கோதுமை மாவு - 2 டம்ளர்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்
பால் - கால் டம்ளர்
தண்ணீர் - அரை டம்ளர் + தேவைக்கேற்ப
நெய் - அரை டீஸ்பூன்
ஃபில்லிங் செய்ய:
நன்கு வேகவைத்த ராஜ்மா - அரை கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒன்று (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி (துருவியது) - அரை டீஸ்பூன்
ஓமம் - கால் டீஸ்பூன்
சீரகம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஆம்சூர் பவுடர் - கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
கோதுமை மாவில், உப்பு, சர்க்கரை, கருஞ்சீரகம், நெய் சேர்த்துக் கலந்து, பால் மற்றும் தண்ணீரை லேசாக சூடுபடுத்தி மாவில் ஊற்றி, ஒரு ஃபோர்க்கால் கிளறி ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மீண்டும் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். மாவை சிறிது நேரம் மூடி வைக்கவும்.
ஃபில்லிங் தயாரிக்க:
வேகவைத்த ராஜ்மாவையும், உருளைக்கிழங்கையும் ஒன்றாக சேர்த்து மசித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடுபடுத்தி ஓமம், சீரகம் சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்த்து வதக்கவும். ராஜ்மா மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கிளறி அதில் உப்பு மற்றும் ஆம்சூர் பொடி சேர்த்து, கடைசியாக கொத்துமல்லி தழை தூவி கிளறி ஆறவைக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
பராத்தா செய்ய:
பிசைந்த கோதுமை மாவை சரிபாகமாக 6 உருண்டைகளாகப் பிரித்து, ஒரு உருண்டை எடுத்து சிறிதளவு மாவு தோய்த்து சிறிது வட்ட வடிவமாக திக்காக உருட்டி அதில் நாம் ஏற்கெனவே செய்து வைத்துள்ள ராஜ்மா ஃபில்லிங் உருண்டையை நடுவில் வைத்து மாவைக் கொண்டு ஃபில்லிங்கை மூடி நன்கு உருட்டி மீண்டும் சப்பாத்தி கட்டையில் வைத்து மெதுவாக பராத்தாவை வட்ட வடிவத்தில் பரத்தவும்.
ஒரு இரும்பு தவாவை சூடுபடுத்தி பாராத்தாவை போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து எடுக்கவும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா