நான் அறுசுவையில் முன்பு கொடுத்த15.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்பரில் சமையல் குறிப்பு அனுப்புகிறவர்களை விசாரித்து போட மாட்டார்கள் போல, பிரபலமான பேப்பர், நல்ல சமையல் கலை நிபுனர்களின் அனுமதியோடு போடலாமே. எந்த லூஸு திருடி அனுப்புதுன்னு தெரியல. திருடிய லூஸு என் பெயருடன் போட்டு இருந்தா கொஞ்சம் திருப்திஅடையலாம்.
இங்கும் போய் பாருங்கள் காப்பி அடிச்சிட்டானுங்க திருந்தாத ஜென்மஙக்ள்
போன வாரம் இதை செய்து விட்டு பதிவு போடலாம் என்று வரும் போது தற்செய்லா தினகரன் பேப்பர செக் பண்ணும் போது இதுவும் அங்கு இருக்கு. இப்ப இந்த குறிப்ப போட்டா, அங்கிருந்து நான் காப்பி அடித்தமாதிரி இல்ல இருக்கும் சே சே ,,,
இது என் மாமியாரின் கை வைத்தியம்
இதில் எழுதியுள்ள டிப்ஸ் , 80% என்னுடைய சொந்த அனுபவ கருத்து 20 % மாமியார் சொன்னது.
.
குழந்தை வளர்பு டிப்ஸ், குழந்தைகளில் வயிற்றில் உள்ள பூச்சி அழிய/
குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடுவதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும் , பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால் , சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.
அதற்கு 6 மாதம் ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிம் காண்பித்து கொடுப்பது நல்லது,
இதே இயற்கை உணவு முறையிலும் நாம் இதை வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை, பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து `மிகவும் உகந்தது.
இது என் இரண்டாம் முறை தயாரிப்பு செய்முறை - 2
தேவையானவை
இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை சிறிது
செய்முறை
வேப்பிலையையும் , இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து சுத்தம் செய்த வேப்பிலையுடன் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.
வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும், மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.
குறிப்பு
ஆறு முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம்
9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும்.
பெரியவர்கள் அவ்வளவா தேவையில்ல மூக்க மூடிட்டு பல்லுல படமா முழுங்கிடுங்க..
இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பில்லையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ,
( மேலும் இது சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும், உடலில் ரத்தத்தில் அள்வு கம்மியாக இருந்தால் அதை அதிகரிக்கவும் வேப்பிலை அருமருந்து)
ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.
அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து.
அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு முன்று முறை குடித்து விட்டு கருதரித்தால் மிகவும் நல்லது.வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும்.
2 மாதம் , முன்றுமாதம் (அ) கர்பிணிபெண்கள் சாப்பிடவேண்டாம்.
கர்ப்பம் தரிக்கும் முன், (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
- மற்றொரு முறை
இது என் தங்கை பசீரா செய்வது
இஞ்சி சாறு தனியாக எடுத்து நஞ்சு எடுத்து வடித்து வைக்கவும்.வேப்பிலையை தனியாக அரைத்து சாறு எடுக்கவும்.இரண்டையும் கலந்து தேன் ,உப்பு, சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்
டிஸ்கி : கொஞ்ச நாள் பதிவு போடுவதை நிறுத்திட்டு இப்படி செக் பண்ண இனையம் மூலம் சம்பாதிக்க, சில பேர் நானும் வெப்சைட் ஆரம்பிக்கிரேன்னு ஆரம்பிச்சிட்டு பழியா ஓவ்வொரு இடமா போய் களவெடுத்து போடுகிறார்கள்.
தோழி சுந்தராவின் கவிதை கீற்று.காமில் வெளியாகி உள்ளது வாழ்த்து தெரிவிக்க அங்கு போனா ச்மையல் பகுதிய கிளிக் செய்தால்
என் ஆம்பூர் பிரியாணிய அட்டு காப்பி, இன்னும் என்ன என்னன்னு செக் பண்ணா பீபீ எகிறிடும் போல. இதுபோல் ஆளாளாக்கு செய்தால் குறிப்பு போடவே பிடிக்கல, சில பேருக்கு உத்வுதேன்னு போட்டா இந்த களவாணி பசங்கள என்ன செய்வது,
கிற்று இங்க போய் பார்க்கவும், எனக்கு தெரிந்து அங்குள்ள சமையல் குறீப்புகள் எல்லாமே காப்பிஅடிக்கப்பட்டவைதான்.
Tweet | ||||||
37 கருத்துகள்:
nice tip
இது தான் ரொம்ப காலமாக நடக்குதே! ஜலீலா.இதற்கு என்ன முடிவுன்னு தெரியலை.ஆம்பூர் பிரியாணி அருமை.இஞ்சி பூண்டு அளவு குறிப்பிடபடவில்லை.விடுபட்டு போய்விட்டதுன்னு நினைக்கிறேன்.
very useful post..my mil used to give this to my kids when they re small..truly helpful.
Tasty appetite
நல்லதொரு மருத்துவ தகவல். பகிர்வுக்கு நன்றிங்க.
மேலும் மேலும் உங்களுக்கு சோதனை அக்கா..
என்னதான் சொன்னாலும் திருடவே செய்யுறாங்க .கொஞ்ச நாள் சும்மா இருந்துட்டு திரும்பவும் ஆரம்பமாகிடுது இதுவும் ஒரு பிழைப்பு இவங்களுக்கு.
சிலர் யாரும் வருவதில்லைன்னு தானே தன் பிளாகுக்கு விதம் விதமா அனானி கமெண்டும் போட்டுகிட்டு இருக்காங்க ..!!
ஐய்யோ பாவம்..!!
ஆசியா இங்கு இருந்து காப்பி அடித்தவர் இஞ்சி பூண்டு பேஸ்ட காப்பி செய்ய மற்ந்துட்டாராம் ஹிஹி
பயனுள்ள டிப்ஸ்..அக்கா...அக்கா ஒரு ஐடியா பதிவ திருடுரவங்களுக்கு இந்த இஞ்சி சாறு குடுத்து பார்க்கனும்னு எனக்கு தோணுது...
கூல் ஜலி கூல்.அருமையான குறிப்பு.
சீமான் கனி உங்கள் கமெண்ட படிச்சிட்டு சிரிப்பு தாஙக் முடியல
நல்ல பதிவு. இப்போ யார் இது மாதிரி எல்லாம் செய்றாங்க? பாட்டி கை வைத்தியம் அழிஞ்சு கிட்டே வருது:-)
ஜலீலாக்கா இஞ்சி வேப்பில்லை சாறு சாப்பிட்டா உடம்பு வெயிட் குறையுமா? வலைப்பூ எழுத ஆரம்பித்து, நான் வாக்கிங் போறதில்லையாம். வெயிட் போட்டுட்டேனாம். வீட்டில் ஒரே புகார் வாசிக்கிறாங்க!! அவ்வ்வ்வ்
நல்ல குறிப்புதான் ஆன படிக்கும்போதே வாய் கசக்குது.
சலாம் ஜலீலா அக்கா..,இது என்ன கொடுமையால இருக்கு.இதை எப்படி போய் கண்டுபிடிக்கிறீங்க ஜலீலா அக்கா...
மிகவும் பயனுள்ள குறிப்பு.என் பெரியம்மா தனது பேத்தி அடிக்கடி வயிற்று வலியால கஷ்ட்டபடுவான்னு இந்த மாதிரி சாறு எடுத்துதான் கொடுப்பாங்க...நாக்காம்பூச்சு எல்லாம் அழிஞ்சுடும் என்பாங்க....
அதோடு சேர்த்து இரண்டு மூன்று குறிப்பை கொடுத்திருப்பது நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று.இனி இதையும் நான் தேவைபடுபவர்களுக்கு சொல்வேன் அல்லாவா...
நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
Very useful information akka
நல்ல டிப்ஸ், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
akkaa ezhudhiya vidham romba comedyaa irukku;-D..thittaadheenga;-)
ungalai pathi ingu ellaarukkum theriyum..vittu thallunga
Thalika
என்ன சொல்றது ?
மக்களிடமிருந்து கத்தை கத்தையாக கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளைப் பற்றி சொல்வதா ?
அடுத்தவர் நிக்கரிலிருந்து ப்ளேடு போட்டு திருடும் ஆசாமிகளைப் பற்றி சொல்வதா ?
ஆண்மிகவாதிகளைப் பற்றி சொல்வதா ?
அரசு அதிகாரிகளைப் பற்றி சொல்வதா ?
இப்படி யாரைப் பற்றி சொல்ல என்று கேட்க்கும் போதே,புதியதாய் ஒரு கும்பல் !!!
பதிவை திருடி விற்பதுதான் இவர்களின் பொழப்போ ?
என்ன சொல்வது என்று புரிய வில்லைக்கா.
ஜலீலா மேடம்...
பதிவு திருட்டு என்பது காலம் காலமாக நடைபெறும் ஒன்று...
திருடுவது என்று முடிவு செய்தபின், அவர்களுக்கு ஏது வெட்கம்..
ஆனால், உங்களை போன்ற பலரின் உழைப்பை திருடி அவர்கள் வாங்கும் பெயர் நெடுநாட்களுக்கு நிலைக்காது...
வருந்த வேண்டாம்...
எப்போதும் போல் தொடர்ந்து பதிவிடவும், ஆதரவு தர நாங்கள் உண்டு...
நல்ல பயனுள்ள டிப்ஸ். நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி ஷாமா
நன்றி ஆசியா
நன்றி ஜெய்
நன்றி கோவை2தில்லி
நன்றீ சாரு
நன்றி ஜெய்லானி
நன்றி சீமான் கனி
நன்றி |ஸாதிகா அக்கா
ஆமாம் கோபி ராமமூர்த்தி இப்ப யார் பாட்டி வைத்தியம் எடுத்து கொள்கிறார்கள்
நன்றி சீமான் கனி
நன்றி |ஸாதிகா அக்கா
ஆமாம் கோபி ராமமூர்த்தி இப்ப யார் பாட்டி வைத்தியம் எடுத்து கொள்கிறார்கள்
எம் அப்துல் காதர் பதிவ சரியா படிக்கல்ல்ன்னு நினைக்கிறேன்
இது வெயிட்ட குறைக்க மருந்து இல்ல
வயிற்று பூச்சி அழிய, சர்கக்ரை வியாதிக்கு
. ரத்த சோகைக்கு
சரி பிலாக் எழுத எல்லோரும் இப்படிதான் வாங்கிங் போவதில்லை,.
கிடைக்க அ நேரத்த சந்தோசஷமா இதில் தான் ..
அருமையான குறிப்பு.
ஜலீலாக்கா கலக்குறீங்க சூப்பர் வாழ்த்துக்கள்...
//இங்கும் போய் பாருங்கள் காப்பி அடிச்சிட்டானுங்க திருந்தாத ஜென்மஙக்ள்
/// ஹா...ஹா...ஹா... ஜலீலாக்கா துன்பம் வரும்போது சிரிங்க..(ஹாப்பி அடிச்சதுக்கு சிரிப்பு வரவில்லை, நீங்க எழுதியிருக்கும் விதத்தைப் பார்த்ததும் சிரித்திட்டேன்..:)).
இருக்கிறவர் கொடுக்கிறார், இல்லாதவர் எடுத்திட்டுப்போறார்... எப்படிப் பார்த்தாலும் நீங்க நன்மைதான் செய்கிறீங்க... சோ கவலைப்படாமல் தொடருங்க.
ஜெய்.. ஆருடைய “அண்ணி” பற்றி... மன்னிக்கவும் “அனானி” பற்றிக்கதைக்கிறார் ஜலீலாக்கா... கொஞ்சம் கேட்டுச் சொல்லப்பிடாதோ? அவ்வ்வ்வ்..
உஸ்ஸ்ஸ்ஸ்... இனியும் நிண்டால் ஆஆஆஆபத்து..மீ.. எஸ்ஸ்ஸ்ஸ்..
good and i will try it, but i always eat young leaves in raw. the flowers we add with vellam.
thanks jaleela.
கீற்றுக்கு மெயில் பண்ணேன்
கீழ் கண்டவாறு பதில் அனுப்பி என் பெயரை அதில் போட்டுள்ளார்
///"கீற்று ஆசிரியருக்கு இதுகுறித்து தெரியப்படுத்தியபோது, அவர் சொன்னது 'நளன் என்பவர்தான் கீற்றிற்கு சமையல் குறிப்புகள் அனுப்புகிறார். சமையல் குறிப்புகளுக்கு காப்பிரைட் பிரச்சினை இல்லை என்பதால், அவர் எங்கிருந்து எடுக்கிறார் என்பதை நாங்கள் இதுவரை சரிபார்க்கவில்லை... தவறுக்கு வருந்துகிறோம். இனி கவனமாக இருக்கிறோம்.////
'//// என்று சொன்னதோடு, எனது பெயரையும் சமையல் குறிப்பில் இணைத்துள்ளார்."
//இருக்கிறவர் கொடுக்கிறார், இல்லாதவர் எடுத்திட்டுப்போறார்... எப்படிப் பார்த்தாலும் நீங்க நன்மைதான் செய்கிறீங்க... சோ கவலைப்படாமல் தொடருங்க.//
எதுக்கும் உஷாரா இருங்க ..ஜலீலாக்கா இருக்கிற கோவத்துக்கு கரண்டிய அடுப்பில வச்சி எடுத்து உங்கட வால்ல ச்சே...கால்ல சூடுவச்சிடப்போறாங்க ஹா..ஹா..
//ஜெய்.. ஆருடைய “அண்ணி” பற்றி... மன்னிக்கவும் “அனானி” பற்றிக்கதைக்கிறார் ஜலீலாக்கா... கொஞ்சம் கேட்டுச் சொல்லப்பிடாதோ? அவ்வ்வ்வ்..//
எல்லாம் அந்த ””வாழ்வே மாயம் ”” போட்ட பிளாக்குதான் .நல்லா லேப்டாப்பில படுத்துகிட்டு யோசிங்க ஹி..ஹி... !! :-))
அது எப்படி ஜெய்லானிக்கு அதிராவைபோலவே கதைக்க பழகினார்
டீச்சர் லண்டனில் கிளாஸ் எடுப்பது போல் பூஸார் கிலாஸ் ஏதும் உண்டோ
I used eat tender first leaves of neem tree' Mommy suggested it is also good for pimples! 'Kadum kasappu'...but made my mind for the goodness, your post is very informative...lot of people will be benefited.
அக்கா குழந்தை க்கு ஏற்படும் வயிற்று வலி அறிகுறி அதற்கு மருந்து சொல்லூங்க
அக்கா ப்ளவுஸ் தைக்க சொல்லி தாங்க
குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்தால் வயிறு கல்லு போல இருக்கும் ,
வயிற்றை சுற்றி எண்ணை தேய்த்து சுடு வெண்ணீர் குடிக்கும் பக்குவத்தில் கொடுத்தால் போது.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா