Thursday, January 14, 2016

மட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை - Mutter Dal Vadai



.மட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை
மசால்வடை
Mutter dal vadai
மசால் வடை செய்ய கடலை பருப்புக்கு பதில் பட்டாணி பருப்பு பயன் படுத்தினால் சுவை அபாரமாக இருக்கும்.


இந்த குறிப்பு போனவருடம் நோன்புகால சமையல் குங்குமம் தோழியில் வெளியானது.



தேவையான பொருட்கள்

பட்டாணி பருப்பு - ஒரு டம்ளர்
இஞ்சி - இரண்டு அங்குலம் அளவு
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பூண்டு - முன்று பல்
பட்டை - ஒருசிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
சோம்புஅரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை – சிறிது




செய்முறை

1. கடலை பருப்பை ஒரு ணி நேர ஊறவைக்கவும்.

 ஊறியதும் ண்ணீர் முழுவதையும் ஒரு டி ட்டில் வடிக்கவும்.

2. முன்றில் ஒரு பாகம் கடலை பருப்பை எடுத்து   அத்துடன் கிராம்புட்டை,இஞ்சிபூண்டு , சோம்பு   சேர்த்து நன்கு அரைக்கவும்.அப்போது தான் எல்லாம் சாலாவும் ஒன்று சேரும்.

3. இப்போது மீதி உள்ள‌ கடலை பருப்பை மிக்சியில் விப்பரில் இரண்டு முறை திருப்பு திருப்பி எடுக்கவும், மிக்சியை ஓடவிடல் இப்படி திருப்பி டுத்தால் ஒன்றும்   பாதியுமாய் இருக்கும்.

4. அரைத்த மாவில் வெங்காயம் பச்சமிளகாய்கருவேப்பிலை அரிந்து சேர்த்துன்கு பிசைந்து ஐந்து நிமிடம் ஊற‌ வைத்து         தேவைக்கு ஏற்ப பெரிய டைகளாகவோ,சிறிய‌ டைகளாகவோ பொரித்துஎடுக்கவும்.


சர்க்கரை பொங்கல் ரெசிபியை கிழே உள்ள லின்கில் சென்று பார்க்கவும்.




ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ் 

மசால் வடை மொருகலாக வரவேண்டும் என்றால் தண்ணீர் நல்ல வடித்து மாவை முன்று பாகமாக பிரித்து ஒரு பாகம் நல்ல மைய்யாகவும் , ஒரு பாகம் முக்கால் பதமாகவும், ஒரு பாகம் அரை பதமாகவும் அரைத்து கலந்தால் கிரிஸ்பியாக ஹோட்டலில் செய்வதை விட மிக அருமையாக வரும்.


கஞ்சி , பொங்கல்,உப்புமா போன்றவைகளுக்கு ஏற்ற சூப்பரான ஸ்நாக்ஸ் வடை, இதை கடலை பருப்பிலும் செய்யலாம் பட்டாணி பருப்பிலும் செய்யலாம்.இதில் நான் காரம் அவ்வளவாக சேர்க்கவில்லை. காரம் அதிகம் தேவைபடுபவர்கள். பச்சமிளகாய் அல்லது சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுஙக்ள், இதில் சேர்த்துள்ள இஞ்சி பதில்  காஞ்சமிளகாய் ( வரமிளகாயும்) சேர்த்து அரைக்கலாம்.

தமிழ் நாட்டில் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டி, தெருவுக்கு தெரு எந்த முக்கு சந்துக்கு போனாலும் மசால் வடை  கிடைக்கும்.
இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான காம்பினேஷன் இது.

தமிழர் திருநாளான பொங்கலின் போது போகி பண்டிகை அன்று அவர்கள் செய்யும் மெனு


மசால்வடை
பாயாசம்

Tags: Road side Snacks,Festival Recipe, பண்டிகை கால சமையல்

Jaleela Banu, Dubai

http://www.chennaiplazaki.com



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, January 12, 2016

பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை



பாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை
Panch Phoron with Stir Fry Vegetables




தேவையானவை

காய்கறிகள்
காலிப்ளவர்
கோவைக்காய்
புரோக்கோலி
கேரட்
கத்திரிக்காய்
சிவப்பு குடமிளகாய்
எல்லாம் சேர்த்து – அரை கிலோ
உப்பு


தாளிக்க

நல்லெண்ணை – 2 மேசை கரண்டி
பாஞ்ச் பூரன் - (கருஞ்சீரகம், சோம்பு, கடுகு, சீரகம், வெந்தயம்) - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
பச்சமிளகாய் – ஒன்று பொடியாக அரிந்தது






செய்முறை

காய்கறிகளை அரிந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து கருகாமல் தாளித்து காய்களை சேர்த்து நன்கு வதக்கி தீயின் தனலை குறைவாக வைத்து சிம்மில் அனைத்துகாய்களையும் வேகவிட்டு கடைசியாக சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.
கவனிக்க :குஜராத் பெங்காலிகள் சமையலில் இந்த 5 வகை அஞ்சறை பெட்டி பொருட்கள் இல்லாமல் சமையல் கிடையாது. இதை( கருஞ்சீரகம், சோம்பு, கடுகு , சீரகம், வெந்தயம்) சம அளவில் கலந்து வைத்து கொண்டால் காய் வகைகளுக்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

கருஞ்சீரகம் பூரி, ரொட்டி பரோட்டா வகைகளுக்கு நான் அடிக்கடி பயன் படுத்துவேன். எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் இந்த கருஞ்சீரகம், .





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, January 6, 2016

அவகோடா பாதம் சட்னி - Avocado Badam Chutney - Paleo



பேலியோ டயட் பழவகைகள் எதுவும் எடுத்து கொள்ள கூடாது , ஆனால் அவகோடா பழம் சாப்பிடலாம், இதை பால் சேர்த்து மில்க் ஷேக் போல அல்லது தயிர் சேர்த்து ஸ்மூத்தி போல  குடிக்கலாம்.

சாலட் செய்து சாப்பிடலாம். பார்பிகியி , ஃப்ரை வகைகளுக்கு சட்னியாகவும் அரைத்து சாப்பிடலாம்.

அவகோடா தேங்காய் சட்னி – Avocado Coconut Chutney
Avocado Dip for Grill Item



தேவையான பொருட்கள்

அவகோடா பழம்  - 1
தேங்காய் துருவியது – கால் கப்
பச்சமிளகாய்  -1
இஞ்சி – சிறிய துண்டு
கொத்துமல்லி கருவேப்பிலை – அரை கப்
லெமன் சாறு – ஒரு மேசைகரண்டி
பாதாம்  - 15

செய்முறை

கொத்துமல்லி கருவேப்பிலையை மண்ணில்லாமல் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாதாம் பருப்பை வெண்ணீரில் ஊறவைத்து தொலெடுத்து கொள்ளவும்.
அவகோடா பழத்தை கொட்டை மற்றும் தோலை எடுத்து விட்டுசேர்க்கவும்.


மிக்சியில் பாதாம், அவகோடா, கொத்துமல்லி கருவேப்பிலை, உப்பு , பச்சமிளகாய், தேஙகாய் சேர்த்து அரைக்கவும் கடைசியாக லெமன் சாறு கலந்து ஒரு திருப்பு திருப்பி எடுக்கவும்.



கவனிக்க:
இது பேலியோ கட்லெட், வடை,பேன்கேக், சிக்கன், மட்டன், மீன், இறால் போன்ற கிரில் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.

காரம் அதிகம் விரும்புவோர் பச்சமிளகாய் இரண்டாக போட்டு கொள்ளலாம். நான் காரம் அதிகம் எடுக்க மாட்டேன்.
 Paleo Diet Recipes
ஆக்கம்

ஜலீலாகமால்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, January 4, 2016

ஸ்ட்ராபெர்ரி பாதாம் புட்டிங் - Strawberry Badam Agar Agar Pudding

கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .


ஸ்ட்ராபெர்ரி பாதாம் அகர் அகர் புட்டிங்
Strawberry Badam Agar Agar Pudding

தேவையான பொருட்கள்


  • அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம்
  • சர்க்கரை  - 100 கிராம்
  • பால் – 500 மில்லி
  • ஸ்ட்ராபெர்ரி எசனஸ் – தேவைக்கு
  • பொடியாக நறுக்கிய பாதாம்  – தேவைக்கு 


செய்முறை
அகர் அகரை பொடி செய்து சிறிது தண்ணீரில் ஊறவைத்து பால் சேர்த்து நன்கு கட்டியாகும் வரை காய்ச்சவும.சர்க்கரை சேர்க்கவும்.
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸை சேர்த்து ஒரு பெரிய தட்டில் 
காய்ச்சிய அகர் அகரை ஊற்றி  பாதாம் தூவி  ஆறவைத்து குளீரூட்டியில் குளிர வைத்து வேண்டிய வடிவில் கட் செய்யவும்.



இது பேலியோ டயட்டுக்கும் உகந்தது. ஆனால் சர்க்கரை சேர்க்காமல் செய்து சாப்பிடவும்
2016 முதல் போஸ்ட்



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/