எல்லா தோழிகளுமே வலை வழி பழக்கம் தான் ஆனால் யாரையும் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனால் அருசுவை தோழி மர்லியை மட்டும் நேரில் போய் பார்த்து இருகிறேன். தமிழ் குடும்ப தோழி , தமிழ் குடும்பத்தில் பிளாக் ஆரம்ப்க்கும் முன் அக்கா உங்கள் கிட்ட பேசனுமே எப்படி பொதுவான இடத்தில் என் மெயில் ஐடியோ,போன் நம்பரோ எப்படி கொடுப்பது. அது எங்க வீட்டிலும் விருப்பம் கிடையாது. ஆகையால் என்ன விஷியம் என்றேன். அதற்கு பிறகு ஒன்றும் பதிலிலலை, அதோடு நின்றது. அடுத்து பிளாக் மூலமாக ரொம்ப நல்ல தோழியாகிட்டாங்க
ஓவ்வொரு முறையும் சந்திக்காதது காதல் கோட்டை அஜீத், தேவையானை போல ஆகிவிட்டது, நான் ஒகே சொல்ல அவர்களால் வரமுடியாமல், அவர்கள் ஒகே சொல்ல நான் வரமுடியாமல் போனது.ரொம்ப நாளா உங்களை பார்க்கனும் அக்கா, என்று சொல்லி கொண்டே இருந்தார்கள், நாங்களும் ஓவ்வொரு முறை அவங்க துபாய் வரும் போதும் ஏதாவது ஒரு காரணத்தால் சந்திக்க முடியாமல் போய் விடும்.
உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறேன். நான் போய் கையில் போன துக்கி கொண்டே ஒரு எட்டு எங்கே? அவங்க அட உங்கக்கமக்கா, நான் வரேன் துபாயிக்கு ஃபிரைடே மார்கெட்டுக்கு வந்துடுங்க. நானும் சரி என்று சொல்லிவிட்டு ஃபிரைடே மார்கெட் என்றால் ஒரு ஆள் கூப்பிட்டு போகனும் இங்கு பக்கதில் என்றால் நடந்து போய்விடலாமே. என்று யோசிக்க உடனே லு லு வே வந்துடட்ரேங்கா, அஸர் தொழுதுட்டு 4 மணிக்கு மேல பாப்போம்.. ஓகே
உடனே அப்பவே நோட்டு புக்குக்கு அட்டையும் போட்டு முடித்து, மதியம் சாப்பாடு வேலையும் முடிந்து அஸர் தொழுது இஞ்சி டீயும் குடிச்சாச்சு மணி 4.30 போன் வரல.(இந்த் சந்திப்புக்கு ரெடியானது எப்படி இருந்தது என்றால் ஹிந்தி படம் பார்க்க ரொம்ப பிடிக்கும் சின்ன வயதில் சனிக்கிழமை ஆன மாலை டீவியில் ஹிந்தி படம் அதற்காகா அம்மா சொல்லும் வேலை எல்லாம் பரந்து பரந்து முடிப்பேன். படம் புரியுதோ இல்லையோ பார்க்கும் போது யாரும் டிஸ்ரப் பண்ண கூடாது என்று, அந்த ஞாபகம் இன்று வேலைய முடித்தது)
கடைசியில அண்ண வீட்டுக்கு போரேன்க்கா, ஆஹா இனும் பர்க்க முடியாதா என்று நினைத்தேன், 5.30 க்கு வந்துட்டு கால் பன்றேன் அப்ப வாங்க.உடனே மலிக்கா கேட்ட கொழுக்கட்டை ஞாபகம் வந்தது அதையும் செய்து எடுத்து கொண்டு பையன கூட்ட்பிட்டு கொண்டு நேரா லூ லூ க்கு 5.15 க்கு எல்லாம் போயாச்சு
அப்படி ஒரு ரவுண்டு அடித்து மீதி உள்ள கால் மணி நேரத்தையும் ஓட்டியாச்சு.வந்தாங்க பெட்சீட் பக்கம் இரண்டு பெண்கள் என்னை நோக்கி ஆனால் வருகிறவர்கள் என்னை நோக்கி வரும் போதே அவஙக் தான் ஆனா ஒரு சந்தேகத்தில் அப்படியே நின்றேன். பின்னாடி வந்து எக்கா எக்கா... ஒரே ஹி ஹி ஹி தான்.
உட்னே பின்னாடி இருக்கும் பார்க்கில் உட்கார்ந்து கொஞ்சம் நேரம் தான் பேசியது போல் இருந்தது, போன் வருது ஹஸுக்கிட்ட இருந்து மணிய பார்த்தா 2 மணி நேரம் மேல ஆகிவிட்டது. என்ன இருந்தாலும் நட்புக்கு எண்ணங்க்ளை பறிமாறிக்கொள்ளும் நட்புக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது.
சந்திக்க போன ஆள் யாருன்னு கேட்கிறீங்களா அவங்க கவிதையால கொஞ்ச நாள் முன்பு ஜார்ஜாவுல மழை வெள்ளம் கூட் வந்துடுச்சின்னா பாருங்கள்//
இந்த வலை உலகில் நிறைய தோழிகள் முகம் தெரியாத பல தோழிகள் என்னை அக்கா அக்கா என்று உரிமையோடு கூப்பிடும் போது , ரொம்ப சந்தோஷமாய் இருக்கு அதோடு அக்கா அக்கான்னு சொல்லி நிறைய கிரீடம் வேறு கொடுத்து விடுகிறார்கள், அதுவும் வைர கிரீடம்.
இது பதிவுலகில் ஜெய்லானி வழங்கியது இத அவரே ராப்பகலா வடிவமைத்து ரொம்ப பெரியய்ய்ய்ய்ய் மனசோடு பதிவுலக தோழ தோழியர்களை வலையில் வலை போட்டு தேடி எல்ல்லோருக்கும் கொடுத்து இருக்கிறார், அதில் எனக்கும் இந்த வைர கிரீடம் பச்சை ரோசா முத்திரையுடன். மிக்க நன்றி ஜெய்லானி

பதிவுலகில் அருசுவை தோழி, இப்ப பதிவுலகிலும் மிக அருமையான தோழி எனக்கு ராணி கிரீடம் கொடுத்துள்ளார்க்ள் , மிக்க நன்றி ஸாதிகா அக்கா.
நல்ல புது புது தகவலுடன் பதிவுகளை தந்து அசத்திக்கொண்டிருக்கும் ஸாதிகா அக்கா கொடுத்தது.

இது சைவ கொத்து பரோட்டா கொடுத்தது இவர் தினம் பதிவுகளை வித விதமான கொத்து பரோட்டா போல கொத்தி போடுவார், பரோட்டாவை பத்து விதவா செய்வாராம் ஆனால் இவர் பதிவுலகில் இவர் ஒரு குழந்தையாம்
தம்பி சசிகுமாரும் இந்த விருதை கொடுத்து இருக்கிறால், பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும் இவர் பதிவு. அதோடு கீழே போடும் லொள்ளு படங்களும் நல்ல இருக்கும்
இருவருக்கும் மிக்க நன்றி

இந்த விருதுகளை நான் யாருக்கும் இப்போதைக்கு கொடுக்க போவதில்லை. ஏனென்றால் இது விருது மாதம் போல யார் பிளாக் ஓப்பன் செய்தாலும் ராஜா , ராணி , வைர கிரீடமா இருக்கு. இன்னும் எவ்வளவோ பதிவர்கள் அவர்களை தேர்ந்தெடுத்து பிறகு கொடுத்து கொள்ளலாம்.
ஒரு வழியா பெண் பதிவர் சந்திப்பு நல்ல படியாக முடிந்தது,ரொம்ப சந்தோஷம், சந்தித்த தோழி யாருன்னு தெரியவேண்டாமா மீதிய இங்கு சென்று படித்து கொள்ளவும்
| Tweet | ||||||








வாவ் யம்மி யம்மி 



