Tuesday, January 18, 2011

சில பெண்களுக்கு கோபம் வந்தால்(இத படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வராதீங்க நாட்டுல நடக்கிற நடப்பை சொல்கிறேன் யார்கிட்ட போய் வேனுமுன்னா கேளுங்கள், உங்களிடம் உள்ள கெட்ட குணம் என்ன என்று கேட்டால் , என் முன் கோபம் தான் என்பார்கள். )1. சில பெண்களுக்கு பேருக்கு டென்ஷன் யார் மேலாவது கோபம் வந்தால் தான் என்ன‌ செய்கிறோம் என்றே அவ‌ர்க‌ளுக்கு தெரியாது.கோபத்தில் என்ன பேசினார்கள் என்று கூட தெரியாது.

2.அவர்கள் கோபம் முழுவதும். பிள்ளைகள் மேல தான் போய் விழும். வீட்டுக்கார் மேல கோபமா? பக்கத்து வீட்டு அம்மா மேல கோபமா? வீட்டில் உள்ள பெரியவர்கள் மேல உள்ள கோபமா?
 பிள்ளைகளுக்கு தான் (முதுகில் நல்ல எண்ணைய தடவி தோசை சுடுவது) அடி டமால் டிமீலுன்னு விழும் பிள்ளைகளுக்கும் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது.

3. வெளிநாட்டில் உள்ள கணவரிடமிருந்து வரும் போன் அன்று வரலையா உடனே கிடைத்தது பிள்ளைகள் காரணமே இல்லாமல் சாத்து சாத்துன்னு சாத்தரது, அந்த ஆளு அங்கு சொகுசா  ஜாலியா இருக்காரு , இதுங்க‌ல‌ க‌ட்டி நான் தான்மேய்க்க‌ வேண்டியாதா போச்சு ஒரு நிம்ம‌தி கிடையாது..என்று பொல‌ம்ப‌ ஆர‌ம்பித்து விடுவார்க‌ள்.

4. அவர்கள் அன்று சுட இருக்கும் தோசை ரொட்டி எல்லாம் பிள்ளைகள் முதுகில் தான் விழும்.

5. சில பேர் கோபம் வந்தால் குழந்தைகளை ஒத்த கையாலா தூக்கி இந்த பக்கம் வீசுவார்கள்.இத‌னால் பிற்கால‌த்தில் ஷோல்ட‌ர் எலும்பு தேய்மான‌ம் ஆகி பல பின் விளைவிகள் ஏற்ப‌டும்.அது யாருக்கும் தெரிவதில்லை. இது நிறைய வீட்டில் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கு

6. பிள்ளைகள் தெரியாம தண்ணி கொட்டிட்டா கூட போட்டு சாத்துவது , ஒரு நிமிஷம் கொட்டியது நம்மளா இருந்தா என்ன செய்வோம். கொஞ்சம் யோசிக்கலாமே,அது தண்ணிய கொட்டிட்டு நடுங்கி கொண்டே நிற்கும்.
இதுலேயே மூச்சா போயும் வைக்கும், அதுக்கும் சேர்த்து நாலு சாத்து..

7. ஆனால் வேண்டுமென்றே ஜித்தில் போட்டு கொட்டும் பிள்ளைகளை , அப்படி உள்ள குழந்தைகளுக்கு இரண்டு போடதான் செய்யனும்.

8. ரொம்ப கோபப்படுவரிடம் ரொம்ப கோபப்பட்டா தோல் சுருங்கி சீக்கிரம் வயசாகி விடும் கிழவி பொல் ஆகி விடுவாய் என்று சொல்லி பாருங்கள், அடுத்ததடவை கோபப்படும் போது கொஞ்சம் யோசிப்பார்கள்.

9. இது நான் எங்கோ கேள்வி பட்டது, ஒரு கிரிக்கெட் பேட்டை எடுத்து கொண்டு தலையனையை கண்ட மட்டுக்கும் சாத்துவார்களாம்.

10. //நான் கேள்வி பட்டது சில பேர் வீட்டில் உள்ள கண்ணாடி பாத்திரத்தை முற்றத்தில் போய் கோபம் தீரும் வரை போய் உடைத்து விட்டு வருவார்களாம்.//

11. சில‌ டென்ஷனை ப்போக்க பேர் அரிசி , அவல், மாவு எடுத்து என்னேர‌மும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்க‌ள்.சில பேர் நகத்தை நறு நறு வென கடித்து கொண்டு இருப்பார்கள். நகம் தீர்ந்து ரத்தம் வருவது கூட தெரியாமல் இருப்பார்கள்

.இன்னும் நிறைய இருக்கு ..  ரங்ஸ்கள் உருட்டு கட்டையால அடி வாங்குவத எல்லா படத்துலயுமே காண்பிச்சுடுறாங்க அத பற்றி சொல்ல தேவையில்லை.
இப்படி கோபப்படுவதால் உஙக்ளை சிறு வயதிலேயே பீபீ எகுறும் நிலைக்கு கொண்டு போய் விடும். இல்லை லோ பீபீ ஆகி அடிக்கடி மயக்கம் வீட்டில் மயக்கம் போட்டு விழுந்தால் பரவாயில்லை தனியாக எங்கும் வெளிய்ல் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்தால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.ஹார்டடாக்கே வரலாம்கோபபட்டு எதையும் சாதிக்க போவதில்லை வீண் மனஸ்தாபத்தை தான் விலைக்கு வாங்கி கொள்ளனும்.. பொறுமையை கையாளுங்கள் கோபத்தை தவிருங்கள். .

இப்படி பட்ட கோபத்தை தவிர்க்க எவ்வளோ நல்ல விஷியங்கள் இருக்கு அதில் நம்மை திசை திருப்பலாம். துணி தைப்பது, விதவிதாமாக ஆர்ட் வொர்க் செய்வது, வித விதமாக சமைப்பது, பிடித்த இசை கேட்பது, இது போல் நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.66 கருத்துகள்:

ஆமினா said...

//(இத படிச்சிட்டு யாரும் சண்டைக்கு வராதீங்க //
அப்படியா
இருங்க படிச்சுட்டு வரேன்

ஆமினா said...

னுண்ஐ தான் அக்கா
நாம் கவனத்தை வேறு பக்கம் திருப்பினால் கண்டிப்பாக கோபம் கொள்ள நேரமே இருக்காது

எல்லா விஷயத்தையும் அழகா சொல்லியிருக்கீங்க

எல் கே said...

சரி எங்களுக்கு கோபம் வந்தா யார் மேல காட்றது

Jaleela Kamal said...

ஆமினா, எழுதும் போதே யோசித்தேன் இன்னும் நிறைய இருக்கு சேர்த்து போடலாமுன்ன்ய், ஆனால் பிலாக்கிலேயே கல்லு பறக்குமோன்னு பயந்து தான் ஹிஹி
கொஞ்சமா நிறுத்திக்கிட்டே ஹிஹி ,

Jaleela Kamal said...

எல்.கே உங்களுக்கெல்லாம் இப்ப கோபம் வராது. ஏன்னா நீங்கல் ரொம்ப பிஸி.

நாலு பிலாக், வலை சர ஆசிரியர், எங்கே கோபப்பட நேரம் இருக்கு?

ராமலக்ஷ்மி said...

அழகாச் சொன்னீங்க ஜலீலா:))!

//. பிள்ளைகள் தெரியாம தண்ணி கொட்டிட்டா கூட போட்டு சாத்துவது , ஒரு நிமிஷம் கொட்டியது நம்மளா இருந்தா என்ன செய்வோம். கொஞ்சம் யோசிக்கலாமே,அது தண்ணிய கொட்டிட்டு நடுங்கி கொண்டே நிற்கும்.
இதுலேயே மூச்சா போயும் வைக்கும், அதுக்கும் சேர்த்து நாலு சாத்து..//

பார்த்திருக்கிறேன்:))!

சிந்திக்க வைக்கிற நல்ல பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

கோபமே எல்லா அழிவுக்கும் காரணம். நல்ல பகிர்வு. நன்றி.

Chitra said...

nice post. stress.... stress..... tension ..... tension.... என்று சொல்லியே, நிறைய பெண்கள், கோபத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். :-(

புதுகைத் தென்றல் said...

பெண்களின் கோபத்துக்கு இயலாமை, அங்கீகாரம் இல்லாமை போன்றவைதான் காரணம்.

shalihazubair said...

 அருமையான பதிவு.சொல்லி இருக்கும் விதம் சூப்பர்.அதெல்லாம் சரிங்கோ லாத்தா.லாத்தாவுக்கு கோபம் வந்தால் என்ன செய்வீங்க. உருட்டு கட்டையா?அம்மாடியோ நான் இல்லபா.
அன்புடன்
சித்திஷா.

shalihazubair said...

 அருமையான பதிவு.சொல்லி இருக்கும் விதம் சூப்பர்.அதெல்லாம் சரிங்கோ லாத்தா.லாத்தாவுக்கு கோபம் வந்தால் என்ன செய்வீங்க. உருட்டு கட்டையா?அம்மாடியோ நான் இல்லபா.
அன்புடன்
சித்திஷா.

asiya omar said...

ஜலீலா நிறைய சொல்லிருக்கீங்க,கோபப்படறவங்க யோசிப்பாங்க.

அன்புடன் மலிக்கா said...

அக்கா அருமையான பகிர்வுக்கா,,, கோபத்தின்மேல் கோபம்தான் வருது அது ஏன் நமக்கு வருதுன்னு..

சே.குமார் said...

அழகா சொல்லியிருக்கீங்க.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் ஜலீலாக்கா..

கோபம்..மனிதனை முட்டாள் ஆக்கிவிடும்..கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்காது.

பெண்களின் கோபம் அவர்களை தன்னிலை மறக்கச்செய்துவிடுவதும் உண்மை.(இது எல்லோருக்கும் பொருந்தாது.)

அதுக்காக கோபப்படவேண்டிய நேரத்தில் கோபப்படாமலும் இருக்ககூடாது..

//சில பேர் கோபம் வந்தால் குழந்தைகளை ஒத்த கையாலா தூக்கி இந்த பக்கம் வீசுவார்கள்.இத‌னால் பிற்கால‌த்தில் ஷோல்ட‌ர் எலும்பு தேய்மான‌ம் ஆகி பல பின் விளைவிகள் ஏற்ப‌டும்.அது யாருக்கும் தெரிவதில்லை.//

இந்த பிரச்சனை யாருக்கு ஏற்படும்னு சொல்லலையே..வீசுபவர்களுக்கா??இல்லை வீசப்பட்டவர்களுக்கா???

அன்புடன்
ரஜின்

R.Gopi said...

கோபமே நம் சந்தோஷத்திற்கு எதிரி...

கோபம் கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

கோபம் குறைத்து, புன்னகையை வளர்த்தால் நம் முகம் பளிச்சென்று இருக்கும்...

நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள்...

சரி, உங்களின் கோப குணம் இப்போ கொஞ்சமாவது குறைந்து இருக்கிறதா?
கோபம் கொள்ளாமல் பதிலளிக்கவும்..

இனியவன் said...

. சில பேர் கோபம் வந்தால் குழந்தைகளை ஒத்த கையாலா தூக்கி இந்த பக்கம் வீசுவார்கள்.இத‌னால் பிற்கால‌த்தில் ஷோல்ட‌ர் எலும்பு தேய்மான‌ம் ஆகி பல பின் விளைவிகள் ஏற்ப‌டும்//
குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாதோ ????

enrenrum16 said...

//சில பேர் கோபம் வந்தால் குழந்தைகளை ஒத்த கையாலா தூக்கி இந்த பக்கம் வீசுவார்கள்.இத‌னால் பிற்கால‌த்தில் ஷோல்ட‌ர் எலும்பு தேய்மான‌ம் ஆகி பல பின் விளைவிகள் ஏற்ப‌டும்.//
கேட்கவே பயங்கரமா இருக்கு...

ஜஸ்ட் சில நொடிகள் யோசித்தாலே குழந்தைகள் மீது கோபப்படுவதைத் தவிர்க்கலாம்...

நல்ல பதிவுக்கா...

அமைதிச்சாரல் said...

நல்ல இடுகை ஜலீலா.. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

ஆனந்தி.. said...

சொந்த அனுபவம் மாதிரி தெரியுதே :)))))

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஹாஹா ரங்க்ஸ் எல்லாம் ஏண்டா படிச்சோம்னு வருந்துறாங்களாமா.. இப்பிடி பூரிக்கட்டையை எல்லாம் ஞாபகப் படுத்திட்டீங்கன்னு

GEETHA ACHAL said...

பெண்களுக்கு மட்டும் தான் கோபம் வருமா...ஆண்களுக்கு வருமே...

பகிர்வுக்கு நன்றி...

Jaleela Kamal said...

எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க பதில் இங்கு கொடுக்கலாமா?
இல்லை பதிவாவே போடலாமா அவ்வளவு பதில் இருக்கு

கீதா ஆச்சல் ஆண்களுக்கும் கோபம் வரும் ..
வந்தால் அது மிக பயங்க்ரம்

S.Menaga said...

நல்லா சிந்திக்க வைக்கிற பதிவு... சிலநேரம் நானும் கோபம் வந்தா என்ன செய்யறேன்னே தெரியல..கரெக்டா சொல்லிருக்க்கீங்க அக்கா..

ஸாதிகா said...

அப்படியே அடுத்த பதிவு ரங்ஸ்களுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்றும் ஒரு பதிவை எழுதி விடுங்கள் ஜலி.(எல் கேக்கு பதில் சொன்ன மாதிரி ஒற்றை வரியில் பதில் சொல்லப்படாது.)

angelin said...

sariya sollirukkeenga jaleela .few years ago i had this problem.
after that i decided to concentrate and be occupied in crafts arts and COOKING .NOTE THAT COOKING variety of food items with the help of you and other sisters.i realized HAPPINESS IS AROUND AND WITHIN US.
nalla padhivu .

Geetha6 said...

Jaleela Kamal
அருமையான பதிவு.சமீபத்தில் எதற்காக கோபம் வருகிறது என்று படித்தேன்.என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.நீங்கள் சொன்னது போல் என் டைரி 2010 பற்றி எழுதி உள்ளேன்.நன்றி

Jaleela Kamal said...

வாங்க ஆமீனா, நான் நம்மை பிடித்த வேலைகளில் பிஸியாக வைத்து கொண்டால் கண்டிப்பாக கோபத்தை தவிர்ககலாம்.

Jaleela Kamal said...

// ராமலக்ஷ்மி said...
அழகாச் சொன்னீங்க ஜலீலா:))!

//. பிள்ளைகள் தெரியாம தண்ணி கொட்டிட்டா கூட போட்டு சாத்துவது , ஒரு நிமிஷம் கொட்டியது நம்மளா இருந்தா என்ன செய்வோம். கொஞ்சம் யோசிக்கலாமே,அது தண்ணிய கொட்டிட்டு நடுங்கி கொண்டே நிற்கும்.
இதுலேயே மூச்சா போயும் வைக்கும், அதுக்கும் சேர்த்து நாலு சாத்து..//

பார்த்திருக்கிறேன்:))!

சிந்திக்க வைக்கிற நல்ல பதிவு.

January 18, 2011 9:25 AM//


வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி.

ஆமாம் இது நிறைய இடத்தில் நடந்தது.

Jaleela Kamal said...

//வெங்கட் நாகராஜ் said...
கோபமே எல்லா அழிவுக்கும் காரணம். நல்ல பகிர்வு. நன்றி//

வாஙக் வெங்கட நாகராஜ், ஆமாம் கோபம் தான் எல்லா அழிவுக்கும் காரணம்.//

Jaleela Kamal said...

// Chitra said...
nice post. stress.... stress..... tension ..... tension.... என்று சொல்லியே, நிறைய பெண்கள், கோபத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். :-(

January 18, 2011 10:21 AM//

நாம் சித்ரா பெண்கள் எதுக்கெடுத்தாலும் கோபப்படுவதால் பின் விளைவுகளை சிந்திக்காததால் அதிக டென்ஷன், ஸ்ட்ரெஸ் பிராப்ளம் வருது.

Jaleela Kamal said...

//புதுகைத் தென்றல் said...
பெண்களின் கோபத்துக்கு இயலாமை, அங்கீகாரம் இல்லாமை போன்றவைதான் காரணம்.

January 18, 2011 10//

ஆமாம் புதுகை தென்றல் இயலாமல் போன காரியத்துக்காகவும் கோபபடுபவர்கள் நிறைய உண்டு.

Jaleela Kamal said...

//shalihazubair said...
அருமையான பதிவு.சொல்லி இருக்கும் விதம் சூப்பர்.அதெல்லாம் சரிங்கோ லாத்தா.லாத்தாவுக்கு கோபம் வந்தால் என்ன செய்வீங்க. உருட்டு கட்டையா?அம்மாடியோ நான் இல்லபா.
அன்புடன்
சித்திஷா.

January 18, 2011 10//

வாங்க அம்மணி சித்திஷா, நான் ஏன் பொறுமையா பதிவு போடுரேன்னா>?

நான் தான் அடுத்து என்ன சமைக்கலாம், அடுத்து என்ன பதிவு போடலாம் இப்படியே மைண்டில் ஓடு கொண்டு இருப்பதால், கோபப் பட நேரம் இல்லை.
ஹிஹி

Jaleela Kamal said...

// asiya omar said...
ஜலீலா நிறைய சொல்லிருக்கீங்க,கோபப்படறவங்க யோசிப்பாங்க.

January 18, 2011 11:4//

வாங்க ஆசியா ஆமாம் கோபப்பட்டுகிறவர்கலுக்கு சிறிது யோசிக்க வைக்கும்.
வருகைக்கு மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

// அன்புடன் மலிக்கா said...
அக்கா அருமையான பகிர்வுக்கா,,, கோபத்தின்மேல் கோபம்தான் வருது அது ஏன் நமக்கு வருதுன்னு..

January 18, 2011 11:42 AM//

எம்மா வாம்மா மலிக்கா கோபத்து மேலேயே கோபமா. நேர ஏதாவது வாட்டர் பால்ஸ் கீழே போய் நின்னுடுங்க

இப்படி எடக்கு மடக்கா கேல்வி கேட்டா எபபூடி?

Jaleela Kamal said...

// சே.குமார் said...
அழகா சொல்லியிருக்கீங்க.

January 18, 2011 1:09 PM/

நன்றி சே.குமார் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஸலாம் ரஜின்

பிள்ளைகளை ஒத்தகையால் தூக்கி வீசினால் ,

பிற்க்காலத்தில் பிள்ளைகளுக்கு , ஷோல்டர் எலும்பு டிஸ் லொகேட் ஆகும் என்பது என் கருத்து
(இது சமீபத்தில் இரண்டு முன்று பேருக்கு ஷோல்டர் எலும்பு டிஸ்லொகேட் ஆகி இருக்குன்னு டெஸ்ட் எடுத்ததில். , இன்ன்னும் மற்ற கழுத்து வலி பிராப்ளத்தாலும்
டாக்டர் சொன்னது சின்னதில் இருந்தே இருக்கு.
என்|று
அப்ப ஓரளவுக்கு வாலிப வயதில் யாருக்கும் அது பெருசா அஃபக்ட் ஆக போவதில்லை.

வயசாக வயசாக இந்த எலும்பு தேய்மானம், கழுத்து வலி,ஷோல்டர் பெயின் எல்லாம் ஏற்படும் போது தெரியும்,

அதான் இஷ்டத்துக்கும் ஒத்தகையால பிள்லை களை தூக்கக்கூடாது.
அப்பவே வலி ஏற்பட்டாலும் , பிற்காலத்தில் பிராப்ளம் தான் என்பது என் கருத்து, ( இது ஒரு ஆலோசனை தான் சின்ன டிப்ஸ் தான்)
அதுக்குன்னு யாரும் பத்து ஆர்த்தோ டாக்டர கூப்பிட்டு வந்துடாதீங்க

Jaleela Kamal said...

// R.Gopi said...
கோபமே நம் சந்தோஷத்திற்கு எதிரி...

கோபம் கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

கோபம் குறைத்து, புன்னகையை வளர்த்தால் நம் முகம் பளிச்சென்று இருக்கும்...

நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள்...

சரி, உங்களின் கோப குணம் இப்போ கொஞ்சமாவது குறைந்து இருக்கிறதா?
/கோபம் கொள்ளாமல் பதிலளிக்கவும்//

கோபி என்னை கோர்த்து விடுறீங்க பாருங்கள்.\\

நான் என் கோபத்தை எப்பவோ குறைத்தாச்சு.

ஏன் கோபப்பட்டோம், கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே என்று .
நினைத்து நினைத்து குழப்பம் கொள்ளுவதை விட்டு, பொறுமையாக யோசிப்பதும் கோபம் கொள்ளாமல்,என்றூ எப்பவோ முடிவெடுத்தாச்சு.

ஆனால் தேவையான இடத்தில் கோபம் வரத்தான் செய்யும் ,

Jaleela Kamal said...

இனியவன் , ஏற்கனவே பதில் ரஜின் கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்துள்ளேன்.

பிற்கால பிரச்சனை என்பது,
வெயிட் ஏதும் தூக்கமுடியாது, ஷோல்டரில் வலிக்கும்.

Jaleela Kamal said...

ஆமாம் என்றென்றும் 16 இப்படி பதிவுகள் மூலம் நாலு பேருக்கு சொன்னால் அபப்டி இது போல நிகழ்வுகளை பார்பப்வர்கள், இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லாலாம் இல்லையா?

Jaleela Kamal said...

//அமைதிச்சாரல் said...
நல்ல இடுகை ஜலீலா.. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

January 18, 2011 5:54 PM//

நன்றி அமைதிச்சாரல்

Jaleela Kamal said...

ஆனந்தி.. said...
சொந்த அனுபவம் மாதிரி தெரியுதே :)))))

January 18, 2011 5:59 PM

ஆனந்தி ஹி ஹி இதானே வேண்டாம் என்பது.
( அந்த தண்ணி கொட்ட்டும் விஷியம் என் பையன் சின்னாதா இருக்கும் போது நடந்து இருக்கு ஆனால் உச்சா போகல///
ஆனா ஆண் குழந்தைகள் வீட்டிலேயே, கிரிக்கெட், மற்றும் பால் ஆடுவதால் தான் பெண்கலுக்கு இந்த் டென்ஷன் கோபம் வருவது,
//


ஆனால் இப்ப கொஞ்சநால் முன்பு ஒரு இடத்தில் பார்த்தேன், அந்த பையன் பயத்தில் உச்சா போனதை.

Jaleela Kamal said...

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//ஹாஹா ரங்க்ஸ் எல்லாம் ஏண்டா படிச்சோம்னு வருந்துறாங்களாமா.. இப்பிடி பூரிக்கட்டையை எல்லாம் ஞாபகப் படுத்திட்டீங்கன்னு

January 18, 2011 6:21 PM/

தேனக்கா அந்த போட்டவ பார்த்து எனக்கு செம்ம சிரிப்பு, பாவம் பக்கத்துல அந்த அம்மா பக்கத்தில் பாவமா உட்கார்ந்து இருக்கிறார் பாருஙக்ல்
அடுத்த அடி நமக்கு விழுந்துருமோன்னு.

Jaleela Kamal said...

//S.Menaga said...
நல்லா சிந்திக்க வைக்கிற பதிவு... சிலநேரம் நானும் கோபம் வந்தா என்ன செய்யறேன்னே தெரியல..கரெக்டா சொல்லிருக்க்கீங்க அக்கா//

மேனகா ஒர்ரே ஒரு குழ்ந்தை இருக்கும் இடத்தில் ஓரளவுக்கு சமாளிக்கலாம்., இரண்டு மூன்று குழ்ந்தை இருக்கும் போதுஅவர்கள் போடும் சண்டைய சமாளிக்க முடியாது. அந்த இடத்தில் பெண்கள் பொறுமை இழந்து கோபப்படுவது.,

இதை இல்லன்னு யாரும் சொல்லமுடியாது, எல்லார் வீட்டிலும் நடப்பது தான்..

Jaleela Kamal said...

//ஸாதிகா said...
அப்படியே அடுத்த பதிவு ரங்ஸ்களுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்றும் ஒரு பதிவை எழுதி விடுங்கள் ஜலி.(எல் கேக்கு பதில் சொன்ன மாதிரி ஒற்றை வரியில் பதில் சொல்லப்படாது.)

January 19, 2011 12:30 AM/

ரங்ஸ் கோபப்படும் பதிவ நான் போட்டா எல்லாரும் உருட்டுகட்டையோடு தான் பதில் போடுவாங்க.

Jaleela Kamal said...

ஏஞ்சலின், என் சமையல் மூலம் உங்களுக்கு சந்தோஷம் கிடைத்தது எனக்கு கேட்க ரொப்ம்ப சந்தோஷமாக இருக்கு .

எல்லாரும் அப்படி தான் பா, சிந்திககா ஆரம்பித்தால் நம்மை நாமே சரி செய்து கொள்ளலாம்.

Jaleela Kamal said...

//Geetha6 said...
Jaleela Kamal
அருமையான பதிவு.சமீபத்தில் எதற்காக கோபம் வருகிறது என்று படித்தேன்.என் அடுத்த பதிவில் சொல்கிறேன்.நீங்கள் சொன்னது போல் என் டைரி 2010 பற்றி எழுதி உள்ளேன்.நன்றி

January 19, 2011 11:57//

கீதா 6 வந்து படிக்கிரேன் பா, கண்டிப்பாக பதிவை போடுங்கள்.

Jay said...

Hy Jaleela,
nice space you have...very lively post..happy to follow u..
do check out mine sometime..
Tasty appetite

Viki's Kitchen said...

My weakness too. But I start crying when I get angry:)

mahavijay said...

நி்ஜம்தான்

கோபம் வருபவர்கள் இதை பார்த்தாவது மாறட்டும்

Nithu said...

Very true!!

Jaleela Kamal said...

//Jay said...
Hy Jaleela,
nice space you have...very lively post..happy to follow u..
do check out mine sometime..
Tasty appetite//
Dear Jay thank you for your first visit
sure i will check your blog its very nice

Jaleela Kamal said...

//Viki's Kitchen said...
My weakness too. But I start crying when I get angry:)

January 19, 2011 9:07 PM/
ஆமாம் விக்கி பேச முடியாதசில .
கோபத்தை எப்படி காண்பிப்பது என்று தெரியாமால் சில பெண்களுக்கு இப்படி அழுகை வரும்

Jaleela Kamal said...

// mahavijay said...
நி்ஜம்தான்

கோபம் வருபவர்கள் இதை பார்த்தாவது மாறட்டும்

January 19, 2011 10:43 PM/

மஹா விஜெய் வாங்க இது நான் நிறைய இடத்தில் பார்த்த அனுபவங்கள்.

பதிவு மூலம் போட்டால் சில பேராவவது இப்படி இருக்கக்கூடாது என்று உஷாராகாஆகலாம்/.

Jaleela Kamal said...

ஆமாம் நீத்து, அனைத்து பாயிண்டுகளும் உண்மையானவை,. எல்லோருக்கும் தெரிய வேண்டியவை.
வருகைக்கு மிக்க நன்றி

அந்நியன் 2 said...

நல்ல வேலை எனக்கு கோபமே வராது.

இந்த ஆமி இப்போ சமையலும் சொல்லி கொடுக்கிறார்கள் உங்கள் பதிவர் சங்கத்தில் புகார் கொடுத்து கண்டிக்க சொல்லுங்கள் அக்காள்.

இந்த செயலுக்கு சட்டம் என்ன சொல்லுகிறது என்று பிறகு பார்ப்போம்.

எம் அப்துல் காதர் said...

//எழுதும் போதே யோசித்தேன் இன்னும் நிறைய இருக்கு சேர்த்து போடலாமுன்ன்ய், ஆனால் பிலாக்கிலேயே கல்லு பறக்குமோன்னு பயந்து தான் ஹிஹி
கொஞ்சமா நிறுத்திக்கிட்டே ஹி.ஹி //

படிச்சிட்டு ஆபீசுன்னும் பார்க்காமே சிரிச்சிட்டேன். எதிரில் நின்ற கஸ்டமர்கள் என்னை ஒருமாதிரி ஙே..ன்னு பார்த்துட்டாங்க ஜலீலாக்கா. ஹி..ஹி..நல்லா காமெடி பண்றீங்க!!

எம் அப்துல் காதர் said...

//எல்லாரும் கொஞ்சம் பொறுமையா இருங்க பதில் இங்கு கொடுக்கலாமா?
இல்லை பதிவாவே போடலாமா அவ்வளவு பதில் இருக்கு//

ம்ம்ம்..நடந்துங்க மழை சவுதில மட்டும்ன்னு தான் நெனெச்சேன். இப்ப உங்க காட்டிலும் தான்.. ச்சே உங்க ப்ளாக்கிலும் தான். ஹா ஹா.. எழுதுங்க வந்து படிக்கிறேன்.

Krishnaveni said...

nice post, thanks for sharing

Jaleela Kamal said...

வாங்க நாட்டாம உங்களுக்கு கோபமே வராதா, நம்ப முடியலையே?

ஆமியா அட அவங்க ஊர் சமையலையும் ருசி பார்ப்போமே/

Jaleela Kamal said...

//ம்ம்ம்..நடந்துங்க மழை சவுதில மட்டும்ன்னு தான் நெனெச்சேன். இப்ப உங்க காட்டிலும் தான்.. ச்சே உங்க ப்ளாக்கிலும் தான். ஹா ஹா.. எழுதுங்க வந்து படிக்கிறேன்//

நானும் எழுதும் போதுஎனக்கு ஒன்றும் தெரியல, ஆனா இப்ப நீங்கள் போட்டதும் தான் செம்ம சிரிப்பு,.

Jaleela Kamal said...

சவுதியில் மழையா இங்கு மழை தான்.

உஙக்ள் பக்கம் வந்து கருத்து தெரிவிக்க முடியல

Jaleela Kamal said...

//ஹா ஹா.. எழுதுங்க வந்து படிக்கிறேன்.

January 20, 2011 8:56 PM//

என்ன வந்து ப்டிக்கிறீங்கலா.
நான் இதிலேயே பதிலை சொல்லிட்டேன் அப்ப நீங்க தான் பதில படிக்கல

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி கிருஷ்னவேனி

அன்னு said...

அஸ் ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா,

எங்கே புடிச்சீங்க இந்த ஃபோட்டோவை...அருமையான பதிவுக்கு அழகான ஃபோட்டோ ..ஹி ஹி ஹி...கோபத்துல இருக்கற யாரும் பதிவை படிக்காம ஃபோட்டோவை மட்டும் பாத்தாங்க... அப்புறன் சாத்து சாத்துன்னு சாத்திரப் போறாங்க :))

Jaleela Kamal said...

வா அலைக்கும் சலாம் அன்னு,
போட்டோ எல்லாம் நம் கூகிள் ஆண்டவர்தான்/

ரொம்ப நாள் கழித்து வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா