நான் அறுசுவையில் முன்பு கொடுத்த15.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்பரில் சமையல் குறிப்பு அனுப்புகிறவர்களை விசாரித்து போட மாட்டார்கள் போல, பிரபலமான பேப்பர், நல்ல சமையல் கலை நிபுனர்களின் அனுமதியோடு போடலாமே. எந்த லூஸு திருடி அனுப்புதுன்னு தெரியல. திருடிய லூஸு என் பெயருடன் போட்டு இருந்தா கொஞ்சம் திருப்திஅடையலாம்.
போன வாரம் இதை செய்து விட்டு பதிவு போடலாம் என்று வரும் போது தற்செய்லா தினகரன் பேப்பர செக் பண்ணும் போது இதுவும் அங்கு இருக்கு. இப்ப இந்த குறிப்ப போட்டா, அங்கிருந்து நான் காப்பி அடித்தமாதிரி இல்ல இருக்கும் சே சே ,,,
இது என் மாமியாரின் கை வைத்தியம்
இதில் எழுதியுள்ள டிப்ஸ் , 80% என்னுடைய சொந்த அனுபவ கருத்து 20 % மாமியார் சொன்னது.
.
குழந்தை வளர்பு டிப்ஸ், குழந்தைகளில் வயிற்றில் உள்ள பூச்சி அழிய/
குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடுவதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும் , பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால் , சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.
அதற்கு 6 மாதம் ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிம் காண்பித்து கொடுப்பது நல்லது,
இதே இயற்கை உணவு முறையிலும் நாம் இதை வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை, பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து `மிகவும் உகந்தது.
இது என் இரண்டாம் முறை தயாரிப்பு செய்முறை - 2
தேவையானவை
இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை சிறிது
செய்முறை
வேப்பிலையையும் , இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து சுத்தம் செய்த வேப்பிலையுடன் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.
வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும், மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.
குறிப்பு
ஆறு முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம்
9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும்.
பெரியவர்கள் அவ்வளவா தேவையில்ல மூக்க மூடிட்டு பல்லுல படமா முழுங்கிடுங்க..
இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பில்லையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ,
( மேலும் இது சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும், உடலில் ரத்தத்தில் அள்வு கம்மியாக இருந்தால் அதை அதிகரிக்கவும் வேப்பிலை அருமருந்து)
- மற்றொரு முறை
இது என் தங்கை பசீரா செய்வது
இஞ்சி சாறு தனியாக எடுத்து நஞ்சு எடுத்து வடித்து வைக்கவும்.வேப்பிலையை தனியாக அரைத்து சாறு எடுக்கவும்.இரண்டையும் கலந்து தேன் ,உப்பு, சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்
Tweet | ||||||