத்து வேக விடவும். மூடி போட்டு ஒரு விசில் விட்டால் கத்திரிக்காய், முருங்கக்காய் உடைந்து விடும்.
காய்கள் வெந்ததும் முட்டைகளை உடைத்து முழுசாக அதில் ஊற்றி கிளறாமல் தீயின் தனலை சிம்மில் வைத்து வேக விடவும். முட்டை வெந்ததும் கடைசியாக திக்கான தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.,
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பருப்புடன் சேர்த்து கலக்கி இரக்கவும்.
மிக அருமையான ருசியான பாசிபருப்பு காய்கறிதேங்காய் பால் ஆணம் ரெடி.
வெரும் சாதம் ரொட்டி, பூரிக்குஇந்த சைட் டிஷ் அருமையாக இருக்கும்.
Non vegetarian Thali Menu
Plain Rice
Bindi/Okra/Vendaikaay/Ladies Finger Stir Fry /poriyal
Rasam
Moong Dhal Veg & Coconut Milk Salna
King Fish Fry
கவனிக்க: இது நான் செய்து பார்த்ததில் , நான் ப்ரஷ் தேங்காய் பால் எடுக்கல , தேங்காய் பவுடர் தான் கரைத்து ஊற்றினே, கடைசியாக முட்டையும் ஊற்றவில்லை, , இளம் தேங்காய் கீறியதும் போடவில்லை, இதெல்ல்லாம் போடமலே சட்டி காலியாகிவிட்டது, ஆனால் இதெல்லாம் சேர்த்து இருந்தால் நீங்க திரும்ப திரும்ப நிறைய செய்யவேண்டியதாக இருக்கும்.
நாங்க வெரும் பாசிப்பருப்பு கிச்சிடி, பாசிப்பருப்பில் முட்டையை பொரித்து போட்டு செய்வோம்.ஆனால் இது சற்று வித்தியாசம், இதன் மகிமையே தின் தேங்காய் பாலில் பருப்பை வேகவைத்தது தான் அவ்வளவு ருசி.
அடுத்து அதில் முட்டை சேர்ந்தால் இன்னும் நல்ல இருக்கும்.
இன்னும் தேங்காயை கீறி சேர்த்தால் சாப்பிடும் போது சுவை இன்னும் நல்ல இருக்கும்.
நான் இதில் ஒரு பச்ச மிளகாயை சேர்த்து கொண்டேன். மற்றும் தாளிக்கும் போது இரண்டு பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்து கொண்டேன்.
மொத்ததில் பதிரியா சிராஜின் குறிப்பு சூப்பரோ சூப்பர்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/