Wednesday, March 9, 2016

சிறப்பு விருந்தினர் பதிவு - கலா ஸ்ரீராம் - பாகற்காய் கொத்சு & ராகி



அன்பான வலை உலக தோழ தோழியர்களே பாரம்பரிய குறிப்பு சிறப்பு விருந்தினர் பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டன, நிறைய தோழிகள் குறிப்புகள் அனுப்பி இருந்தாலும் அதை தொகுத்து இங்கு பதிவிட நேரம் கிடைகக்வில்லை

இன்று சமையல் அட்டாகாசம் வலைப்பூவில் சிறப்பு விருந்தினராக பாரம்பரிய சமையல் குறிப்பை நமக்கு வழங்கி இருப்பவர் கலா ஸ்ரீராம் 
இவர்களுடைய வலைப்பூவின் பெயர் புதுகை தென்றல் , 1000 க்கும் மேற்பட்ட பயனுள்ள பதிவுகளளை வலைப்பூவில் பகிர்ந்து இருக்கிறார்கள்.
இவரின் வலைப்பூ பல்சுவை நிறைந்ததாக இருக்கும். நிறைய அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். பேரண்ட்ஸ் கிளப் வலை பூவிலும் கூட்டாக பிளாக்கர்கள் சேர்ந்து அவரவர் பதிவுகளை இங்கு பகிர்ந்துள்ளனர்.  பெற்றோர்களுக்கு பயனுள்ள தாக பிள்ளைகளின் அனுபவங்களை தொகுத்து எழுதி இருக்கிறார்.


http://parentsclub08.blogspot.in/ பேரண்ட்ஸ் கிளப் லிங்க்
http://pudugaithendral.blogspot.in/ என்னுடைய வலைப்பூ
நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள்.

அன்புநட்புக்களுக்குவணக்கம்.
என்பெயர்கலாஸ்ரீராம்.
வலையுலகில்புதுகைத்தென்றல்.
புதுகைத்தென்றல்
என்னுடைய 

சுய அறிமுகம்:
வணக்கம். வலையுலகில் எனது பெயர் புதுகைத் தென்றல். எனது வலைப்பூவின் பெயரும் அதுவே. பேரண்ட்ஸ் கிளப் எனும் வலைத்தளத்திலும் எழுதுவதை என் பெருமையாக கருதுகிறேன்.
மூத்தமகன் +2 தேர்வுக்கு ரெடியாகி கொண்டிருக்க இளையவளோ 9 ஆம் வகுப்பு பரிட்சைக்கு ரெடியாகி கொண்டிருக்கிறார். இலங்கையில் 7 வருடங்கள் வாழ்ந்ததை என் பாக்கியமாக கருதுகிறேன். இப்பொழுது ஹைதராபாத்தில் இருக்கிறோம்.

ஜலீலாக்கா என எங்களால் அன்பாலஅழைக்கப்படும் ஜலீலாகமல் அவர்களின் சமையல்அட்டகாசம் வலைப்பூமூலமாதெரியும்.
அவங்களுடைய சமையல்குறிப்புக்களுடன் பல பயனுள்ள டிப்ஸ், மருத்துவ குறிப்புகள், குழந்தை உணவு, சமையல் டிப்ஸ்கள், ஆண்களுக்கு டிப்ஸ்கள், கர்பிணி பெண்களுக்கான பதிவுகள் என்று பல பயனுள்ள பதிவுகளை பதிந்துள்ளர். அனைத்து பதிவுகளும் மிக அருமை. 

பாராம்பரிய சமையல்:
எனக்கு மிகவும் பிடித்த இந்த உணவு உடலுக்கு ரொம்பவும் நல்லது. வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு பதின்ம வயது குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியை தரும் சத்தான உணவு.
ராகி சங்கட்டி:
இது ஆந்திரா ஷ்பெஷல் உணவு.
தேவையான பொருட்கள்:
ராகி(கேப்பை மாவு) 1 கப், சமைத்த சோறு - 1 கப், உப்பு தேவையான அளவு, நெய் - 1 ஸ்பூன்.
செய்முறை:

கொஞ்சம் குழைவாக சமைத்த சோற்றில் தேவையான அளவு
உப்பு், 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

1 கப் ராகிக்கு 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து
கரைத்து வைக்கவும்.

அடுப்பை பற்றவைத்து, அடி கனமான பாத்திரம் வைத்து
அதில் கரைத்து வைத்திருக்கும் சோற்றை போட்டு கிளறவும்,
கொஞ்சம் கொதிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் கரைத்து
வைத்திருக்கும் கேப்பை மாவையும் ஊற்றி கைவிடாமல்
கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது நெய்
சேர்த்து மேலும் கிளறி இறக்கினால் சங்கட்டி ரெடி.

புளி இலையைப் போட்டு ஒரு குழம்பு செய்வார்கள். அதோடு
இந்த களியை தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். அது இல்லாவிட்டாலும்
இதற்கு சரியான ஜோடி பூண்டுக்குழம்பு அல்லது வடைகறி.

காரம் சைட்டிஷ்ஷில் மட்டும் தான் எனவே, இது வயிற்றுக்கு ஊறு ஏதும் செய்யாது.
கேப்பை உடலுக்கு மிகவும் நல்லது. குளிர்ச்சி தரும்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இவ்வுணவு மிக 
உதவும்.


1.சமைத்த சோறு இல்லாவிட்டால் அரிசியை
மிக்சியில் போட்டு உடைத்து(அரிசி உப்புமா
செய்யும் பதம்) சோறு சமைத்து சேர்க்கலாம். 




சமையற்குறிப்பு
பாகற்காய் கொத்சு செய்வதுஎப்படின்னுபாப்போம்.

இது ஆந்திராபக்கம்செய்யப்படும்உணவு.
வெண்பொங்கலுக்குசரியானஜோடி.
கசப்பேதெரியாது. சாதத்துலஊத்திபிசைஞ்சும்சாப்பிடலாம்.
தோசைக்கும் நல்லா இருக்கும்.
இவ்வளவுருசியானகொத்சு செய்ய என்னென்னதேவைன்னுபாத்துக்கலமா!!!!



தேவையானபொருட்கள்:

பாகற்காய்: 250 gms, (விதைநீக்கிவெட்டிவெச்சுக்கணும். ரவுண்டாகவோநீளமாகவோஅதுஉங்கவிருப்பத்தைபொறுத்து
கடலை பருப்பு: 1 cup
உளுத்தம் பருப்பு : 1 cup
காய்ந்தமிளகாய் : 7
எலுமிச்சைஅளவுபுளிஊறவைத்துஅந்ததண்ணி
வெள்ளை எள்ளுஇல்லைன்னாகறுப்புஎள்ளு50 gms.க்
கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் – 1 ஸ்பூன்.
வெல்லம் - ருசிக்கு

செய்முறை:

வெறும்கடாயில்எள்ளைவறுத்துஆறியதும்பொடித்துவைக்கவும்.க.பருப்பு, உ.பருப்பு, காய்ந்தமிளகாய்இவைகளையும் எண்ணெய் சேர்க்காமல்வறுத்துஆறியதும்பொடிசெய்துவைத்துக்கொள்ளவும்.அதேகடாயில்இல்லாவிட்டால்வெறொருவாணலியில் எண்ணெய் விட்டுகடுகு, கறிவேப்பிலைதாளித்துநறுக்கிவைத்திருக்கும்பாகற்காயை போட்டு நன்குவதக்கவும்.கொஞ்சமாக உப்பு சேர்த்துமேலும்வதக்கவும்.காய்நன்குசுருண்டுவதங்கும்தருவாயில், கரைத்துவைத்திருக்கும்புளிநீரைசேர்த்துநன்குகொதிக்கவிடவும். மஞ்சள், உப்பு சேர்த்துபுளிவாசனைபோகநன்குகொதித்ததும்பொடித்துவைத்திருக்கும்எள்ளுபொடிமற்றும் பருப்பு மிளகாய்பொடியைசேர்த்துநன்குகொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்துவரும்பொழுதுகொஞ்சம்வெல்லம்சேர்த்துநன்குகலக்கிஇறக்கவும்.ருசியானபாகற்காய்கொத்சுரெடி.
குறிப்பு
அவசரமாகசெய்யும் பொழுது வறுத்துபொடிக்கநேரமில்லைஎன்றால்இட்லிமிளகாய்ப்பொடி( க.பருப்பு, உ.பருப்பு, காய்ந்தமிளகாய், எள்ளு போட்டு அரைத்தது) போட்டு செய்யலாம்.



சர்க்கரை நோயாளிகளுக்கு, சிறப்பு விருந்தினர் பதிவு, பாரம்பரிய சமையல்


சிறப்பு விருந்தினர் பதிவு
உங்கள் குறிப்புகளையும் இங்கே நீங்கள் பகிற விரும்பினால் என் மெயில் க்கு அல்லது கிழே கமெண்டில் தெரிய படுத்தலாம்.
அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள். குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம் மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன். 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

கோமதி அரசு said...

தென்றலின் குறிப்புகள் இரண்டும் அருமை.
ஜலீலா உங்களுக்கு நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா