Tuesday, September 18, 2012

பாலோ செய்த பிளாக்கை எப்படி மறுபடி பாலோ செய்வது..




என்ன தலைப்ப பார்த்தததும் சமையல் அட்டகாசம் எப்ப பிளாக்கர் டிப்ஸ்க்கு மாறியது என்று எல்லாருக்கும் குழப்பமாக இருக்கா??? 


நிறைய பேருக்கு  தெரியுமா தெரியாதான்னு தெரியல நான் 


http://allinalljaleela.blogspot.com/

http://jaleela-duwa.blogspot.com/

http://tipsofjaleela.blogspot.com/

http://kidsfood-jaleela.blogspot.com/



இந்த நான்கு பிளாக்குகளை வைத்து கொண்டு ஆரம்பித்த புதிதில் ஒவ்வொன்றாக் தனித்தனியக போய் பதிவு போடுவது ரொம்ப திண்டாட்டாமாக இருந்தது. பிளாக் ஆரம்பித்ததில் வேறு யாரிடமும் சந்தேகம் கேட்பதில்லை நானே தான் எனக்கு தெரிந்ததை போட்டு கொள்வேன்.

அப்போது பிளாக்கர் டிப்ஸ் எழுதி வந்த சுஹைனா விடம் கேட்டபோது. உடனே நான்கு பிளாக்கையும் ஒன்றாக இனைத்து “ allinalljaleela" என்று மாற்றி அமைத்து கொடுத்தாங்க.

பிறகு சமையல் அட்டகாசங்கள் என்று பெயர் மாற்றலாம் என்று ஒரு நாள் இரவில் உட்கார்ந்து 2 மணிநேரமா எப்படி மாற்றுவதுன்னு பார்த்து பெயரையும் மாற்றியாச்சு.

பொதுவாக பதிவு எழுதினால் அனைவருக்கு அவரவர் பிளாக் ஓப்பன் செய்யும் போது டேஷ் போர்டில் மற்றவர்கள் பதிவுகள் வரும்.
ஆனால் நான் பெயரை மாற்றியதில் யாருக்கும் டேஷ் போர்டில் என் பதிவுகள் வரவில்லை.

ஏன்னு கேட்கிறீங்களா ஒரு வார்த்த நான் மாற்ற போறேன்னு ஒரு பதிவ போட்டுட்டு மாற்றி இருந்தால் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.

தெரிந்தவர்கள் மெயில் செய்து கேட்டு தெரிந்து கொண்டார்கள்.
சொல்லாமல் மாற்றிய்தால் மற்றவர்கள் டேஷ் போர்டில் என் பதிவு வரவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்து சில தோழிகளிடம் unfollow  செய்துட்டு மறுபடி follow செய்யுங்கள் எங்கு சொன்ன்னேன்.அதன் படி செய்து டேஷ் போர்டில் அவர்களுக்கு இப்போது வருகிறது. இன்னும் மற்றவர்களுக்கும் பதிவுகள் கிடைக்கலையே எப்படி பதிவு போடுவதுன்னு தேடும் போது தான் ப்ளாக்கர் நண்பன் பாஸித்தின் இந்த பதிவு தெரிய வந்தது. 


கீழே உள்ள பதிவில் சொல்லியுள்ள படி செய்யுங்கள்.



**********************************************************************


புதிய டொமைனுக்கு மாறினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று, நீங்கள் பதிவிட்டு சில மணி நேரம் கழித்தே நமது ப்ளாக்கை  பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரியும்.அதனை சரி செய்வதற்கு உங்கள் ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் ஒருமுறை Follower Gadget-ல் Unfollow செய்துவிட்டு மீண்டும் பின்தொடர வேண்டும்.

ப்ளாக்கர் நண்பன் தளத்தை பின்தொடர்பவர்களும் சிரமம் பார்க்காமல் இதனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அதை எப்படி செய்வது? என்று பார்ப்போம்.

முதலில் Follower Gadget-ல் கீழே Sign-in என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு நீங்கள் எந்த கணக்கை கொண்டு பின்தொடர்ந்தீர்களோ? அதனை க்ளிக் செய்யுங்கள். (அதிகமானோர் கூகிள் மூலம் தான் பின்தொடர்ந்திருப்பீர்கள். ஆம் என்றால் கூகிள் என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு  கூகிள் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்கும். அதனை கொடுத்து Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.




பிறகு Follower Gadget-ல் பின்வருவது போல இருக்கும். அதில் Optionsஎன்பதை க்ளிக் செய்து, Site Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு Stop following this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு மீண்டும் stop following என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அதனை க்ளிக் செய்தவுடன் அந்த ப்ளாக்கை பின்தொடர்வது நிறுத்தப்படும்.

இனி மீண்டும் பின்தொடர, முதல் படத்தில் உள்ளது போல Follower Gadgetகீழே உள்ள Sign in என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு  Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு Done என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! நீங்கள் ப்ளாக்கை பின்தொடர ஆரம்பித்துவிட்டீர்கள். இனி பதிவுகள் உடனடியாக உங்கள் டாஷ்போர்டில் வரும்.


நன்றி ப்ளாக்கர் நண்பன்  இதில் இருந்து எடுத்து போட்டது.




Sunday, September 16, 2012

நானும் ஆசிரியருங்கோ ஓ ஓஓ ஓ

வாங்க வாங்க எல்லோரும் வாங்க எங்கேயா?

நானும் ஆசிரியருங்கோஓஓஓ வாங்கோ எல்லோரும் எங்கே வலைச்சரத்துக்கு தான் இனி நான் ரொம்ப பிஸி பிஸியாக்கும்.
என்ன என் பிளாக் பதிவுகளா அது வரபடி வந்து கொண்டே இருக்கும்...
இனி வலைச்சரம் அதகளம் தான்.


ஹிஹிஹி புவாஹாஹா ஹா ஆஆஆஅ

என்ன தோழிகளே ஜலீலா அக்காவின் பழைய சிரிப்பு இதில் தெரியுதா/



வெத்தலை பாக்கு வைத்து அழைத்துள்ளேனாக்கும்.


டிஸ்கி: வந்துட்டு சும்மா கமெண்டோட போகப்படாது.. (ஓட்டு  - மொய் வச்சிட்டு போகனும்)

கோதுமை மாவு,சோள குழிபணியாரம் - Atta Corn Kuzipaniyaram



கோதுமை மாவு,சோள குழிபணியாரம்
ரொம்ப ஈசியாக சத்தான குழிபணியாரம்நிமிஷத்தில் தயாரித்துவிடலாம்.
பரிமாறும் அளவு :2
தயாரிக்கும் நேரம் : 5நிமிடம்
சமைக்கும் நேரம்: 10 நிமிடம்
15 பணியரஙகள் வரும்.




தேவையானவை
கோதுமை மாவு – 100 கிராம்
ரெடி மேட்( கார்ன்) முழு சோளம் – 50 கிராம்
துருவிய கேரட் – 3 மேசைகரண்டி
பொடியாக நருக்கிய பச்சமிளகாய்
பொடியாக அரிந்த வெங்காயம்
பொடியாக அரிந்த கொத்துமல்லி கருவேப்பிலை – 1 மேசைகரண்டி
உப்பு – ¼ தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
இட்லி சோடா – 1 சிட்டிக்கை
எண்ணை – பணியாரம் சுட தேவையான அளவு.

செய்முறை

எண்ணை தவிர மேற்கண்ட அனைத்து பொருட்களையும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பத்த்துக்கு கரைக்கவும்.
பணியர கல்லை சூடு படுத்தி சிறிது எண்ணைவிட்டு மாவை ஊற்றி மூடி போட்டு பணியரங்களாக சுட்டெடுக்கவும்.
அழகான குட்டி குட்டி குழிபணியாரம் ரெடி.



 புதினா அல்லது பொட்டு கடலை துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
மிக அருமையான சத்தான குழிபணியாரம் ரெடி.




Tuesday, September 11, 2012

ஓட்ஸ் பாப்கார்ன் தந்தூரி சிக்கன் ப்ரை



ஓட்ஸ் பாப்கார்ன் தந்தூரி சிக்கன் ப்ரை


 தேவையானவை
எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம்
ஊறவைக்க
மிளகாய் தூள்  - ¾ தேக்கரண்டி
ஷான் தந்தூரி – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ¾ தேக்கரண்டி
லெமன் ஜூஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – ½ தேக்கரண்டி
உருக்கிய வெண்ணை – 1 தேக்கரண்டி

சிக்கனுடன் கலந்து கொள்ள
முட்டை வெள்ளை கரு – 1

சிக்கன் கோட்டிங்கிற்கு
ஓட்ஸ்  - மேசைகரண்டி
கார்ன் ப்ளார் மாவு – 2 மேசைகரண்டி
ப்ரட் க்ரம்ஸ் – 1 மேசைகரண்டி

எண்ணை + பட்டர் – பொரிக்க் தேவையான அளவு

செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
வெள்ளை கருவை நன்கு நுரை பொங்க அடித்து ஊறவைத்த சிக்கனுடன் சேர்த்து மேலும் அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

ஓட்ஸ், ப்ரட் கிரம்ஸ், கார்ன் மாவை ஒன்றாக கலந்து ஊறிய சிக்கனை ஒவ்வொன்றாக எடுத்து பிறட்டி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

ஒரு வாயகன்ற வானலியில் எண்ணையை சூடாக்கி  தீயின் தனலை மீடியமாக வைத்து எல்லா பாப்கார்ன் சிக்கனையும் சிவற பொரித்து எண்ணையை வடித்து எடுக்கவும்.இது போல அழகாக குட்டியாக பாப்கார்ன் சைஸுக்கு சிக்கனை கிரிஸ்பியாக பொரித்து வைத்தால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான்.






குக்கும்பர் சாலடுடன் பார்டியில் குழந்தைகளுக்கு வைக்கலாம்.

இதை பாயிஜாவின் பார்டி ஈவண்டுக்காக அனுப்புகிறேன்.


Wednesday, September 5, 2012

சைனீஸ் வெஜ் நூடுல்ஸ் - Chinese Veggie Noodles




சைனீஸ் வெஜ் நூடுல்ஸ்

தேவையானவை
மேகி நூடுல்ஸ்  - 1 பாக்கெட்
பட்ட்ர் + எண்ணை – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
சர்க்கரை – 1 சிட்டிக்கை
பொடியாக அரிந்த பீட்ரூட்,கேரட் ,பீன்ஸ் – தலா ஒரு தேக்க்ரண்டி
உப்பு ¼ தேக்கரண்டி
மேகி மசாலா
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
Del monte Tomato Ketchup 





செய்முறை
வாயகன்ற பாத்திரத்தில் முன்று கப் தண்ணீரை விட்டு  கொதிக்கவிட்டு நூடுல்ஸை சேர்த்து அதில் சிறிது உப்பு, எண்ணை கலந்து 2 நிமிடம் வேகவிட்டு வடித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை + பட்டரை ஊற்றி சர்க்கரை பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து காய்கறிகள், மேகி மசாலா, சோயா சாஸ், சேர்த்து கிளறி 5 நிமிடம் வேகவிட்டு வடித்து வைத்துள்ள நூடுல்ஸை சேர்த்து போர்கால் கிளறிவிடவும்.

சுவையான யம்மி யம்மி நூடுல்ஸ் Del Monte டொமேட்டோ கெட்சப்புடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.


நூடுல்ஸ் ரெசிபி தான் இருப்பதிலேயே ரொம்ப ஈசியான ரெசிபி. பேச்சுலர்கள் கூட உடனே தயாரிக்கலாம், இதை பல விதங்களில் தயாரிக்கலாம். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஈசியான ரெசிபி. காலை உணவிற்கும், இரவு உணவிற்கும் உகந்த்து.

பாயிஜாவின் பார்டி ஈவண்டுக்கு அனுப்புகிறேன்.



Sunday, September 2, 2012

மைக்ரோ்வேவ் பால்கோவா - Microwave Palkova



மைக்ரோ்வேவ் பால்கோவா
பால்கோவா அனைவரும் விரும்பி சாப்பிடுவது, மைக்ரோவேவில் சுலபமாக் 3 நிமிடத்தில் செய்து விடலாம். தீடீர் விருந்திகளை அசத்தலாம். குழ்ந்தைகளுக்கும் எளிதாக செய்து கொடுக்கலாம்.
தேவையானவை
ஸ்வீட்டண்ட் கண்டென்ஸ்ட் மில்க் - 1 சிறிய டின்
தயிர் - 1 மேசைகரண்டி
நெய் - அரை தேக்கரண்டி
ஏலப்பொடி - ஒரு சிட்டிக்கை
செய்மு்றை
மைக்ரோவேவ் சேஃப் கண்டெயினரில் ஸ்வீட்ட்னட் கண்டென்ஸ்ட் மில்க், தயிர், ஏலப்பொடி, நெய், கால் சிட்டிக்கை உப்பு கலந்து முத்லில் 1 நிமிடம் ஹையில் வைக்கவும்.
கையில் க்ளவுஸ் போட்டு பவுளை வெளியில் எடுத்து கிளறி விட்டு மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
இதே போல் முன்றாவது முறையும் கிளறி எடுக்கும்.
சுவையான பால் கோவா ரெடி,


Milk peda- doodh peda - பால் கோவா

சிக் பீஸ் ஃப்ரூட் சாலட் - Chick peas Fruit Salad





தேவையானவை
வெந்த வெள்ளை கொண்டை கடலை (சிக் பீஸ்) 25 கிராம்
ப்ளம்ஸ் ‍ ‍ 1 பழம்
பேரிக்காய் ‍ 1 பழம்
தர்பூசணி பழம் அரை  கப் (கொட்டை நீக்கி சதுரமாக வெட்டியது)


சாலட் சாஸ் (ட்ரெஸ்ஸிங்)

லெமன் ஜூஸ் ‍ ஒரு மேசை கரண்டி
தேன் ‍ ஒரு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
சுக்கு தூள் ‍ அரை தேக்கரண்டி
 செய்முறை

ப்ளம்ஸ் (ஊட்டி ஆப்பில்),பேரிக்காயை மீடியமான அளவில் கட் செய்யவும்.
ஒரு வாயகன்ற பவுலில் கொண்டைகடலை,சதுரமாக வெட்டிய தர்பூஸ் (வாட்டர்மெலன்)அனைத்தையும் ஒன்றாக கலந்துவைக்கவும்/

ஒரு கிண்ணத்தில் லெமன் ஜூஸுடன் சாஸ் செய்ய கொடுத்துள்ள பொருட்களை (லெமன் சாறு,உப்பு,தேன்,சுக்கு தூள்)ஒன்றாக சேர்த்து பவுலில் உள்ள பழகலவையுடன் சேர்க்கவும்.

வித்தியாசமான கலர்ஃபுல் சிக் பீஸ் ஃப்ரூட் சாலட் பார்ட்டிக்கு ரெடி.


டிப்ஸ்: ப்ளம்ஸ் பழம் சில நேரம் புளிக்கும் அதை இப்படி சாலட் ஆக செய்தால் புளிப்பு சுவை தெரியாது.

இதை பாயிஜாவின் பார்ட்டி ஈவன்டுக்கு அனுப்புகிறேன்.

போன பதிவில் குழந்தைகளுக்குவாட்டர் மெலன் ஃபிங்கர்ஸ் செய்தாச்சு, பெரியவர்களுக்கு இது போல் கொண்டைகடலையுடன் சாலட் தயாரிக்கலாம்.
பார்ட்டியிலும் வைக்கலாம் , டயட் செய்பவர்கள் காலை டிபனுக்கு பதிலாக இதை ஒரு பவுல் சாப்பிட்டா நல்ல ஃபில்லிங்காக இருக்கும்.