Saturday, November 6, 2010

எந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையேஎந்த திருடி எந்த திருடனுன்னு தெரியலையே இந்த் அனியாயத்த கேட்க யாரும் இல்லையா?

என் குறிப்ப எங்கு பார்த்தாலும் அப்பட்டாமா அப்படியே காப்பி அடிச்சி வைத்து இருக்காங்களே
இதற்கு முன் சுவையோ சுவைன்னு முன்று பேர் சேர்ந்து பிளாக் ஆரம்பித்து, என் அறுசுவை குறிப்புகள், தமிழ் குடும்ப குறிப்புகள் , பிளாக் குறிப்புகள் அனைத்தையும் காப்பி அடிச்சி போட்டு இருந்தாங்கள்

இப்ப தமிழ் சமையலுன்னு பிலாக் பெயர் , தமிழ் செஃப் ந்னு போட்டு மறுபடி எல்லா குறிப்பையும் எடுத்து ஒன்று விடாம போட்டு வைத்து இருக்க்காங்களே/


அட காப்பி அடிச்ச லூசுகளா சோத்துல உப்பு போட்டு தானே சாப்பிடுரீங்க
எத்தனை தடவை சொல்வது இப்படி போட்டோ முதல் கொண்டு என் குறிப்புகளை அப்படியே எடுத்து போட்டு இருக்கீஙக், அறிவில்ல. நான் பிழையா எழுதியதையும் அப்படியே காப்பி அடிச்சி இருக்கீங்களே.


யாரது இதற்கு முன் பதிவு திருட்டு செய்த அதே கும்பலா?


எல்லோரும் இப்ப நான் கொடுத்துள்ள லிங்க பாருங்கள் யாருன்னு கண்டு பிடிக்க முடியுதா?

தமிழ் சமையல் தழிழ்செஃப் ஆம் இவங்க
மண்ணின் மைந்தன் தூத்துக்குடியில் இருந்து

அன்னு வெண்டைக்காய் குறிப்பு தேட போன இடத்தில் இப்படி தெரியவந்து அன்னு சொல்ல போய் தான் தெரிந்த்து.

இதில் என் குறிப்பு மட்டும் இல்ல, மற்றவர் (தோழி) களுடையதும் இருக்கு,

லூசுங்க திருந்தாத ஜென்மங்க்ள்.

முடிந்த வரை பாதிக்க பட்டவர்கள் அங்கு போய் கும்முங்கள்

இதுல தமிழ் செஃப்னு வேற பேரு வேற பிளாக்க்கு.
நீ உண்மையான தமிழ் செஃப்பா இருந்தா . செய்து உங்கள் சொந்த போட்டோவ போடுங்கள்.


டிஸ்கி:
இனி என் குறிப்புகளில் உள்ள அனைத்து குறிப்புகளில் பெயர் மாற்றம் செய்து என் பிளாக் பெயரையும் மாற்றி போட போகிறேன்.


72 கருத்துகள்:

LK said...

அடக் கொடுமையே ?? பதிவு திருட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் :(

Jaleela Kamal said...

http://tamizhchef.blogspot.com/2009/11/blog-post_5679.html

http://tamizhchef.blogspot.com/2009/11/blog-post_2480.html

Jaleela Kamal said...

http://tamizhchef.blogspot.com/2009/11/blog-post_5270.html

Jaleela Kamal said...

http://tamizhchef.blogspot.com/2009/11/blog-post_4951.html


அட படு பாவி( த்்ிழ் செஃப் ( டி (அ) டா)
இப்ப எல்லாத்த்தையும் திருடி போட்டு இருக்கே, லூசா னீஇ

Mohamed Ayoub K said...

கொஞ்சம் பொறுமையா இருங்கள் அக்காள், பதிவர்களின் ஆலோசனையைக் கேளுங்கள்.என்ன செய்யலாம் என்று.

ஸாதிகா said...

ஜலீலா,கூல்.கூல்..நிரம்ப கோபப்பட்டு,அவர்களது லின்கை எல்லாம் பப்லிஷ் செய்து அவர்களை பிரபலமாக்கி விடாதீர்கள்.அறுசுவையில் இருந்து என்னுடைய குறிப்பான மஞ்சப்பத்தை திருடி,மசாலா முட்டை ஆப்பம் என்று பெயருடன் ஒருசில மாற்றத்துடன் போட்டு இருகின்றார்கள்.நான் நிறைய கிளறவில்லை.தேடினால் இன்னும் நிறைய குறிப்புகள் காப்பி செய்ததை அறியலாம். என்ன செய்வது?

சூர்யா ௧ண்ணன் said...

தொழில்நுட்ப இடுகைகள் மட்டும்தான் திருடப்படுகிறது என்று நினைத்திருந்தேன்.. இப்ப சமையலுமா? என்ன கொடுமை இது?..

ஆமினா said...

இப்படியே எல்லாரும் செய்தா பதிவிட ஆர்வமே இல்லாமல் போய்விடும்... அதுகளா திருந்துனா தான் உண்டு

நாஞ்சில் பிரதாப்™ said...

ஜலீலாக்கா பொறுமை... எதுவும் அவதூறாக பேசாமல் இருத்தல் நலம்.

அவரே உங்களிடம் வருவார்...அப்போ கேளுங்க...

Akila said...

some people do like this... dont worry complain to google team and they will take care...

ஜெய்லானி said...

பொருமையா செஞ்சி அதை போட்டே எடுத்து போட்டவங்களின் வேதனை தெரிகிறது.!!

யாரு பெத்த புள்ளையையே எடுத்து என் பிள்ளைன்னு சொல்றமாதிரி இருக்கு..!! ஹா..ஹா.. !!

ஜெய்லானி said...

////ஜலீலாக்கா பொறுமை... எதுவும் அவதூறாக பேசாமல் இருத்தல் நலம்.//

((போட்டோ வரை ))காப்பி அடிப்பவர் இங்கிருந்துதான் எடுத்தேன்னு ஒரு வரி கீழே போடுவதில் என்ன தலை முழுகியா போய்விடும் ..!!

சிநேகிதி said...

அக்கா கூல்.. கூல்..
நீங்கள் எடுக்கும் போட்டோக்களில் உங்கள் ஃப்ளாக் நேம் கொஞ்சம் பெரிதாகவும், நடுவில் தெரிவது போல் போடுங்கள்..

அஸ்மா said...

என்ன ஜலீலாக்கா இது....? பார்த்ததும் எனக்கும் செம கடுப்பா ஆயிடுச்சு. பொறுமையா இருந்தே அதற்கான ஆக்க்ஷன் எடுங்க. கொஞ்சமாச்சும் அறிவோ, வெட்கமோ இருந்தா இப்படிலாம் செய்யமாட்டாங்க.

மங்குனி அமைச்சர் said...

யாரு அந்த புண்ணியவான் ?? இருங்க பாத்துட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

அந்த பிளாக்குல ப்ரோபைல் , அபவுட் மீ எதையும் காணுமே ???

அன்புடன் மலிக்கா said...

அக்கா பேர்போட்ட போட்டபோடும் உங்களுக்கெ இந்த நிலமையின்ன அப்ப எனக்கெல்லாம் அய்யகோ..

என்ன செய்ய என்குறிப்பு எங்காவது யாராவது பார்தா சொல்லுங்கப்பு உடனே ரீ..............ஆகிடுறேன்..

கொடுமைதான் யாருன்னுகேளுங்க.
கொஞ்சம் அமைதியா..

Jaleela Kamal said...

எல்,கே, ஆமாம் பார்த்ததிலிுந து என்ன ்ெய்யன்னே தெரியல,
ஏற்கனவே பாண்ட் பிராப்ள்ம்,
சரியாககூட பதிவை எழுதல/

அய்யுப்ா யாராவது தெரி்்தவர்கள் பதில் போடுவார்கல் என்று தான் உடனே சின்ன்தா ஒரு மெசேஜ் போட்டேன்.

ஸாதிகா ்ிரபலம் ஆக்க்கல,., எ்்படியும் அடு்்த கு்ிப்ப காப்்ி செய்ய இங்கு வந து தான் ஆகனும்,இங்கு கீழே கொஞ்சம் பேர் திட்டினாலாவது உரைக்குதான்னு பார்ககலாம். இது என்னு்ையுு + மறர தோழிகளுடைய ு இருக்க்கு

Jaleela Kamal said...

சூரியா கண்ணன் சார் இ்்ுக்கு ஏதும் வழி் தெரிா்தால் ்ொல்லவும்

Jaleela Kamal said...

ஆமினா உன்மை தான் இப்ப கொ்்ச நாளா பதிவு போ்ுவதே இல்லை ஏ்ாவ்ு முன்பு உள்ள பதிவு தான்.
்ஆர்்ம் இல்லை தான்

Jaleela Kamal said...

//அவரே உங்களிடம் வருவார்...அப்போ கேளுங்க...//

நாஞ்சிலாரே தி்ரு்ியவர்கள் ந்நான் ்ாஅப்பு திருடினேன் என்று ்வ து சொ்்வாஅ்்்ளா?

Jaleela Kamal said...

அகிலா நீங்கள் சொல்்்ு போல் செயய்்்லாம்.

Jaleela Kamal said...

அதானே ஜெய்லானி , இந்த குறிப்்ு இ்்கிருந்து எடுத்தது் என்று பெயரையாவது போடலாம்.ஏன் படம் முதல் கொண்டு எடுத்்ு போட்டா எப்படி இருக்கும்.

Jaleela Kamal said...

பாயிஜா ்ில குறிப்்ுகளில் பெய்் போடவில்ல்லை
இனி பார்த்து ்ான் போடனும்.

Jaleela Kamal said...

அஸ்மா என்ன செய்வது மானங்கெடட ஜென்ம்் போல . இதில் மற்றவர்கலுடையதும் இருக்்ு..

Jaleela Kamal said...

அமைச்சரே அதான் அவர் உஷாரா பெயர் , புரொபைல், பி்்லாக் ஆர்சிவ் எதுவும் வைக்்ல.

Jaleela Kamal said...

மலிக்கா நான் செக் பண்ணுவ்ில்ல தெரி ்த வர்க்் யாராவது இப்படி குறிப்பின் கீ்் வந்து சொன்னால் தான் உண்டு
எங்கப்பா நேரம் இரு்்கு.
உங்்ளுடை்து எங்காவது பார்த்தா கண்டிப்பா வந்து சொல்றே்்

Kousalya said...

அட என்னங்க இது...?! ஒரு பதிவு போட என்ன பாடு பட வேண்டி இருக்கு....? கொஞ்ச கூட மனசாட்சி இல்லாமல் இப்படி பதிவை திருடுபவர்களை என்னவென்று சொல்வது....? இது கண்டிக்கப்பட கூடியது சகோ.

kavisiva said...

ஜலீலாக்கா என்ன பண்றது பிரபல தளங்களே குறிப்புகளை காப்பி அடிச்சு போடறாங்க :(. ரொம்ப தெளிவா நம்ப பெயரை மட்டும் நீக்கிட்டு. நீங்க சொன்ன இடத்தில் என்னுடைய குறிப்புகளும் இருக்கு :(

உங்க வலி புரியுது. அனுபவிக்கறேனே நானும் :(. அங்க போய் கேட்டா சிலர் அந்த பதிவை நீக்கறாங்க. இல்லேனா நாம் போட்ட பின்னூட்டத்தை நீக்கறாங்க. போய் தொலைங்கடான்னு விட்டுட்டேன் :(

பயணமும் எண்ணங்களும் said...

வருந்துகிறோம்..

பதில் போட்டேன் அங்கே..
-----------


"திருடப்பட்டதென்றால் கண்டனத்துக்குறியது நண்பரே...

வேண்டாமே இச்செயல்..:"

என.

எம் அப்துல் காதர் said...

மற்ற சகோதரிகள் போடுவது போல், நீங்க பப்ளிஷ் பண்ணும் 'போட்டோ'
விலும் ஏன் உங்க பேர் போடுவதில்லை?? அது தான் ஈஸியா லூட் அடிக்கிறாங்க. நீங்க பதட்டப் பட வேண்டாம்.
-----------------------------------
ஃபான்டுக்கு இப்படி ஏன் அல்லாடுகிறீர்கள். முன்பு நான் கொடுத்தேனே அதை யூஸ் செய்ய வேண்டியது தானே ஜலீலாக்கா.
((http://www.google.co.in/transliterate/indic/tamil))

சி.பி.செந்தில்குமார் said...

2thiipaavaLikku தீபாவளி அன்னைக்கு வேட்டு வைக்காம உங்களுக்கு வேட்டு வெச்சிட்டாரா ?உங்க பதிவுல இருந்து ச்ய்ட்டதுன்னு தமிழ்மணம்,இண்ட்லில புகார் குடுங்க.

angelin said...

jaleela its really frustrating .
try to put your blog name lil bigger and in middle of the photos.
its really a shame .whoever it may be pls dont kill the love of wanting to share their talents with others.

asiya omar said...

ஜலீலா கழுத்து,முதுகு வலியினால் நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்,சரி சும்மா தோழிகள் ப்ளாக் பக்கம் போலாம்னு வந்தால் செய்தியை பார்த்து இதென்ன கொடுமை,என் குறிப்பு எதுவும் அங்கே இருக்கான்னு பார்க்கனும்.என்னால் அதிக நேரம் உட்காரவும் முடியலை.இப்படி செய்ய எப்படி மனசு வரும்?இதற்கு என்னதான் முடிவு?

அன்னு said...

யாருடைய பதிவெல்லாம் திருடப்பட்டு இருக்கிறதோ அவர்களெல்லாம் இந்த ஃபாரத்தை நிரப்பி பதிவு பண்ணவும். கூகுள் காப்பிரைட் விஷயத்தில் நல்ல முடிவெடுக்கும் என்றே நம்புவோம். மேலும், அடிஷனல் கமெண்ட் கேட்கும் பட்சத்தில் 'Flag this blog'பட்டனை மறைத்து(Hide this button through settings) வைக்க முடியாதபடி செட்டிங்கில் மாற்றம் கொண்டு வருமாறு தெரியப்படுத்தவும். இதன் மூலம் வேலை எளிதாகும் இன்ஷா அல்லாஹ்.


http://www.google.com/support/blogger/bin/request.py?hl=en&contact_type=blogger_dmca_infringment

R.Gopi said...

ஜலீலா அவர்களே...

இந்த பதிவு திருட்டு மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்க செயல்...

இப்போது தான், அந்த வலைத்தளத்திற்கு சென்று ஒரு கண்டன பின்னூட்டம் இட்டு வந்தேன்...

நாஞ்சில் பிரதாப் சொல்வது போல், வார்த்தையில் சிறிது நிதானம் காட்டவும்...

ஏஞ்சலின் சொல்வது போல், உங்களின் பதிவின் இடையே அல்லது பதிவின் புகைப்படங்களில் உங்களின் ப்ளாக் பெயர் வருமாறு செய்யலாம்...

GEETHA ACHAL said...

என்ன கொடுமை...எப்ப பார்த்தாலும் இப்படி தான் நடக்குது...என்னுடைய குறிப்பையும் அப்படி தான் செய்தாங்க..முதலில் Cut copy யினை யாரும் செய்ய முடியாதபடி உங்க ப்ளாகில் செய்யுங்க ...அதுக்காக கோட் இருக்கின்றது...googleயில் தேடி பாருங்க...நானும் இப்ப அப்படி தான் செய்து இருக்கின்றேன்...

கெக்கே பிக்குணி said...

ஜலீலா,
அன்னு சொல்வது போல செய்துடுங்க. நான் உங்களின் பதிவான "தக்காளி கொள்ளு அடை" மட்டும் தான் செக் செய்தேன். வெகு தெளிவாக, உங்கள் த.கொ.அடைக்கான சமையல் குறிப்பு பதிவு(2009/10), தமிழ் செஃப் காப்பி செய்யப்பட்ட பதிவுக்கு (2009/11) ஒரு மாதத்துக்கு முந்தைய தேதியிட்டு இருக்கு. படங்களை வேறு காப்பி அடிச்சிருக்காங்க! இந்த விவரத்தையெல்லாம் தெளிவு படுத்திடுங்க, அன்னு கொடுத்த கூகில் ஃபார்மில்.

அத்தோடு, இனி உங்கள் பதிவில் போடும் படங்களில் உங்கள் பதிவின் பெயர்/தேதி (அ) காப்பிரைட்டு டு ஜலீலான்னு எழுதிடுங்களேன்.

ஹர்ஷினி அம்மா said...

ஆமாம் ஜலீலா அக்கா உங்க குறிப்பும், அதே போட்டோவும் இருக்கு!!!!....திருப்பவும் ஆரம்பிச்சுடாங்க அக்கா இவங்களை எல்லாம் திருத்தவே முடியாது.

Jaleela Kamal said...

கவுசல்யா, ஓவ்வொரு பதிவும் போட சிரமம் தான். ஆனால் இவ்வளவு ஈசியா அவங்க எடுத்து போட்டு கொண்டது , ஒன்றிரண்டு என்றால் சரி விட்டு விடலாம். ஒட்டு மொத்தத்தையும் இப்படி அதுவும் என் போட்டோக்களுடன். அதான் ரொம்ப கடுப்பா போச்சு.

Jaleela Kamal said...

கவிசிவா நான் குறிப்பிடும் இடம் எல்லாம் அறுசுவை தோழிகள் குறிப்பும் இருக்கு, எதுவும் பிரயோஜனம் இல்லை.
கொஞ்ச ந்நாள் முன் ஜே மாமியும் இதே தான் சொன்னார்கள். என்ன செய்ய அடுத்த குறிப்ப போடவே யோசனையா இருக்கு

Jaleela Kamal said...

பயணமும் எண்ணமும். வருகைக்கும் அங்குபதில் போட்டத்தற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

எம் அப்துல் காதர் , தமிழ் எழுத்து சில இடத்தில் வோர்ட் டாக்குமெண்டில் நல்ல வருது சும்ம சும்மா டைப் பண்ணி காப்பி செய்து போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது,
என் ஹெ எம் ரொம்ப ஈசியா இருந்தத்து ஏனோ தெரியவில்லை, இப்ப சரியா வொர்க ஆகல. போஸ்ட் போடும் போது கம்போஸில் பேஸ்ட் செய்ய முடியவில்லை.

Jaleela Kamal said...

சி.பி செந்தில் குமார் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அங்கு தமிழிழ், தமிழ் மனம் போன்ற ஓட்டு பட்டைகள் இனைக்க படவில்லை.

அஹ‌ம‌து இர்ஷாத் said...

என்ன‌த்த‌ சொல்ற‌து..உங்க‌ள் கோப‌ம் புரிகிற‌து..

Jaleela Kamal said...

ஆசியா உங்கள் குறிப்பும் அங்கு இருக்க்கலாம். எனக்கும் கைவலிதான் , உட்கார முடியவில்லை என்றால் டாக்டரிடம் சென்று உடனே பாருங்கள். பதிவு நிரைய போட்டு விட்டோமா அது போடவில்லை என்றால் ஒரு மாதிரியாக இருக்கும் , தான் ம்முன்று நாளைக்கு ஒரு பதிவாவது போடுவது.
இதில் என் குறிப்பு 65 % என்றால் மற்ற தோழிகலுடையது 35 % இருக்கு

Jaleela Kamal said...

அன்னு நீங்கள் சொல்ல வில்லை என்றால் ஒன்றுமே தெரிந்து இருக்காது.. கண்டிப்பாக நீஙகள் குறிப்பிட்டுள்ள படி செய்கிறேன்.

Jaleela Kamal said...

கோபி அவர்களே, இப்படி போட்டாலாவது உரைக்குதான்னு பார்க்கலாமுன்னு தான் அப்படி எழுதியது.
பெயரை போட முயற்சிக்கிறேன்

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் ஆமாம் அறுசுவை தோழிகளின் குறீப்பு எல்லா இடத்திலும் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே காப்பி பண்ணாம இருக்க கோட் போட்டு தான் வைத்துள்ளேன்.
வேறு ஏதும் தெரிந்தா சொல்லுங்கள்.

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் ஆமாம் அறுசுவை தோழிகளின் குறீப்பு எல்லா இடத்திலும் திருடப்பட்டுள்ளது. ஏற்கனவே காப்பி பண்ணாம இருக்க கோட் போட்டு தான் வைத்துள்ளேன்.
வேறு ஏதும் தெரிந்தா சொல்லுங்கள்.

Jaleela Kamal said...

கெக்கே பிக்குனி வாங்க வருகைக்கு மிக்க நன்றி.
நீங்கள்சொல்வது போல் இனி அடுத்த குறிப்பில் கவனமாக பெய்ரை குறிப்பிட்டு போடுகிறேன்.

Jaleela Kamal said...

ஹர்ஷினி அம்மா திரும்பவும் இல்ல இது தொடர்ந்து கொண்டேஎ தான் இருக்கு.

Jaleela Kamal said...

அகமது இர்ஷாத் என்ன சொல்வது ஒன்றிரண்டு என்றால் சரி பரவாயில்லை அனைத்தையும் எடுத்து போட்டால் எப்படி இது கொடுமை தானே?

Jaleela Kamal said...

இந்த பதிவ படிச்சிட்டு அங்கு போய் பதில் கொடுத்த அனைத்து நலல் உள்ளங்களுக்கும் மிக்க் நன்றி

மெயினா அய்யுப் சொம்ப தூக்கி போய் நாட்டம செய்து வைத்தமைக்கு மிகக் ந்னறி

அன்னு said...

http://picmarkr.com/index.php

Sister, in this above link we can do free watermarks for the whole photo, easily. In this way the photo cannot be cropped or altered to show just few parts. Whole photo has copyright text. This is one solution for photo. But no idea to protect text :(

Will see insha Allah if I can get any help on this text protection also.

Chitra said...

என்ன கொடுமை, அக்கா, இது? இந்த மாதிரி திருடி போடுவதை தடுக்க வழியே இல்லையா?

சாருஸ்ரீராஜ் said...

அக்கா உங்கள் சமையல் குறிப்பை ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பார்த்து சந்தோசபட்டு வாழ்த்த வந்தேன். இங்கு வந்து பார்த்தா என்ன கொடுமை இது , ஒரு வரி கூட மாறாமல் உங்கள் குறிப்புகளை கண்டு வேதனை படுகிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

அக்கா உங்கள் சமையல் குறிப்பை ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பார்த்து சந்தோசபட்டு வாழ்த்த வந்தேன். இங்கு வந்து பார்த்தா என்ன கொடுமை இது , ஒரு வரி கூட மாறாமல் உங்கள் குறிப்புகளை கண்டு வேதனை படுகிறேன்.

ஸாதிகா said...

http://www.eegarai.net/-f2/-t23106.htm இதனைப்பாருங்கள் ஜலி. என்னதான் செய்வது.

kavisiva said...

என்ன கொடுமை இது சாதிகா அக்கா இது?! உங்கள் பளிச் பெண்கள் பதிவை அப்படியே சுட்டுப் போட்டிருக்கானுங்க. தப்பித் தவறி கூட உங்கள் வலைப்பூவின் பெயர் இல்லையே :-(

Jaleela Kamal said...

thank you annu

Jaleela Kamal said...

ஆமாம் சித்ரா என்னு்ையதுன்னு இல்் மற்ற பதிவர்கள் உடைய நல்ல பதிவுகளும் அப்பேஸ் தான் பன்றாங்க

Jaleela Kamal said...

ஆமாம் ஒரு வ்ி ்ிடாமா நான் பொதுவா ்ொடுக்்ு்் டிப்ஸ் கள் எல்லாம் ஒ ட்டும மொத்த்ையும் எடுத்து போட்டு இருக்காங்க

Jaleela Kamal said...

ஸாதிகா அக்க நிங்க ்ொடூத லிங்க் இத ்ிட பெரு்்்த அனியாமா இ்ுக்கே

Jaleela Kamal said...

ஸாதிகா அக்க நிங்க ்ொடூத லிங்க் இத ்ிட பெரு்்்த அனியாமா இ்ுக்கே

கெக்கே பிக்குணி said...

ஸாதிகா / ஜலீலா, இந்த ஈகரை (மலேசிய) இணைய தளத்தில், கீழ்கண்டவாறாக ரிப்போர்ட் செய்திருக்கிறேன். உங்கள் யாரால் முடியுமோ, http://www.eegarai.net/-f2/-t23106.htm என்கிற சுட்டியிலிருந்து, "Report an abuse"என்பதை க்ளிக் செய்து, கீழ்கண்டவற்றை நீங்களும் சொல்லலாம்.

Your website will be reported if your copy is not removed.

http://www.eegarai.net/-f2/-t23106.htm is a direct infrigement of your own terms that blog-posts from others' blogs were copied and posted with NO EXPLICIT REFERENCE TO THE original blogger.

Original blogger: http://www.blogger.com/profile/09198400544301300185 - see her post at http://shadiqah.blogspot.com/2010/03/blog-post_07.html, posted March 7, 2010. This was copied/pasted to your website on March 9, 2010.

It is interesting that
1. You have disabled copying facility in your website, yet allow this kind of behavior among people who paste (NOT post) to your site.
2. The person who pasted this: அப்புகுட்டி is a வழிநடத்துனர் in your website. What வழி does he show?

Vijisveg Kitchen said...

Jaleee Today I came and saw how bad, wow this is really cheating appa.
Really it is cheating and very very bad.
I think before u metioned one of blog. I guess the same.
Wha tu think?

My computer had virus problem I am using my hubby's computer.

I don't have tamil font.
Sorry.

Ramya said...

jaleela akka, pls do not stop publishing ur posts. i am a newly married girl. before marriage, even i dont know how to cook. then i followed ur blog to learn cooking. every sunday i am following your blog while cooking all non-veg recipes. it is coming out very good and my relatives appreciated a lot. i am referring ur blog to my friends to learn cooking. it is very useful for us. "thirudanaai paarthu thirunthuna dhan thiruttai olika mudiyum". so dont mind those looses. keep writing. i hope u will write more n more for all ur "samayal katru kollum thangachis" .

அமைதிச்சாரல் said...

அடப்பாவமே.. இப்படி அடுத்தவங்க உழைப்பை உறிஞ்சுறவங்களை என்ன செய்யலாம்??..

Jaleela Kamal said...

கெக்கே பிக்குனி
அது ஸாதிகா அக்க்காவின் பதிவு அதையும் காப்பி அடிச்சிட்டாஙக்.

எனன் செய்ய திருந்தாத ஜென்மங்கள்

Jaleela Kamal said...

ரம்யா இதை தெரிவிகக்வாவது வந்து பதில் போட்டீர்களே

உஙக்ளை போல் நிறைய தங்கை களின் சமையலறையில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

நீங்களும் இதை பார்த்து கை தேர்ந்ததில் மிக்க மகிழ்சி,

குறிப்பு காப்பி செய்ய பட்டது இது முதல் முறை அல்ல

பல பேர் பல இடத்தில் காப்பி அடித்து உள்ளார்கள்

கொஞ்சம் மனக்கழ்டதால் சமையல் குறிப்புகள் போடல பிடிக்கல நேரமில்லை ,. சிறு இடைவெளிக்கு பிறகு கண்டிப்பாக தொடருவேன்

Jaleela Kamal said...

அமைதி சாரம் ஒன்று இரண்டு குறிப்பு என்றால் பரவாயில்லை.
இப்படி ஒட்டு மொத்ததையும் காப்பி அடித்தால் எனன் செய்ய.

ஆள் ரொம்ப உஷாரா, வீவ் புரொஃபைல் எல்ல்லாம் வைகக்ல

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா