தேங்காய் மாவு தயாரிக்க்கும் விதம்
போன பதிவில் தேங்காய் பூ மாவு செய்யும் முறையை சொல்லி இருந்தேன் இப்போது அதை வைத்து அருமையாக பிரட், பேன் கேக் பிஸ்கட் போன்றவை தயாரிக்கலாம்
தேங்காய் மாவு - ஒரு கப்
முட்டை - 3
தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை சிட்டிக்கை
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
பாதாம் பவுடர் - சிறிது தேவைபட்டால்
nigella seeds or fennel seed lhalf tspn - ( optional)
முட்டையை நன்கு நுறை பொங்க அடித்து அதில் தேங்காய் எண்ணை தேங்காய் பூ சக்கை, பேக்கிங் பவுடர், உப்பு , பட்டை பொடி. சேர்த்து ஓவனில் 200 டிகிரியில் செட் செய்து 20 நிமிடம் பிரீஹீட் செய்து 25 லிருந்து 30 நிமிடம் பேக் செய்யவும்.
பேலியோவில் இல்லை என்றால் சிறிது நட்ஸ் பவுடர் சேர்க்கலாம்
முக நூல் மற்றும் பிலாக்கர் அறுசுவை தோழி ஹுசைனாம்மா பேலியோ ரெசிபிகள் பற்றி பேசும் போது இப்படி ஈசியாக செய்யலானு ரெசிபி லின்க் கொடுத்து அவர்களும் செய்து போட்டு இருந்தார்கள் , நானும் ச்ய்துசில பொருடகள் ஆட் செய்து பார்த்தேன் ரொம்ப நல்ல வந்ததும்
பேலியோ தேங்காய் பூ ப்ரட்
பேலியோ டிபன் வகைகள்
Tweet | ||||||