துபாயில் உள்ள கோல்ட் மார்கெட்டில் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது.
/ஆமா இவ்வள்வு பெரிய மோதிரத்த எப்படி போட்டுக்குவாங்க.
//
துபாயில் உள்ள நகைகடையில் நகைகள் அப்படியே வெளியிலேயே சரம் சரமாக கண்ணணாடி பெட்டியில் அடைத்து வைத்திருப்ப்து தெரியும். ஆனால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது, அங்காங்கே C I D கள் சுற்றி கொண்டிருப்பார்கள்.
இப்ப இருக்கிற விலை ஏற்றத்தில் எல்லா நகைகளுமே இப்படி ஷோக்கேஸாக தான் பார்த்து கொள்ளனும்.
வெறுப்பு : புதுசா பொண்ணு பார்க்கிறவங்க இப்ப யாரும் கார் , பைக், வீடு என கேட்பதில்லை. 25 சவரன், 50 சவரன் என்பதெல்லாம் போய் இப்ப
80 சவரன், 100 சவரன், அடுத்து புதுசா 300 சவரன் என கேட்கிறார்களாம்.
கேட்டா குடும்ப கவுரமமாம். விவஸ்த கெட்டவங்க, என்ன கொடுமை இது.
இருந்தாலும் வசதி உள்ள் சிலர் இப்படி அதிகமாக நகையை போட்டு திருமணம் செய்து வைப்பதால் , அது மற்றவர்களையும் பாதிக்கிறது.
இப்படி நிலை நீடித்தால் பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்கு எல்லாருக்கும் சிறு வயதிலேயே ஹார்ட் அட்டாக் தான் வரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வழக்கத்துக்கு மாறாக ரொம்ப நாட்டு பற்றை தெரிவிக்கும் வகையில் காரிலும், அரபு வீடுகளிலும் , எல்லா பொருட்களிலும் , துணிமணி வகைகளிலும், பேன்சி அயிட்டங்கள் எல்லாம் யி ஏ யி வண்ண கொடி தான், நிறைய செலவு செய்து இருக்காங்க . விட்ட பணத்த எப்படி பிடிப்பது. கீழே பாருங்க அப்படி தான், (இன்னும் நி்றைய படங்கள்பிறகு த்னியாக இனைக்கி்றேன்.)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பாவப்பட்ட இந்தியர்கள் :
.........
1.இப்ப துபாயில் பேச்சுலர்கள் லுங்கி அணிந்து வெளியே சென்றால் பைனாம். ( யாரு நம்ம ஊர் மக்காஸ் ட்தானே லுங்கி போட்டுகொண்டு சு்ற்றுவது்
2.அடுத்து எல்லா இடத்திலும் கார் பார்க்கிங் பேய்ட் பார்க்கிங். ஆக்கியாச்ச்சு
3.எல்லாருக்கும் எமிரேட்ஸ் ஐடி இருந்தாகனும் இல்லன்னா அதுக்கும் பைன்
4.தெருவில் எச்சில் துப்பினால், சிக்ரேட் குடித்தால் எல்லாத்துக்கும் பைன்.
5.பிஷ் மார்கெட் பக்கமா மெட்ரோ டிரெயின் இருக்கு தப்பி தவறி வாங்கிட்டு உள்ளே நுழைத்திடாதீங்க அதுக்கும் பைன் தான். இப்படி தான் நம்ம மக்காஸ் கிட்ட விட்ட பணத்த எடுக்கிறாங்க/.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இங்குள்ள டிரைவர்கள் சம்ப்ளம் வாங்கி ஊருக்கு அனுப்புவதை விட யு ஏ யி - யில் ஸ்பீட் லி்மிட்ட தாண்டி, பைன் கட்டி காசு கட்டுவ்து தான் அதிகம், பின்ன அவனா நானா ந்னு பார்த்துடலாமுன்னு ஊர் பந்தாவ இங்க காணபிச்சா எப்புடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஹிஹி : பெண்கள் சாலையை கடக்கும் போது தூரத்தில் இருந்து எப்பேர் பட்ட வண்டியாக இருந்தாலும் தானா நின்றுடும்.
இதே நம்மூரா இருந்தா ஐய்ய சாவு கிராக்கி இன்னாமே உட்ல சொல்டு வந்துட்டீயா . காலையா யார் முகத்துல முழிச்சேனோ என்பார்கள்
ஹாஹா பிலிப்பைனிகள் சாலைய கடக்கும் எல்லாம் கைய கோர்த்து கொண்டு வாத்து கூட்டம் போல அந்த அழகே தனி தான்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வருத்தம்:ஓரு பேச்சுலர், இந்தமாத கடைசியில் அவர் திருமணததுக்காக ஊர் செல்ல இருந்தார் , பத்திரி்கை எல்லாம் வந்துவிட்டதாம். என்ன கொடுமை நேற்று அவ்ஙக் அப்பா இறந்துட்டாராம் வெளிநாட்டுக்கு வந்து சம்பாதித்து நிம்மதியா ஊர் தி்ரும்ப கூட மு்டியல.கேட்டுட்டு ரொம்ப வருத்தமாகி விட்டது/
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7&&&
சந்தோஷம் : துபாயில் மெட்ரோ கிரீன்லைன் வந்ததில் இருநந்து 1 மணி நேரமா டிராபிக்ல மாட்டி நொந்து போகமா ரொம்ப சொகுசா 10 , 15 நிமிடத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம், இப்ப பஜார் போக ரொம்ப சுலபம் ஆனாபோகதான் நேரம் கி்டைக்க்ல// முன்பெல்ல்ாம் பஜாருக்கு பஸிலோ காரிலோபோனால் காரிலேயே ஒரு குட்டி தூக்கம் போட்டுடலாம். அந்த அளவுக்கு ட்ராபிக் . இப்ப எல்லாம் சுலபம் .
ம்ம் அல் அயினுக்கும், அபுதாபிக்கும் போக மெட்ரோவந்ந்து்டுச்சினா ஆசியா விட்டுக்கும் (தளி, ஹுூஸைனாம்மா வீட்டுககும் ஈசியா போய்வரலாம்
********************************************************************************
Tweet | ||||||