Thursday, April 30, 2020

Muhallabia with Secret Healthy Topping by Jaleakamal





முகல்லாபியா அரபிக் மில்க் புட்டிங்

Arabic milk pudding Muhallaabia

சமையல் அட்டகாசம் யுடுயுப் சேனலைகிளிக் செய்து கானொளியாக கானலாம்.










முகல்லாபியா அரபிக் இனிப்பு ரெசிபி





நாம பயன் படுத்தும் ஜெல்லி, கேரமல் கஸ்டட் போல முகலாபியா ரெடிமேட் பாக்கெட்டும் கிடைக்கிறது.



அதில் தான் இந்த ஈசி டெசர்ட் செய்துள்ளேன்.



அன்பு சகோதர சகோதரிகளே



அனைவருக்கும் இனிய ரமலான் முபாரக்



தேவையானவை



முகல்லாபியா - 85 கிராம் பாக்கெட் ஒன்று



பால் - 475 மில்லி



மேலே டாப்பிங் செய்ய



மாதுளை முத்துக்கள்

ரோஜா குல்கந்து

ரூ ஆப் ஷா

அகர் அகர்





செய்முறை





ஸ்டெப் -  1

முகலாபியா பவுடரை ஒரு சிறிய கப் பாலில் கலக்கி , ஒரு பேனில் ஊற்றி அத்துடன் மீதி உள்ள பாலையும் சேர்தது கட்டியில்லாமல் காய்ச்சவும்.

கொத்து கலவை இறுகி வரும் போது அடுப்பை ஆஃப் செய்து நான்கு சம பவுளில் முக்கால் பாகம் வரை ஊற்றவும்.



ஸ்டெப் - 2



மேலே செய்யும் டாப்பிங நட்ஸ் தூவியும் செய்யலாம் , இல்லை உங்களூக்கு இரண்டு கலரில் லேயர்களாக வேண்டும் என்றால் நான் செல்லியுள்ளது போல செய்யால்.





மாதுளை முத்துகள்  3 மேசைகரண்டி, ரோஜா குல்கந்து சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும் , அரைத்ததை வடிகட்டவும்.

அகர் அகர என்னும் கடல் பாசியை சிறீது தண்ணீரில் ஊற வைத்து அதில் அரைத்து வடிகட்டிய கலவையை சேர்த்து நன்கு காய்ச்சவும். கடைசியாக ரூ ஆஃப் ஷா சேர்த்து கலக்கி இரக்கவும்.



சிறிது ஆறவிட்டு, ஏற்கனவே ஊற்றிவைத்து இருக்கும் 4 முகலாபியா வின் மேலெ இந்த மாதுளை  குல்கந்து டாப்பிங்கை   பரவலாக ஊற்றவும்.



அதன் மேலே விரும்பிய நட்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.





1. குல்கந்து உங்களிடம் இல்லை என்றால் சேர்க்கவேண்டாம், மாதுளை மட்டு போதுமானது.

2. அகர் அகர் சேர்ப்பது , டாப்பிங் செட் ஆகதான் , அகர் அகர் இல்லை என்றால் ஜெலட்டினும் சேர்த்து செய்து செட் ஆக்கலாம்.



3. முகலாபியா பாக்கெட் கிடைகாதவர்கள்.  3 டீஸ்பூன் கார்ன் ப்ளார் மாவை பால் சேர்த்து ஆரஞ்ச் எசன்ஸ் மற்றும் சர்க்கரை ச் சேர்த்து சேர்த்து காய்ச்சவும்.



Muhallabia
(cornflour,sugar orange blooms water) - ready made packet - 85 gm




for topping
Pomegranate
gulkand
Rooh afsha
agar agar







https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா