Monday, May 22, 2017

மஷ்ரூம் மசாலா நோன்பு கஞ்சி ( குக்கர் முறை) சைவம்



தேவையான பொருட்கள்



பொடித்த நொய் (அரிசி பொடித்த்து) – அரை டம்ளர்
பாசி பருப்பு  – இரண்டு மேசைகரண்டி
கேரட் – ஒரு சிறிய துண்டு
மஷ்ரூம்  - 50 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
எண்ணை + நெய் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
பச்ச மிளகாய் – ஒன்று
உப்பு – தேவைக்கு
பொடியாக அரிந்த இஞ்சி - அரை ஸ்பூன்
பொடியாக அரிந்த பூண்டு - முன்று
கொத்துமல்லி தழை – சிறிது
புதினா – சிறிது
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
கடைசியாக தாளிக்க
 எண்ணை + நெய் - இரண்டு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஆறு எண்ணிக்கை
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு சின்ன கொத்து
கொத்து மல்லி தழை -  கைக்கு ஒரு கொத்து
செய்முறை

அடுப்பின் மீது குக்கரை ஏற்றி  எண்ணை  ஊற்றி  சிறிது காய்ந்ததும் பட்டை  போட்டு தாளித்து வெங்கயம் + கேரட்டை போட்டு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை அடங்கியதும், கொத்துமல்லி புதினா, தக்காளி,பச்சமிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.

தக்காளி மடங்கியதும் மஷ்ரூமை நான்காக வெட்டி சேர்த்து,  மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள், சேர்த்து நன்கு கிளறி தீயின் அளவை சிம்மில் வைத்து நன்கு மசாலா கூட்டாகும் வரை வேக வைத்து தண்ணீரை 4 டம்ளர் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட்டு கொதி வந்ததும் தேங்காய், அரிசி + பாசிபருப்பை தட்டி கட்டி பிடிக்காமல், அப்ப அப்ப கிளறி விட்டு குக்கரை மூடி இரண்டு முன்று விசில் வந்ததும் இரக்கவும். ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கலக்கி கட்டி பிடிக்காமல் கிளறி விட்டு கொதிக்க விடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டி கிளவும்.
 அரிசி ப‌ருப்பு இர‌ண்டும் வெந்து க‌ஞ்சி ப‌த‌ம் வ‌ந்த‌தும் இர‌க்க‌வும்.

கடைசியாக எண்ணை + நெய் விட்டு சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது கொத்துமல்லி கருவேப்பிலை போட்டு தாளித்து கஞ்சி யில் கொட்டி மீண்டும்கொதிக்க விட்டு இரக்கவும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, May 19, 2017

தோஃபு பரோட்டா சாண்ட்விச்


தோஃபு பரோட்டா சாண்ட்விச்

பரோட்டா
மைதா – ஒரு டம்ளர்
சர்க்கரை – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
தண்ணீர் கால் டம்ளர் + தேவைக்கு
உருக்கிய நெய் அல்லது பட்டர் – 1 தேக்கரண்டி
தோஃபு ஃப்ரை
தோஃபு – கால் கிலோ
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி

பரோட்டாவிற்கு கொடுக்க பட்டுள்ள பொருட்களை சேர்த்து குழைத்து அரை மணி நேரம் ஊறவைத்து திரட்டி லேயர்களாக போட்டு மடித்து பரோட்டா ரெடி செய்யவும்.
தோஃபுவை  நீளவாக்கில் ஸ்டிக் போல வெட்டி மசாலா தடவி தோசை தவ்வாவில் பொரித்து எடுக்கவும்.

சாண்ட்விச்க்கு தேவையான பொருட்கள்
  1. பரோட்டா
  2. பொரித்த தோஃபு
  3. கேரட்
  4. வல்லாரை கீரை
  5. மையானஸ்
  6. ஸ்வீட் அன்ட் சோர் கெட்சப்


பரோட்டாவில் மையாணஸ் தடவி தோஃபு மற்றும் வல்லாரை இலை, கேரட்டை வைத்து மேலே லேசாக கெட்சப் தெளித்து ரோல் செய்யவும்.

சுவையான தோஃபு பரோட்டா சாண்ட்விச் ரெடி . சிக்கனுக்கு பதில் தோஃபுவை பயன்படுத்தியுள்ளேன்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, May 17, 2017

மீதியான சால்னா & மட்டன் கீமா(கொத்துகறி) குழிபணியாரம்


பேலியோ டயட் க்கு தினம் காலை முட்டை எடுத்து போரடித்து போய்விட்டதா ஏன் இட்லி குழிபனியாரம் தோசை கூட செய்து சாப்பிடலாமே.

இது மீதியான சால்னா{குழம்பு வைத்து செய்துள்ளேன்..





குழிபணியாரம்

உணவு முறை : பேலியோ டயட்
பெயர் : ஜலீலாகமால்
உணவு வகை: அசைவம், முட்டை சமையல், மட்டன்,
உணவின் பெயர்:

மீதியான சால்னா & மட்டன் கீமா(கொத்துகறி) குழிபணியாரம்

மீதியான மிக்ஸ்ட் சால்னாஅரை கப்
(ஆட்டுக்கால் பாயா சால்னா, கொப்தா சால்னா, மட்டன் சால்னா)
முட்டை – 3
மிளகு தூள்அரை தேக்கரண்டி
உப்புஅரை தேக்கரண்டி
கொத்துமல்லி தழை ,பொடியாக அரிந்ததுஒரு மேசைகரண்டி
பச்சமிளகாய் பொடியாக அரிந்ததுஒன்று
வெங்காயம் பொடியாக அரிந்ததுஒன்று
வெந்த மட்டன் கீமா (கொத்துகறி) – அரை கப்
தேங்காய் துருவல்அரை கப்
தக்காளிஅரை பழம்

செய்முறை

முட்டை , மிளகு , உப்பு, தக்காளி , வெந்த கீமா,தேங்காய் துருவல் (வெங்காயம் கொத்துமல்லி பச்சமிளகாய்) மேலே கொடுக்க பட்டுள்ளதில் பாதி அளவு சேர்த்து மிக்ஸியில் முக்கால் பதத்துக்கு ஓடவிடவும்.
மையாக அரைக்க வேண்டாம்.
அரைத்த கலவையுடன் , மிக்ஸட் சால்னா, மீதி உள்ள வெங்காயம், பச்சமிளகாய், கொத்துமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
குழிபணியார சட்டியை காயவைத்து தீயின் தனலை மிதமாக வைத்து நல்லெண்ணை + நெய் ஊற்றி மேலே கலந்த கலவையை குழிபணியாரமாக ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிட்டு இரக்கவும்.
மின்ட் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்,
ஆக்கம்
ஜலீலாகமால்

 Leftover gravy kuzipaniyaram





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, May 11, 2017

மல்டி கிரெயின் (சத்துமாவு) புதினா பரோட்டா



மல்டிகிரெயின் புதினா பரோட்டா
Multi Grain Mint Parota

கோதுமை மாவு முக்கால் ஆழாக்கு
சத்துமாவு கால் டம்ளர் (Multi Grain)

(கேழ்வரகு,பார்லி, குதிரை வாலி, க்ம்பு, கோதுமை, பாதாம்,ஏலக்காய், அரிசி,பொட்டுகடலை,)

பச்சமிளகாய் பேஸ்ட் ஒரு தேக்கர்ண்டி
சர்க்கரை ஒரு ஸ்பூன்
உப்பு
நெய் அல்லது எண்ணை
புதினா கால் கப் பொடியாக அரிந்தது





செய்முறை

 மேலே உள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து பரோட்டோ சப்பாத்திக்கு குழைப்பது போல குழைத்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

பிறகு பரோட்டோ சப்பாத்தியாக வேண்டியபடி திரட்டி சுட்டு எடுக்கவும்

புதினா பரோட்டா, மின்ட் பரோட்டா, சத்துமாவு பரோட்டா


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, May 8, 2017

வாழைக்காய் புட்டு (புர்ஜி- (சுறா மீன் புட்டு சைவம்)



வாழைக்காய் புர்ஜி (புட்டு)
குங்குமம் தோழியில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் அசைவ ரெசிபியை மாற்றி சைவமாக மாற்றியதில் சுறாமீனில் புட்டு செய்வோம் அதை ருசியில் வாழைக்காயில் செய்துள்ளேன்.
வாழக்காய் - கால் கிலோ  (வெந்த மீன்)
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - இரண்டு
வெங்காயம் - கால் கிலோ (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
மிளகாய் துள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி - அரை  பழம்
கொத்து மல்லி தழை  - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணை - இரண்டு மேசை கரண்டி
கருவேப்பிலை - சிறிது

தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை

1. வாழைக்காயில் மஞ்சள் தூள் உப்பு தூள்  இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேகவைத்து  உதிர்த்து கொள்ள வேண்டும்.
அதில் சிறிது உப்பு தூள்,சீரக தூள்பச்ச மிளகாய்மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும்.
2.ஒரு வாயகன்ற வானலியில் என்ண்ணை ஊற்றி கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தாளிக்கவும்.
3. பிறகு தக்காளிமிளகாய் தூளை சேர்த்து வதக்கவும்
4.இப்போது வெந்து உதிர்த்து வைத்த வாழக்காயை சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேகவிட வேண்டும்.
5..கடைசியாக தேங்காய் துருவல்கொத்துமல்லி தழை சேர்த்து கிளறி இரக்கவும்.
அருமையான வாழக்காய் புட்டு ரெடி.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, May 3, 2017

கேரளா ஸ்பெஷல் மீன் கறி ( கப்ப மீங்கறி)



கேரளா ஸ்பெஷல் மீன் கறி ( கப்ப மீங்கறி)




கேரளா மக்கள் செய்யும் சுவையான மீன் கறியை நான் மரவள்ளி கிழங்கு ( கப்ப ) யில் செய்துள்ளேன். ( குங்குமம் தோழியில் வெளியான 30 குறிப்புகளில் ஒரு குறிப்பு இது.)
இது மீனில் செய்வதை விட இந்த மரவள்ளி கிழங்கில் சுவை அபாரகமாக இருந்தது, மிகவும் ருசித்து தொடர்ந்து திரும்ப திரும்ப செய்ய தூண்டியது இந்த ரெசிபி ருசி அப்படியே நாவில் நிற்கிறது. 


கப்ப கிழங்கு (மர வள்ளி கிழங்கு)  - கால் கிலோ



தாளிக்க
தேங்காய் எண்ணை  - 4 தேக்கரண்டி
கடுகு – அரைட் தேக்கரண்டி
சோம்பு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 ஆர்க்
பூண்டு  - முன்று பல்
இஞ்சி  - பொடியாக நறுக்கியது இரண்டு தேக்கரண்டி



வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி  - ஒன்று
பச்ச மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தேங்காய் துருவல் – அரை கப்
கொத்துமல்லி தழை – சிறிது
கொடம்புளி – 4



செய்முறை

கொடம்புளியை கழுவி சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும்.
மரவள்ளி கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக கட் செய்து சிறிது உப்பு மிளகாய் தூள் , மிளகு தூள் சேர்த்து  வேகவைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேங்காய் எண்ணை ஊற்றி தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து மசாலாவகைகள் மற்றும் குடம்புளி சேர்த்து மசலா வாடை அடங்கியதும் வெந்த கிழங்கு சேர்த்து நன்கு சுருள கிளறவும்.சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தேங்காயை அரைத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

கவனிக்க: கேரள மக்கள்  புளிக்கு பதில் கொடம்புளி பயன் படுத்துவார்கள்.
இதில் தேங்காய் எண்ணையில் தாளிப்பதும் கொடம்புளி சேர்ப்பதும் மிக முக்கியம்.
டிப்ஸ் : கொடம்புளி மற்றும் கொள்ளு சேர்த்து தொடர்ந்து ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் எடை குறை வாய்ப்பு இருக்கிறது.




( இந்த குறிப்பு  அறுசுவை தோழி ஏஞ்சலினுக்காக)




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/