Tuesday, February 28, 2012

முதல் பரிசு வென்ற குறிப்பு - Tutti Fruity Pancakes - ட்யுட்டி ஃப்ரூட்டி பான் கேக்ஸ்



இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் மாப்பிள்ளை நாஸ்டா (டிபன்).நான் என் வசதி படி ஓவ்வொரு முறை செய்யும் போதும் ஏதாவது மாற்றம் செய்வேன். அபப்டி செய்து நானே வைத்த பெயர் தான் டியுட்டி ஃப்ரூட்டி பான்கேக்ஸ்


தேவையானவை
மைதா = 200 கிராம்,
முட்டை = இரண்டு,
உப்பு = ஒரு சிட்டிக்கை,
சர்க்கரை = 100 கிராம்,
வென்னிலா எஸன்ஸ் = ஒரு டிராப்,
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி,
டுட்டிஃபுரூட்டி = தேவைக்கு.
எண்ணை (அ) ப‌ட்ட‌ர் = தேவைக்கு
நெய் = சிறிது



செய்முறை
மைதாவுடன் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் டுட்டிஃபுரூட்டி தவிர ஒன்றாக சேர்த்து கட்டியில்லாமல் மிக்ஸியில் சிறிது பால் + தண்ணீர் சேர்த்து அடிக்கவும்.


பிறகு தவ்வாவில் சிறிது தடிமனாக ஒரு கரண்டி அளவிற்கு ஊற்றி டூட்டி ஃப்ரூட்டி கலவையை தூவி, திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணை அல்லது பட்டரில் சுட்டெடுக்கவும்



சுட்டதும் மேலே லேசாக நெய் தடவும்.
குழந்தைகளுக்கு பிடித்த சத்தானா கலர்ஃபுல் பிரேக் பாஸ்ட்.

(ட்ரூட்டி புரூட்டி கிடைக்காதவர்கள் , கருப்பு ரெயிஸின்ஸ் (அ) மாதுளை முத்துக்களை பயன்படுத்தலாம்.)



Tutti Fruity Pancake

You can make Pancakes for breakfast or for parties.  Kids love to eat these colorful pancakes.

Ingredients:

All purpose flour  (Maida) - 200 grams
eggs - 2
salt - 1 pinch
sugar - 100 grams
vanilla   essence - 1 drop
Tutti  frutti - required qty
Oil + Butter - required qty
ghee - required qty


Method

Mix the ingredients (except oil+ butter, ghee and tutti frutti) .   Add water and milk and blend well  in a mixer (blender)  to a  thick batter.  You can also mix well with a fork or a whisk to make a thick batter.  Make sure that there are no lumps.
Heat a non stick pan.   Pour a ladle full of batter and  spread to have  a thick pancake.  Sprinkle the tutti frutti over it.   Cook on low heat.   Add little oil or butter.   Carefully, flip or turn over the pancake and cook the other side on low heat to golden brown.  Make sure that it does not get burned.
Enjoy.





டிஸ்கி: இதை பல வகையாக செய்யலாம், தேங்காய் பத்தை அரிந்து போட்டு ஏலம் சேர்த்து , கோதுமை மாவிலும் செய்யலாம்.
ரொம்ப ஈசியான சத்தான டிபன், பிள்ளை பெற்றவர்களுக்கு காலை உணவாக ஒரு கை பிடி மாவில் இரண்டு முட்டை கொஞ்சம் சர்க்கரை சேர்த்து ஏலம் தட்டி போட்டு சுட்டுகொடுக்கலாம்.குழந்தைகளுக்கும் சாப்பிட ரொம்ப இலகுவாக இருக்கும்.இது இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் மாப்பிள்ளை நாஸ்டா (டிபன்).ரொம்ப ஸ்பெஷல் tiffin. நான் என் வசதி படி ஓவ்வொரு முறை செய்யும் போதும் ஏதாவது மாற்றம் செய்வேன். அபப்டி செய்து நானே வைத்த பெயர் தான் டியுட்டி ஃப்ரூட்டி பான்கேக்ஸ்.




இதை டயட் டில் உள்ளவர்கள் செய்வதாக இருந்தால் முட்டை வெள்ளை கரு, கோதுமை மாவு சேர்த்து ஆலிவ் ஆயிலில் சுட்டு சாப்பிடலாம்.

14 கருத்துகள்:

சாந்தி மாரியப்பன் said...

பார்க்கவே நல்லாருக்குது ஜலீலாக்கா. டேஸ்டும் நல்லாவே இருக்கும் கண்டிப்பா.. இதை கோதுமை மாவுலயும் செய்யலாமா?

மீண்டும் வாழ்த்துகள்.

ஸாதிகா said...

அருமையான பான் கேக்.நாங்கள் இந்த ஆவுடன் கூடவே தேங்காய்ப்பாலும் சேர்த்துக்கொள்வோம்.

Asiya Omar said...

எப்பவும் பேன்கேக் சாதாரணமாக செய்வதுண்டு.முட்டை,மைதா,பால் சீனி சேர்த்து ஊர் ஸ்டைலில் முட்டாப்பம்.நேற்று உங்க ஐடியாப்படி ட்யுட்டி ஃப்ரூட்டி எல்லாம் சேர்த்து செய்து பார்த்தேன்.வீடே கேக் மணம்.சூப்பர்.நிச்சயம் இனி பெரிய ஹோட்டல் புஃபேவில் குட்டீஸ்காக டியுட்டி ஃப்ரூட்டி பேன் கேக் இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

நமக்கெல்லாம் இதெல்லாம் கிடைச்சதில்லீங்கோ ...

Anonymous said...

நல்லதொரு சுவையான பகிர்விற்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

athira said...

சூப்பர்.. சிம்பிளாகவும் இருக்கு... fruit cereal போல.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது ஜலீலா.

முட்டைக்குப் பதில் தேங்காய்பால் சேர்த்து செய்து கொள்வேன்.

Jaleela Kamal said...

மிக்க் நன்றி சாந்தி இது குழந்தைகளுக்கு பிடித்த வித்தியாசமான குறிப்பு

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா நாங்களும் சில நேரம் தேங்காய் பால் சேர்த்து செய்வோம்

Jaleela Kamal said...

.//நிச்சயம் இனி பெரிய ஹோட்டல் புஃபேவில் குட்டீஸ்காக டியுட்டி ஃப்ரூட்டி பேன் கேக் இருக்கும்...

கண்டிப்பா இது குட்டீஸுக்கு பிடிச்ச ரெசிபி ஆச்சே


தொடர் வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆசியா

Jaleela Kamal said...

//நமக்கெல்லாம் இதெல்லாம் கிடைச்சதில்லீங்கோ //

எத சொல்றீங்க

.

Jaleela Kamal said...

ஸ்வராணி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

அதிரா ஆமாம் சிம்பிள் ரெசிபி தான்

Jaleela Kamal said...

//நன்றாக இருக்கிறது ஜலீலா.

முட்டைக்குப் பதில் தேங்காய்பால் சேர்த்து செய்து கொள்வேன்...

மாதேவி இதை பல விதங்களில் செய்யலாம்

வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா