Wednesday, May 15, 2019

16 பேருக்கு செய்ய கூடிய பள்ளிவாசல் நோன்பு கஞ்சி Samaiyal_attakaasam












16 பேருக்கு செய்ய கூடிய பள்ளிவாசல் நோன்பு கஞ்சி Samaiyal_attakaasam ரமலான் நோன்பு என்றால் , நோன்பு கஞ்சி இல்லாமல் நோன்பு நிறைவடையாது, இதோ உங்களுக்காக சூப்பரான 16 பேருக்கு தயாரிக்கும் நோன்பு கஞ்சி


Ingredients

broken rice - 2 cup

yellow moong dal - 50 gram

bengal gram - 2 tsbpn
carrot chopped - 1/2 no
onion chopped - 1/2 no
tomato - 1 no
salt
garlic - 6 pod

for kheema masaala
mutton kheema - 1/4 kg
oil + ghee - 4 tspn
cinamon - 1 piece
chopped onion - 2 nos
gg paste - 3 tspn
coriander leves - few
mint leaves - few
green chilli - 2 nos
curd - 2 tbspn
red chilli powder - 1 tspn
turmeric - 4tspn
coconut milk -2 cup




பாஸ்மதி அரிசி நொய் - 2 கப்
லேசாக வறுத்த பாசி பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 2 மேசைகரண்டி
கேரட் நீளவாக்கில் அரிந்தது - 1/2 கப்
வெங்காயம் ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு = 6 பல்
மட்டன் கீமா - கால் கிலோ
எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
பொடியாக அரிந்த வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 தேக்கரண்டி
கொத்துமல்லி தழை - சிறிது
புதினா சிறிது
பச்ச மிளகாய் - 2
தயிர் - 2 மேசைகரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்

நொய் அரிசி,பாசிபருப்பு,கடலை பருப்பை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஊறவைத்த அரிசி பருப்பு வகைகளை சேர்த்து  வேகவிடவும். மேலும் அதில் பொடியாக அரிந்த கேரட் , வெங்காயம், பொடியாக அரிந்த பூண்டு,தக்காளி உப்பு சேர்த்து நன்கு வேக விடவும், அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.
தனியாக இன்னொரு  பேனில் எண்ணை , நெய் காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு சேர்த்து வெங்காயம் , சேர்த்து வதக்கவும், அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அடுத்து கொத்துமல்லி புதினா கேரட் , கீமா, சேர்த்து வதக்கி வேகவைக்கவும், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் ,அடுத்து தயிர் ,பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி 10 நிமிடம் வேகவைக்கவும்.
வெந்ததும் கொதித்து கொண்டிருக்கும் கஞ்சியுடன் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும். சுவையான பள்ளி வாசல் நோன்பு கஞ்சி ரெடி.






METHOD


Please open above video link and see full detailed nonbu kansji recipe

and subscribe and support



யார் அந்த அதிர்ஷ்டசாலி


please checkout our chennai plaza & cp zeeba give away














https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா