- ஆண் பிள்ளைகளுக்கு சமையல் பழக்குவிப்பது மிகவும் நல்லது. இப்போது வெளிநாடுகளில் பிள்ளைகள் படிப்பதற்கோ அல்லது வேலை பார்க்கவோ வெளி நாடுகளில் இல்லை உள்ளூரிலேயே வேறு ஊர்களில் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அவர்களுக்கு சின்ன சின்ன சமையல் தெரிந்து வைத்து கொண்டு சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
2. ஒரு குறிப்புக்கு பின்னூட்டங்கள் எந்த அளவுக்கு அவசியம்? அதைப் படிக்கும் போது எப்படி உணருவீங்க? (நிகிலா)
- குறிப்புகளுக்கு பின்னூட்டம் கண்டிப்பாக தேவை அது பெரிய சந்தோஷம் அடுத்த போஸ்ட் இன்னும் நல்ல போடனும் என்ற ஆர்வத்தை அளிக்கும்.
3. உங்களுக்குப் பிடித்த சைவ சமையலில் விருந்தினருக்கு ஏற்றார்ப் போல சுவையான குறிப்பாக ஒரு ஃபுல் மெனு எங்களுக்காக சொல்ல முடியுமா? (நிகிலா)
- சைவ சமையல் விருந்தினருக்கு ஏற்ற ஃபுல் மெனு பார்டிக்கு செய்ய
ஆனால் நார்மலாக செய்ய அப்படியே பாதி மெனு செய்வேன்.
கிரிஸ்பி காலிப்ளவ்ர் 65
கிரீன் சட்னி
சென்னா புலாவ்
கேரட் ரைத்தா
பனீர் டிக்கா
மஷ்ரும் பீஸ் குருமா
நான் (அ) ரொட்டி
தால்
வெஜ் கட்லெட்
பன் & பாதாம் பீர்னி
கலர்புல் அகர் அகர்
ஃப்ரூட் சாலட் வித் ட்ரை கலர் ஐஸ்கிரீம்
ரசமலாய்
அத்திபழ தக்காளி ஹல்வா
கிரீன் சாலட்
மிக்டு வெஜ்ஜிசாலட்
4. நீங்கள் முதன் முதலில் சமைத்த குறிப்பு எது? அதற்கு முதல் பாராட்டு யாருடையது? (ரேவஸ்)
- முதல் முதலில் சமைத்த ரெசிபி நிறைய இருக்கு... ஆனால் எங்க அப்பா கேட்டு செய்து கொடுத்த ஸ்நாக்ஸ் கிரிஸ்பி பக்கோடா இது ரொம்ப ரொம்ப சொதப்பி கடைசியில் நல்லா செய்து என் தந்தையிடம் பாராட்டை பெற்றபோது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.
திருமணம் ஆனதும் தோசைக்கு தொட்டுக்க செய்த வடகறி என் கணவர் விரும்பி சாப்பிட்டு ஹோட்டலில் சாப்பிடுவதை விட மிக அருமை என்றார்.
5. உங்களுக்கு கஷ்டமான ரெசிபி இன்னும் திரும்ப திரும்ப செய்தாலும் அதன் ஒரிஜினல் சுவை வராமல் இருந்துருக்கா? அது என்ன ரெசிபி? (ரேவஸ்)
- ரொம்ப சொதப்பிய ரெசிபி இடியாப்பம்.
6. ஹோட்டல், மற்றவர் கைவண்ணத்தில் சமைத்த உணவுகளில் உங்களுக்கு பிடித்த ரெசிபிய அவர்களிடம் குறிப்பு கேட்காமல் செய்து பார்த்து அதன் சுவையை எடுத்து வந்ததுண்டா? அப்படி வந்ததுக்கும் அப்பறம் உங்களுக்கு எப்படி இருக்கும்? (ரேவஸ்)
- கூடுமானவரை சாப்பிடும் சுவையை வைத்து செய்து பார்ப்பேன். அதில் நிறைய சைவ சமையல் சூப்பராக வந்துள்ளது. ரொம்ப நல்லா வந்தது என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப அளவில்லாத மகிழ்ச்சியை அடைவேன். இறைவனுக்கு நன்றி செலுத்துவேன்.
7. உங்க வீட்டு சமையல் உபகரணங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது ? ஏன் ? (ஏஞ்சல்)
- எனக்கு ரொம்ப பிடிச்சது நான்ஸ்டிக் தோசை கரண்டியும் சின்ன தோசை தவ்வாவும் நான் அடிக்கடி பயன்படுத்துவது. அது தான் எல்லாவிதமான சமையலுக்கும் பயன் படுத்துவேன். புதுசாவாங்கும் அலுமினியசட்டிகள் ரொம்ப பிடிக்கும்.
சின்ன சின்ன குட்டியான ஃபுட் கன்டெயினர்கள் ஜார் எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
8. உங்க கிச்சனில் நடந்த நீங்க அடிக்கடி நினைத்து சிரிக்கும் சம்பவம் என்ன ? (ஏஞ்சல்)
- கிச்சனில் சீரியஸாக வேலை செய்வேன் அதனால் சிரிக்கும் படியாக நடந்த சம்பவம் எதுவும் ஞாபகம் வரவில்லை.
சிரித்த சம்பவத்தை விட பக் பக் சம்பவம் தான் கொஞ்சம் அதிகம், ஆபிஸ் போகிற அவசரத்தில் செய்வதால் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் அடுப்ப ஆஃப் பண்ணேனா இல்லையா என்று பயம் பட படப்பு இருக்கும்.
9. ஒரு நாள் எதிர் பாராத விதமா உங்க சமையல் ரொம்ப சொதப்பிடுச்சு. உங்க வீட்டுக்கு அன்னைக்குன்னு அறுசுவை தோழி ஒருவர் வந்திருக்காங்க. எப்படி இருக்கும் உங்களுக்கு? என்ன பண்ணுவீங்க? எப்படி சமாளிப்பீங்க?
- இதுவரை விருந்தினருக்கு சொதப்பியது இல்லை. அப்படி சாப்பாடு சொதப்பி விட்டது என்றால் அப்படியே அதை ஓரங்கட்டி விட்டு வேறு ஏதாவது சுலபமாக முடியக்கூடிய சமையலை செய்து சமாளித்து விடுவேன்.
10. அறுசுவையில் உங்கள் சமையல் தவிர நீங்க விரும்பி சமைக்கும் மற்றவர் சமையல் எது? யாருடையது? எதனால்?
- ஜேமாமி, தளிகா, விஜி சமையல் ஜேமாமி கை தேர்ந்த அனுபவசாலி ஆகையால் அவர்களின் சமையல் ரொம்ப பிடிக்கும். எப்பவாவது ஒரு சேன்ஞ்க்கு இவர்களுடைய சமையலை செய்வேன். மற்றவர்கள் சமையலும் பிடிக்கும்.
தளிகாவின் நான் வெஜ் கேரள சமையல் மற்றும் விஜியின் வெஜ் கேரள சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
4 கருத்துகள்:
நேர்காணல் போல கேள்வி பதில் அருமை.
அருமை அக்கா...
சுவையான கேள்வி பதில் தொகுப்பு!
வாழ்த்துக்கள். உங்களுடைய மக்ரூனி பாயாசம் அருமை. மக்ரூனி வேகவைத்ததில். தேவைக்கு அதிகமான அளவு வேகவைத்தாகிவிட்டது. தேவைக்கு அதிகமானதை மக்ரூனி பாயாசம் செஞ்சாச்சு. தேங்க்ஸ்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா