பீன்ஸ் - கால் கிலோ
கடலை பருப்பு - 4 மேசை கரண்டி
துவரம் பருப்பு - 2 மேசை கரண்டி
கருவேப்பிலை - ஒரு கை பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காய பொடி - ஒரு சிட்டிக்கை
உப்பு - ஒன்னே முக்கால் தேக்கரண்டி
மிளகாய் - 12
தாளிக்க
********
எண்ணை - கால் கப்
கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பீன்ஸை பொடியாக அரிந்து கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஊறிய பருப்புடன் காஞ்ச மிளகாய்,கருவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காய பொடி ஒன்னறை உப்பு சேர்த்து கர கரப்பாக அரைகக்வௌம்.
ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை பாதி ஊற்றி அரைத்த விழுதை போட்டுநன்கு வடஹ்க்கவும்.
பிறகு பீன்ஸ் சேர்த்து சிறிது எண்ணை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மீதி உள்ள எண்ணையையும் சேர்த்து நன்கு வதக்கி இரக்கவும்.
குறிப்பு
இதை கொத்தவரைகாய்,முட்டை கோசிலும் செய்யலாம், இதில் எண்ணை கொஞ்சம் அதிகமாக இழுக்கும். எப்பவாவது ஒரு முறை செய்து சாப்பிடலாம்.
Tweet | ||||||
2 கருத்துகள்:
உங்க குறிப்பு நல்லாயிருக்கு ஜலிலாக்கா,முட்டைகோஸில் நான் செய்ததில்லை.நான் எண்ணெயில் வதக்காமல் பருப்பை ஆவியில் வேகவைத்து சேர்ப்பேன்.நான் இதேபோல் கேரட்,வாழைப்பூ,புடலங்காயில் செய்வேன்.
மேனகா உங்கள் கருத்துக்கு நன்றி. இதை அடிக்கடி சாப்பிடுபவர்கள் ஆவியில் அவித்து சாப்பிடலாம்.
இது பிராமண கல்யாணங்களில் இது ஒரு ஸ்பெஷல் அயிட்டம்.
என்றைக்காவது விஷேஷத்திற்கு செய்பவர்கள் இப்படி செய்வார்கள்.
டயட் செய்பவர்கள், ஆவியில் வேகவைத்து செய்வார்கள்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா