Sunday, July 19, 2015

சிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா - மர்லி&சாமு பாத்திமா

மஞ்சள் வாடா
சிறப்பு விருந்தினர்கள் பதிவு - பாரம்பரிய சமையல்

காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா -  மர்லி&சாமு பாத்திமா
பாரம்பரிய சமையல் குறிப்பு போட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது காயல் பட்டிணம் ஸ்பெஷல் மஞ்சள் வாடா, என்னடா இது வாடா போடான்னு சொல்றாங்களேன்னு நினைக்காதீங்க ஆனால் இதன் சுவையோ அட டா .

இந்த குறிப்பை மர்லி எனக்கு போன வருடமே அனுப்பி விட்டார்கள், இப்ப தான் இதை போஸ்ட் பண்ண முடிந்தது.


மர்லியும் நானும் கிட்ட தட்ட 9 வருட தோழிகள். அறுசுவை மூலம் அறிமுகமானோம், என் சமையல் குறிப்புகளை அதிகம் விரும்பி செய்வார்கள், அதில் மர்லிக்கு ரொம்ப பிடித்தது என் பகறா கானா வும் , வெஜ் மாங்காய் தால்சாவும், அடுத்து ஸ்பைசி செட்டு நாடு சிக்கன் கிரேவி.
முகநூல், இப்ப வாட்ஸஅப் என எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கு. ஊருக்கு போகும் நேரம் கண்டிப்பாக மீட் பண்ணுவோம், எங்க கடைக்கும் வந்து இருக்கிறார்கள் , வந்து புர்கா பர்சேஸ் பண்ணி சென்றார்கள்.இதை இறால் ஸ்டப்டு அரிசிமாவு வடைன்னு சொல்லலாம்


தேவையான பொருட்கள்

 பரு அரிசிமாவு - 1 கப் 
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிது 
கீரைபொடி - சிறிது 
எண்ணெய் - பொரிக்க உப்பு - தேவைக்கு 
தண்ணீர் - 1 1/2 கப் உள்ளே

உள்ளே வைக்கும் அடக்கம் செய்ய:

வெங்காயம் - 3 மீடியம் சைஸ் (விருப்பப்பட்டால் வெங்காயத்தோடு சிறிது முட்டைகோசும் சேர்க்கலாம்) கருவேப்பிலை - சிறிது பச்சைமிளகாய் - 1
கீரைப்பொடி (வற்றல் சீரகப்பொடி) - 2 டேபிள் ஸ்பூன்
மாசித்தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய்ப்பூ - 3 டேபிள் ஸ்பூன்
இறால் - 10 to 15 (உப்பு மசாலா சேர்த்து வரட்டியது) 


எண்ணெய் - சிறிது உப்பு தேவைக்கு 


செய்முறை விளக்கம் 

அடக்கம் செய்யும் முறை வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பச்சைமிளகாய், கருவேப்பிலை பின் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்க வேண்டும். வெங்காய கலவை வெந்ததும் தீயை சுருக்கி வைக்கவும். பின்பு வரட்டிய இரால், கீரைப்பொடி, மாசித்தூள், தேங்காய்பூ சேர்த்து தீயை அணைக்கவும். (பெரிய இறாலாக இருந்தால் வெட்டியும் சிறியதாக இருந்தால் அப்படியேவும் சேர்க்கவும்.)
மேல்மாவு செய்யும் முறை:

 பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் வைத்து உப்பு , மஞ்சள்தூள், கீரைப்பொடி , தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். அடுப்பிலிருந்து தண்ணீரை இறக்கியவுடன் பாத்திரத்தை நல்ல டவல் வைத்து சூடுபடாமல் கவனமாக பிடித்துக்கொண்டு மாவை சேர்த்து மரக்கரன்டியால் நன்றாக கிளறிவிட்டு ஆறவைக்கவும். ஒரு சுத்தமான காட்டன் துணியை தண்ணீரில் பிழிந்து அதை ஒரு மரப்பலகையிலோ அல்லது காய்கறி போர்டிலோ விரித்துக்கொள்ளவும். அல்லது பிளாஸ்டிக் சீட் பயன்படுத்தலாம். இப்போது மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து வட்டவடிவமாக சிறிதாக விரலால் தட்ட வேண்டும். இடையிடையே தண்ணீர் தொட்டு கொண்டு தட்டவும். தட்டிய ஒரு வட்டத்தில் செய்துவைத்திருக்கும் வெங்காய அடக்கத்தை நடுவில் வைத்து மற்றொரு தட்டிய வட்டத்தால் சுற்றிவர ஓரத்தைமூடவேண்டும். இதை வடிவாக தட்டுவதற்கு நேரமாகும்.
அதனால் பொறுமையை கையாளுவது முக்கியம். இரண்டு மூன்று செய்து வைத்த பிறகு மெதுவாக துணியை ஓரத்திலிருந்து தூக்கி வாடவை எடுத்து சட்டியின் பக்கவாக்கிலிருந்து எண்ணையில் போட்டு தீயை மிதமாக வைத்து பொரித்தெடுக்கவும்.

ஓரளவு முருவலாக பொரிந்ததும் எண்ணையை நன்றாக வடியவிட்டு பின்பு பரிமாறவும். மொரு மொரு க்ரிஸ்பி எம்மி வாடா ரெடி ! இதற்க்கு சரியான காம்பினேஷனானகஞ்சியோடு சாப்பிட சூப்பராக இருக்கும்.

**********************
கிழே உள்ள படம் அனுப்பியதும் செய்முறை விளக்கமும் - சாமு பாத்திமா
மற்ற ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் மர்லி என் ஜிகரி பிகரி தோஸ்த்..
அவர்களுக்கு விளக்கம் அனுப்ப நேரமில்லததால் சாமு பாத்திமா முகநூல் , வாட்ஸ் அப் மூலம் அறிமுகமாகி சென்னை ப்ளசா புர்கா ஷால் , ஹிஜாப் வகைகளை காயல் பட்டிணத்தில் ஒரு சிறிய ( சென்னை ப்ளாசா ) கிளையாக நடத்தி வருகிறார், காயல் பட்டிணத்து சகோதரிகள் , புர்கா, ஷால் , ஹிஜாப் தேவைப்பட்டால் fb id - > Katheeja Nasik  katheejaa nasik ( samu fathimaa) அனுகவும்.

காயல் ஸ்பெஷல்கீரை பொடி

தேவையான பொருட்கள்
மாசி - 150 கிராம் வத்தல்- 20 .. அவரவர் காரம் பொறுத்து... கொத்தமல்லி- 25 கிராம பெருஞ்சீரகம் - 20 கிராம் அரிசி. - கொஞ்சம்
செய்முறை 1,இவையனைத்தையும் கறுத்துவிடாமல் வெறும் சட்டியில் வறுத்து கொள்ளவும். 2,மாசியை முதலில் உரலில் போட்டு பொடித்துக் கொள்ளவும். 3,பின்பு மாசி உடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அல்லது உரலில் போட்டும் இடித்தும் வைக்கலாம் 4,அரைத்த பின்பு ஒரு பேப்பரில் தட்டி ஆற விடவும். 5, பின்பு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து தேவைக்கு ஒரிரு ஸ்பூன் பயன்படுத்தவும்.

இது ஆறுமாதம் வரை கொடாமல் இருக்கும். காற்று புகாத டப்பாவில் அடைத்து உபயோகிக்கவும். கீரை, பொரியல்(கேரட்,பீன்ஸ், பீட்ரூட், முட்டைக் கோஸ்,வெண்டைக்காய்,பீர்க்கங்காய்,முள்ளங்கி) செய்யும் பொழுது இதை கடைசியில் சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும். இது சேர்ப்பதால் நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.மாசி விரும்பாதோர் அதை சேர்க்காமல் இந்த பொடியை தயார் செய்து கொள்ளலாம். வடை, பக்கோடா, வாடா , பெட்டீஸ் செய்யும் பொழுதும் மணத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.மாசிச் சம்பல்,மாசியாணத்திற்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.


உங்கள் பாரம்பரிய சமையல் குறிப்பும் என் சமையல் அட்டகாசத்தில் இடம் பெறும் வேண்டுமென்றால் தெளிவான சமையல் குறிப்பு படத்துடன் விளக்கமும் , உங்களை பற்றி அறிமுகத்துடன் எனக்கு feedbackjaleela@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


சென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்

சமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்

ஆங்கில வலைதளம் : cookbookjaleela

www.chennaiplazaki.com
www.chennaiplazaik.comhttps://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பு விருந்தினருக்கும் வாழ்த்துகள்...

Asiya Omar said...

மர்லி,சாமு இருவருக்கும் வாழ்த்துக்கள்.அருமை.

பரிவை சே.குமார் said...

புதுமையான ரெஸிபியா இருக்கு...
சிறப்பு விருந்தினருக்கு வாழ்த்துக்கள்.

balkkisrani said...

ஜலிலாக்கா சாமு லாத்தா தங்கை மர்லி சூப்பர் வாடா வாழ்த்துக்கள்

balkkisrani said...

ஜலிலாக்கா சாமு லாத்தா தங்கை மர்லி சூப்பர் வாடா வாழ்த்துக்கள்

ayisha abdul jabar said...

Keera podi recipe romba naalave tedikittu irunthen.... romba thank u share pannunathukku

balkkisrani said...

ஜலிலாக்கா சாதாரண அரிசி மாவில் செய்ய முடியாதா பரு மாவுன்னா அது செய்யனுமே

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா